Thursday, 22 February 2007

எச்சில்...... ஐயையே....!!!

(என் சகோதரரிடம் பேசிக்கொண்டிக்கும்போது, பேச்சின் போக்கில் அவர் சொன்னது. அவர் எந்த புத்தகத்தில் படித்தாரென்பதோ, யார் சொன்னார்களென்றோ தெரியாது. ஆகவே, நீங்கள் கேட்டதாகக்கூட இருக்கலாம்.)

கல்லூரி நண்பர்கள் நான்கு பேர். எப்போதும் லந்து, அரட்டை, அலம்பல்தான். அவர்கள் கண்ணில் மாட்டியவர்கள், வம்பில் மாட்டாமல் தப்பிப்பது அபூர்வம்.

அவர்கள் வழமையாகச் செல்லும் ஒரு உணவகத்தில் (Restaurant), உணவு கொண்டு வரும் ஒரு குறிப்பிட்ட பரிமாறுபவரிடம் (supplier) எப்போதும் தகராறு செய்வார்கள். அந்த பணியாளர் எந்த மேசையில் பரிமாறுகிறாரோ அங்கேயேதான் போவார்கள். அவர்களை வேறு இடத்துக்கு மாறச் சொன்னாலும் மாற மாட்டார்கள. அந்தப் பணியாளரையும் மாற விட மாட்டார்கள்.

உதாரணமாக: தோசை கொண்டுவரச் சொல்லி, அவர் கொண்டு வந்ததும், நாங்கள் சொன்னது பரோட்டாதான் என்று மாற்றச் சொல்லி அவரைத் தொந்தரவு செய்வார்கள். இவர்கள் வந்தாலே அவருக்குப் பிரச்னைகள் துவங்கி விடும். முதலாளியிடம் வசவுகளும் கிடைப்பதுண்டு. தொடர்ந்து இரண்டு வருடம், அவர்கள் வரும் போதெல்லாம், இந்த மாதிரி தொல்லை தருவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது கல்லூரி வாழ்க்கை முடிந்து விடை பெறுகிற நேரம். கடைசியாக அந்தப் பணியாளரை சந்தித்து மன்னிப்பு கேட்க முடிவு செய்தார்கள். ஐந்து அல்லது ஆறாயிரம் பெறுமானமுள்ள நல்லதொரு அன்பளிப்பை வாங்கிச் சென்று, அவரிடம் கொடுத்து, 'நாங்கள் இதுநாள் வரை செய்ததை மன்னித்து, எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது தவறே இல்லை. வேண்டுமென்றே, விளையாட்டுக்காக, நாங்கள்தான் அவ்வாறு நடந்து கொண்டோம்' என்று சொன்னார்கள்.

அன்பளிப்பை ஏற்றுக் கொண்ட அந்த நல்ல பணியாளர், 'ஓகோ அப்படியா! இதுநாள் வரை அது விளையாட்டுக்காகத்தான் எனப் புரியாமலிருந்து விட்டேன். இனிமேல் நீங்கள் எப்போது சாப்பிட வந்தாலும், உங்கள் உணவில் எச்சிலைத் துப்பித்துப்பிப் பரிமாறுவதை கண்டிப்பாக நிறுத்தி விடுவேன்' என்று சொன்னாராம்.

(இதைக் கேட்டதிலிருந்து அலுவலக உதவியாளரை கோபமாக எதுவும் பேசக்கூட யோசனையாயிருக்கிறது. அவரிடம் கோபமாக ஏதும் பேசியிருந்தால், அன்றைய தேநீரை நானே தயாரித்துக் கொள்வேன். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.....)

Post Comment

13 comments:

சென்ஷி said...

:))))))))))))))))))))))))))))))


சென்ஷி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அண்ணா!
என் இளமைக் காலப் பாடசாலையில் ஒரு கண்டிப்பான விடுதி ஆசிரியருக்கு; பையன்கள் சிறுநீர் ,தண்ணீருக்குள் கலந்து;அவர் மணத்தில் பிடித்து;உண்மை சொன்னதும் மன்னித்து விட்டார்.
அவர் ஒரு பறங்கி இனத்தவர். (இந்தியாவில் ஆங்கிலோஇந்தியர் எனும் இனம்)மாணவர்களின் நன்மைக்கே கண்டிப்பவர்.
இங்கே தொலைக்காட்சியில் பார்த்தேன். ரெஸ்றெறன்றுகளில் நடக்கும்;சில சில்லறை இந்தமாதிரி விளையாட்டுக்களை இரகசியமாகப் படம் பிடித்தது.

சுல்தான் said...

வருகைக்கு நன்றி சென்ஷி மற்றும் யோகன்பாரிஸ்.

அந்தப் பையன்களில் நீங்களும் உண்டா யோகன்?

ராஜநாகம் said...

(இதைக் கேட்டதிலிருந்து அலுவலக உதவியாளரை கோபமாக எதுவும் பேசக்கூட யோசனையாயிருக்கிறது. அவரிடம் கோபமாக ஏதும் பேசியிருந்தால், அன்றைய தேநீரை நானே தயாரித்துக் கொள்வேன். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.....)
அவருக்கு இது தெரிந்து அன்றைக்கு மட்டும் தவிர்த்துவிடுவார். மற்ற நாட்களில்? :-)

லொடுக்கு said...

