Thursday, 13 August 2009

பயோனிக்ஸ் எனும் அறிவியல் அற்புதம்


பயோனிக்ஸ் என்ற இந்த வார்த்தை Jack E. Steel என்பவரால் 1958ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. இது கிரேக்க வார்த்தையான 'bion' (bee-on) என்ற வார்த்தையிலிருந்து உருப் பெற்றது. bion என்ற வார்த்தைக்கு (unit of life) 'உயிரின் ஓர் அலகு' என பொருள் வரும். 'ic' என்ற அசைக்கு 'போன்ற' (like OR in the manner of) என்ற பொருள் வரும். ஆக 'உயிரைப் போன்ற' எனப் பொருள் கொள்ளலாம்.

எது எப்படியோ மனிதனின் வேகமான வளர்ச்சிக்கு, அல்லது முயற்சிக்கு இந்த பயோனிக் ஒரு சான்று. இதை biomimetics, bio-inspiration, biognosis, biomimicry அல்லது bionical creativity engineering என்றும் சொல்கிறார்கள். வேறு சிலர் Biology + Eletronics என உண்டானது என்கிறார்கள்.

மருத்துவத்துறையில் பயோனிக்ஸ் என்பது வெளி மற்றும் உள் உடலுறுப்புகளின் சிதைவுகளை இயந்திர முறையில் சரி செய்து அதை பழைய முறையில் அல்லது அதை விட சிறப்பாக இயக்கும் தொழில் நுட்பமாகும்.

பயோனிக்ஸ் முறை இன்னும் அதன் துவக்க நிலையில்தான் இருக்கிறது என்றாலும் 'cochlear implant' மூலம் காது கேளாதவர்களை கேட்க வைக்க முடியும். அதாவது பயோனிக்ஸ் காதுகள். பயோனிக்ஸ் முறையின் மூலம் 2004ம் ஆண்டில் இயங்கும் ஒருமுழு இதயத்தையே செயற்கையாக உருவாக்கி காட்டினார்கள். புதிய நானோ தொழில் நுட்பம் மூலம் இதில் பல வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பெனிசில்வேனியா பல்கலை கழகத்தின் பயோஇன்ஜினியரிங் துறையில் பணிபுரியும் Ghana நாட்டைச் சார்ந்த Kwabena Boahen என்ற பேராசிரியர் தம் எட்டு வருட கல்லூரி பணியில் மனித விழித்திரையை ஒத்த 'சிலிகான் விழித்திரை' ஒன்றை உருவாக்கி உள்ளார். காட்டுப் பல்லியின் கண்களின் இயக்க சிக்னல்களை அதில் அனுப்ப, கருப்பு வெள்ளையில் அதுவும் பார்ப்பதை நிரூபித்திருக்கிறார்.இதன் முன்னேற்றம் பற்றிV செய்தி இங்கே .

பயோனிக்ஸ் பற்றிய கூடுதல் செய்தி இங்கே கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கிளிக்குங்கள்.

இதுவரை மிக சீரியஸான விடயம். எனவே ஒரு சிறிய நகைச்சுவை.

கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருக்கிறார். அப்போது ஒரு விஞ்ஞானி வந்து "கடவுளே! இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. ஒன்றுமில்லாதவற்றிலிருந்து உயிரைப் படைக்கும் வித்தையை அறிவியல் கற்று விட்டது. அதாவது நீங்கள் ஆரம்பத்தில் செய்ததை இப்போது நாங்களும் செய்வோம்" என்றாராம்.

"ஓஹோ! எப்படி? சொல்!" என கடவுள் கேட்டாராம்.

"அதாவது வெறும் மண்ணிலிருந்து உம் சாயலில் ஒரு உருவைச் செய்து, அதில் சுவாசத்தை நிரப்பி மனிதனாக்கி விடுவோம்" என்றாராம் விஞ்ஞானி.

அதற்கு கடவுள் "அடடே! அப்படியா? எங்கே செய்து காட்டு!" என்றாராம்.

எனவே விஞ்ஞானி குனிந்து மண்ணை எடுத்து ஒரு உருவை செய்யத் துவங்கினாராம்.

