Wednesday, 31 December 2008

கொடுங்கோலர்களின் தகவலுக்கு மறுப்பு

காஸாவில் தற்போது யூதர்களால் நடத்தப்படும் இனப்படுகொலையை "ஹமாஸ்க்கு எதிரான போர்" என வர்ணிப்பதோடு, இந்தப் படுகொலைகள் 'பாலஸ்தீனர்களால் இஸரேலில் ஏவப்பட்ட ராக்கெட்களுக்கான பதிலடி' என்றும் யூதர்களும் அவர்களின் கைக்கூலிகளும் சொல்லி வருகின்றனர்.

இது மிகப்பெரிய பொய்.

காஸாவில் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரமாய் உள்ள போக்குவரத்து பாதையில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள தடைகளை நீக்கிவிட்டால் 'நாங்கள் துப்பாக்கி, எறிகணைத் தாக்குதல்களை முற்றாக நிறுத்தி விடுவோம்' என ஹமாஸ் பலமுறை திரும்ப திரும்ப அறிவித்தும், இஸ்ரேல் தடைகளை அகற்ற மறுக்கிறது. உயிர் வாழ தடை ஏற்படுத்தப் பட்டு, மனைவி, மக்கள், நண்பர்கள் உணவுக்காக தவிக்கும்போது வழியற்றவன் என்ன செய்ய முடியும்?

இஸ்ரேல் காஸாவில் தனது ஆக்கிரமிப்பை முடித்துக் கொண்டு விட்டதாக வெறுப்பூட்டும் வாய் விளம்பரங்களை திரும்பத் திரும்ப உலகத்தாரிடம் சொல்கிறது. அது உண்மைதான் எனில், காஸாவின் வான் வெளியும், காஸாவின் நீர் பரப்பும், கடற்கரைகளும், காஸாவின் எல்லைகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஏன்? காஸாவின் வாழ்க்கை முறை முழுமையும் இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்ன நியாயம்?

சோற்றுக்கு வழி தேடி ஒவ்வொரு வேளையும் திண்டாடித் திரியும் மக்களைக் கொண்ட காஸாவின் உட்புறங்களில் தயாரிக்கப்படும் இவ்வகை எறிகணைகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இயலாத வெறும் சப்தம் எழுப்பும் புஸ்வானங்கள்தான் என்பதை உலகமே அறிந்துதான் இருக்கிறது. இந்நிலையில் காஸாவில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு, இஸ்ரேல் இரு வழிகளைத்தான் திறந்துள்ளது. ஒன்று உணவுக்கு வழியின்றி அழிதல் மற்றொன்று இஸ்ரேலிய போர் ஆயுதங்களால் அழிதல். இந்த எறிகணைகள், இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள போக்குவரத்து தடைகளை நீக்க உலகத்தை நோக்கி எழுப்பப்படும் நீதியை வேண்டிய ஒலி மட்டுமே.

ஆறு மாத காலமாக இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலிருந்த போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் இஸ்ரேல் 49 பாலஸ்தீனியர்களை கொன்றொழித்தது. ஹமாஸினால் இஸ்ரேலில் எவருமே கொல்லப்படவில்லை. இதற்கு இஸ்ரேல் எங்ஙனம் பதில் சொல்லும்? யார் பழி தீர்க்கப்பட வேண்டியவர்கள்?.

(டிசம்பர் 29ம் நாள் பெல்ஹோஸா என்ற ஐந்து பேர் கொண்ட பாலஸ்தீனக் குடும்பத்தின் மூன்று குழந்தைகள் யூதக் கொடுங்கோலர்களின் குண்டுகளுக்குப்
பலியாகி, புதைக்கத் தயாராக வடக்கு காஸாவில் அமைந்துள்ள கமால் எட்வன் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள காட்சி)


இது ஹமாஸிற்கு எதிரான போர் என்பது பெரும் பொய்யே தவிர வேறில்லை. இது நாஜிகளைப் போல, ஓர் இனத்தை பூண்டோடு நிர்மூலமாக்கும் எண்ணத்தோடு திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலைப் போர். நாஜிகளால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட யூத குலம், தாமே நாஜிகளாக மாறிப்போனதுதான் அவலம்.

ஹிட்லரின் எண்ணம் கொண்ட, டெல்அவிவ் நரகத்து போர்க் கிரிமினல்கள் சொல்வது போல் இது ஹமாஸிற்கு எதிரான போராக மட்டும் இருந்தால் கடைத் தெருக்களும், மருந்துக் கூடங்களும், கல்லூரிக் கட்டிடங்களும், தனியார் குடியிருப்புகளும், பள்ளிவாயில்களும், கலாச்சார மையங்களும், சாலைகள், வியாபாரத் தளங்கள் போன்றவைகளும் குறி வைத்துத் தகர்க்கப்படுவதின் காரணமென்ன?

இன்று ஒரு நேர்மையான யூத ரப்பி கூட "இஸ்ரேல் காஸாவில் நடத்தும் தற்போதைய போர் ஒரு இன அழிப்புக் கொடூரம்" என்றே சொல்கிறார்.

Post Comment

Monday, 22 December 2008

காவிகள் பகையுணர்வின் வரலாறு

ஹிந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள் இந்நாடு முழுதும் பற்பல இடங்களில் 'சரஸ்வதி சிசு மந்திர்' என்று பெயரிலும் 'வித்ய பாரதி பள்ளி' என்ற பெயரிலும் பள்ளிகள் நடத்தி வருகிறார்கள் என்பதை முதலில் நான் அறிந்திருக்கவில்லை. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள் பணிபுரிவதுடன் இலட்சக்கணக்கில் மாணவர்களும் பயின்று வருகின்றனர். அவர்கள் தங்கள் பாடபுத்தகங்களை அச்சிட்டுக் கொள்ள சொந்தமாக வெளியீட்டு நிறுவனமும் வைத்துள்ளனர்.

நமது நாட்டில் எவ்வளவு அதிகம் முடியுமோ அத்துனை பள்ளிகளும் பாடப் புத்தகங்களும் தேவையென்பதால் இப்பள்ளிகளைப் பற்றி அறிந்த போது நான் மகிழ்ந்தேன். ஆனால் அவர்கள் இந்தப் பள்ளிகளில் என்ன நடத்துகிறார்கள் என அறிந்த போது கடுமையான ஏமாற்றமடைந்தேன். நம்ப வைக்கப்படுகின்ற வெறும் வரலாற்றுக் கட்டுக்கதைகள். அந்தக் கட்டுக் கதைகளின் மூலம் நம் பழங்காலத்தைப் பற்றி அதிக மன உறுதியும், அதே சமயம் நம் நாட்டில் நம்மைப்போல் வரலாறு இல்லாத, ஆனால் இந்தியராகப் பிறந்த, முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிரான அவநம்பிக்கையையும் பகையுணர்வையும் வளர்த்தெடுப்பதையுமே செய்கின்றார்கள்.

முதன் முதலாக, அவர்கள் கல்வித் திட்டத்தில், பாரத வரலாறு ஆரிய வருகையுடன்தான் தொடங்கியதாக நம்ப வைக்கப்படுகிறது. நமது நாட்டின் தென்பகுதியில் ஆரியர்கள் முதன் முதலாக குடியேறும் முன்னரே இந்நாட்டின் பூர்விகக் குடிகளான திராவிடர்கள் வாழ்ந்திருந்த வரலாறு மறைக்கப்டுகிறது.

யூத, ஜிப்சி இனத்தவரை கொட்டில்களில் அடைத்து, நச்சுக் காற்றை செலுத்திக் கொன்று, செமிட்டிக் இனத்தவரின் ஆரிய ஜெர்மனியை உருவாக்கிய அடால்ப் ஹிட்லர்தான் அவர்களது முன்மாதிரி. ஆனால் தற்போதைய ஜெர்மானியர்களே ஹிட்லரை பேய் அவதாரம் (Devil-incarnate) என எண்ணுவதோடு அவனை நினைந்து வெட்கித் தலை குனிகின்றார்கள். ஆர் எஸ் எஸ், சிவசேனைத் தலைவர்களுக்கோ அவன் புகழுக்குரிய உதாரண புருஷன். இணையத்தில் உலவும் சிலவற்றுக்கு யூதர்களும் முன்மாதிரிகள் அவர்களைக் கொன்ற ஹிட்லரும் முன்மாதிரி. என்ன கொடுமை!.

அவர்களது பாடத் திட்டத்தின்படி பவுத்தமும் அதை விரிவு படுத்தி அஹிம்சையை போதித்த பேரரசர் அசோகனும் கொடூரமான நாசக்காரர்களாம். இவர்களால்தான் நம் இயல்பான போர்க்குணம் களவு போய் நாம் கோழைகளானோமாம். இதனால்தான் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் கொண்டு வந்த முஸ்லீம் படைகளை நாம் எதிர்க்க முடியாமல் போனோமாம் (மனநோய் பீடித்ததைப்போல் உளரும் கயவர்கள்). ஆர் எஸ் எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவர் கூற்றின்படி அசோகனும் பவுத்தமும் சீறி வரும் நச்சுப் பாம்புகளாம்.

அவர்களது பாடப்புத்தகத்திலிருந்து சில உதாரணங்கள்:
1.முஸ்லீம்கள் மெக்காவில் அமைக்கப் பட்டிருக்கிற கருப்புக் கல்லாகிய சிவலிங்கத்தைத் தரிசனம் செய்ய பெரும் விருப்பம் கொண்டவர்கள். அட பைத்தியங்களே!.
2.டெல்லியில் கட்டப்பட்டுள்ள குதுப்மினார், பேரரசர் சமுத்திர குப்தரால் கட்டப்பட்ட விஷ்ணு ஸ்தம்பா ஆகும். - அதன்மேல் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டு அழகு படுத்தப் பட்டுள்ளதைப் பற்றி ஏதும் சொல்ல மாட்டார்கள்.
3.பாபரி மஸ்ஜித் எப்போதும் ஒரு பள்ளிவாயிலாகவே இருந்ததில்லை ஏனெனில் அங்கு எப்போதுமே தொழுகை நடைபெற்றதில்லை என்று வலியுறுத்துவார்கள். - இடிப்பதற்கு முன்னுள்ள அதன் நிழற்படத்தைப் பார்த்தாலே அதன் மூன்று கும்பாவும் மெக்கா நோக்கியுள்ள அதன் சுவர்களும் அது பள்ளிவாயில்தான் எனத் தெளிவு படுத்தும்.

