Wednesday 26 December 2007

பெண் வாகன ஓட்டிகளுக்கு விருது

பத்து போட்டியாளர்களில் விருதுக்கு தேர்நதெடுக்கப்பட்ட மூவரையும் கவனித்தீர்களா?

சரியான போட்டி
சரியான தேர்வா?

10வது பரிசு


9வது பரிசு


8வது பரிசு


7வது பரிசு


6வது பரிசு


5வது பரிசு


4வது பரிசு


வெண்கலம் வென்றவர்

என்ன ஏதும் விளங்கலையோ?
தலைக்கவசத்தை திருப்பி போட்டுக் கொண்டு.....

வெள்ளி வென்றவர்


தங்கம் வென்றவர்

எப்படி ஓட்டியிருக்கிறார் பாருங்கள். தானும் தப்பிக் கொண்டார். வண்டியையும் ஓரளவோடு தப்பிக்க வைத்து விட்டார். தங்கத்துக்கு தகுதியானவர்தானே.

நன்றி: ரவி ஷர்மி

Post Comment

Saturday 22 December 2007

அழியும் (மருத்துவ) நம்பிக்கைகள்

காலங்காலமாக நம்பப்பட்ட ஏழு மருத்துவ நம்பிக்கைகளைப் பற்றி ஆய்ந்த இரண்டு அமெரிக்கர்கள் தங்களின் ஆய்வு முடிவுகளை அமெரிக்கன் ஜேர்னல் ஆப் ஸைக்காலஜி (American Jouranl of Psychology)ல் வெளியிட்டனர். அது நேற்று கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னலில் (British Medical Journal) வந்துள்ளது.

1. நாளொன்றுக்கு குறைந்தது எட்டு குவளையாவது நீரருந்துதல் வேண்டும்.
இது பற்றி பலவாறு நாம் கேட்டிருந்தாலும் அதை நிரூபிக்கும் எந்த அறிவியல் சான்றுகளும் இதுவரை இல்லை.

2. மங்கலான வெளிச்சத்தில் படிப்பது பார்வைக் கோளாறை ஏற்படுத்தும்.
இத்துறை சார்ந்த அறிஞர்களில் பெரும்பாலோர் அவ்வாறு படிப்பது நிரந்தர பார்வைக் குறைவை ஏற்படுத்தும் என்பதை மறுக்கின்றனர். மாறாக சாதாரணமாக பார்க்க முடிவதை கூட கண்கணை சுருக்கி பார்த்தல், அடிக்கடி கண் சிமிட்டுதல் மற்றும் கூர்ந்து நோக்க இயலாமை போன்ற குறைபாடுகளைத் தரலாம் என்கின்றனர்.

3. முடிகளை மழித்தால் அடர்த்தியாகவும் வேகமாகவும் திரும்ப வளரும்.
ஆய்வு முடிவுகளின்படி, முடிகள் அடர்த்தியாகவும் வேகமாகவும் வளருவதற்கு, மழித்தலினால் எந்த நன்மையுமில்லை. மாறாக மிருதுவான மழிக்காத முடிகளை மழித்த பின்னான முடியின் அடிக்கட்டைகளுடன் பார்கக்கும்போது அடர்த்தியானது போல தோற்றமளிக்கும்.

4. வான்கோழி உண்பது மயக்க உணர்வைத் (Drowsy) தரும்.
வான்கோழியிலுள்ள ட்ரிப்டோபான் (tryptophan) எனும் அமினோ அமிலம் தூக்கம் மற்றும் மனோநிலையை கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. எனினும் அதிலுள்ள இந்த அமிலத்தின் அளவு சாதாரண கோழி மற்றும் அரைத்த மாட்டிறைச்சியில் உள்ள அதே அளவுதான். பெருநாட்களில் நாம் உண்ணும் மற்றும் பருகும் அதிகப்படியான உணவுதான் இந்த மயக்க உணர்வுக்கு காரணமாக இருக்கலாம்.

5. நம் முளையின் 10 சதவிகிதத்தை மட்டுமே நாம் உபயோகிக்கிறோம்.
இந்த நம்பிக்கை 1907ம் ஆண்டுகளிலேயே துவங்கி விட்டது. எனினும் இமேஜிங்(Imaging) முறையில் நோக்கும் போது, மூளையின் எந்தப் பகுதியும் உறக்கத்திலோ முழுதும் செயலற்றோ இல்லை.

6. இறந்த பிறகும் முடிகளும் நகங்களும் வளர்கின்றன.
இந்த நம்பிக்கை சில பேய்க்கதைகள் மூலம் பரவியிருக்கலாம். இறந்த உடலின் தோல்கள் காய்ந்து சுருங்கி விடுவதால் அதிலுள்ள நகங்களும் முடிகளும் நீண்டதாகத் தோற்றமளிக்கின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

7. மருத்துவமனைகளில் கைப்பேசிகள் உபயோகிப்பது ஆபத்தானது.
இது குறித்த பலவாறாக வலியுறுத்தப் பட்டிருப்பினும், கைப்பேசிகள், மருத்துவ சாதனங்களை பாதிப்பதென்பது வெகுக்குறைவே.

இந்த ஆய்வுகள் ஆரோன் கரோல் (Aaron Carroll, an assisitant professor of paediatrics at the Regenstrief Institute, Indianapolis) மற்றும் ரேச்சல் ரீமேன் (Rachel Vreeman, fellow in children’s health services reasearch at Indiana University School of Medicine) என்ற இரு ஆய்வாளர்களால் செய்யப்பட்டது.

Post Comment

Tuesday 20 November 2007

இப்படியும் சில நல்லவர்கள்


துபையில் என் நெருங்கிய உறவினர் நடக்கும் போது தரை வழுக்கி, கால் தடுமாறிக் கீழே விழும் போது, தலையில் அடிபடாமல் இருக்க கைகளை ஊன்றியதில் கையிலும் கால் மூட்டிலும் பலத்த அடி. கைகள் வீங்கிப் போனதால் மருத்துவரிடம் காண்பித்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கை எலும்பில் சில்லு போய் பெரிய கட்டு. கால்களில் குறிப்பிடும்படியான எவ்வித பாதிப்புமில்லை. ஐந்து வார மருத்துவ விடுப்பு அனுமதி.

சரி. இங்கேயே இருந்தால் ஓய்வாக இருக்கும் நிலையில், பலவித நினைவுகள் மனதை அலைக்கழிக்கும். மேலும் எலும்பு, மூட்டு சிகிச்சைக்கு இந்தியா போய் விடுவதே சிறந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். அதனால் தாய் நாடு சென்று மனைவி, குழந்தைகளுடன் விடுப்பை கழிப்பதோடு, நாட்டிலேயே மருத்துவமும் பார்த்துக் கொண்டு வருவதென முடிவு செய்தோம்.

குறைந்த செலவில் செல்ல விமான பயணச் சீட்டு எடுத்து, பிள்ளைகளுக்காக சில பொருட்கள், திண் பண்டங்கள் வாங்கி பொதிந்து தயாராக்கினோம். கையோடு கொண்டு செல்ல ஏழு கிலோ. பொதியில் சரியாக முப்பது கிலோ.

விமான நிலைய வரிசையில் நிற்கும்போது, நமக்கு முன்னால் பயணி ஒருவர், அவசரமாகச் செல்பவரோ அடிக்கடி செல்பவரோ, கைப்பையைத் தவிர வேறெதுமில்லை. எனவே அவரிடம் சென்று, ”பாருங்கள் இவருக்கு கையில் அடிபட்டிருக்கிறது. கையில் பொருட்கள் எடுத்துச் செல்வது சிரமம். எனவே தங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இவருடைய கைப்பையை நீங்கள் விமானப் பொதிகளோடு சேர்த்து விடுங்கள். இவர் அதை அந்த விமான நிலையத்தில் எடுத்துக் கொள்வார்” என்றதும் ”அதனாலென்ன போட்டு விடுவோம்” என்றவர் நமது கைப்பையை விமானப் பொதிகளோடு சேர்த்து விட்டு அதற்குண்டான சான்றையும் நம் கையில் திணித்து விட்டு உள்ளே போய் விட்டார்.

அதற்கடுத்து எங்கள் பொதியை சேர்த்து விட்டு, கிளம்ப எத்தனித்த போதுதான் தெரிகிறது. அவர் இலங்கை செல்பவர். எனது உறவினரோ திருச்சி செல்பவர். அவருடைய பொதியாக போடப்பட்ட கைப்பை இலங்கையில் இறங்கி விடுமே! அடக் கடவுளே! இதென்ன கொடுமை!

என்ன செய்வதென்று திகைத்து, பின் அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டால், ”விமானப் பொதிகளோடு சேர்த்து விட்ட பொதியை மீண்டும் எடுக்க, அவர் பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டு, பின்னர் அந்தப்பொதி விமான வருகை (arrival) பகுதிக்கு அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே, ”எங்களைப் பொறுத்தவரை, முதலில் அது உங்கள் பொதியே இல்லை. அதற்குண்டான சான்றை நீர் வைத்திருப்பதே தவறு” என்று கூறி அதையும் பிடுங்கிக் கொண்டார். பின் பலமுறை கேட்டபின், ”அது உரியவரிடம் விமானத்தில் கொடுக்கப்படும்” என்றார்.

”இப்போது வேறு வழியில்லை. உள்ளே சென்று, அவரை சந்தித்து, நிலைமையை எடுத்துக் கூறி, தயவு செய்து அந்தப் பொதியை எடுத்து air cargo மூலம் திருச்சிக்கு அனுப்பச் சொல். அதற்குண்டான செலவுக்கான பணத்தையும் கொடுத்து விடு” என்று சொல்லி அனுப்பினேன்.

உள்ளே சென்று அவரைக் கண்டு பிடித்துக் கேட்டால், ”மன்னிக்கவும். முக்கியமான ஒரு உறவினர் இறப்புக்காக நான் அவசரமாகச் செல்கிறேன். நான் இறந்தவருக்கு மரியாதைச் செய்ய வேண்டும் என்பதற்காகாவே அன்னாரது இறுதிச் சடங்குகள் செய்யப்படாமல் காக்க வைக்கப்பட்டிருக்கிறது. எனக்காக பலர் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். நான் உங்கள் பெட்டி எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்க இயலாது” என்கிறார். அவர் சொல்வது மிகவும் நியாயமான காரணம்.

”இப்போதென்ன செய்வது” என்று எனக்கு தொலைபேசுகிறார். நான் ”ஒன்றும் கவலையடையாதே. நடப்பது நடக்கட்டும். அது நமக்குச் சேர வேண்டிய பொருளென்றால் கண்டிப்பாக இறைவன் கிடைக்கச் செய்வான். இல்லெயென்றாலும் இறைவனின் விதிப்படி நடக்கட்டும். அவருடைய தொலைபேசி எண்ணை எனக்குக் கொடு. நான் முயற்சி செய்கிறேன். நீ விமான நிலையத்தில் duty free கடைகளில் குழந்தைகளுக்கான பொருட்களில் உன்னால் தூக்க முடியுமளவுக்கு 3 அல்லது 4 கிலோ வாங்கிக்கொள். விலையைப் பற்றி ஏதும் யோசிக்காதே” என்று சொல்லி விட்டு, SMS மூலமாக அவருக்கு முதலில் இறந்தவருக்கான அனுதாபங்களை தெரிவித்து விட்டு, கைப்பெட்டியில் எழுதியிருந்த விபரங்களையும், திருச்சிக்கு air cargo அனுப்பவதானால் எந்த முகவரிக்கு அனுப்புவது என்பதையும் குறிப்பிட்டு, இயன்றால் செய்யவும் என்றும் எழுதி அனுப்பினேன்.