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டுங்க. :)

எங்க அலுவலகத்தில் கூட இந்த மாதிரி நடப்பதாக கேள்விப் பட்டேன். நான் எப்பவுமே ஆஃபிஸ் பாய்களின் க்ளோஸ் ஃப்ரெண்டுங்கோ. :)

சுல்தான் said...

வருகைக்கு நன்றி நாகா.
சாதாரணமாக யாரோடும் கோபித்துக் கொள்வதை நான் விரும்புவதில்லை. அது சக ஊழியர்களுக்குத் தெரியும். அதனால் அன்றைய கோபத்தில் செய்தால்தான் உண்டு. அடுத்த நாள் அதை மறந்திடுவார் அல்லது அவர் தவறை உணர்ந்திடுவார் என்று ஒரு நம்பிக்கைதான். நம்பிக்கையில்தானே வாழ்க்கையே ஓடுகிறது.

சுல்தான் said...

வருகைக்கு நன்றி லொடுக்கு.

//நான் எப்பவுமே ஆஃபிஸ் பாய்களின் க்ளோஸ் ஃப்ரெண்டுங்கோ//
சக ஊழியர் அனைவரிடமும் க்ளோஸ் ஃப்ரெண்டு ஆயிடுங்கோ. அதான் நல்லது.

Sirajudeen said...

நான் நீயு காலேஜில் படிக்கும் போது ஹாஸ்டலில் தங்கினேன். அப்போ சீனியர் ஸ்டுடன்ஸ்களோட தொல்லை தாங்க முடியாது. ஒரு முக்கியமான வேலைக்கு போய்கிட்டு இருக்கிறப்போ, அவங்க டேய் போய் டீ வாங்கி வான்னு அனுப்புவாங்க. இப்படி என்னோட பிரண்ட ஒரு நாள் அனுப்புனாங்க. அவன் போன வேகத்தில டீ வாங்கி அதுல என் கண்ணு முன்னாலயே எச்சியை துப்பி கொண்டு போய் கொடுத்தான் பாருங்க. அவரும் அதை தூங்கி எந்திருச்சி ருசிச்சி ருசிச்சி குடிச்சாரு. இதுலாம் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாததால வர்ற வினை.

சுல்தான் said...

வருகைக்கு நன்றி சிராஜுத்தீன்
//இதுலாம் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாததால வர்ற வினை.//
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரரே.

மின்னுது மின்னல் said...

எங்க பங்காளி ஆபிஸ் பாய் "மிசிரி மற்றும் "சூடானிக்கு" வயத்தை கிளின் பண்ணுற மாத்திரையை போட்டு குடுத்துட்டு என்கிட்ட வந்து சொல்லுறான்.
10 நிமிசத்துக்கு ஒரு "காவா" கேட்டா நான் என்ன செய்ய முடியும்னு


அன்னைக்கு விட்டது தான் டீ குடிக்கிறதை :)

எப்பயாவது தேவை பட்டால் நானே போயி போட்டுக்குவேன்

:)

படகு said...

சூப்பர்.........
:)))))))))))))))))))))))

வடுவூர் குமார் said...

நான் என்னவோ துபாயில் எச்சில் துப்புபவர்களை பற்றித்தான் எழுதியிருக்கிறீர்களோ என்று வந்தேன்!!
இது வேறு கதை- நன்றாக இருக்கு.

ஆமாம் இங்குள்ளவர்கள் இப்படி நடைபாதையில் எச்சில் துப்பிக்கொண்டிருக்கிறார்கள்??ஏதேனும் பிரத்யோக வியாதியா?செருப்பு போட்டுக்கொண்டு நடைபாதையில் கால் வைக்கவே மிக பயங்கரமாக யோசிக்கவேண்டியிருக்கு. :-)

சுல்தான் said...

//அன்னைக்கு விட்டது தான் டீ குடிக்கிறதை//
வாங்க மின்னுது மின்னல்.
அதாவது பங்காளி கையால டீ குடிக்கிறதைன்னு சொல்லுங்க. தன் கையே தனக்குதவி என்று அமெரிக்கன் அலுவலகமாக மாத்திட்டீங்க. வாழ்க.

வருகைக்கும் வஞ்சமில்லா சிரிப்பானுக்கும் நன்றி படகு.

//இது வேறு கதை- நன்றாக இருக்கு//
வருகைக்கு நன்றி வடுவூர் குமார்.

//ஆமாம் இங்குள்ளவர்கள் இப்படி நடைபாதையில் எச்சில் துப்பிக்கொண்டிருக்கிறார்கள்??ஏதேனும் பிரத்யோக வியாதியா?செருப்பு போட்டுக்கொண்டு நடைபாதையில் கால் வைக்கவே மிக பயங்கரமாக யோசிக்க வேண்டியிருக்கு. :-)//
பாத்தீங்களா. சிங்கையிலிருந்து வந்தவர் என்று சொல்லாமல் சொல்கிறீர்களே. எப்ப சந்திக்கிறது. துபை பிடித்திருக்கிறதா?

அரபிகளுக்கு இந்த மாதிரி உமிழ்கிற பழக்கமோ, வெற்றிலை பழக்கமோ கிடையாது. எல்லாம் நம் நாட்டவர்கள் செய்து வைத்திருக்கும் கோலம்தான். அதிலும் குறிப்பாக குஜராத்திகள் படு மோசம்.
ஏதாவது பங்காளிகள், குஜராத்திகள் அதிகமுள்ள இடத்தில் இருக்கின்றீர்களா?