இணையத்தில் பிதற்றித் திரியும் இத்தயைவர்களைக் கண்டு இனி அனுதாபம் கொள்ள முயற்சியுங்கள். அவர்கள் எங்கு கல்வி பயின்றனர் என்று அறிந்து கொள்ளுங்கள். சிறு வயதிலிருந்தே இவ்வாறு மூளைச்சலவை செய்யப் பட்டவர்களால் என்ன செய்ய இயலும். பாவம்.

ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்ஸனன் நவம்பர் 2001ல் வெளியிட்ட கருத்தில் சிறந்த வரலாற்றாய்வாளர்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிரான ஐரோப்பிய இந்தியர்கள் என்றார். பழங்காலத்து இந்தியாவில் அணு சக்தியைப் பற்றிய அறிவிருந்தது என்பதாகவும் பரத்வாஜ முனிவரும் இராஜ போஜ் முனிவரும் ஆகாய விமானம் செய்வதைப் பற்றி விளக்கி இருப்பதோடு எத்தகைய விமானங்கள் எவ்வளவு உயரத்தில் பறக்கும் என்பது பற்றியெல்லாம் விளக்கி இருக்கின்றார்களாம். இவ்வாறு புனையப்பட்ட கட்டுக்கதைகள் யாவும் வாஜ்பாயியின் பாஜக ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியின் உத்தரவின்படி வரலாறாக பதிவிக்கப்பட்டது. இந்த ஜோஷிதான் பல்கலை கழகங்களில் ஜோஸியத்தை தனிப்பாடப் பிரிவாக புகுத்தியவர். ஆனால் இவர் ஜாதகப்படி வெற்றிதான் என வலியுறுத்தப்பட்ட தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் பாடங்களின்படி இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியின் பங்கு குறைவாக்கப்பட்டு வீர்சாவர்க்கரின் பங்கு உயர்த்திக் காட்டப்படுகிறது. மகாத்மா காந்தி கொலை வழக்கில் technical அடிப்படைகளில் இவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும் பின்னால் நீதிபதி கபூர் கமிஷனால் இவர்தான் கொலைக்கு முக்கிய தூண்டுகோலாக இருந்தவர் எனக் தெளிவுபடுத்தப் பட்டிருந்தார். பாஜக ஆட்சியின்போது இவர் சிலைதான் நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டது.

நான் ஒரு பக்கச் சார்பாக பேசுவதாக உஙகளுக்குத தோன்றினால் JNU பல்ககைழகத்தின் முக்கிய மூன்று வரலாற்று பேராசிரியர்கள் ஆதித்யா முகர்ஜி, ம்ருதுலா முகர்ஜி, சுச்சிதா மஹாஜன் (Aditya Mukherjee, Mridula Mukherjee and Sucheta Mahajan) ஆகியவர்கள் தொகுத்த ஆர் எஸ் எஸ் பள்ளி பாடப்புத்தகமும் மகாத்மா காந்தியின் கொலையும் [booklet — RSS School Texts and the Murder of Mahatma Gandhi (Sage)] என்ற வெறும் 80 பக்கங்களுள்ள சிற்றேட்டை பார்வையிடுங்கள். அதில் அவர்கள் எடுத்தாண்ட ஒவ்வொரு மேற்கோளின் நம்பகத்தன்மையையும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தி உள்ளனர்.

பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் இத்தகையை நஞ்சை விதைத்து, மற்றவர்களுக்கெதிராக பகைவெறியை ஊட்டி வளர்ப்பது நாட்டு நலனுக்கு உகந்ததா?

ஒற்றுமையுள்ள இந்தியா என்ற நம் இன்பக் கனவுகளுக்கு எதிராக வன்முறையையும் உள்நாட்டுப் போரையும் நம் சந்ததிகளின் மூளையில் திணிக்க அனுமதிக்கலாமா? யோசியுங்கள்.

ஏறக்குறைய இந்தியாவில் நடைபெறும் எல்லா தீவிரவாத நடவடிக்கைகளிலும் இத்தகைய மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் பங்கு பற்றி சிந்திக்க வேண்டாமா?

இத்தகைய எண்ண ஓட்டம் கொண்டவர்களையும், அதிலேயே தீவிரமானவர்களையும்தான் பாஜக ஆட்சியின் போது எல்லா முக்கிய நிர்வாக பொறுப்புகளிலும பதவிகளிலும் உள் நுழைத்து வைத்தார்கள். இவர்களிடமிருந்து நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியுமா? இதற்கான நல்லதொரு தீர்வைத் தேடி ஆக்கபூர்வமான வழியில் பயணிக்க வேண்டிய நேரமிது. குறைந்தது அவ்வழியில் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லது நாட்டிற்கு நல்லதை விழைபவர்களுக்கான அவசியம்.

(அமிர்தசரஸ் KJS அலுவாலியா என்பவரின் ஆக்கத்தைத் தழுவி எழுதியுள்ளேன்

Post Comment

Monday, 1 December 2008

49-O தெரியுமா? இந்தியாவில் மறைக்கப் படுகிறதா?

நமது இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் 1969ம் ஆண்டு சட்டத்தின் 49-O பிரிவின் படி, ஒருவர் வாக்குச் சாவடிக்கு சென்று, தங்களுடைய அடையாளத்தை உறுதிப் படுத்திய பின்னர், “தான் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை” என்பதை அங்குள்ள அதிகாரியிடம் தெரிவித்து விட்டு, விரல் அடையாள மை பெற்றுக் கொண்டு வரலாம்.

ஆம். இந்த விடயத்தைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் மக்களுக்கு எடுத்துச் செ/சொல்லுங்கள். இந்த வாய்ப்பை பற்றி அரசியல் வியாதிகள் மூடி மறைப்பதாகவே தெரிகிறது.

'யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்று தெரிவிப்பதால் என்ன பயன்?
ஒரு தொகுதியில் ஒருவர் 500வாக்குகளில் வெற்றி பெறுகிறார் எனக் கொள்வோம். அதே தொகுதியில் இந்த 49-O வாக்குகள் 500 விழுந்திருந்தால் அத்தொகுதியின் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப் பட வேண்டுமாம். அது மட்டுமில்லாமல் அப்போது தேர்தலில் நின்றவர்களின் மறுபடியும் அதே தேர்தலில் நிற்க முடியாது. ஏனெனில் மக்கள் அவர்களுக்கு எதிராக தங்கள் விருப்பமின்மையை அறிவித்து விட்டனர்.

இதன் மூலம் கட்சிகளுக்கு பயம் வரும். அதனால் கட்சிகள் பொறுப்பான நல்லவர்களை தேர்நதெடுக்கும். இதன் மூலம் நாம் சாக்கடை அரசியலை மாற்றி நல்ல அரசியலை நாட்டுக்குத் தர முடியும். இது போன்ற ஒரு நல்ல வாய்ப்பு நம் அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதை தேர்தல் கமிஷன் கூட மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லையே.

இதன் மூலம் அழுகிய அரசியல் கட்சிகளை அப்புறப் படுத்த முடியும். ஓட்டளிக்காமல் இருப்பதுவும் ஓட்டளிப்பதை விட நல்ல நன்மையை நாட்டுக்குச் செய்திடும். எனவே உங்கள வாய்ப்பை நழுவ விடாதீர்கள். 49-Oவைப் பயன்படுத்துங்கள்.

49-Oவைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் சொல்லுங்கள். இதன் சாதக பாதகங்களையும் மேலும் அலசுங்கள்.

நமது ஓட்டளிக்கும் உரிமையின் மூலம் சிறந்த இந்தியாவை உருவாக்குவோம்.

Post Comment

Wednesday, 26 November 2008

தமிழர்கள் கணக்கில் புலிகள்?

பொதுவாக தமிழர்கள் கணக்கு வழக்குகள் பார்ப்பதில் கைதேர்நதவர்கள் என்ற எண்ணமுள்ளது. இங்குள்ள பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் வணிக் நிறுவனங்களில் தமிழர்களையே கணக்கெழுத வைத்திருக்கின்றனர். மலையாளி வேண்டாம் மதராஸிதான் வேண்டும் என்ற தெளிவோடும் இருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் பெருமைதானே. எண்களில் தேர்ந்தவர்களாயும் நேர்மையாளர்களாகவும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் இருப்பதுதான் மதராஸிகளை விரும்பச் செய்கிறது என அவர்கள் சொல்கின்றனர்.

எங்கள் நிறுவனத்தில் வங்கிக்கு ஒரு காசோலை 340000க்கு அனுப்பினோம். வங்கியோ எங்கள் கணக்கில் 390000 வரவு வைத்திருந்தார்கள். எங்கள் நிறுவன முதன்மை கணக்காளர் பாகிஸ்தானி. “எமது வங்கியில் கணக்கர்கள் அனைவரும் மதராஸிகள் அதுதான் தப்பாய் செய்து விட்டார்கள். நான் சொல்லப் போவதில்லை” என இருந்தது மட்டுமில்லாமல், என்னிடம் கிண்டல் வேறு. ஒரு நான்கு மாதம் கழிந்து காசோலை கொடுத்த நிறுவனம் என்னை அழைத்து தொகை கூடுதலாக பெறப்பட்டுள்ளது என அறிவித்ததுடன், தங்களது வங்கியிலும் புகார் கொடுக்க, அப்போதுதான் தெரிந்தது. தவறு ஏற்பட்ட இடம் ஹபீப் பேஙக். கணக்கர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள். எங்கள் முதன்மை கணக்காளர் முகம், பார்க்க வேண்டுமே.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சகோதரர் இங்குள்ள நகராட்சியில் அடிமட்ட தொழிலாளியாகச் சேர்ந்தார். அவர் எண்களைக் கையாளுவதைப் பார்த்து அரபி, ஒரு பகுதி அலுவலகத்தின் முழுப் பொறுப்பையுமே அளித்தார். படித்த மற்ற நாட்டவர்களுக்கே கடினமாயிருந்த அப்பணியை பத்தாவது வரை மட்டுமே படித்த அவர் சிரமமில்லாது செய்தார் என்பதுதான் ஆசசர்யம். நமது படிப்பு முறை அடிப்படையிலேயே அவ்வாறு அமைந்துள்ளதென சொல்வது சரியானதுதானா?