அந்நண்பர் விமானத்தினுள் என் உறவினரைச் சந்தித்த போது ”இயன்றால் என் உறவினர்களிடம் சொல்லி, அதை எடுத்து வைத்து, திரும்ப இரண்டாம் நாள் நான் துபைக்கு வரும்போது திரும்பத் தருகிறேன். கண்டிப்பாக ஏர் கார்கோ அனுப்பவதென்பது இந்த நிலைமையில் இயலவே இயலாது” என்று கூறினாராம்.

இலங்கையிலிருந்து திருச்சிக்கு காலை ஏழு மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாகி மதியம் மூன்று மணிக்குத்தான் கிளம்பி இருக்கிறது. திருச்சிக்கு போய் சேர்ந்த என் உறவினர் பெட்டிகள் வரும் கன்வேயரில் (conveyor belt) முதன் முதலில் கண்டது அவர் ஏழு கிலோ கைப்பையைத்தானம். அதன் பின்னர்தான் முப்பது கிலோ பொதி வந்திருக்கிறது. இரண்டையும் எடுத்துக் கொண்டு கூடவே duty freeல் வாங்கிய பைகளையும் சுமந்து, மகிழ்ச்சியோடு, அவருக்கும் மனதார வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டே, இறைவனுக்கும் நன்றி சொல்லி ஊர் போய்ச் சேர்ந்தாராம்.

இப்படியும் சில நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள். தன்னுடைய துன்பமான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அவர்களால் சிந்திக்கவும் செயல்படவும் முடிகிறது.

நீவிர் நீடூழி வாழ்க நண்பரே!.

Post Comment

Monday 19 November 2007

கொலைகாரப் பாவிகளா!

அக்டோபர் 25 வியாழன். இடம் பஹ்ரைன். 2வது படிக்கும் 7 வயது சுஹைல். எனது நண்பருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்து, பின் பிறந்த மூத்த மகன். காலையில் பள்ளிக்குப் புறப்படத் தயாராகிறான். காலையிலேயே அடுத்த இரு நாள் விடுமுறைக்காக என்ன செய்வது என தன்னையும் பெற்றோரையும் தயார் படுத்திக் கொண்டிருந்தான்.

சுஹைல் பள்ளி முடிந்து பள்ளிக்கூட வேனில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். மிகக் குறுகிய சந்தில் உள்ள அவனுடைய வீட்டின் முன்னர் எப்போதும் போல பெரிய ஒலி எழுப்பி விட்டு வேன் நிற்கிறது. வேனிலிருந்து பிள்ளைகளை இறக்கிவிட ஒரு ஆயாவை பள்ளி நியமித்திருக்கிறது. ஆயா குழந்தையை இறங்கச் சொல்லி விட்டு, குழந்தை இறங்கி விட்டதா என சரியாக உறுதிப் படுத்தாமலேயே பக்கக் கதவை இழுத்து சாத்துகிறாள். பையனின் வலது கை விரல்கள் கதவில் மாட்டி நசுங்கிக் கொண்டிருக்கிறது. பையனுடைய அலறலைப் பொருட்படுத்தாமல் அல்லது கேட்காததால் ஆயா ஓட்டுநரைப் போகப் பணிக்கிறாள்.

கதவிடுக்கில் மாட்டிய கைகளோடு வண்டி நகர்கிறது. பையன் வண்டியில் தொங்கிக் கொண்டு. பையனின் கதியை தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்த எதிர்த்த வீட்டு அரபிப்பெண் தன் ஜன்னலைத் திறந்து கொண்டு கத்துகிறாள். அவள் கத்தலைக் கேட்ட ஆயா கதவைத் திறக்கிறாள். வலது கையின் மூன்று விரல்கள் சதை நகம் வரை துண்டித்து தொங்கிய படி, மல்லாந்த நிலையில், கதவுக்கு கீழே இரு சக்கரங்களுக்கு இடையில் விழுகிறது குழந்தை. வேன் நிறுத்தப் படாததால், வலது தோள் பட்டை வழியே முகவாயை இடித்த படி வேனின் பின்புறச் சக்கரம் குழந்தையின் மேல் ஏறி இறங்கி விடுகிறது.

அதற்குள் அந்த அரபிப் பெண்ணிண் மகன் ஓடி வந்து இருபதடிகள் தூரத்தில் வேனை நிறுத்தச் செய்கிறார். 'என்ன நடந்தது என்று தெரிகிறதா?' என்று ஓட்டுநரை கேட்கிறார். தெரியாதென்கிறான். அவனை வண்டியை விட்டு வெளியே இழுத்து அங்கேயே இரண்டு முறை அவனை கன்னத்தில் அறைகிறார்.

வண்டியின் பெரிய ஒலியைக் கேட்டதால், விரைந்து வந்த தாய் மகனைப் பார்க்கும் ஆவலில் கதவைத் திறக்கிறாள். கதவின் முன்னர் யாருமற்ற நிலையில் இரத்த வெள்ளத்தில் எவ்வித சலனமுமில்லாமல் தவமிருந்து பெற்ற மகன். அலறித் துடிக்கிறாள். அரற்றுகிறாள். தெருமுனைக் கடையில் பணியிலிருக்கும் குழந்தையின் மாமன் ஓடோடி வருகிறான். போலீஸ் வருகிறது. ஆம்புலன்ஸ் வருகிறது. நெருங்கிய உறவினர்களால் குழந்தையின் அப்போதைய நிலைமையை பார்க்க முடியாது என்பதால், தெரிந்த ஒருவர், பையனின் நெஞ்சில் விட்டு விட்டு அழுத்தி முதலுதவி செய்தவாறு ஆம்புலன்ஸில் செல்கிறார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனைத் தகவல்கள்.

முதன் முதலில் Gulf Daily News எனும் ஆங்கில தினசரியில் செய்தி வருகிறது. தாய் தன் வீட்டின் ஜன்னலருகே பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பையன் வண்டியின் முன்சக்கரத்தில் அடிபட்டு, இரத்த வெள்ளத்தில் தன் மகனைப் பறிகொடுத்ததாக, யாரோ ஒருவர் நேரில் பார்த்து சொல்லியதாக செய்தி சொல்கிறது. மற்ற பத்திரிக்கைகள் அதையே காப்பியடித்து அடுத்த நாள் செய்தியாக்குகின்றன

அந்தப் பத்திரிக்கைக்கு இந்த செய்தி கொடுத்தவர் கேரள நாட்டவர் - அவர்தான் அப்பத்திரிக்கையின் Chief Reporter.

மற்ற பத்திரிக்கைகள் இந்த செய்தி தவறென்று அறியத் தந்தவுடன் மறுப்பு செய்தியை வெளியிடுகின்றன. ஆனால் இந்தப்பத்திரிக்கை மட்டும் மறுப்பதாகச் சொன்னாலும் 'தாய் - தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்ததாக' மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறது.

ஏன்? ஜன்னலிலிருந்து பார்த்ததாகச் சொன்னால் தாயைப் பார்த்த மகிழ்ச்சியில் பிள்ளை ஓடினான் எனச் சொல்லலாம். அதனால்தான் வண்டியை எடுப்பதற்கு முன்னாலேயே முன்பக்கமாக ஓடி வண்டியின் முன்னால் அடிபட்டு இறந்ததாக சொல்லலாம். பள்ளி பிள்ளையை இறக்கி விட்டு விட்டது அதன் பின்னர் நடந்ததற்கு பள்ளி பொறுப்பேற்காது என்று சொல்லலாம். மக்கள் மத்தியில், பள்ளிக்கும் சம்பவத்துக்கும் பொறுப்பில்லை என்ற கருத்துருவாக்கலாம்.

ஏன்? சீப் ரிப்போர்ட்டர் பள்ளிக்கூடம் நடத்துபவர்களின் மதத்தைச் சார்ந்தவர். ஒரே இடத்தில் பிரார்த்திக்கும் உட்பிரிவைச் சேர்ந்தவர்களாம். பள்ளிக்கூட நிர்வாகத்தோடு பல வகைகளில் தொடர்புடையவராம்.

அந்த வீட்டுக்கு வெளிப்புற ஜன்னலே இல்லை. கிராதி இருக்கிறது ஆனால் வெளியில் இருந்து யாரும் அங்கு நிற்பதை பார்க்கவோ அனுமானிக்கவோ இயலாது என்பதைச் சுட்டிக்காட்டி, குழந்தையின் தாய் மாமன் கேட்டதற்கு 'குழந்தையோ இறந்து விட்டது இனி பள்ளியின் பெயரைக் கெடுப்பதால் என்ன நன்மை' என்றாராம். அடக் கொலைகாரப் பயல்களே! பத்திரிக்கை தர்மம், நேர்மை எல்லாம் மலம் தின்னவா நாய்களே!.

சம்பவத்தில் தொடர்புடைய வேன் பள்ளிக்கு சொந்தமானதில்லையாம். பிள்ளைகளை கொண்டு வந்து விட்டு பின் அழைத்துப் போக பள்ளி நிர்வாகம் வாடகைக்கு வைத்திருக்கிறதாம். ஓட்டுநரும் அந்தக் வாடகைக்கார் கம்பெனியில் அன்றுதான் வேலையிலமர்ந்த புதியவராம். வண்டியின் கதவு சரியாக மூட முடியாமல், பழுது சரி செய்யப் படாமல் இருந்ததாம்.

[பஹ்ரைனின் இந்திய நாட்டுத் தூதுவர் நேரடியாக வந்து விசாரித்ததோடு, பஹ்ரைனில் உள்ள எல்லா இந்தியப் பள்ளிகளையும் அழைத்து ஒழுங்கு முறைகளை சரிவர கடைபிடிக்க அறிவுறுத்திய தோடில்லாமல், இந்தியர்கள் நடத்தும் வாடகை வண்டிக் கம்பெனிகளை அழைத்து வண்டிகள் ஒழுங்காக பராமரிக்கப்பட வேண்டியும் அறிவுறுத்தியதோடு, பஹ்ரைன் போக்குவரத்து காவல்துறையிடம் சரியாக இல்லாத வண்டிகளுக்கு கடுமையான தண்டணைகளை தரச் சொல்லியும் கேட்டுக் கொண்டுள்ளாராம்.]

குழந்தைகளை பள்ளிக்கனுப்பும் பெற்றோர்களே!. உங்கள் குழந்தையின் பள்ளி சொந்தமாக வண்டி வைத்திருக்கிறதா? நிர்வாகம் பொறுப்பானதா? ஏனோ தானோ நிர்வாகமா? சிறு பிள்ளைகளை ஆயாக்கள் ஒழுங்காக வீடு வரை வந்து விட்டுப் போகிறார்களா போன்றவற்றை இனியாவது கவனியுங்கள்.

Post Comment

Wednesday 12 September 2007

மலையாளியின் மகிமை

சென்னையிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் குட்டப்பன் என்ற மலையாளி படிப்பு குறைவாக இருந்ததால் ஏவலராக (peon) பணியிலிருந்தார். அலுவலகத்தில் யாராவது பேசிக் கொண்டிருக்கும் போது இடை புகுந்து "அது எனக்குத் தெரியும்", "அவரை எனக்கு நன்றாகத் தெரியும்" என்று சொல்வது பழக்கம்.