அதைப் பார்த்த கடவுள், "பொறு! பொறு! நிறுத்து!. முதலில் நீ உன்னுடைய சொந்த மண்ணை எடுத்து வா!" என்றாராம்.

Post Comment

Tuesday, 4 August 2009

அரிதான ஆட்டோகிராப் - Autographs

பிரபலங்களிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி வைப்பது நம்மில் பல பேருக்கு பிடிக்கும். இந்திய நாட்டுக்காக உழைத்தவர்கள் மற்றும் உலக அரங்கில் இந்திய நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்களில் பலரது கையெழுத்துடன் ஒரு ஆட்டோகிராப் இங்குள்ளது.

காணக் கிடைக்காத காட்சி.

1. டாக்டர். A P J அப்துல் கலாம்

2. மௌலானா அபுல் கலாம் ஆசாத்

3.டாக்டர். ஜாகீர் ஹுசேன்

4. பண்டித ஜவஹர்லால் நேரு

5. அப்துல் கபார்கான் - எல்லை காந்தி

6. சுவாமி விவேகானந்தர்

7. அன்னை தெரசா

8. இரவீந்திரநாத் தாகூர்

9. வினோபாஜி

10. டாக்டர். இராதாகிருஷ்ணன்

11. ஜெயப்ரகாஷ் நாராயணண்

12. ஜெகஜீவன்ராம்

13. லால்பகதூர் சாஸ்திரி

14. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

15. சர் சி வி இராமன்

16. மொரார்ஜி தேசாய்

17. பாபு இராஜேந்திர பிரசாத்

18. சர்தார் வல்லப பாய் படேல்

19. பால கங்காதர திலகர்

20. கோபால கிருஷ்ண கோகலே

21. அன்னை இந்திரா காந்தி

22. இராஜீவ் காந்தி

23. அடல் பிகாரி வாஜ்பேயி

24. ராஜ்கபூர்

25. அமிதாப் பச்சன்

26. M S சுப்புலட்சுமி

27. உஸ்தாத் பிஸ்மில்லா கான்

28. பாலமுரளி கிருஷ்ணா

29. டாக்டர் அமர்த்தியா சென்

30. ஆஷா போஸ்லே

31. எஸ் பி பாலசுப்ரமணியம்

32. P. சுசீலா

33. டெண்டுல்கர்

34. விஸ்வநாதன் ஆனந்த்

35. சுனிதா வில்லியம்ஸ்

நம் பெயரோ, நம் குழந்தைகள் பெயரோ, நண்பர்கள் பெயரோ இப்பெயர்களோடு இணைந்து வர பாடுபடுவோம்

Post Comment

Monday, 3 August 2009

படங்கள் அருமை -2

1.பழிக்குப் பழி வாங்கணுமின்னா அந்த இரண்டு டப்பாவையும் இந்தப் பக்கம் வச்சுருக்கலாம்.


2. இதுவல்லவோ தன்னம்பிக்கை /தைரியம்


3. ஐயையோ. அதுக்காக இப்படியா sudden break போடுறது!


4. விட்டுக் கொடுத்துப் போதல்


5. உலகம் சூடாகிக் கொண்டு வருகிறதென்று சொன்னால் இன்னும் சில பேர் நம்ப தயாரில்லை. நிரூபணம் கீழே. புவி வெப்பமாதலை இப்பவாவது நம்புங்கப்பா.

Post Comment

Sunday, 2 August 2009

படங்கள் அருமை -1

1. Computer Addict


2. ஆஹா.....


3. உங்கள் 'casual dress' க்கு ஆபத்து


4. 'Traffic Jam'ல மாட்டி இருக்கிறீர்களா? இது போல


5. எங்களுக்கெல்லாம் போட்டோ எடுக்கத் தெரியாதுன்னு தப்பா நினைச்சிராதீங்க. நாளைக்குத்தான் டாக்டரைப் பார்க்கணும். அதனால இப்பவே கண்ணிலுள்ள பிரச்னையை போட்டா பிடித்து வச்சுக்குரோம்

Post Comment