மற்றொரு சகோதரர் தங்க நகைகள் மொத்த வியாபார நிறுவனத்தில் ஓட்டுனராகச் சேர்ந்தார். தொலைபேசியில் வியாபாரம், நகைகளைப் பெற்றுக் கொள்ள தனியிடம் என்று இருந்தது. உரிமையாளர்களாகிய தந்தையும் இரு மகன்களும் இருக்கும் நிறுவனத்தில் அவர் இருக்க வேண்டும். தொலைபேசி பேரங்களில் புதிதாக கற்றுக் கொள்ள ஏதுமில்லை என்பதால் அவர் வரும்போதே பொழுது போக்குக்காக கதைப் புத்தகங்களையோ சஞ்சிகைகளையோ எடுத்து வந்து படித்துக் கொண்டிருப்பாராம். அதைப் பார்த்த உரிமையாளர் தந்தை, தன் மகனைப் பார்த்து "அந்த மதராஸி வெறும் ஓட்டுனர் 1500 சம்பளம் பெறுகிறான். தினமும் குளித்து அழகாக உடையுடுத்தி வருகிறான். நீங்கள் சரிவர தினமும் குளிப்பது கூட இல்லை. சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் புத்தகத்தில் மூழ்கி விடுகிறான். அனதால்தான் மதராஸிகள் நல்ல அறிவாளிகளாய் இருக்கின்றனர்" என்றாராம். சொல்லிச் சிரித்தார் சகோதரர்.
நல்ல கதைகள் வாழ்க்கைப் பாடங்களாகின்றன. சஞ்சிகைகள் அரசியலையும் கலையையும் கலந்து தருகின்றன என்பதை அந்த பாகிஸ்தானி அறிந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

Post Comment

Wednesday, 19 November 2008

இனி துபை வாழ்வு கடினம்தான்-ஆறு காரணங்கள்

துபைதான் நாம் வாழ்வதற்கான சிறந்த இடம் என்று இது நாள் வரை நினைக்கத் தோன்றியது. ஊருக்குப் போனால் கூட வீட்டுக்கு வெளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் துபை மாதிரி வருமா என்று மனது நினைக்கும். ஆனால் துபையில் முளைக்கும் புதிய புதிய சட்டங்கள் இனி இங்கு வாழ்வது கடினமே என்ற மனநிலையையே பலருக்கும் தந்திருக்கிறது என்பது மிகையில்லை.

இங்கு வாழ்வது ஏன் சிரமமாகி விட்டது என்பதற்கு குறிப்பான ஆறு காரணங்கள்.

1. சாலிக் (SALIK)

துபையின் மின்னனு சுங்க வரி வசூலிப்புத் திட்டம். 'திறந்து விடப்பட்ட' அல்லது 'இடைஞ்சலற்ற' என்ற பொருள் தரக்கூடிய 'சாலிக்' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்முறை 2007ம் ஆண்டு நகரில் உள்ள சாலைப் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அறிமுகமானது. ஆனால் மனித, வாகன விகிதத்தில் உலகத்திலேயே அதிக வாகனங்களைக் கொண்ட இந்நாட்டில் இது பெயருக்குரிய பயனைத் தரவே இல்லை.

நகரின் நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள இம்மின்னனு முறையில் ஒரு தடவை ஒரு இடத்தைக் கடக்க நான்கு திர்ஹம் (இன்றைய மதிப்பில் சுமார் ரூ50)எடுத்துக் கொள்ளும். ஒரே சாலையிலுள்ள இரு சாதனங்களை ஒரு மணி நேரத்துக்குள் கடந்தால் ஒரு முறை மட்டுமே எடுக்கும்.

இதற்காக முன்பணம் செலுத்திப் பெற்ற அட்டையை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டி வைக்க வேண்டும். அட்டையை ஒட்டாது இப்பகுதியைக் கடந்த வாகனங்களுக்கு முதல் நாள் 100திர்ஹம் தண்டணை, அடுத்த நாளுக்கு 200திர்ஹம், மூன்றாம் நாளுக்கு 400திர்ஹம் தண்டனை. ஒட்டிய அட்டையில் அம்மின்னனு சாதனம் எடுக்க தொகை இல்லையென்றால் ஒவ்வொரு முறை வாகனம் கடந்ததற்கும் 50திர்ஹம் தண்டனை.

ஒரு நாள் வேலைக்குச் சென்று வர இம்முறைக்கு நான் குறைந்தது 16திர்ஹம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் கூடுதலாக 80கிமீ பயணம் செய்ய வேண்டும்.

2.வாகனம் நிறுத்த வரி

சாலிக் கொடுத்த பின்பும் எப்போதும் குறையாத வாகன நெரிசலில் வந்தாலும், ஒரு நிறுவனத்தின் முன்போ, ஒரு கடைக்கு முன்போ, ஒரு நண்பரின் வீட்டின் முன்போ சிறிது நேரம் வாகனத்தை நிறுத்த பணம் செலுத்த வேண்டும். வாகனம் நிறுத்த காசு போட வேண்டிய இயந்திரங்கள் நகரின் எல்லா பகுதியிலும் நிறுவப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு திர்ஹம்கள். இரண்டு மணி நேரமென்றால் ஐந்து திர்ஹம்கள். எவ்வளவு நேரம் வாகனம் நிறுத்த நேரிடும் என்பதைக் கணித்து முன்பணமாக செலுத்த வேண்டும். பணம் செலுத்திய குறிப்பிட்ட கால அளவை விட ஐந்து நிமிடம் தாமதித்தாலும் 100திர்ஹம் தண்டனை.

மாலை 9மணி முதல் காலை 8மணி வரை வரியில்லை. ஆனால் அந்நேரத்தில் வாகனம் நிறுத்த ஒரு இடம் கிடைக்க நீங்கள் நான்கு மணி நேரம் சுற்ற நேரிடும். இடம் கிடைக்காமலும் போகலாம்.

3. வாடகை மகிழுந்துகள் (TAXI)
காலையிலோ மாலையிலோ அலுவலக நேரத்தில் ஒன்று கிடைக்குமென்பது சற்றேறக்குறைய இயலாததுதான். இங்கு 3200 வாடகை மகிழுந்துகள் ஓடினாலும் இந்நேரங்களில் காணக் கிடைக்கும் ஒன்று பயணியுடன் இருக்கும் அல்லது காணவே முடியாது.

வாடகை மகிழுந்து ஓட்டுனர்கள் பயணிகளுக்கு நிறுத்த மறுத்தால் அபராதம் செலுத்த நேரும். எனினும் ஆளற்ற வாடகை மகிழுந்து ஒன்றைக் கண்டு, நீங்கள் கையை ஆட்டி வந்து நின்றாலும் உங்கள் போகுமிடத்தை சொன்ன பின் தலையை ஆட்டி விட்டு போய் விடுவர்.

தாறுமாறாக ஓட்டுபவர்களும், போகும் வழியறியாத ஓட்டுனர்களும் உண்டு.

4. VAT மதிப்புக் கூடுதல் வரி
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமீரகத்தில் இதை அமல் படுத்த வழிமுறைகள் யோசிக்கப்பட்டு பல கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. சரியான நாள் குறிக்கப்படவில்லையாயினும் மற்ற வளைகுடா நாடுகளோடு இங்கும் தொடங்கப்படும்.

வளைகுடா நாடுகளில் முதலில் ஐந்து சதவீத மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இது நேரடி வரி விதிப்பு இல்லையென்றாலும் அதன் சுமை கடைசியில் வாங்குவோர் தலையில்தான்.

துபையின் முக்கிய கவர்ச்சியே வரி அற்ற நாடு tax-free என்பதுதான். எனவே எத்தகைய மறைமுக வரியும் மக்களின் பணத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்.

5. தங்குமிடம்
தொடர்ந்து உயரும் வாடகை துபைகாரனின் மாறாத குற்றச்சாட்டு. அமீரகத்தில் இதைப் பற்றி பேசாதவர்களே இல்லை. வாடகை உயர்வு 7 சதவீதம்தான் இருக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்தாலும் புதிய கட்டிடங்கள் மிக கூடுதலாக வாடகையை அறிவிக்கின்றன.

வீட்டு உரிமையாளருக்கு வாடகை உயர்த்தக் கட்டுப்பாடு அதனால் இனி வீட்டிலுள்ள வாகன நிறுத்துமிடங்களுக்கு (for Free Parking) ஆண்டு வாடகை 7500 திர்ஹம்கள்.

ஒரு வீட்டுக்கு ஒரு குடும்பம் என்ற புதிய முறை பல குடும்பங்களுக்கு கட்டுப்படியாகப் போவதில்லை. குடும்பமின்றி தனித்து வாழ்பவர்பாடோ (Bachelors) அதை விட திண்டாட்டமாகும்.

6. கலாச்சார மாற்றமும் அமீரகப்படுத்தலும்

பெருகி வரும் அனாச்சார அசிங்கங்களும் குற்றங்களும், அருகி வரும் நல்லொழுக்கமும் பண்புகளும் நம் நாடு தேவலாம் அதனால் இங்கிருந்து போய் விடுவதே நல்லதென நினைக்கச் செய்கிறது.

தனியார் துறையிலும் அமீரகக் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற திட்டம் முலம் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகளும் மிகவும் குறைந்து விட்டது.
----------------------------------------------------

அது சரி. இன்று நவம்பர் 19 'உலக கழிவறை தினமாமே' உண்மையாகவா?வலது புறமுள்ள இக்கட்டிடம் சிங்கப்பூரிலுள்ள உலக கழிவறைக் கல்லூரியாம் (WTC-World Toilet College)

Post Comment

Thursday, 6 November 2008

ஒரு நேர்முகத் தேர்வும், நண்பரும் (2)

(ஏற்கனவே போட்ட பதிவு ஏதோ சினிமாவில் வந்தது என ஜிகே சொன்னதால் கொசுவர்த்தி சுழல விட்டு இன்னொரு பதிவு)
சென்னை. முது நிலை பட்டப்படிப்பில் தனிம வேதியியல் ஆய்வுக்கூடத் தேர்வு.(M.Sc Chemistry Inorganic Practical Exam - இதைத்தான் அப்படித் தமிழாக்கி ஒப்பபேத்தி இருக்கிறேன்) ஒரே நிறத்திலுள்ள மூன்று தாது உப்புக்களைக் ஒன்றாகக் கலந்து கொடுத்து விடுவார்கள். அது என்ன என்ன என்று படிப்படியான ஆய்வு முறைகளின் மூலம் கண்டு பிடிக்க வேண்டும்.

என்னத்தை கலந்தார்களோ சரியான முடிவகள் வராமல் எல்லோரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். எனக்கு முன்னால் ஒரு ஈரானிய மாணவன் அலி. குள்ளமானவன். பிப்பெட்டோ, பியூரெட்டோ (தமிழில் தெரியவில்லை) எடுக்கக் குனிந்தவன், நிமிர்நதால்.... அவன் ஆய்வு செய்து கொண்டிருந்த குடுவை கீழே விழுந்து உடைந்து, கொடுத்திருந்த(sample) தாது உப்புகளோடு கரைந்து போனது.
திரும்பக் கேட்டாலும் பெரிய இழுவைக்குப்பின் தருவார்கள். கெஞ்சிக் கொஞ்சி பணிவோடு நிற்க வேண்டும்.