வெளி நாட்டில் படித்து வந்த, வட இந்திய ஆளான அந்த அலுவலக மேலாளர், அர்னோல்ட் ஸ்வஸ்நேகர் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவ்வழியே போன குட்டப்பன் "நம்ம ஆர்னியா? என்னுடைய நண்பர்தான்" என்று சொல்லவும், மேலாளர் சிரித்து விட்டு, "கேரளாவில் ஏதோ ஒரு மலை கிராமத்தானுக்கு அர்னோல்டு நண்பரா!" என்று கேட்டார். "நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். நான் எதுவும் செய்வதற்கில்லை" என்று குட்டப்பன்.

"அப்படியானால் அடுத்த வாரம் நான் அமெரிக்கா போகிறேன். நீயும் கூட வருகிறாய். அர்னோல்டு வீட்டுக்கு போய் என்ன என்று பார்த்திடுவோம்" என்றார் மேலாளர். குட்டப்பன் புன்னகையோடு ஒப்புக் கொண்டார்.

ஒரு வாரத்துக்குப்பின் இருவரும் அமெரிக்கா சென்றடைந்தனர். முதன் முதலில் நியூயார்க் சென்று அர்னோல்டை சந்திப்பதாக ஏற்பாடு. குட்டப்பனை பார்த்த அர்னோல்டு ஓடோடி வந்து குட்டப்பனைக் கட்டிப்பிடித்து "லாங் டைம் நோ ஸீ. வேர் வெர் யு மேன்" என்று கேட்கிறார். பின்னர் குட்டப்பனோடு அர்னோல்டு ஒரு காபி சாப்பிடுகிறார். மேலாளர் அதிர்ச்சியுடன், "சரி சரி நாம் போய் ஜார்ஜ் புஷ்ஷை பார்த்து விட்டு வருவோம். உனக்கு அவரைத் தெரியுமா என்ன என்று பார்த்து விடுவோம்" என்று சொல்ல, நமது குட்டப்பனும் புன்னகையோடு ஒப்புக் கொண்டார்.

ஜார்ஷ் புஷ் வீட்டுக்குப் போனால், அவரும் அர்னோல்டு போலவே வந்து, கட்டிப்பிடித்து, "வேர் வெர் யூ மை ப்ரண்ட் பார் லாங் டைம்" என்று சொல்கிறார். மேலாளரை வெளியில் உட்கார வைத்து விட்டு, குட்டப்பனோடு ஜார்ஷ் புஷ் தேநீர் அருந்துகிறார். வெளியில் வந்த குட்டப்பனிடம் மேலாளர், "நான் வாடிகன் போய் போப் இடம் அருளாசி வாங்க விரும்புகிறேன். நீயும் வா" என்றார்.

குட்டப்பனும் அவர் மேலாளரும் போல, வாடிகனில் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்த மக்கள் அருளாசிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது மேலாளர், "உனக்கு போப்பைத் தெரியுமா" என்று கேட்க "தெரியாமல் என்ன" என்கிறார் குட்டப்பன். மேலாளர் "எனக்கு நம்பிக்கையில்லை" என்று சொல்லவும், "கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லி கூட்டத்தில் புகுந்து விடுகிறார் குட்டப்பன்.

புதினைந்து நிமிடத்துக்குப் பின் குட்டப்பனின் கையைப் பிடித்தவாறு பலகணியில் போப் தோன்றுகிறார். கீழே குட்டப்பனின் மேலாளர் மயங்கி சாய்கிறார்.

குட்டப்பன் கீழே வந்தால், மேலாளர், செவிலியர்கள் மற்றும் முதலுதவியாளர்கள் புடை சூழ ஸட்ரெச்சரில்.
குட்டப்பன் மேலாளரிடம், "என்ன ஆச்சு சார்?"
மேலாளர்: அர்னோல்டு.... நான் நம்பிட்டேன். ஜார்ஜ் புஷ்... கூட... நான் நம்பிட்டேன். போப்... அதையும் நம்பிட்டேன். ஆனால் போப் உன் கையைப் பிடித்துக் கொண்டு பலகணியில் நிற்கும்போது கும்பல் "யார்ப்பா நம்ம குட்டப்பன் கையைப் பிடிச்சிகிட்டு நிற்கிறது" என்று பேசும்போது, தாங்காம மயங்கிட்டேன்பா.

இதனால் கிடைக்கும் பாடம்:
மலையாளியை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்

முக்கிய அறிவிப்பு:
இதைப் படித்தவுடன் போய் விடாதீர்கள். இதை காப்பி எடுத்து
10 மலையாளிகளுக்கு அனுப்பினால் - தேங்காய் எண்ணெய் கிடைக்கும்
20 மலையாளிகளுக்கு அனுப்பினால் - நேந்திரம்பழ சிப்ஸ் கிடைக்கும்
40 மலையாளிகளுக்கு அனுப்பினால் - புட்டும் கடலையும் கிடைக்கும்

100 மலையாளிகளுக்கு அனுப்பினால் - லுங்கி தொழிற்சாலைக்கு பின்னாலுள்ள நெல் வயலுக்கு அடுத்து உள்ள நிலம் இலவசமாம். கூடவே ஒரு மாதத்துக்குரிய தேங்காய் எண்ணெயும் நேந்திரம்பழ சிப்ஸ்ம் தரப்படுமாம்.
(நன்றி: ஷர்மி ரவி)

Post Comment

Wednesday 29 August 2007

கனவு வாகனமும் சாலை பாதுகாப்பும்

உங்கள் கனவிலுள்ள சொகுசு வாகனம் எது?

உங்களுக்கு AUDI TTயைப் பிடிக்குமா?


உங்களுக்கு Ferrariயைப் பிடிக்காது! அது சும்மா பந்தா காண்பிக்கத்தான்!


சக்தி வாய்ந்த Hummer H2?
40000 UK பவுண்ட் கொடுத்தாலே ஒன்று வாங்கிடலாமாம்

பார்க்கத்தான் அப்படி! பெரிய சக்தி வாய்ந்ததொன்றுமில்லை!!!

Lamborgini Diablo எப்படி? உலகத்திலேயே அதி வேக வண்டியாம்! மணிக்கு 200 மைல்கள் வேகத்தில் செல்லுமாம்!!

ஜெர்மனி வண்டி? அவைகள் உலகத்திலேயே பாதுகாப்பான வண்டிகளாம்! உதாரணமாக Mercedes SLK


அல்லது அதைவிடச் சிறந்த Mercedes CLK?


உலகத்திலேயே சிறந்த தொழில் நுட்பம் தங்களிடமுள்ளதாக ஜப்பானியர்கள் சொல்கின்றனர். அதனால் ஹோண்டா வாங்கினால் நல்லது.......




சாலை பாதுகாப்பு உங்கள் வாகனத்தின் விலையைப் பொறுத்ததுமல்ல!
வாகனத்தின் வேக விசையைப் பொறுத்துதுமல்ல!.

அல்லது பாதுகாப்பு என்பது ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் அல்லது அமெரிக்கா போன்ற வெவ்வேறு வாகனத் தயாரிப்பாளர்களின் தொழில் நுட்பத்திறனைச் சார்ந்ததுமல்ல.....

சாலைப் பாதுகாப்பில் கவனம் கொள்ள வேண்டியது எது என்பதை நினைவிலிறுத்துங்கள்.

சாலை விபத்துகளில் உயிரிழப்பிற்குரிய காரணங்களில் முக்கியமானவை
போதை மருந்துகள்,
மது பானங்கள் மற்றும்
அதீத சோர்வு !!!

Post Comment

Saturday 18 August 2007

உண்ணும்போதும் நீங்கள் TV பார்ப்பவரா?

இன்று காலையில் ஷார்ஜாவிலிருந்து அடித்து பிடித்து (ஜபல் அலிக்கு) அலுவலகம் வந்து சேர்ந்தேன். நண்பரின் மனைவி மதிய உணவைப் பொட்டலமாக கட்டித் தந்திருந்தது.

அலுவலகம் போய்ச் சேர்நத பின்னர், ஷார்ஜாவிலிருந்து வியாபார அழைப்பு. போக வேண்டியதுதான் நமது பிழைப்பு. வேறென்ன? திரும்ப ஷார்ஜா (உணவுப் பொதியுடன்தான்). வியாபாரம் அரை மணி நேரத்திலேயே முடிந்து விட்டது. பக்கத்தில்தான் வீடு. வீட்டில்போய் நிம்மதியாய் பொதியைப் பிரித்து உண்ணலாமேயென்று வீடு போனேன்.

பொதியைப் பிரித்து இரண்டு கவளம் உண்டிருப்பேன். தொலைக்காட்சி பார்ப்போமே என்று 'சன்' போட்டால் 'சிறைச்சாலை' படம் ஒடுகிறது. 'நாயகன்' படத்தில் கமலைக் கொல்வாரே அந்த மனிதர் 'கஞ்சியிலே பல்லி' எடுத்து பல்லியை கையில் வச்சுகிட்டு கத்துகிறார். அதற்கு அம்ரிஷ்பூரி (வில்லன்) 'காய்கறியெல்லாம் காட்டில இருந்து வருது. அதுல பல்லியென்ன யானை கூட வருமெ'ன்று சொல்லி அவரை உண்ண கட்டாயப்படுத்துகிறார்.

‘இதென்னடா வம்பா போயிடுச்சே!’ என்று சாப்பாட்டை ஒதுக்கி வச்சுட்டு, 'ஜெயா' பார்த்தால் 'அந்தமான் காதலியில் சிவாஜி’, 'பணம்தான் இநத உலகத்தின் எஜமானன். பணம் என்னவென்னாலும் செய்யும்' என்று ஒவர் ஆக்ட் குடுக்கிறார்.

தொலைக்காட்சியை மூடி விட்டு, பல்லி விஷயத்தை மறக்க கொஞ்சம் உலாத்தி விட்டு, உணவுத்தட்டை எடுத்து இரண்டு கவளம் உண்டிருப்பேன். திரும்பவும் 'சன்' அதே 'சிறைச்சாலை'தான்.

முதலில் பல்லி தின்னச் செய்த அதே நடிகரை, கையும் காலையும் நான்கு பேர் பிடித்துக் கொள்ள, அதே அம்ரிஷ் பூரி 'நீ வெஜிடேரியனா! அதனால உனக்கு வெஜிடேரியன் உபயோகப்படுத்துற டாய்லெட்டிலிருந்து எடுத்து வந்த மலம்' என்று கூறி அவர் வாயில் மலத்தை ஊட்டச் செய்கிறார். மலமுண்ட அவர் அதன்பின் சிறையின் சுவர்களின் மேலேறி ஓடி தற்கொலை செய்து கொள்கிறார்.

அதற்கப்புறம் நான் எங்கே சாப்பிடுவது? தூக்கிக் குப்பையில் கொட்டிவிட்டு அலுவலகம் நோக்கிய பயணம்!

என்ன அது?
'சாப்பிடும்போது ஒழுங்காக சாப்பாட்டுத் தட்டை பார்த்து சாப்பிட்டா என்ன? தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே...'
'உன்னைப் பார்த்து பிள்ளைகளும் அப்படியே செய்கிறார்கள்'
என்று என் அம்மாவும் சில நேரங்களில் என் தங்கமணியும் திட்டுவது காதில் ஏன் ஒலிக்கிறது?.