மீதமிருந்த ஒரு மணி நேரத்தில் கால்மணி நேரத்துக்கு மேல் வாய்மொழி(viva voce)த் தேர்வு நடக்கும். மீதி நேத்தில் குட்டிக்கரணம் போட்டாலும் பெரிதாக சாதிக்க முடியாது. கடுப்பாகி, இதுவரை செய்த ஆய்வுகளில் எடுத்து வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு முடிவைத் தயார் செய்து கொண்டிருந்தான்.

அப்போது 'வைவா'க்கு அவனுக்கு அழைப்பு. சுல்தான் என்ன செய்ய? என்பது போலப் பார்த்தான். ஆதரவாக ஒரு சிரிப்பு 'ஜமாய் ராஜா' ன்னு கை காண்பித்தேன். வைவா அறைக்குப் பக்கத்தில்தான் நான் நின்று கொண்டிருக்கிறேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு குழப்பத்தில் தவறான பதில்களையே சொல்ல.

சரி கடைசிக் கேள்வி: மின்மினிப்பூச்சிகள் எவ்வாறு மின்னுகின்றன.
அலி: இறைவன் படைக்கும் போதே அதன் புட்டத்தில் சீரியல் லைட் வைத்து படைத்து விட்டதால்.... போங்கப்பா..

அந்தப் பேராசிரியை அடுத்து வந்த என்னை.... சொல்லனுமா?
ஏனய்யா அலீ. ஆங்கிலத்தில்தானே பதில் சொல்லி வந்தாய். கடைசிக் கேள்விக்கு மட்டும் இவ்வளவு சிரமப்பட்டு தெரியாத தமிழில் ஏனய்யா சொல்ல வேண்டும். அவ்வ்வ்வ்வ்வ்:(((((

(டிஸ்கி: இயற்கையில் அதன் பின்புறம் படிந்துள்ள பாஸ்பரஸ் எனும் தனிமத்தின் ஒளிரும் தன்மையால் - The fluorescent effect of Natural Phosphorous available on its back என்பது சரியான பதில் என நினைக்கிறேன்.)

Post Comment

Wednesday, 5 November 2008

ஒரு நேர்முகத் தேர்வும், நண்பரும்

(சிறிது மஞ்சள். பிடிக்காதவர்கள் விலகவும்.)
ஒரு பெரிய பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.
வந்தவரிடம் அதிகாரி : இந்தியா எப்போது விடுதலையடைந்தது?
பதில்: வெகு நீண்ட நாட்களாக அதற்கான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் 1947ல் தான் பலன் கிடைத்தது.

அதிகாரி: அந்த விடுதலை யாரால் கிடைத்தது?
பதில்: அதற்காக பல பேர் இரவு பகல் பாராது உழைத்திருக்கின்றனர். அதில் யாராவது ஒருவர் பெயரைச் சொல்வது மற்றவர்களை அவமதிப்பதாக ஆகும்.

அதிகாரி : இந்தியா இன்னும் சிறந்த முறையில் முன்னேறாததற்கு நாட்டில் உலவும் இலஞ்ச இலாவண்யங்களே காரணம் எனற கருத்து சரியானதா?
பதில்: இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகளுக்குப் பிறகே சரியாகச் சொல்ல இயலும்.

அதிகாரி: உங்கள் பதில்கள் நிறைவளிக்கின்றன. நாங்கள் பின்னர் உங்களுக்கு விவரம் தெரிவிப்போம். எனினும் இதே கேள்வியையே மற்றவர்களிடம் நாங்கள் கேட்க நினைப்பதால் இந்தக் கேள்விகளை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம்.

தேர்வுக்கு வந்திருந்த மற்றவர்கள், வெளியில் வந்தவரிடம் கேட்டபோது ‘சுலபமான கேள்விகள்தான். எல்லோரும் பதில் சொல்ல முடியும்’ என்று சொல்லி நழுவி விட்டார்.

நம் நண்பர் அவரை வெளியில் சென்று பிடித்து கேள்விகளைப் பற்றி கேட்டபோது ‘நான் அவர்களிடம் கேள்விகளை யாருக்கும் சொல்ல மாட்டேன் என் வாக்குக் கொடுத்திருக்கிறேன்’ என்று சொன்னார்.

'அதனாலென்ன. நீங்கள் சொன்ன பதில்களை மட்டும் சொல்லுங்கள்' என நம் நண்பர் நச்சரிக்கவும் வேறு வழியில்லாமல் தான் சொன்ன பதில்களை மட்டும் சொல்லி விட்டுப் போனார்.

நம் நண்பரின் முறை வந்தது.
நண்பரிடம் அதிகாரி: ஒரு பெரிய பணிக்கு அனுப்பியுள்ள உங்கள் விபரங்களை தெளிவற்ற கையெழுத்துகளால் எழுதி இருக்கின்றீர்களே. நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
நண்பர்: வெகு நீண்ட நாட்களாக அதற்கான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் 1947ல் தான் பலன் கிடைத்தது.

அதிகாரி: என்ன உளறுகிறீர்கள். இதிலே வேறு வருடம் குறிக்கப் பட்டிருக்கிறதே. உங்கள் தந்தையார் பெயரென்ன?
நண்பர்: அதற்காக பல பேர் இரவு பகல் பாராது உழைத்திருக்கின்றனர். அதில் யாராவது ஒருவர் பெயரைச் சொல்வது மற்றவர்களை அவமதிப்பதாக ஆகும்.

அதிகாரி: உங்களுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா?
நண்பர்: இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகளுக்குப் பிறகே சரியாகச் சொல்ல இயலும்.

Post Comment

Wednesday, 29 October 2008

என்னை அடிக்க முடியுமா? +செத்துட்டாங்கய்யா!

என் ஊரில் ஒரு நண்பர் சம்சுதீன். வயதில் மூத்தவர் அதனால் சம்சண்ணண். ஊரில் வாடகைக்கு மகிழுந்து ஓட்டிக் கொண்டிருந்தார். துபையிலிருந்து வருபவர்களை சென்னை விமான நிலையம் சென்று அழைத்து வருவதுதான் அதிகமான நேரத்தில் கிடைக்கும் முக்கிய பணி. அப்போதெல்லாம் அமீரகத்திலிருந்து திருச்சிக்கு விமான சேவை அவ்வளவு பிரபலமாகவில்லை. கைப்பேசி இல்லாத காலம்.
>
>
>
>
>

சினிமா தியேட்டரில் இரண்டு குழுக்களுக்கிடையில் சண்டை. சம்சண்ணண் நடுவில் போய் விலக்கப்போக இரண்டு கூட்டத்தினரிடமிருந்தும் சரியாக வாங்கிக் கொண்டார்.
ஊரில் பஞ்சாயத்து.
தலைவர்: பாவம். விலக்கப் போனதற்கு நம்ம சம்சுக்குதான் சரியான அடி.
சம்சண்ணண்: என்னை அடிக்க முடியுமா? என்ன எவங்க அடிச்சான்?
தலைவர்: அப்ப பரவாயில்ல சம்சு.
சம்சண்ணண்: தொவச்சு பிழிஞ்சில்ல காயப்போட்டானுங்க
தலைவர்: அடி வாங்கினாலும் குசும்ப பார்.
>
>
>
>
>

ஒரு முறை பக்கத்து ஊரிலிருந்த தன் நிலத்துக்கு போயிருந்த எங்களுர் முக்கியஸ்தர் ஒருவர் அங்கேயே மரணமடைந்ததாக செய்தி வரவும், சம்சண்ணண் மகிழுந்து எடுத்துச் செல்ல, துணைக்கு தலைவர் போய் இருக்கிறார். மகிழுந்தில் பிணம் கொண்டு வர தடை இருப்பதால், பிணத்தை பின் இருக்கையில் அமர்ந்திருப்பது போல் இருக்கச் செய்து, வண்டியை எடுத்து வந்திருக்கிறார்கள். கூட இருந்த தலைவர் பிணத்தின் கூட வரும்போதே பயந்த மாதிரி பேசி இருக்கிறார். ஒரு திருப்பத்தில் பக்கவாட்டிலிருந்து ஒரு வண்டி வர, சம்சண்ணண் காருக்கு சடன்பிரேக் போட வேண்டியதாகி விட்டது. அப்போது பின்னாலிருந்த பிணத்தின் இரு கைகளும் முன்னால் இருந்த தலைவரின் இரு தோள்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக விழ, அலறியடித்து வண்டியை நிறுத்தி இறங்கிய தலைவரை சமாதானப்படுத்தி ஆசுவாசப்படுத்தி மீண்டும் காரிலேற்ற சம்சண்ணண் மிகுந்த பாடுபட வேண்டியதாகி விட்டதாம்.
>
>
>
>
>

மற்றொரு முறை சென்னை விமான நிலையத்தில் அன்று வர வேண்டியவர்கள் வரவில்லையாதலால், சம்சண்ணண் ஆளில்லாத வெற்று வண்டியை இரவில் எடுத்து வந்திருக்கிறார். சென்னையைத் தாண்டி வரும் வழியில் வெளிச்சம் குறைவான இடத்தில் நான்கைந்து பேர் வண்டியை மடக்கவும், வெலவெலத்துப் போய் வண்டியை நிறுத்தி இருக்கிறார். "தம்பி எங்கள் ஊர் வேன் விபத்துக்குள்ளாகி விட்டது. இப்போதுதான் நாங்கள் இருவர் ஊரிலிருந்து வந்தோம். ஐந்தாறு பேர் இறந்து விட்டார்கள். அடிபட்ட இவ்விருவரையும் மருத்துவமனைக் கொண்டு செல்ல வேண்டும். நீ ஒரு இரண்டு பிணத்தை உன் வண்டியில் கொண்டு போய் எங்களுர் சேர்த்து விடு" என்று கெஞ்சி இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள அனுபவத்தாலும், கூட துணைக்கு வேறு ஆளில்லாததாலும் மறுத்திருக்கிறார்.

"பணம் பிரச்னையில்லை தம்பி. ஒரு பிணம் கொண்டு போக ஐயாயிரம் (அப்போதைய சென்னை சவாரிக்கு கிடைப்பது போல இரு மடங்கு) முன் பணமாகத் தந்து விடுகிறோம்" என்று சொல்லவும், வேறு வழியின்றி கார் டிக்கியில் ஒரு பிணத்தை வைத்து விட்டு, முன்பு போலவே பின் இருக்கையில் இரண்டு பிணங்களை அமர்ந்த நிலையில் வைத்து, விழாதிருக்க துணிகளால் கட்டி விட்டு, பதினைந்தாயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பி இருக்கிறார். இருந்தாலும் போலீஸ் பயத்தோடு பிணங்களோடு பயணம் செய்கிற பதைபதைப்பு மனதில். ஆசுவாசத்துக்காக அடுத்ததாக வழியிலுள்ள தேநீர் கடையில் தேநீர் பருகிக் கொண்டிருந்த போது
ஒரு ஆள்: அண்ணே! உளுந்தூர் பேட்டை வரை வரலாமா?
சம்சண்ணண்:உளுந்தூர் பேட்டை தாண்டி பக்கத்தூர்தான் போறேன். முதலாளி வண்டியிலே இருக்காங்க. இருங்க கேட்டுட்டு வரேன்.
(வண்டியின் உள் விளக்கை போட்டு, கட்டு அவிழ்ந்திடாமல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு வந்து)
சம்சண்ணண்: முதலாளி சரின்னுட்டார். எவ்ள காசு தருவீங்க.
ஆள்: பஸ்க்கு 15 ரூவாதான். நிறுத்த மாட்டேங்கிறான். 30 ரூவா தாரேன்.
சம்சண்ணண்: பரவாயில்ல. முதலாளிட்ட சொல்ல கூடாது. இப்பவே கொடுத்திடனும். முன் சீட் தான். தூங்கக் கூடாது.
[அபிஅப்பா, குசும்பன் பதிவு மாதிரி, சம்சண்ணண் வாயத் தொறந்தா நாம் சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகிடும். பயங்கர அரட்டை. பேசிக் கொண்டே போய் இருக்கிறார்கள்.]
ஆள்: நாம இவ்வளவு பேசி சிரிக்கிறோம். பின்னால இருக்குறவங்க பேச மாட்டேங்கறாங்களே.
சம்சண்ணண்: அவுங்க செத்துட்டாங்கய்யா
ஆள்: (குசுகுசுப்பாக) முதலாளி முளிச்சிரப் போறாங்க. காதில விழுந்தா என்னாறது.
சம்சண்ணண்: அட போய்யா. அவுங்க செத்து எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா?
ஆள்: என்னய்யா சொல்ற?
சம்சண்ணண்: இவ்ள நேரம் பேசி பிரண்ட் ஆயிட்டோம். ஒண்ட்ட சொல்றதுக்கு என்னா. மெட்ராஸ்ல வர்ற வழில விபத்துல செத்தவங்க பொணம்யா. வேப்பூர் பக்கத்துல சேக்கனும்.
ஆள்: லைட்ட போடுய்யா
சம்சண்ணண்: கொஞ்சம் கூட வாயேன். திரும்ப உளுந்தூர் பேட்டை வந்து விட்டுடறேன்.
ஆள்: யோவ் லைட்ட போடுறியா என்னா?
சம்சண்ணண்: சந்தேகமா இருந்தா நீயே போட்டுப் பாரு
(வந்த ஆள் விளக்கைப் போட்டுப் பார்த்து விட்டு அலறுகிறார்.)
ஆள்: வண்டியை நிறுத்துய்யா. வண்டியை நிறுத்துய்யா.
சம்சண்ணண்: உளுந்தூர் பேட்டை இன்னும் பத்து கிலோ மீட்டர் இருக்கு
ஆள்: வண்டியை நிறுத்துய்யா. நிறுத்தறியா என்னா?
சம்சண்ணண் வண்டியை நிறுத்துகிறார்.
வந்த ஆள் வண்டியை விட்டுக் குதித்து சென்னையை நோக்கி "ஐயையோ" என்று கத்திக் கொண்டே திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.
சம்சண்ணண்: யோவ். இந்தப் பக்கம் ஓடினாலும் உளுந்தூர் பேட்டை வரும்.
வந்த ஆள் ஓடிக் கொண்டே இருக்கிறார்.

Post Comment

Thursday, 11 September 2008

ஒரு வரிச் சிரிப்பு

(மயிலில் வந்தது)

1. சரி வர கண்ணயர்ந்து வருதல் மூலம் முதுமையைத் தடுக்க முடியுமாம். குறிப்பாக நீங்கள் வண்டி ஓட்டும் தருணங்களில்

2. உங்களுக்கு ஒரு குழந்தை என்றால் நீங்கள் பெற்றவர். ஒன்றுக்கு மேலென்றால் நீங்கள் நடுவர்.

3. திருமணம் என்ற உயரிய பந்தத்தில் ஒருவர் எப்போதும் சரியானவர். மற்றவர் கணவர்.

4. நாம் நமது வருமான வரியை புன்னகையாய் செலுத்த வேண்டும் என்பதை நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் பணம் கேட்கிறார்களே.

5. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான மாதம், நீங்கள் புதிதாக அக்குழந்தைக்குச் சீருடை வாங்கித் தந்த பின் வரும் அடுத்த மாதம்தான்.

6. நீங்களே உங்களைப் பற்றித் தாழ்வாக எண்ணாதீர்கள். திறமையில்லாமல் நிறைய பேர் இருக்கின்றார்கள்.

7. நீங்கள் யாரோடு வாழ விரும்புகிறீர்களோ அவரை விட, யாரில்லாமல் உங்களால் வாழ முடியாதோ அவரையே மணமுடியுங்கள். ஆனால் நீங்கள் இவற்றில் எதைச் செய்தாலும் பின்னாளில் வருத்தப் படத்தான் போகின்றீர்கள்.

8. உங்களால் அன்பை வாங்க முடியாது. ஆனால் அதற்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும்.

9. கெட்ட அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப் படுவதற்குக் காரணமான சிறந்த குடிமக்கள் ஒட்டளிக்காதவர்கள்தான்

10. சோம்பல் என்பது வேறொன்றுமில்லை. நீங்கள் களைப்படையும் முன்னே எடுக்கும் ஓய்வுதான்.

11. திருமணம் என்பது ஒரு வகை தருதலும் பெறுதலும்தான் அதனால் நீங்கள் அவளுக்காக அன்புடன் கொடுங்கள். இல்லையென்றாலும் அவள் எடுத்துக் கொள்ளத்தான் போகிறாள்.

12. என் மனைவியும் நானும் எப்போதும் சமாதானம் செய்து கொள்வோம். 'நான்தான் தவறு செய்தேன்' என்பேன் அவள் ஒப்புக் கொள்வாள்.

13. யார் தங்களுக்குள் சிரித்துக் கொள்ளவில்லையோ அவர்கள், அவ்வேலையை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.

14. பெண்களுக்கு முதலிடம். அழகான பெண்களுக்கு அதைவிட.

15. உண்மையான திருமணததிற்கு பல முறை காதல் செய்ய வேண்டும். ஆனால் காதல் செய்யப்படுபவர் எப்போதும் அந்த ஒரே நபர்தான்

16. அச்செயலை இப்போது செய்வதை விட, எப்போதோ செய்ததைப் பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு வயதாகி விட்டது.

17. திருமாணமானவன் எத்தனை முறை தன் வேலையை மாற்றிக் கொண்டே இருந்தாலும், அவனுக்கு கடைசிவரை ஒரே மேலாளர்தான்

18. எத்தனை முறை டயரியை மாற்றும் போதும் எவருடைய முகவரி மீண்டும் எழுதப்படுகிறதோ அவர்கள்தான் உண்மையான நண்பர்கள்.

19. சேமித்தல் என்பது மிகவும் சிறந்தது. குறிப்பாக உங்கள் பெற்றோர் அதை உங்களுக்காக செய்திருந்தால்.

20. அறிவாளிகள் பேசுகிறார்கள் ஏனெனில் அவர்களிடம் சொல்ல செய்தி இருக்கிறது. முட்டாள்களும் பேசுகிறார்கள் ஏனெனில் அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டி இருக்கிறது.

21. நமது மொழியைத் தாய்மொழி என்கிறோம். ஏனெனில் தந்தை அரிதாகவே பேசுகிறார்.

22. ஆண்: நீடித்த வாழ்வுக்கு என்ன வழி?
டாக்டர்: திருமணம் செய்து கொள்
ஆண்: அதன் மூலம் நீண்ட வாழ்வு கிடைக்குமா?
டாக்டர்: இல்லை. இது போன்ற எண்ணங்கள் வருவதைத் தடுக்கலாம்.

23. திருமணத்தின் போது தம்பதியர் கைகளை இணைத்துக் கொள்வது என்? குத்துச் சண்டை வீரர்கள் சண்டைக்கு முன் கை கொடுத்துக் கொள்வதை நீங்கள் பார்த்ததில்லையா?

24. மனைவி: அன்பே! இன்று நமது திருமண நாள். நாம் என்ன செய்யலாம்?
கணவன்: எழுந்து இரண்டு நிமிடம் மவுனமாக நிற்போம்.

25. காதல் திருமணம் சிறந்ததா? பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணம் சிறந்ததா? எனப்பேசுவது மிகவும் வேடிக்கை. தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப் படுவது சிறந்ததா?

26. குறையேதுமற்ற ஒரு குழந்தைதான் உலகில் இருக்கிறது. அது ஒவ்வொரு தாயுடனும் இருக்கிறது

27. குறையேதுமற்ற ஒரு மனைவிதான் உலகில் உண்டு. ஒவ்வொருவருடைய அடுத்த வீட்டுக்காரர் மனைவிதான் அவள்.

Post Comment

Thursday, 21 August 2008

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-2)

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா?-(பாகம்-1) படித்து விட்டீர்களா?

செப்டம்பர் 2001ல் ஆகாய விமானங்கள் இரட்டைக் கோபுரத்தினுள் பறந்தன. அமெரிக்க வரலாற்றில் அது சந்திக்கவிருந்த பெரும் பொருளாதாரச் சரிவைத் தடுக்க அமெரிக்கா இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தத் துவங்கியது. (இச்சந்தர்ப்பத்தை அது தானாக உருவாக்கிக் கொண்டதென்று ஒரு சித்தாந்தம் அமெரிக்காவிலேயே உலவிக் கொண்டிருக்கிறது என்பதொரு தனி விடயம்) அமெரிக்க பெட்ரோ டாலரைக் காக்க போர் தயாரிப்புகள் துவங்கின. அதில் முதன் முதலில் பறிக்கப் பட்டது உண்மையுடைய உயிர்தான். மற்ற பெட்ரோல் உற்பத்தி நாடுகள் வேடிக்கைப் பார்த்தன.