Post Comment

Saturday 11 August 2007

அறிவுக்கூர்மையில் அமெரிக்கா

அவர்களுக்கு இருக்கின்ற வாய்ப்புகளுக்கும்
அவர்களின் புத்திக் கூர்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு
நம்மையெல்லாம் விஞ்சி, நம்மையே வாய் பிளக்க வைக்கிறார்கள்.

Post Comment

Tuesday 7 August 2007

துபாய் சிரிப்புகள்

1. தமிழக கிராமத்திலிருந்து வயல் வேலைக்காக வந்து, துபையின் கிராமப் புறங்களிலேயே தங்கிவிட்டு, நகருக்கு வந்தவரிடம்
நண்பர்: என்னப்பா வேலையெல்லாம் எப்படி போகுது?
கிராமவாசி: ஒரே ச்சூடுண்ணா!. கெஷ்டந்தான்!
நண்பர்: பேச்சுலாம் புரிஞ்சுகிச்சா?
கிராமவாசி: ஒண்ணும் புரிய மாட்டேங்குது!. என்ன சொல்றான்னே தெரிய மாட்டேங்குது!
ஆனால் நாய் தமிழ்ல கொலைக்குதுன்னா!!
மசூதில வாங்கு தமிழ்ல சொல்றாங்கண்ணா!!
நண்பர்:!?!!

2.புதிதாக அரபி வீட்டில் வேலைக்கு சேர்நது விட்டு, நண்பர்களைப் பார்க்க வந்தவர்
வந்தவர்: டேய்! என்னமோ தெரியல! எங்க அரபி காலைல எந்திரிச்சு என்னை பார்த்தான்னு 'சூ*த பார்! சூ*த பார் அப்டிங்கிறான்.
நான் பேண்ட் பின்னால எங்காயாச்சும் கிழிஞ்சிருக்கான்னு பார்த்தேன்.
ஒன்னும் கிழிஞ்சு இல்ல.
நேத்து காலைல அரபிக்காரி என்னைப் பார்த்தவுடன் அதே மாதிரி சொல்றாடா?
என்னடா செய்யுறது!.
நண்பர்: (சிரித்துக் கொண்டே) போடா லூஸ். அவுங்களுக்கு தமிழ் தெரியுமா? 'சூ தபஅ' என்றால் அரபியில் நல்லா இருக்கியா? உடம்பு எப்டி இருக்குண்ணு அர்த்தம்டா!
வந்தவர்: அசடு வழிகிறார்.

3.ஒரு மலையாளி தமிழ் நண்பரிடம் வழி கேட்கிறார்
மலையாளி: அண்ணாச்சி. மச்சி மார்க்கெட் எவிட இண்டு? (மீன் அங்காடி எங்கே உள்ளது?)
தமிழ் நண்பர்: மச்சி மார்க்கெட்டா? நேரா போயி... மனசிலாயா? சோத்துக்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? அங்க ஒரு ஈரானி கடை இருக்கும்... மனசிலாயா? அங்கேர்ந்து பீச்சாங்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? ஒரு பிரிட்ஜ் வரும்... மனசிலாயா? அந்த பிரிட்ஜ் தாண்டுணா மச்சி மார்க்கெட்தான்..! மனசிலாயா?
மலையாளி: எல்லாம் மனசிலாயி. இந்த மனசிலாயியையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாம்.
(மலையாளத்தில் மனசிலாயா என்பதற்கு தமிழில் புரிகிறதா என்பது பொருள்)

4.குறைந்த சம்பளத்தில் இருப்பவர்கள் உணவகங்களில் உணவருந்த கட்டுப்படியாவதில்லை. மற்றும் மலையாளிகளின் உணவகத்தில் உணவிலுள்ள கூடுதல் காரமும், மஞ்சளும் வேறு பிடிப்பதில்லை. அதனால் தனி மெஸ்தான் ஊரிலுள்ள சாப்பாடு போலவே கிடைக்கும்.
சமைப்பவர்: (எதையோ தேடிக் கொண்டே) சட்டியில சாப்பாடு இருக்கு! அவங்கவங்க தேவையான அளவு வீணாக்கம வச்சுக்கங்கப்பா.
சாப்பிட வந்தவர்கள்: சோறு வச்சுக்குறோம். தொட்டுக்க என்ன இருக்கு?
சமைப்பவர்: கோழி வருத்திருக்கு. ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக்குங்கப்பா!
சாப்பிட வந்தவர்கள்: அண்ணே! சாப்பாட்டுல பீடி ஒரு கட்டு கிடக்கு. ஆளுக்கு எத்தனை எடுத்துக்கனும்
சமைப்பவர்: அட அதத்தாம்பா தேடிக்கிட்டிருக்கேன். சாப்பாடு செய்யும்போது உள்ளே விழுந்திருச்சு போலிருக்கு! (அசடு வழிகிறார்)

5. முதல் நண்பர்: அரபி சையது இருக்கான்ல. அவனை உட்காருன்னு சொன்னா உட்கார மாட்டான். ஏன் தெரியுமா?
2வது நண்பர்: அவனுக்கு பின்னால கட்டி வந்திருச்சோ?
முதல் நண்பர்: அதெல்லாம் இல்ல
3வது நண்பர்: அவனுக்கு வயிறு பெருசா இருக்குல்ல. உட்கார கஷ்டம்!.
முதல் நண்பர்: அதெல்லாம் இல்ல
4வது நண்பர்: அவன் பொண்டாட்டி வந்திருக்கிற பயத்தில இருக்கானோ என்னவோ?
முதல் நண்பர்: அதெல்லாம் இல்ல
எல்லோரும்: அப்புறம் என்னதான்னு சொல்லித்தொலை நாயே!
முதல் நண்பர்: அவனுக்கு தமிழ் தெரியாதுப்பா
எல்லோரும் சேர்ந்து அடிக்க ஓடுகிறார்கள்.

Post Comment

Saturday 4 August 2007

போர்ட்ராய்ட் புகைப்படப் போட்டிக்கு

போர்ட்ராய்ட் புகைப்படப் போட்டிக்காக நான் எடுத்த படங்களிலிருந்து இரண்டு படங்கள்.



Post Comment

Tuesday 31 July 2007

ஈராக்கில் அமெரிக்காவின் சாதனை

பெட்ரோல் வளங்கொழிக்கின்ற அந்த நாட்டில் சதாமின் பெயரைச் சொல்லி உள்ளே நுழைந்து, அந்நாட்டின் வளங்களை இன்னும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறது அமெரிக்கா.

இன்றைய ஈராக்கின் நிலை
4 மில்லியன் ஈராக்கியர் - 15 சதவிகித மக்கள் - அவர்களுக்குத் தேவையான உணவை தினம் வாங்கக்கூட வழியில்லா நிலையில்
70 சதவிகித மக்கள் சரியான குடிநீர் வசதி கூட இல்லாத நிலையில்
28 சதவிகித குழந்தைகள் சரியான உணவின்றி (malnourished)நோஞ்சான்களாக
92 சதவிகித ஈராக்கிய குழந்தைகள் கல்வியைக்கூட பெற முடியாத நிலையில்
2 மில்லியன் மக்கள் (குழந்தைகளும் பெண்களும்) - தன் சொந்த நாட்டிற்குள்ளேயே வீடிழந்து வாழ்விழந்து
2 மில்லியன் ஈராக்கியர் - சிரியாவிலும் ஜோர்டானிலும் அகதிகளாய்

இதை சரி செய்ய வழி தெரியாத நிலையில் அமெரிக்காவும், ஈராக்கிய தற்போதைய அரசும்.

ஆக்கிரமிப்புக்கு முன் 2000ல் அங்கு ஒரு trade fairல் நான் கலந்து கொள்ள சென்றிருந்த போது,சதாமைப் பிடிக்காத அந்நாட்டின் என் நண்பர் சொன்னது
'கோதுமை மாவும் சர்க்கரையும் வீட்டுக்கு வீடு அரசினர் தந்து விடுகிறார்கள்
இந்த பெட்ரோல் மட்டும் இந்நாட்டில் இல்லாமலிருந்தால் நன்றாயிருந்திருக்கும். எங்கள் நாட்டின் யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகள் மூலம் இந்தியாவைப் போல் நாங்களும் முன்னேற முயற்சித்து இருப்போம்.'


ஜெர்மனியில் நடக்கின்ற ‘மணற்சிற்ப’ போட்டியில் Urlich Baentsch என்ற ஜெர்மானியர் ஆக்டோபுஷ் என்ற தலைப்பில் செய்திருக்கின்ற சிற்பம். அதன் கொடுக்கு ஒன்றில் தானியக்கதிரும், மற்றவற்றில் எண்ணெய், ஒருசிலுவை. டிரேட் செண்டர், ஒரு துப்பாக்கி போன்றவற்றை வைத்திருப்பது போன்றும் வடிவமைத்துள்ளார்.


அமெரிக்கா ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு உணவாவது ஒழுங்காய் கிடைத்துக் கொண்டிருக்கும்.

வாழ்க அமெரிக்கா.

Post Comment

Wednesday 25 July 2007

அன்பின் நிராகரிப்புகள்

(தம்பி 'அன்பின் நிராகரிப்புகள்' என்ற தலைப்பில் எழுதிய பதிவைப் படித்த பின்னர் எழுதத் தோன்றிய என் நிஜம் - கதையல்ல. தலைப்பு உதவியும் தம்பி)

'கௌவி! போன போகுது விட்டுரேன் பாவமில்ல!'

'நீ போ பாவா! என்ன பாவம்?. யாவாரத்துலே கேட்கிறதுதான். படிஞ்சா கொடுப்பா. இல்லேன்னா போயிடுவா! உனக்கென்ன போ பாவா!'

கௌவி - என் தந்தையின் தமக்கை. சிறு வயதில் குப்பிம்மா என்று கூப்பிடும்போது அளவிலா இன்பம். என் மேல் மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

தெருவிலே குழந்தைகள் சொல்லும் பேர் 'புடிக்கிரம்மா'. குழந்தைகள் மேல் மிகுந்த ஈடுபாடு. எந்த குழந்தை தெருவில் போனாலும் பிடித்து விளையாடுவார்கள். கொஞ்சம் பெரிய, முரட்டு உருவமாய் இருந்ததாலும், குரலிலும் முரட்டு சுபாவம் இருந்ததாலும் பிள்ளைகள் பயங்கொள்ளும். என் மனைவிக்கு கூட புடிக்கிரம்மாதான் - எங்கள் திருமணம் வரை.

குழந்தைகள், பெரியவர்கள் யாருக்கு சுளுக்கு பிடித்தாலும் அல்லது குடலேற்றம் ஏற்பட்டாலும், கால் பாதத்தின் மேற்புறத்தில் அல்லது கை மூட்டின் உள்பக்கத்தில் எண்ணெய் தடவி, கத்தினாலும், வலிக்க வலிக்க நீவி விட்டு, இரண்டு தடவைகளில் எல்லாம் சரியாகி விடும். நன்றி சொல்ல யாரும் திரும்ப வருவதுமில்லை. அதற்கான எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்ததுமில்லை.

தெருவில் மண் சட்டி மற்ற அக்காலத்திய வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பவர்களிடம் சாமான்களை வாங்கி, தன் வீட்டில் அடுக்கி வைத்து, ஊரில் தேவைப்படுவோருக்கு விற்பார்கள். தெருவில் அவ்வாறு விற்க வந்த ஒரு பெண் இவர்களைப் பற்றி தெரியுமாதலால் விலையை கடுமையாக ஏற்றிச் சொல்ல 'உன் புருசன் பேரு என்னாடி? இந்த விலை எப்படி சொல்லும் படியாச்சு. நீ பக்கத்தூருதானே. ஆத்தை தாண்டிப்போய் உன் புருசனை அழைச்சிட்டு வா. வந்து அவன் இந்த விலை சொன்னாலும் இதை விட கூடுதல் சொன்னாலும் கொடுப்பேன். தராதரம் தெரியாம விலை சொல்லும்படியாச்சா?'

'ஏம்மா நாந்தானே விக்க வந்தேன். அவரு எதுக்கு. நீ எப்பவும் குடுக்கிற விலையக்குடும்மா!' – அந்தப் பெண்.

'உனக்கு விலை தெரியல. அந்தாண்டை போய் நீ தப்பா கணக்கு சொல்வே. உம்புருசனை இல்ல யாராவது தெரிஞ்ச ஆள அளச்சிட்டு வா' – குப்பிம்மா கௌவி.

இப்போது - முதல் வரியிலுள்ளது – நான். எப்படியோ வியாபாரம் முடிந்தது.

உள்ளுக்குள் சில பழைய குடும்ப கசப்புகள் இருந்தாலும், என் தாயாருக்கும் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை. எங்கள் தெருவிலேயே அவர்கள் வீடும் இருந்ததால், பிள்ளைகளை பார்க்கும் ஆவலில், மாலை முதல் இரவு தூங்கப்போகும் வரை, மிகுதியான நாட்களில் எங்கள் வீடுதான் இருப்பு. இவ்வளவு நேரம் வீட்டில் இருந்து விட்டு சாப்பிடாமல் போனால் அம்மா சம்மதிக்க மாட்டார்கள். இரவுச் சாப்பாடும் இங்குதான்.

என்னுடைய குழந்தை பிராயத்தில், சிங்கப்பூரில் ஏதோ ஒரு பார்க்கில் நான் ஊஞ்சலில் ஆடும்போது, யாரோ தள்ளி விட, மேற்புற பற்களெல்லாம் விழுந்து, மேல்பற்கள் இருக்காது. அதனால் என்னை நாக்கால் மூக்கைத் தொடச் சொல்லி, நான் மூக்கைத் தொடுவதை ஆச்சரியமாய் (தினமும்) வேடிக்கை பார்க்கும். என்னைக் கூப்பிடுவது 'ஓலைப்பல்லு!'

இரவு படிக்க அமர்ந்தால், கிட்டேயே உட்கார்ந்து கொண்டு, என் சிறு கையைப் பிடித்து வளைத்து வேண்டாமென்று சொல்லச் சொல்ல, சொடக்கு போடுவதும், வலி தாங்காமல் அல்லது வீம்பாக நான் கத்துவதும்
'ஏங்க்கா! அவந்தான் வேணாங்கிறான்ல உட்டுட்டாத்தான் என்ன?' என்று என் அம்மா சொன்னாலும்

'ஓல வாயா! ஓல வாயா! சோளமெப்படி விக்குது?
ஓலயால நாலு வெள்ளம் பாடி பாடி விக்குது!'
என்று என்னை கிண்டல் செய்து பாடி கையில் சொடக்கு போடாமல் விடாது.

'அவுங்க ஆசையாதானேடா போடுறாங்க. அதுக்கேண்டா கத்தறே' – என்று அம்மா என்னைத் திட்டுவார்கள்.

'அவன்டையே எதுக்கு வம்பு பண்றே. வேற புள்ளைங்களோட விளையாடேங்க்கா!' என்று அம்மா சொன்னாலும் கௌவி கேட்காது. நான்தான் வேண்டும்.

எப்பவும் குப்பிம்மா என்று சொல்வதுதான் வழக்கம். நான் ப்ளஸ்2 படிக்கும் போதும், கையைப் பிடித்து சொடக்கு போட எத்தனித்த அவர்களை, 'நீ கௌவி. எனக்கு இப்போல்லாம் வலிக்காது' என்று நான் சொல்ல 'என்னடா கௌவி என்று மரியாதை யில்லாமல்' என்று என் அம்மா திட்டினாலும் பின்னாளில் அதுவே பழகி விட்டது.

அதற்கும் கொஞ்ச காலத்துக்குப் பின்,
கௌவி வீட்டில் ஏதோ பணம் (50 ரூபாய்க்குள் இருக்குமென நினைக்கிறேன்) காணவில்லையென்று, நடுத் தெருவில் என்னைப் பிடித்து, 'நீதான் வூட்டுக்கு வந்தே. ஒன்னத் தவிர பணம் போகல. பணத்தைக் கொடுத்துட்டுப் போ!' என்று கௌவி கேட்கவும்,
மீசை முளைத்த பருவம். பார்ப்பவர்கள் கொஞ்சம் மரியாதையாய் அவர், இவர், வாங்க, போங்க என்று அழைத்தது வித்தியாசமாகவும் சுகமாயும் இருந்த பருவம். நடுத்தெருவில், அவமானத்தில், எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது.
கௌவி கையை உதறி விட்டு, விட்டுக்கு ஓடி வந்து, என் அம்மாவிடம் சொல்லி அழுதேன். 'ஏங்க்கா பணம் காணலைன்னா வீட்ல வச்சு கேட்க வேண்டியதானே. வயசுப் புள்ளைட்ட இப்படித்தான் செய்வாங்களா? இந்தா எவ்வளவு பணம் வாங்கிக்க' என்று அம்மா பணம் எடுக்கப் போகவும்,
அதற்குள் அவர்கள் வீட்டிலிருந்து அவர் மகள் ஓடி வந்து, 'ஏம்மா வயசான காலத்துல! அந்தப் பணத்தை நேத்து ராத்திரி அரங்கூரான்ட்டே குடுத்தியமா?' என்று சொல்லவும் சரியாயிருந்தது.

அதிலிருந்து அவர்களைத் தவிர்த்தேன். கௌவி வீட்டில் இருந்தால் நான் வெளியே போய் விடுவேன். என் கிட்ட வந்தாலே நான் தூரமாய் ஒதுங்கி விடுவேன்.
'ஏன்டா! நம்ம குப்பிமாதாண்டா! அவங்க ஒன்ன சொன்னாத்தான் என்ன? ஒன்ன தூக்கி வளத்தவங்கள்ளே! அவ்ளோ பெரிய மனுசி! மாப்பு (மன்னிப்பு) கேட்குது. அப்டிப் போரியடா?' என் அம்மா எவ்வளவு சொல்லியும் நான் மசியவில்லை. காது கேளாத மாதிரி இருந்து விடுவேன்.

கொஞ்ச நாளில் கௌவியின் கணவர் இறந்து விடவும், தன் வீட்டை விற்று விட்டு, மகளோடு பக்கத்தூருக்கு போய் விட்டது. நானும் துபை வந்து விட்டேன்.
வீட்டை விற்ற போது கூட 'நீ கேள். ஒனக்குத்தான் விற்கும்' அம்மா சொல்லியும் எனக்குத் தேவையாக இருந்தும், நான் கேட்க மறுத்து விட்டேன்.

துபையில் தொடர்ந்து ஐந்து வருடம் இருந்து விட்டு, ஊர் சென்ற பத்து நாட்களில்
'தம்பி! குப்பிம்மா வருச கணக்கா படுத்த படுக்கையா கிடக்குது. பால்தான் எறங்குது. ஏதோ உன்னுடைய ஆசைல இருந்தாலும் இருக்கும். போய் பாத்துட்டு வந்துடு பாவா'
என்று சொல்லவும் 'போம்மா! வேற வேலயில்ல! நான் போகல' என்று சொன்னேன்.

'உனக்கு தனியாய் போக ஒரு மாதிரியிருந்தால் நானும் துணைக்கு வரேன்' என்று என் அக்காவும் சொல்லவும், துபையில் வந்து, வாழ்க்கையின் சுகத்தை விட துக்கங்களை கூடுதலாய் சுமந்த அனுபவத்தில், 'சரிதான் போய் வருவோமே' என்று தோன்றியது.

என் அக்காவும் நானும் அவர்கள் வீட்டு வாசலில். கௌவியின் மகள்தான் அவர்களைப் படுக்க வைத்திருந்த அறைக்கு அழைத்துப் போய் 'எம்மா!. யார் வந்திருக்கான்னு பாரு!
(என் பெயரைச் சொல்லி) வந்திருக்குமா!' என்று சொல்லவும்

கௌவி வாயிலிருந்து 'பே' என்று பெரிய சத்தமாய்தான் எனக்குக் கேட்டது. கௌவியின் மகளோ, ''அஞ்சு வருசமா பேசல. உன்னைப் பார்த்ததும் 'வா பாவா'ங்குது'' என்று மொழி பெயர்த்து ஆச்சரியமாய் சொன்னார்கள்.

'என் தம்பி மகன் குழியில வக்காம, என் கட்டை குழியில இறங்கிடுமா? என் குழியில என் தம்பி மகனை நம்ம ஊரில உள்ளது போல்; பச்சை மூங்கிலும் பச்சை மட்டையும் போட்டு மூடச் சொல்லு' என்றெல்லாம் சொல்லியதாம். அவர் மகள்தான் சொன்னார்கள்.

அவர்கள் வீட்டை விட்டு திரும்ப பேருந்து நிலையத்துக்கு வரும்போது, என் அக்காவிடம், 'ஏதோ ஏப்பம் விட்ட மாதிரி சத்தம் கேட்டது. வா பாவா ன்னு கௌவி சொல்லுச்சாம். இன்னும் சும்மா என்னவெல்லாம் சொல்கிறார்கள் பார் அக்கா' என்று சொல்லிக் கொண்டே பேருந்தில் ஏறுகிறேன்.

கௌவி வீட்டிலிருந்து ஆள் ஓடி வந்து, 'குப்பியம்மரி மௌத்தாகி (இறந்து) விட்டது. உன்னை ஊருக்குப் போக வேண்டாமென்று சொல்லச் சொன்னார்கள்'.
எனக்குள் இடி இறங்கிய மாதிரி இருந்தது. அக்கா இறங்கிக் கொண்டார்கள். மனதுக்குள் அழுது கொண்டே ஊர் வந்து சேர்ந்தேன்.

பின்னர் அம்மா மற்றும் குடும்பத்தாருடன் அடுத்த பேருந்து பிடித்து, அந்த ஊருக்கு வந்து, 'கௌவிதான் போயிடுச்சே. இனிமே வந்தா பாக்க போகுது. ஊர் வழமை பிரகாரம் காய்ந்த மட்டை போடுவோம்' என்றவர்களிடம் அடம் பிடித்து, அவர்கள் சொல்லி இருந்தது போலவே பச்சை மூங்கிலும் பச்சை மட்டையும் போட்டு குழியை மூடினோம்.

(கௌவி = கிழவி,
குப்பிம்மா = தந்தையுடைய தமக்கையை, அத்தையை, குப்பியம்மா என்று எங்கள் ஊரில் அழைப்பது வழக்கம்
போ பாவா, வா பாவா = குழந்தைகளை போ அப்பா, வா அப்பா என்று வாஞ்சையுடன் அழைப்பது போன்றது.
புடிக்கிரம்மா = பிடித்து விளையாடுவதால் பிடிக்கிற அம்மா- பின்னாளில் அதுவே பிள்ளை
பிடிக்கிற அம்மா மாதிரி பிள்ளைகள் பயங்கொண்டது.)