ஈராக் 2000ம் ஆண்டில் பெட்ரோலை யூரோவில் விற்கத் துவங்கியது. 2002ல் ஈராக் தன் கருவூலத்திலிருந்த முழு பெட்ரோ டாலர்களையும் யூரோவுக்கு மாற்றி விட்டிருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிக்க துவங்கியது.

முழு உலகமும் வேடிக்கைப் பார்த்தது. ஆனால் வெகு சிலருக்கே அது பெட்ரோ டாலருக்கான போர் எனப் புரிந்திருந்தது. ஈராக்கை மார்ச் 2003ல் ஆக்கிரமித்தவுடன், அமெரிக்கா முதலில் அங்குள்ள எண்ணெய் வளங்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது நினைவிருக்கட்டும். ஆகஸ்ட் மாதத்தில் முதல் விற்பனையை மீண்டும் டாலரில்தான் துவங்கியது. ஈராக்கிலிருந்த எல்லா அரச மாளிகைகளும் இலாக்காகளும் குண்டு மழை பொழிந்து தகர்க்கப்பட்டது. பாக்தாதில் தகர்க்கப்படாத ஒரே அரச மாளிகை பெட்ரோல் இலாகா. எத்தனை இலட்சங்களில் மனித உயிர்கள் மலினப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது காவு கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் அமெரிக்காவுடைய கவலையில்லை. அமெரிக்கா பெட்ரோ டாலர்களை காப்பாற்ற பெட்ரோல் வர்த்தகம் டாலரில் நடக்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்க பொருளாதாரம் மண்ணைக் கவ்வும் - அதன் பின் என்னென்னவோ நடந்து விடும்.

2003ன் தொடக்கத்தில் வெனிசுலா அதிபர் ஹியூகோ சவாஸ் அந்நாட்டின் பாதி பெட்ரோலை யூரோவில் விற்பதாக (முன்னமே பாதியை அமெரிக்கா டாலரில் வாங்கி விட்டது) வெளிப்படையாக அறிவித்தார். 2003 ஏப்ரல் 12ல் அமெரிக்க உதவியிலுள்ள சில வியாபாரத் தலைமைகளும், சில தளபதிகளும் சேர்ந்து சவாஸைக் கடத்தி, புரட்சி செய்து நாட்டைப் பிடிக்க முயன்றனர். மக்களே அதற்கெதிராக களமிறங்கவும் இராணுவமே அந்தப் புரட்சியை முறியடித்து தோல்வியடையச் செய்தது. உண்மையில் அமெரிக்காவின் முகத்தில் கரி படிந்தது.

நவம்பர் 2000ல் ஒரு யூரோவின் மதிப்பு 0.82 டாலர்தான். இதுதான் யூரோவின் ஆகக் குறைந்த மதிப்பு. மேலும் சரிவை நோக்கித்தான் இருந்தது.
ஆனால் ஈராக் யூரோவில் பெட்ரோல் விற்கத் தொடங்கியதும் அதன் சரிவு நின்றது.
ஏப்ரல் 2002ல் OPECன் மேல் மட்ட பிரதிநிதிகள் யூரோவில் பெட்ரோல் விற்கும் யோசனையைப் பற்றிப் பேசத் துவங்கியவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
ஜூன் 2003ல் ஈராக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் திரும்ப டாலருக்கு ஈராக்கிய பெட்ரோல் விற்பனையைப் பற்றி பேசத் துவங்கியதும் டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு குறைந்தது.
ஆகஸ்ட் 2003ல் ஈரான் சில ஐரோப்பிய நாடுகளுக்கு யூரோவில் பெட்ரோல் விற்ற போது யூரோவின் மதிப்பில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் உண்டானது.
2003-04 OPEC நாடுகளின் தலைவர்களும் ரஷிய தலைமையும்; எண்ணெயையும் எரிவாயுவையும் யூரோவில் விற்பதைப் பற்றி உளப்பூர்வமாக பேசத் துவங்கியதும் யூரோவின் மதிப்பு உயர்ந்தது.
2004ன் OPEC மாநாட்டில் எண்ணெய் விற்பனையை யூரோவில் மாற்றுவதைப் பற்றி எந்த முடிவுமெடுக்காமல் கலைந்தது - ஆம் அப்போதும் யூரோவின் மதிப்பு தாழ்ந்தது.
இலண்டனிலும் நியூயார்க்கிலும் உள்ளதைப் போன்ற எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Bourse) தனது நாட்டிலும் நிறுவப் போவதாக ஜூன் 2004ல் ஈரான் அறிவித்தவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
கடைசியில் யூரோவின் மதிப்பு 1.27 அமெரிக்க டாலர்களில் உயர்ந்து நிற்கிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பை வெகு தூரம் தாழ்த்த, கடந்த மாதங்களில் இந்நிகழ்வுகள் வெகு தூரம் வந்து விட்டது. மே 5ம் நாள் ஈரான் தன் நாட்டில் சொந்த எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Oil Bourse) பதிவு செய்து விட்டது. இலண்டனையும் நியூயார்க்கையும் விட்டு விட்டு வேறொரு நாட்டில் எண்ணெய் விற்பனையைச் செய்வதோடல்லாமல் உண்மையில் உலக நாடுகள் விற்கவும் வாங்கவுமான ஒரு எண்ணெய் விற்பனை சந்தையை அமைத்து விட்டது.

சவாஸின் சமீபத்திய இலண்டன் வருகையில் அவர் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையை ஆதரிக்கப் போவதாகவும் யூரோவில் எண்ணெய் விற்கப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள ஆயுத தடையைப் பற்றி இலண்டனில் கேட்கப் பட்ட போது சவாஸ், 'அமெரிக்கா வெறும் காகிதப்புலிதான்' என முன்னறிவிப்பாக பதிலிறுத்தார்.

தற்போதைய உலக எண்ணெய் வளத்தின் பெரும்பகுதி NYMEX (New York Mercantile Exchange) அல்லது IPE (International Peroleum Exchange at London)ஆகிய இரு இடங்களிலிருந்துதான் விற்கப் படுகிறது. இவையிரண்டும் அமெரிக்கர்களின் நிறுவனங்கள். அவை எண்ணெயை டாலரில்தான் வாங்கவோ விற்கவோ செய்கிறது. ஈரானிய எண்ணெய் விற்பனையின் வெற்றி ஈரானிய எண்ணெயின் 70 விழுக்காட்டை வாங்கும் ஐரோப்பியர்களை உணர்வு பெறச் செய்துள்ளது. தமது எண்ணெய் உற்பத்தியின் 66 விழுக்காட்டை ஐரோப்பாவுக்கு விற்கும் ரஷ்யாவையும் அது உணர்வு பெறச் செய்துள்ளது. அமெரிக்காவுக்கு மேலும் பாதகமாக இந்தியாவும் சீனாவும் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையிலிருந்து எண்ணெய் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இப்போதும் அதே Weapons of Mass Destruction என்றோ அல்லது அணுகுண்டு தயாரிப்பு என்றோ சொல்லிக் கொண்டு ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த எண்ணெய் சந்தை அழிக்கப்படாது என்று யாராவது ஒருவர் நம்புவீர்களா?

மேலும் புஷ்ஷூக்கு வீழ்ச்சி. உணர்வு பெற்ற ஐரோப்பா, சீனா, இந்தியா, ஜப்பான் முதலிய நாடுகளும் மேற்குறிப்பிடப்பட்ட மற்ற நாடுகளும் எண்ணெயை வாங்கவும் விற்கவும் யூரோவைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்நாடுகள் யூரோவை சேமிக்கத் துவங்கும். தம்மிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களை விற்கத் துவங்கும். கடனில் வீழ்ந்துள்ள டாலரை விட யூரோ நிலையாகவே உள்ளது. உலக வங்கியும் (IMF) அமெரிக்கா பொருளாதார பிரச்னைகளையும் வர்த்தகப் பற்றாக்குறையையும் பற்றி சமீபத்தில் அறிவித்து விட்டதால் கழுத்து நெறிபடும் அமெரிக்காவுக்கு வேறு போக்கிடமில்லை.

தற்போது உலக நாடுகளின் முன்னுள்ள மிகப்பெரிய கவலை, 'அமெரிக்க டாலர் கடுமையாக வீழ்ச்சி அடைவதற்குள் தம் கருவூலத்திலுள்ள டாலர்களை எப்படி மாற்றுவது?' என்பதுதான். ஆண்டாண்டு காலமாக எத்தனையோ உலக நாடுகளை டாலரில் திணித்து வைத்துள்ள அமெரிக்காவிடமே அதைத் திருப்பித் தர வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கின்றன பல நாடுகள். ஆனால் உலகிலுள்ள டாலர்களில் வெறும் 5 விழுக்காட்டைக் கூட அமெரிக்காவால் ஏற்க முடியாது. அமெரிக்கா தன் பொருளாதாரத்தை நாசப்படுத்திக் கொள்வதோடு உலக நாடுகளில் பலவற்றின் பொருளாதாரத்தையும் கூடவே நாசப்படுத்தி விடும். அதிலும் குறிப்பாக பிரிட்டன் கடுமையாக நாசமாகும்.

Scottish Socialist Voice என்ற ஏட்டின் ஒரு கட்டுரை குறிப்படுவது போல, அமெரிக்கா பிழைக்க வேண்டுமானால், அந்நாடு வர்த்தகத்தில் ஒரு பெரும் புரட்சி செய்து, அதிக வர்த்தக நிலைமைக்கு (trade surplus) வர வேண்டும். அந்நாட்டினரால் இது முடியவே முடியாது. ஏனெனில் அதைச் செய்ய அமெரிக்கர்களை அந்நாடு அடிமைகளைப் போல வேலை வாங்க வேண்டும். அவ்வேலைக்கு சீனர்களையும் இந்தியர்களையும் விட குறைவாக சம்பளம் தர வேண்டும். நாமனைவரும் அறிந்ததைப் போலவே, இது அங்கு நடப்பதற்கு சாத்தியமே இல்லை.

இப்போது அமெரிக்காவில் என்னவாகும்? கண்டிப்பாக பெரும் குழப்பங்கள்தான் உண்டாகும். ஒரு வேளை ஏதும் தொழிலாளர் புரட்சி, தற்போதைய நிலைமையில் 1929க்குப்பின் ஜெர்மனியில் நடந்தது திரும்பலாம். தீவிர வலது சாரிச் சிந்தனைகள் தோன்றலாம்... ...

இந்த அமெரிக்காவுடனான மற்ற நாடுகளின் பொருளாதார நாசத்தை ஐரோப்பிய, சீன, ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தால் ஓரளவு தடுத்து நிறுத்த இயலுமா? இந்நாடுகளின் கருவூலங்களும் கழுத்து வரை அமெரிக்க டாலரால்தான் நிரம்பியுள்ளது.

1945 முதல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களால் செய்து வந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு பகரமாக ஏதாவதொரு வழியைக் கண்டு பிடித்தேயாக வேண்டும். ஒவ்வொரு நாட்டுக் கருவூலத்திலும் குவித்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டாலர் தாள்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஈரானில் அமெரிக்கா குண்டு போட்டால் அது பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஈராக்கிலுள்ள ஷியா மக்களின் பக்க பலத்தோடு ஈரான் வெளிப்படையாக ஈராக்கோடு போர் தொடுக்கும். ஈராக்கில் தற்போது மிகச் சிலரால் உண்டாகும் உள்நாட்டு கிளர்ச்சியையே தடுத்து நிறுத்த முடியாமல் அமெரிக்கா தடுமாறித் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அமெரிக்கா இந்த சுன்னி ஷியா மக்களுக்கிடையே பெரும் வெறுப்பை உண்டாக்கி, அதை ஊதி விட்டு மத்திய கிழக்கு நாடுகள் முழுதும் உள் நாட்டுப் போரை உருவாக்கி விடக் கூடும்.

ஆனால் இது உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக ஆபத்தான பின்னடைவை ஏற்படுத்தி விடும். இந்த ஈரானிய சந்தை சிறிது காலமே தனித்து இயங்கும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அதன் பின் யூரோவில் எண்ணெய் விற்க சந்தைகள் வேறிடங்களிலும் (குறிப்பாக புரூஸ்ஸல்) துவக்கப்பட்டு விடும்.

ஒரு தீர்வு என்னவென்றால், டாலரை அழித்து விட்டு அமெரிக்காவின் புழக்கத்துக்காக புதுப் பணத்தை அது அறிமுகப் படுத்தலாம். இதன் மூலம் மற்ற நாடுகளிலுள்ள 66 விழுக்காட்டு டாலர் தாள்களை ஒரேயடியாக பயனற்றதாக்கலாம். என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?. இது போன்ற அடாவடியான, ஆபத்தை பொருட்படுத்தாத சிந்தனைகள்தாம் வெள்ளை மாளிகை, வால் ஸ்ட்ரீட், பென்டகனிலுள்ள சிலரது தலைகளில் தற்போது நீந்துவதாகத் தெரிகிறது.

அல்லது 1938ல் போலந்து நாட்டுக்குள் நுழைய ஜெர்மனி செய்ததைப் போல எதையாவது செய்ய வேண்டும். அதாவது போலந்து நாட்டினர் ஜெர்மனிக்குள் படை நடத்தி வந்து விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை படம் பிடித்து நாஜிகள் மக்களிடம் காட்டி உள்நாட்டிலுள்ள மக்களின் எண்ணங்களையும் இதயங்களையும் வென்றெடுத்தனர். எனினும் அமெரிக்கா இந்த முறையில் வெற்றி பெறுவதென்பது தற்போதைய நிலையில் மிகக் கடினமானதே. ஆக, அமெரிக்கா எப்படித்தான் தப்பும்? உலக அரங்கில் அமெரிக்காவின் உயர்வு அதன் ஆயுத பலம்தான். என்னென்ன கொடுமைகளை இன்னும் உலகம் சந்திக்கவிருக்கின்றதோ யார் கண்டது?. ஒரு புது உலகப் போர் மூலம் அமெரிக்கா தன் சார்பு நாடுகளை ஒழுங்கு படுத்தி அதன் கருவூலங்களில் டாலர்களை வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தப் போகிறதோ என்னவோ?

இனி வரப் போகிற ஆபத்து முதலாளித் துவத்துக்கும் (டாலர்) ஏகாதிபத்தியத்துக்கும்தான். கலாச்சார மாற்றங்களோ, இஸ்லாமோ, axis of evil நாடுகளோ, அமெரிக்கா சொல்லும் பேரழிவு ஆயுதங்களோ ஆபத்தானவைகளல்ல. அமெரிக்கா இதுவரை கடை பிடித்து வந்த அந்நாட்டின் கொள்கைகளும் செயல்முறைகளும்தான் அடிப்படையில் தவறானவை, ஆபத்தானவை.

ஈரான், பாரசீக வளைகுடாவிலுள்ள கிஷ் தீவின் free trade zoneல் தனது புதிய எண்ணெய் விற்பனை சந்தையை (Iranian Oil Bourse) அமைத்துள்ளது. கணிணியும் மென்பொருட்களும் நிறுவப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடந்த மார்ச் மாதமே IOB தனது பணியைத் துவங்கி இருக்க வேண்டும் ஆனால் சில அழுத்தங்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டது. எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கும் என்பது சொல்லித்தான் அறிய முடியுமா என்ன?. மே 5ந்தேதி IOB பதிவு செய்யப்பட்டு விட்டது. சந்தை துவங்கும் நாள் குறிக்கப்படாததற்கு எண்ணெய் மாபியா கும்பல்களின் ஊடுருவலும் உலக நாடுகளின் அழுத்தமும் ... ... காரணம் என சிலரால் சொல்லப் படுகிறது,

2007ல் எண்ணெய் 60 டாலர்களுக்கு கொள்வரவு செய்யப்பட்டது. டாலரின் மதிப்பு ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைவதை அனைவரும் அறிவோம். தனது NYMEX, IPE மூலம் வெறும் யூகங்களை (speculation) முன்னிறுத்தி எண்ணெயின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. 60 டாலர்களுக்கு விற்ற எண்ணெயை 140 டாலருக்கு விற்றால் டாலரின் தேவை 230விழுக்காடுகள் அதிகரிக்கும்.

OPEC கூட சமீபத்தில் எண்ணெய் விலையேற்றத்திற்கு 60சத காரணம் வெறும் யூகங்களைக் கொண்டு செய்யும் முன் வியாபாரம்தான் (Future Trade) எனக் கூறியுள்ளது.

முடிவாகச் சொல்வதென்றால் அமெரிக்கா தனது டாலரை அழிவிலிருந்து காக்க, உலகில் டாலருடைய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்திக் கொள்ள எந்த நாட்டையும் அழிக்கத் தயங்காது.

Post Comment

Wednesday, 20 August 2008

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-1)

ஈரான் செய்துள்ளது உண்மையில் அணுவாயுதத்தையும் விட கொடியதாகி விட்டது. எப்படி?

தி வாய்ஸ்( வெளியீடு 264)ல் ஒரு கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது. ஈரான் கடைசியில் அதைச் செய்தே விட்டது. அது பாரசீக வளைகுடாவில் தன் முதல் அணு ஆயுதம் எதையும் பரிசோதிக்கவில்லை. ஆனால் அதை விடக் கொடுமையான ஒன்றை உலகில் ஏவப் போகின்றனர். அதற்கடுத்த வாரம் ஈரான் எண்ணெய் விற்கும் சந்தையை (Iran Bourse) நிறுவியது. அதன் வரவு செலவுகள் யூரோவில்தான், அமெரிக்க டாலரில் நடைபெறாது. ஒரு முக்கியத்துவமற்ற நிகழ்ச்சியாக நமக்குத் தோன்றும் இது, அமெரிக்க மக்களுக்கு பேரபாயத்தைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சியாகும். உண்மையில் அது நம் கற்பனைக்கு எட்டாத விளைவை உள்ளடக்கியது.

தற்போதைய நிலையில் எண்ணெய் வரவு செலவுகள் அனைத்தும் நியூயார்க், லண்டன் நகரங்களிலுள்ள இரு எக்ஸ்சேன்ஜ் வாயிலாகத்தான் நடைபெறுகின்றன. அவ்விரண்டு எக்ஸ்சேன்ஜ்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானவை என்பது தற்செயலானதல்ல என்பதை நீங்கள் யூகித்திருக்கலாம்.

உலகமெங்கும் ஏற்பட்ட வியாபார மந்த நிலையினாலும், இரண்டாம் உலகப் போரின் விளைவாலும் 1929ம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் பெரும் சரிவையடைந்தது. அந்தப் போரின் போது தம் கூட்டுப் படைகளுக்குத் தேவையான பொருட்களையும் தளவாடங்களையும் அமெரிக்கா வழங்கி, அதற்கு ஈடாக பணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து, தங்கமாகத் தர வற்புறுத்திப் பெற்றுக் கொண்டது.

1945ம் ஆண்டில் உலகத் தங்கத்தின் 80 சதவிகிதம் அமெரிக்கப் பெட்டகத்தில் அடைபட்டது. அதன் விளைவாக எந்த மாற்றுமில்லாமல் டாலர் தாள்களே உலக சேமிப்புக்கான பணமானது. உலகம் முழுதும் தங்கத்தை விட டாலர் கட்டுகளே பாதுகாப்பானது என ஆனது. ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் உருவானது.

அதற்கடுத்து வந்த சில பத்தாண்டுகளில் இனி மற்றொரு நாள் வராது என்ற வேகத்தில் அமெரிக்கா தன் டாலர் தாள்களை அடித்துக் கொண்டே இருந்தது. அமெரிக்கா, அந்த மலையளவு காகிதங்களை, வெளிநாட்டுச் சரக்குகளை பெருமளவில் வாங்கிக் குவிக்கவும், பணக்காரர்களுக்கு வரி விலக்கு அளிக்கவும், அப்போது உலகில் நடந்த போர்களுக்காகவும், வெளி நாட்டிலுள்ள தம் கூலிப்படைகளுக்காகவும், வெளி நாடுகளுக்கு அனுப்பியுள்ள தம் மத போதகர்களுக்கும், அரசியல் வாதிகளுக்குமென வெளிநாடுகளில் வீசி இறைத்து ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி உள்நாட்டு பணவீக்கத்தை அதிகப் படுத்தவில்லை. ஏனெனில் வெறும் தாள்களை அச்சிட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அமெரிக்கா வெளியிலிருந்து இலவசமாகவே பெற்றது. அதற்காக அமெரிக்காவின் இழப்பு தாள் உற்பத்திக்காக ஓரிரண்டு காடுகள்தான்!.