Post Comment

Tuesday 24 July 2007

போலியோ சொட்டு மருந்தும் போலியா? - 'தெஹல்கா'வின் அதிர வைக்கும் ரிப்பேர்ட்

வருடா வருடம் பிள்ளைகளைக் கொண்டு போய் போலியோ சொட்டு மருந்து போட்டும் பிள்ளைகளுக்கு போலியோ வந்துள்ளது.
திரும்பவும் இந்தியர்களை மருந்தை சோதிக்கத்தான் பயன்படுத்துகிறார்களா?
அரசாங்கமும் அதிகார்களும் உண்மையில் தூங்குகிறார்களா? அல்லது நடிக்கிறார்களா?
மனதை புண்படுத்தி அதிரவைக்கும் இந்த ரிப்போர்ட் பாருங்கள்.
உடனே ஏதாவது செய்தாக வேண்டும்.

UNTESTED VACCINE SURFACES IN POLIO OUTBREAK

http://www.tehelka.com/story_main33.asp?filename=Ne280707untested_vaccine.asp

A potent new vaccine introduced in Uttar Pradesh by the WHO has had no safety tests; the rash of new polio cases in the state may’ve been caused by the vaccine itself, reports Mihir Srivastava

Surrounded by mango groves, village Rahimabad is situated 10 kilometers off the Lucknow-Sitapur highway in the Khairabad block of Sitapur district. Rahimabad is in news for a dubious reason. A two-year-old girl of this village, Saniya, suffers from Type I polio despite being administered more than seven doses of the new polio monovalent vaccine (MOPVI), which is made specially for the Type I poliovirus. The vaccine was introduced in mid-2005 and tom-tommed as the final step in the eradication of polio from India. Before its introduction, a trivalent vaccine was in use that simultaneously targeted the three poliovirus strands found in India, Type I, II and III, by introducing into the body live viruses of all the three strands to develop immunity.

Saniya’s is not the only case. There are 15 cases of Type I polio spread across Uttar Pradesh (There are also 41 cases of Type II polio which takes the total count to 56). While there has been no reported Type I case in the endemic Moradabad, the new cases have been reported from eastern and central Uttar Pradesh; so instead of just a region, cases of wild polio are being reported from all over Uttar Pradesh now.

Saniya’s mother, Noorjahen, is furious. “She is having polio drops ever since she was four days old. She has had over a dozen doses of the polio drops. We came to know about her polio when she got a high fever. She could barely manage to stand, could not walk at all, after the fever. We took her to the local hospital where they did a stool test. We were later told that she has polio,” she recounts. “There must be some thing wrong with the polio drops if even after so many doses my child has contracted polio. The government should test medicines before they are used. Pata nahin bachchoo ko kya pila rahin hain!” (Don’t know what they are making my child drink), she adds.

Mistrust is not only rife among the patients’ families, it has also gripped the doctors and field operatives overseeing the vaccination project. Add to this the latest controversy about the MOPVI vaccine, introduced in India by the World Health Organisation (who), and the organisation’s National Polio Surveillance Project (npsp), and you get a sense of the callousness plaguing the polio campaign.

The authors of the Lancet study differ with the who’s project manager, Dr Hamid Jafari, on critical questions

IS THE VACCINE NEW?
LANCET >> “The vaccines assessed were licenced for administration in India by the national regulatory authority, the Drugs Controller General of India.”
WHO >> “It is not a new vaccine. It was used in other countries before the trivalent vaccine. There are studies on it done even in India.”

While Jafari asserts that the vaccine is not new, the authors say it is under licence from the government of India, so the responsibility lies with the government

IS IT LINKED TO THE RISE IN ACUTE FLACCID PARALYSIS?
LANCET >> “The increase in afp cases began before mopv1 was introduced, and occurred across India, including states where mopvi has not been used. The introduction of mopvi is not, therefore, the cause of the increase in cases of afp. When we are into the business of polio eradication we are interested in polio and nothing else.”
WHO >> “This is due to better reporting and surveillance. We know by our 50 years of experience that the polio vaccines are safe.”
While the authors deny a connection and say they are only concerned with wild polio cases, Jafari simply glosses over it. What is crucial is the lack of any study to support either claim

When the MOPVI was launched in India in mid-2005, there was no mention that it was a new vaccine, and therefore no need was felt to examine whether it had been tested. The impression created at the time was that this vaccine had earlier been used in the 60s and 70s in some other countries. The project manager of the npsp, Dr Hamid Jafari, confirmed this while talking to Tehelka.

In contrast to this position, the April 21, 2007, issue of the renowned medical journal, Lancet, carried a study titled “Protective efficacy of a monovalent oral Type 1 poliovirus vaccine: a case-control study by Grassly NC, Wenger J, Durrani S, Bahl S, Deshpande JM, Sutter RW, Heymann DL and Aylward RB”. On pages 1356-1362 it says: “A high-potency monovalent oral type 1 poliovirus vaccine (mopv-i) was developed in 2005 to tackle persistent poliovirus transmission in the last remaining infected countries. Our aim was to assess the efficacy of this vaccine in India.”

This clearly means that the MOPVI is a new, untested vaccine and its use was part of an experiment. This news has outraged the Indian medical community. If this vaccine was new, did the who and npsp test its safety? Head of the pediatrics department of Delhi-based St Stephen’s Hospital, Jacob Puliyel, took up the matter with Lancet. In his strong-worded letter to Lancet’s editor, he wrote: “We are shocked and dismayed that Lancet should have published the paper on the protective efficacy of monovalent oral Type I poliovirus...having overlooked the serious ethical issues involved.” He went on to write, “What was introduced, according to this article, was a new vaccine that was five times more potent than previous vaccines, presumably also with the increased likelihood of adverse effects. No informed consent was taken, nor was the public told that the vaccine was experimental. Efforts were made to give the impression that the monovalent vaccine was not new.”

Lancet asked the authors of the article to respond to the questions raised by Puliyel. In their reply, the authors bypassed the question whether the vaccine was new or not, and put the onus of use of this vaccine squarely on the government of India. “The vaccines assessed were licenced for administration in India by the national regulatory authority, the Drugs Controller General of India. The MOPVI formulation assessed in our study has been used since mid-2005 by the Government of India, and now in over 20 countries around the world.”

When Tehelka asked the same question to Jafari, he said it wasn’t a new vaccine. Then why does this paper in Lancet say so? “It has been interpreted wrongly,” Jafari said.

Puliyel had another serious objection. He said administering MOPVI without examining its potential harmful effects amounts to experimentation on human subjects. The question that npsd and who have to answer is why polio drops that are five times more potent, which means they carry five times more of the live poliovirus, was indiscriminately administered. Would this not result in overexposure to the live poliovirus and possibly result in vaccine-induced polio? “The oversight body that introduced this experimental vaccine should also have monitored adverse effects,” wrote Puliyel to Lancet. Further, he mentioned: “In the absence of proper post-vaccination surveillance of adverse effects, we have to rely on indirect evidence of possible adverse effects available from the npsp. Data from Uttar Pradesh (where Grassly and colleagues show improved vaccine efficacy) show an increase in the incidence of non-polio Acute Flaccid Paralysis (AFP, or the weakness of limbs) since the introduction of the monovalent vaccine.” Doctors in UP are worried about this development. “We want the nature of AFP in these cases to be investigated. It could be due to over exposure to the polio vaccine,” said a senior doctor in Lucknow who has overseen the polio immunisation programme in UP for years.

These apprehensions are not without reason. Of the 10,264 reported cases of AFP, 209 were cases of polio. Of the remaining 10,055 only 2,553 were followed up. npsp data reveal that approximately 4,800 cases had residual paralysis or died after acquiring in 2005 non-polio AFP. “The situation was even worse in 2006 after just six doses of MOPVI. It is not surprising that npsp is not keen on the follow up of these cases,” says Puliyel.

In their reply to Lancet, the study’s authors have ruled out this possibility completely. Interestingly, they cite no study to support their assertion. The increase in AFP cases is attributed to better surveillance and reporting. “The increase in AFP cases began before MOPVI was introduced, and occurred across India, including states where MOPVI has not been used. The introduction of MOPVI is not, therefore, the cause of the increase in cases of AFP,” the authors wrote.

Disagrees Puliyel: “This cannot be ruled out unless tested.” In their reply to Lancet, the authors have written: “Poliomyelitis cases are confirmed only when the poliovirus is identified in the stools of a patient with Acute Flaccid Paralysis (AFP). However, it is impossible to collect stool samples from all such patients.” They have also said: “When we are into the business of polio eradication we are interested in polio and nothing else.”

Jafari said the question of overexposure does not exist. “Each time a vaccine is given, it strengthens the child’s immunity against subsequent doses,” Jafari said. But he failed to explain why infants like Saniya, who have had multiple vaccination, have contracted polio. On the question of whether the rising cases of AFP are a possible fallout of overexposure to polio vaccines, Jafari said, “We know by our 50 years of experience in polio vaccination that the vaccines are safe. There are many studies in place, even in India.” None of these “studies” was quoted in the detailed reply to Lancet.

Then why does polio survive in the Hindi heartland? As usual, the who blames the state government and its poor health infrastructure. Dr LB Prasad, director general of UP’s Directorate of Family Welfare, counters: “Our job is to give vaccines to every child in Uttar Pradesh. We have approximately a 90-percent coverage against the required 80 percent. Each child has received multiple doses.”

Another question is why are local authorities always held responsible for any failure? Did the who care to check the efficacy of its own vaccine? “We are constantly looking at the efficacy aspect of the vaccines,” said Jafari. “That is what led to the introduction of MOPVI.” But if that is the case, why are children, who have been vaccinated more then 20 times, still carrying polio? “The efficacy of the vaccine depends on climate conditions, hygiene, population density, etc. They may not be 100 percent effective,” concedes Jafari. While Jafari does not consider efficacy the real issue, Principal Secretary of the UP’s Health department, Arun Mishra, informed Tehelka: “The efficacy of the MOPVI is being tested by the Indian Council of Medical Research. The results are awaited.”

» Writer’s e-mail: mihir@tehelka.com

July 28 , 2007

What if a “dirty bomb” exploded over a large segment of U.S.population that simultaneously exposed citizens to Hepatitis B,Hepatitis A, tetanus, pertussis, diphtheria, three strains of polio viruses, three strains of influenza, measles, mumps, and rubella viruses, two types of meningitis, four strains of herpes viruses, the chickenpox virus, 7 strains of Streptococcus bacteria, and four strainsof rotavirus.

• We would declare a national emergency.
• It would be an “extreme act of BIOTERRORISM
• The public outcry would be immense and our government would react accordingly.

And yet, those are the very organisms we inject into our babies and our small children in multiple doses, with immature, underdeveloped immunesystems, many at the same time with vaccines.
But instead of bioterrorism, we call it “protection.” Reflect on that irony.

- Dr Sheri Tenpenny, MD

Post Comment

Monday 23 July 2007

இரண்டு பஸ் வாங்குவோமா - இது போல?

[இதற்கு முந்தைய சிவாஜி, ரஜினி பதிவு நண்பர் ஜோ சுட்டிக்காட்டியது போல அப்படியே நண்பர் முத்துக்குமரன் இட்டிருந்தார். எனவே நீக்கி விட்டேன். தகவலுக்கு நன்றி ஜோ.]













Post Comment

Saturday 21 July 2007

சொல்லுங்கள் பார்க்கலாம்



1956ல் தயாரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க். 1956 செப்டம்பர் மாதம் IBM நிறுவனம் '305 RAMAC' என்ற பெயரில் இந்த முதல் கணிணியை ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்(HDD) உடன் வெளியிட்டது. இந்த HDD, 1000 கிலோவுக்கு மேல் எடையுள்ளதாகவும் 5MB dataவை சேமிக்க கூடியதாகவும் இருந்தது.

டெக்னாலஜியின் வளர்ச்சி - தப்பிச்சோம்!!!

Post Comment

Monday 25 June 2007

நண்பர்களுக்குச் செய்தி (வண்ணத்துப் பூச்சி)



கூட்டுப்புழுவில் ஒரு நாள், ஒரு சிறிய துவாரம் தென்படத் துவங்கியது. அந்தச் சிறிய சந்திலிருந்து அந்த வண்ணத்துப் பூச்சி வெளிவரப் போராடிக் கொண்டிருப்பதை ஒரு மனிதன் மிக நீண்ட நேரமாய் கவனித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று சலனங்கள் மறைந்து போனது. அது தன்னால் இயன்றவரை போராடியும், அதனால் முடியாமல் போய், நிறுத்தி விட்டதாக அவனுக்குத் தோன்றியது.

அவன் அந்த பூச்சிக்கு உதவ நினைத்து, ஒரு கத்தரியை எடுத்து அதன் துவாரத்தை சற்று பெரிதாக்கினான். இப்போது இந்த வண்ணத்துப் பூச்சி சுலபமாக வெளியில் வந்தது. ஆனால் அதன் உடம்பு சிறுத்து, உலர்நது போய், இறக்கைகள் வளர்ச்சியற்று வீணாகி இருந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் அதன் இறக்கைகள் வளர்ந்து விரிந்து அந்த வண்ணத்துப்பூச்சியின் உடலைத் தாங்கும் வண்ணம் செம்மையாவதைப் பார்ப்பதற்காக அந்த மனிதன் அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

எதுவும் நடக்கவில்லை. உண்மையில் அந்த வண்ணத்துப்பூச்சி தன் எஞ்சிய வாழ்நாளை பறக்க முடியா இறக்கைகளுடன், உலர்நத உடம்புடன், ஊர்ந்தே வாழ நேரிட்டது.

அந்த பூச்சி, அந்த கடினமான சிறிய துவாரத்திலிருந்து, முறைப்படி, சிறிது சிறிதாக போராடி வருவதே, இயற்கையான வழியில், அதன் உடம்பிலும், இறக்கையிலும் தேவையான பலத்தை பெற்றுத் தந்து, அது கூட்டிலிருந்து சுதந்திரமாய் வெளியேறி பறக்க உதவும் என்பதை அம்மனிதன் தன் இரக்க குணத்தினாலும் நேசத்தினாலும் அறிந்திருக்கவில்லை.

சில நேரங்களில் போராட்டங்கள் வாழ்வுக்கு மிகவும் அவசியமானது. எந்தத் தடைகளுமில்லாமல் வாழ்நாளை நாம் பழகியிருந்தால், அதுவே பின்னாளில் நம்மை முடக்கி விடும். தடை தாண்டத் தெரியாமல் தடுமாற்ற மேற்பட்டு, வாழ்வில் பறக்க வியலாது.

நான் பலத்தை வேண்டினேன்.
நான் பலம் பெற உதவியாக, சிரமங்கள் தரப்பட்டது.

நான் அறிவை வேண்டினேன்.
எனக்குச் சோதனைகள் தரப்பட்டு, தீர்க்க அறிவுறுத்தப்பட்டது.

நான் செழிப்பை வேண்டினேன்.
எனக்கு மூளையும், உடல் வலிவும் தரப்பட்டு, உழைக்க ஏவப்பட்டது.

நான் துணிவை வேண்டினேன்.
எனக்குத் தடைகள் தரப்பட்டு, தாண்டச் சொன்னது.

நான் அன்பை வேண்டினேன்.
வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைக் காட்டி, அவர்களுக்கு உதவச் சொன்னது.

நான் உதவி வேண்டினேன்.
எனக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது.

நான் கேட்ட எதுவுமே எனக்கு கொடுக்கப்படவில்லை - ஆனால்
எனக்குத் தேவையான அனைத்தையும் நான் பெற்றுக் கொண்டேன்.

வாழ்க்கையை பயமின்றி வாழுங்கள். எல்லா தடைகளையும் துணிவோடு எதிர் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் அதைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

Post Comment

Thursday 29 March 2007

வாழ்க்கை வாழ்வதற்கே

1. பணம் சம்பாதிக்கவென்று நம் உடல்நலத்தை இழக்கிறோம் பின்னர்
இழந்த உடல் நலத்தை சீராக்க பணத்தை செலவழிக்கிறோம்.

நமக்கு மரணமேயில்லை என்பதைப் போலலே வாழ்கிறோம் பின்னர்
நாம் வாழ்ந்ததேயில்லை என்பதைப் போல மரணிக்கிறோம்.

2. எனது உயர்நிலை பள்ளிப் படிப்பை முடிக்க முதலில் மரண ஓட்டம் அடுத்து கல்லூரி
பின் கல்லூரிப் படிப்பை முடிக்க மரண ஓட்டம் அடுத்தது வேலை
அதன் பின் திருமணம் மற்றும் குழந்தைப் பேற்றுக்கான மரண ஓட்டம்

நான் திரும்பவும் வேலைக்குச் செல்ல தடையேற்படுத்தாத வயது வரை,
என் குழந்தைகள் வளரவென்ற பாதையில் அதன்பின் மரண ஓட்டம்
பின்னர் ஓய்வை நோக்கிய மரண ஓட்டம்

இப்போது நான் இறந்து கொண்டிருக்கிறேன்
திடீரென நான் உணருகிறேன்- நான் உண்மையில் வாழ்வது என்பதையே மறந்து விட்டு இருந்திருக்கிறேன்.

3. மேற்சொன்னவை உங்களுக்கும் ஏற்படாவண்ணம் தயவுசெய்து பார்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் நிகழ்காலத்தை ஏற்றுக் கொண்டு, அதை பரிபூரணமாக அனுபவித்து,
ஒவ்வொரு நாளிலும் வாழுங்கள்

(நன்றி: நண்பர்கள் இரவி /ஷர்மிளா)

Post Comment

Saturday 24 March 2007

கடவுளின் வரம் - அம்மா

அவனது தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஆறு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் வாழ்க்கையின் துயரங்களை தனியாளாய் எதிர்கொண்ட நெஞ்சுரம் மிகுந்த அவனது தாயார் பற்பல இன்னல்களுக்கிடையே அவர்களை ஆளாக்கினார். அவன் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் பெறும் அதிக பரிசுகளைக் கண்டு மிகுந்த ஆனந்தமடைவார். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். அவர் குழந்தைகள் அடையும் மகிழ்ச்சிதான் அவரது வாழ்வின் ஆனந்தமே என்றிருந்தார்.

அப்போது அவன் சிறிய பையன். எட்டாவது தேர்வுக்குப் பின் கோடை விடுமுறையில் வீட்டிலிருந்தான். 'இப்போது கடவுள் உங்கள் முன் தோன்றி ஒரு வரம் மட்டும் கேட்கலாம் என்ற வாய்ப்பளித்தால் என்ன வரம் கேட்பீர்கள்' என்று வானொலி அல்லது ஏதோ கதைப் புத்தகத்தின் தொடர்ச்சியாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்..

அவன் தாய், தமையன், தமக்கை ஆளுக்கொன்று சொன்னார்கள். 'உனக்கென்னடா வேணும்' என்று அம்மா கேட்டார்கள்.

அவன்
'எனது கொள்ளுப்பேரன், தங்கத்தட்டில் தயிர் சாதம் சாப்பிடும் அழகை, நானும் என் தாயாரும், என் வீட்டு பதினைந்தாவது மாடியிலிருந்து, வெறும் கண்ணால் கண்டு இன்புற வேண்டும்' என்றான்.

'என்னடாது பைத்தியம் மாதிரி உளர்றே' அவனது தமையன்
'ஏதாச்சும் இப்படித்தான் சொல்வான்' தமக்கை

1. எனது பேரனுக்கு பேரன் பிறக்கும் வரை நானும் தாயாரும் இருக்க - மிக நீண்ட ஆயுள் வேண்டும்
2. தங்கத்தட்டில் சாப்பிடுமளவுக்கு வசதி நிறைந்திருக்க வேண்டும். (தங்கத் தட்டில் சாப்பிடக்கூடாதென்பதெல்லாம் அவனுக்கு அப்போது தெரியாது)
3. தயிர்சாதம் சாப்பிட பால் வளங்களில் குறைவிருக்கக்கூடாது. (அப்போதெல்லாம் விற்றுத் தீராமல், வீட்டில், தேவையை விட கூடுதலாக பால் இருந்தால்தான் அம்மா தயிர் செய்வார்கள். தயிராகவே கடையில் விற்கும் காலம் வருமென்றெல்லாம் தெரியாது.)
4. என் வீட்டுப் பதினைந்தாவுது மாடியிலிருந்து வெறும் கண்ணால் கண்டு இன்புற -
(அ) 15 மாடிகளுள்ள வீடு சொந்தமாக இருக்குமளவுக்கு செல்வ வளம் நிறைந்திருக்க வேண்டும். (பல மாடிக் கட்டிடத்தில் 15வது மாடியில் ஒரு ப்ளாட் மட்டும் விற்கும் காலம் வருமென்றெல்லாம் தெரியாது)
(ஆ) 15வது மாடி வரை ஏறி இறங்குமளவுக்கு எங்களிருவருக்கும் உடல் பலம் இருக்க வேண்டும். (கிராமத்தில் இருந்ததால் லிப்ட் என்ற சாதனத்தைப்பற்றிய அறிவெல்லாம் 1976களில் இல்லை)
(இ) வெறும் கண்ணால் பார்த்தாலே தெரியுமளவுக்கு கண் பார்வை கூர்மையாயிருக்க வேண்டும்.
(ஈ) குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது. இருந்தால் இன்புற முடியாதே

என்று அவன் விளக்கினான்.

அவன் தந்தை மறைவின் நான்கு நீண்ட ஆண்டுகளுக்குப்பின் அன்றுதான் அவன் தாயாரின் முகத்தில் அத்தகையதொரு மகிழ்ச்சிப் பொலிவைப் பார்த்தான். வாழ்வுச் சுமைகளின் அழுத்தத்தில் சோர்ந்து, ஏமாற்றத்தின் வலிகள் மட்டுமே வரிகளாய் ஓடிய அம்மாவின் முகத்தில், நன்னம்பிக்கையின் ஒளிக்கீற்று படர்வதைப் பார்த்து பரவசம் அடைந்தான் அவன்.

அவன் தலையை வருடியவாறே தாய் சொன்னாள் 'உனக்கு ஆசையே இல்லடா தம்பி!'

இப்போது அவன் மகள் அதைச் செய்தியாக கேட்டபோது சொன்னது
'டாடீ! உங்களுக்கு ஆசையே இல்லை டாடீ!'.

Post Comment

எதற்கு கவலை!

85களில் துபை வந்த புதிதில் எனது நெருங்கிய நண்பரின் சகோதரர் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அவர் வீட்டுச் சுவரில் ஒட்டியிருந்த ஒரு ஆங்கிலக் கவிதையொன்று என் கருத்தைக் கவர்ந்தது. மனதில் சோகம் கூடும்போதெல்லாம் அந்தக் கவிதை நினைவுக்கு வந்து, வாழ்வின் நிதர்சனத்தை உணர வைத்து, என் சோகத்தைக் குறைத்தது.

யாருக்காவது பயன்படலாமென்று (நினைவில் உள்ளவரை) அதன் கருத்து தமிழில் இங்கே:

மனிதன் கவலைப்பட இரண்டு விடயங்கள்தான்
அவன் உடல் நலமுள்ளவனா? நோயாளியா?
நீ உடல் நலமுள்ளவனெனில் கவலையடைய ஏதுமில்லை

நோயாளியென்றாலும், கவலைப்பட இரண்டு விடயங்கள்தான்
அவன் நலமடைந்து விடுவானா? இறந்து விடுவானா?
நீ நலமடைந்திடுவாயெனில் கவலையடைய ஏதுமில்லை

இறந்து விடுவாயென்றாலும், கவலைப்பட இரண்டு விடயங்கள்தான்
அவன் சுவனம் சேர்வானா? நரகத்தில் வீழ்வானா?
நீ சுவனம்தான் சேருவாயெனில் கவலையடைய ஏதுமில்லை

நரகம் சேர்பவனெனில் உனக்கு கவலையடைய நேரமேது சகோதரா!
ஓடு. உனது தோழர்களைச் சந்தித்து விடைபெறு!
உனது எதிரிகளை சந்தி!, கை குலுக்கு!,
உன் தவறுகளுக்காக வருத்தம் தெரிவி!,
மன்னிப்பைக் கேட்டுப் பெறு!
நரகத்திலிருந்து விடுதலை பெற முடிந்தவரை முயற்சி செய்!.

Post Comment

Thursday 22 February 2007

எச்சில்...... ஐயையே....!!!

(என் சகோதரரிடம் பேசிக்கொண்டிக்கும்போது, பேச்சின் போக்கில் அவர் சொன்னது. அவர் எந்த புத்தகத்தில் படித்தாரென்பதோ, யார் சொன்னார்களென்றோ தெரியாது. ஆகவே, நீங்கள் கேட்டதாகக்கூட இருக்கலாம்.)

கல்லூரி நண்பர்கள் நான்கு பேர். எப்போதும் லந்து, அரட்டை, அலம்பல்தான். அவர்கள் கண்ணில் மாட்டியவர்கள், வம்பில் மாட்டாமல் தப்பிப்பது அபூர்வம்.

அவர்கள் வழமையாகச் செல்லும் ஒரு உணவகத்தில் (Restaurant), உணவு கொண்டு வரும் ஒரு குறிப்பிட்ட பரிமாறுபவரிடம் (supplier) எப்போதும் தகராறு செய்வார்கள். அந்த பணியாளர் எந்த மேசையில் பரிமாறுகிறாரோ அங்கேயேதான் போவார்கள். அவர்களை வேறு இடத்துக்கு மாறச் சொன்னாலும் மாற மாட்டார்கள. அந்தப் பணியாளரையும் மாற விட மாட்டார்கள்.

உதாரணமாக: தோசை கொண்டுவரச் சொல்லி, அவர் கொண்டு வந்ததும், நாங்கள் சொன்னது பரோட்டாதான் என்று மாற்றச் சொல்லி அவரைத் தொந்தரவு செய்வார்கள். இவர்கள் வந்தாலே அவருக்குப் பிரச்னைகள் துவங்கி விடும். முதலாளியிடம் வசவுகளும் கிடைப்பதுண்டு. தொடர்ந்து இரண்டு வருடம், அவர்கள் வரும் போதெல்லாம், இந்த மாதிரி தொல்லை தருவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது கல்லூரி வாழ்க்கை முடிந்து விடை பெறுகிற நேரம். கடைசியாக அந்தப் பணியாளரை சந்தித்து மன்னிப்பு கேட்க முடிவு செய்தார்கள். ஐந்து அல்லது ஆறாயிரம் பெறுமானமுள்ள நல்லதொரு அன்பளிப்பை வாங்கிச் சென்று, அவரிடம் கொடுத்து, 'நாங்கள் இதுநாள் வரை செய்ததை மன்னித்து, எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது தவறே இல்லை. வேண்டுமென்றே, விளையாட்டுக்காக, நாங்கள்தான் அவ்வாறு நடந்து கொண்டோம்' என்று சொன்னார்கள்.

அன்பளிப்பை ஏற்றுக் கொண்ட அந்த நல்ல பணியாளர், 'ஓகோ அப்படியா! இதுநாள் வரை அது விளையாட்டுக்காகத்தான் எனப் புரியாமலிருந்து விட்டேன். இனிமேல் நீங்கள் எப்போது சாப்பிட வந்தாலும், உங்கள் உணவில் எச்சிலைத் துப்பித்துப்பிப் பரிமாறுவதை கண்டிப்பாக நிறுத்தி விடுவேன்' என்று சொன்னாராம்.

(இதைக் கேட்டதிலிருந்து அலுவலக உதவியாளரை கோபமாக எதுவும் பேசக்கூட யோசனையாயிருக்கிறது. அவரிடம் கோபமாக ஏதும் பேசியிருந்தால், அன்றைய தேநீரை நானே தயாரித்துக் கொள்வேன். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.....)

Post Comment

Tuesday 6 February 2007

SMS - அன்புவழி ஆயுதம்

நமக்கு வருகிற SMS பெரும்பாலும் விளம்பரங்களாகவே இருப்பதால், அதைப் பார்ப்பதற்கே பல நேரங்களில் தொல்லையாய் இருக்கிறது. ஆனால் சீனாவில் நடந்த இந்நிகழ்ச்சியைப் பார்த்தால் SMS மூலம் எத்தகைய சாதனைகளும் செய்யலாம் என அறியலாம். 'சிறு துறும்பும் பல்குத்த உதவும்' அல்லது 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.

ஒரு சீன இளம்பெண் கடைவீதிக்குப் போயிருந்த போது, ஒரு திருடன் அவள் கைப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் பறந்து விட்டான். அந்த கைப்பையில் சுமார் 630 அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள சீனப்பணமும், அத்துடன் அப்பெண்ணின் செல்போன், ஓட்டுனர் உரிமம் மற்றும் I.D. முதலிய முக்கிய ஆவணங்களும் இருந்தனவாம்.

அந்தப் பெண் தன் தோழியிடம் உள்ள செல்போன் மூலம் தனது எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது மணியடிக்கிறது ஆனால் திருடன் எடுக்கவில்லை. ஆனால் இணைப்பையும் துண்டிக்கவில்லை.

அடுத்ததாக அப்பெண் செய்தது முதலில் ஒரு SMS: – 'உன் நிலைமையை என்னால் உணர முடிகிறது. அதனால் உன்னை என்னால் ஒரு திருடனாக எண்ண மனம் இடந்தரவில்லை. உனக்கு வேறு வழியில்லாததால்தான் இவ்வாறு எடுத்திருக்கிறாய் என நினைக்கிறேன்' என்பதாக அனுப்பினாள்.

அடுத்த SMS: – 'உன்னைப் போன்றவர்கள் நினைத்தால், நல்ல வழிமுறைகளில் சிறந்த சாதனைகள் செய்ய இயலும். முயன்ற ஓரிரு இடங்களில் நீ பெற்ற தோல்விகள் உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்' என்பதாக.

அடுத்து, அதற்கடுத்து, அதற்கடுத்து என தொடர்ந்து வரிசையாக (21) இருபத்தியொரு SMS அனுப்பினாள். அதனூடாக 'அப்பணத்தை அவன் எடுத்துக் கொள்வதால் தனக்கேதும் வருத்தமில்லை. திறமைசாலியான இளைஞர்களில் ஒருவன் தவறான வழியில் சென்றுள்ள மன வேதனைதான்' எனவும், இன்னும் 'பணம் போனாலும் அதிலுள்ள (கை பேசியில் சேமிக்கப்பட்டுள்ள) தொலைபேசி எண்களும், மற்ற முக்கிய ஆவணங்களும் தொலைவதால் அவளுக்கேற்பட விருக்கிற மன அழுத்தத்தையும்' குறிப்பிடத் தவறவில்லை.

அவள் வீட்டுக்கு திரும்பிய போது, ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக, அவளுடைய கைப்பை அழகாக பொதியப்பட்டு, அவள் வீட்டுக் கதவருகில் அவளுக்காக காத்திருந்தது. அதிலிருந்து எதுவும் எடுக்கப்படவில்லை. உள்ளது உள்ளபடியே. ஆனால் கூடவே ' அவள் அனுப்பிய SMSகளால் தன் மனம் திருந்தியதாகவும், தன் செயலுக்கு வருந்துவதாகவும், இனி இது போன்ற செய்கைகளில் ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான வழிகளில் கவனத்தைத் திருப்பி,
சிறந்த மனிதனாக வாழப்போகிறேன்' என்ற குறிப்போடு.

(துபாய் 96.7 FM மலையாள வானொலியில் சொல்லக் கேட்டது. சிறிது மெருகேற்றப்பட்டுள்ளது.)

Post Comment

Sunday 28 January 2007

சும்மா கோர்ட்டுக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்-அய்ன் என்றொரு இடமுண்டு.

இங்கே ஒரு பெண் கோர்ட்டுக்கு போனார். “என் கணவர் என்னை வெளியே செல்ல விட மறுக்கிறார். அவர் எனக்காக கொடுத்துள்ள வீடு நாற்றமடிக்கிறது. அதனால் நீங்கள் தலையிட்டு அவருக்கு அறிவுரை சொல்லவும்.” என்று விண்ணப்பித்தார்.
“வீடு நாற்றமடிப்பதால் நீங்கள் விரும்பிய இடத்தில் தங்கலாம்” என்று கோர்ட் தீர்ப்பு சொன்னது.

கணவர் மேல் கோர்ட்டில் “என் மனைவி வெளியே செல்லும் முன்னர் என்னிடம் கேட்பதில்லை அதனால் நீங்கள் தலையிட்டு அவருக்கு அறிவுரை சொல்லவும்” என்று மேல் முறையீடு செய்தார்.

“வீடு நாற்றமடிப்பதால் அது அப்பெண்ணுடைய உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் கேடானது. எனவே அவர் விரும்பிய இடத்தில் இருந்து கொள்ளலாம்” என்று மேல் நீதி மன்றமும் தீர்ப்பளித்துள்ளது..

நாற்றமடிக்கும் வீட்டை சுத்தப்படுத்தினால் பிரச்னை முடிந்தது. அதைப்பற்றி தீர்ப்பில் எதுவும் காணோம்.

இனி “என் மனைவி உணவில் சரியான அளவில் உப்பு சேர்க்கவில்லை” என்று கணவணும்
“என் கணவர் சரியாக விரும்பி உண்பதில்லை” என்று மனைவியும்
எது எதற்குத்தான் நீதி மன்றம் போவதென்பதில்லையா?

(பி.கு.: புது பிளாக்கருக்கு மாறிய பின் என்னென்னவோ நடக்குது.
புரோபைலில் போட்டோ காணவில்லை.
அதனால் தமிழ்மணத்தில பதிய முடிகிறதா என்று அறியத்தான் -
இது இன்றைய கலீஜ் டைம்ஸ் செய்தி)

Post Comment