அதற்கடுத்த பத்தாண்டுகளில் உலக நாடுகளின் பெட்டகங்களில் பல அமெரிக்க டாலர்களால் நிரம்பி வழிந்தது. அமெரிக்க டாலர்களுக்காக உலக நாடுகளில் புதுப்புது பெட்டகங்களும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும், அமெரிக்கா தன் டாலர் தாள்களை உள் நாட்டை விடவும் கூடுதலாக வெளி நாடுகளிலேயே செலவிட்டது. அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளில் சேமிப்புகளாக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பணத்தின் மதிப்பில் 66 சதவிகிதம் எனும் பெரும் பகுதி வெறும் டாலர் தாள்களாகவே சேமிக்கப் பட்டிருந்தது என்பதை அநேகமாக எல்லா வல்லுநர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

1971ம் ஆண்டில் பல நாடுகள் தம் சேமிப்பிலிருந்த டாலர் தாள்களின் சிறு பகுதியை விற்று தங்கமாக மாற்ற விரும்பியது. ஓஹியோ பல்கலை கழகத்திலிருந்து வணிகவியலில் டாக்டர் பட்டம் பெற்ற க்ராஸ்ஸிமிர் பெட்ரோவ் (Dr. Krassimir Petrov) சமீபத்தில் இதைப் பற்றி எழுதும் போது, 'அமெரிக்க அரசு ஆகஸ்ட் 15, 1971ல், டாலருக்கும் தங்கத்துக்குமான இணைப்பை துண்டிப்பதாகச் சொல்லி தன் நாட்டுக் காகிதங்களை திரும்பப் பெற மறுத்தது. உண்மையில் தன் டாலர் காகிதங்களைப் பெற்று தங்கத்தை தர மறுத்த செயல் அமெரிக்க அரசின் திவாலான நிலைமையை அப்பட்டமாக்கியது' எனக் குறிப்பிடுகிறார். 1945ல் உருவாக்கப்பட்ட ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் தன்னிச்சையாக குப்பைக்கு எறியப்பட்டது.

டாலரும் அமெரிக்க பொருளாதாரமும் ஒரு வகையில் 1929ன் ஜெர்மனியை ஒத்ததாக இருக்கிறது. மற்ற உலக நாடுகள் டாலர் தாள்களை நம்பவும் அதிலே உறுதி கொள்ளவும் அமெரிக்கா வேறு வழிகளைத் தேடும் நிர்ப்பந்தத்திற்கு இப்போது தள்ளப் பட்டது. அதற்கான விடைதான் எண்ணெய் அதாவது பெட்ரோ டாலர். அமெரிக்கா, பெட்ரோலை டாலரில் மட்டும் விற்க, விஷமத் தனமாக முதலில் சவூதி அரேபியாவையும் பின்னர் OPEC எனப்படும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பையும் இணங்க வைத்தது. அது டாலரின் மதிப்பைக் காப்பாற்ற உதவியது. இப்போது அத்தியாவசியத் தேவையான பெட்ரோலைப் பெற மற்ற நாடுகள் டாலர் தாள்களை திரும்பவும் இருப்பில் வைத்தன. ஆனால் அந்த அவசியமான பெட்ரோலை அமெரிக்காவோ இலவசமாகப் பெறுகிறது. டாலர் தாள்களை மூழ்காமல் காக்க தங்கத்துக்குப் பதில் இப்போது பெட்ரோல்.

1971லிருந்து வெளிநாடுகளில் விநியோகிக்கவும் செலவழிக்கவும் அமெரிக்கா மென்மேலும் டாலர் தாள்களை மலை மலைகளாக உற்பத்தி செய்யத் துவங்கியது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையும் (trade deficit) மளமளவென வளர்ந்தது. வெறும் டாலர் தாள்களை அச்சடித்துக் கொடுத்து உலகின் எல்லாப் பொருட்களையும் அமெரிக்கா விழுங்கியது. மேலும் பல பெட்டகங்களும் உருவாகின.

சில்லின் நுனான் (Cillinn Nunan) என்ற நிபுணர் 2003ல் எழுதியதாவது, 'உண்மையில் டாலர்தான் உலகின் சேமிப்புப் பணமாக உள்ளது. உலகின் அதிகார பூர்வ சேமிப்பு மாற்றுகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க பணக் கணக்குதான் உபயோகிக்கப் படுகிறது. வெளி நாட்டுப் பண மாற்றத்தில் ஐந்தில் நான்கு பங்கும், உலக ஏற்றுமதிகளில் பாதியும் டாலர்களில்தான் செய்யப் படுகிறது. அது மட்டுமின்றி உலக வங்கியின் கடன்களும் (IMF Loans) டாலர்களில்தான் தரப் படுகிறது.

புலன்ட் கூகே (Dr. Bulent Gukay of Keele University) சமீபத்தில், 'எண்ணெய் வர்த்தகத்தில் உலக இருப்பின் டாலர்கள் செலவழிக்கப் படுவதால் செயற்கையாக டாலரின் தேவை அதிகமாக்கப் பட்டுள்ளது. இதனால்தான் ஏறக்குறைய ஒரு செலவுமேயில்லாமல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களை அச்சிட்டு அதிகப் படியான இராணுவத் தேவைகளுக்கு உபயோகிக்கவும், நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியில் செலவழிக்கவும் முடிகிறது. எவ்வளவு டாலர் தாள்கள்தான் அச்சிடலாமென்பதற்கு எந்த அளவீடுகளோ கட்டுப்பாடுகளோ அமெரிக்காவுக்கு இல்லை. அமெரிக்காவுக்குச் சமமான போட்டியாளர்கள் யாரும் இல்லாத நிலையில், மற்ற நாடுகள் டாலரின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கும் வரையில் எந்த செலவுமின்றி வெறும் டாலர் தாள்களை அமெரிக்கா அச்சிட்டே வாழ்ந்து கொண்டிருக்கும்' என எழுதியுள்ளார்.

சமீப காலம் வரை அமெரிக்க டாலர் பாதுகாப்பானதாகத்தான் இருந்தது. எனினும் 1990 முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் வளரத் தொடங்கி மத்திய ஐரோப்பாவையும் கிழக்கு ஐரோப்பாவையும் விழுங்கத் துவங்கியுள்ளது.

அமெரிக்கா ஒரு செலவுமில்லாமல் உலகப் பொருள்களையும் மக்களையும் வாங்கும் பலத்தை பார்த்து, பிரான்சு மற்றும் ஜெர்மானியத் தலைவர்கள் பொறாமைப் படத் துவங்கி விட்டனர். இலவசமாக் கிடைக்கும் அதில் தாமும் ஒரு பகுதியைப் பெற விரும்புகின்றனர்.

அவர்கள் 1999ன் இறுதியில் யூரோ எனும் பண பலத்தை, அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பலத்த எதிர்ப்புகளுக்கிpடையே, குறிப்பாக அமெரிக்க டாலர் பெற்று பிரிட்டன் உண்டாக்கிய எதிர்ப்புக்கிடையிலும் உருவாக்கி விட்டனர். யூரோ இப்போது வெற்றி நடை போடுகிறது.

யூரோ வெளியிடப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள் சதாம் உசேன், OPEC எனும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்று வந்த பெட்ரோல் இனி யூரோவில் மட்டுமே ஈராக்கில் விற்கப்படும் என அறிவித்தார். ஈரான், ரஷ்யா, வெனிசுலா, லிபியா முதலிய நாடுகள் தாங்களும் அவ்வாறே மாற நினைப்பதாக வெளிப்படையாக அறிவிக்கத் துவங்கின – வெள்ளம் அமெரிக்காவின் தலையில் ஓடத் தலைப்பட்டது.

இரண்டாம் பகுதியில் தொடரும்........

Post Comment

Monday, 4 August 2008

பத்து கட்டளைகள் - தம்பதிகளுக்குகட்டளை 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது

கட்டளை 2
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.

கட்டளை 3
திருமணம் என்பது பெரும் கொடை
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது

கட்டளை 4
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.

கட்டளை 5
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...

கட்டளை 6
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.

கட்டளை 7
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.

கட்டளை 8
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.

கட்டளை 9
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.

கட்டளை 10
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

போனஸாக ஒரு கட்டளை கதை வடிவில்
நீண்ட காலத்துக்கு முன் திருமணமான ஒர் தம்பதி வேண்டுதல் கிணற்றுக்குச் சென்றார்கள்.
மனைவி கிணற்றில் குனிந்து ஒரு வேண்டுதலைக் கேட்டுவிட்டு ஒரு நாணயத்தை உள்ளே எறிந்தாள்.
கணவணும் ஒரு வேண்டுதல் செய்ய விரும்பினான். ஆனால் கிணற்றில் குனியும்போது சிறிது கூடுதலாக குனிய, தவறி உள்ளே விழுந்து மூழ்கினான்.

கணநேரம் மனைவி அப்படியே பிரமை பிடித்தவளாகி நின்றாள். ஆனால் உடனே முறுவலித்தாள். ''அட! இந்த கிணறு உடனே வேலை செய்கிறதே!''

Post Comment

Wednesday, 30 July 2008

தமிழன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவனா?

இந்த ஆண்டில் அமீரகத்தில் மொத்தம் 118 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் 23 பேர் தமிழர்கள். மிகுதியில் கூடுதலானோர் மலையாளிகள்தாம். இந்த தற்கொலைகளில் மிகுதியானவை பணச்சுமையால் ஏற்பட்டவைதான் என்கிறது புள்ளி விபரம்.

தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தம் வருபவர்கள், இங்கு வந்ததும் அவர்கள் எதிர் பார்த்த வாழ்வியல் இங்கில்லை என்பதறிந்ததும் முதன் முதலாய் மனதொடிகிறார்கள். நிலம் நகை போன்றவற்றை அடகு வைத்து நிறைய பணம் கொடுத்து வந்தவர்கள், அந்தக் கடனை அடைக்கும் வரையிலாவது இங்கு இருந்துதான் ஆக வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இங்கு தன் செலவும், ஊரில் குடும்பத்தார் செலவும் போக எஞ்சிய குறைந்த பணத்தில் கடனை அடைக்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.

அவர் வீட்டிற்கு அனுப்பும் பணம் ஊரில் கொடுத்ததை விடவும் அதிகம். ஆனால் அதற்காக அவர் இழந்தது எவ்வளவு என்பது ஊரில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் மனது வருந்தக்கூடாதென்று இவர்களும் சொல்வதில்லை. அவர் முதலீடு செய்த பெருந் தொகையையும் ஊரில் பணத்தைப் பெறுபவர்கள் தற்காலிகமாக மறந்து விடுகிறார்கள். மகன் அல்லது கணவன் துபையில். இனி நம் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும் என்பதான அவர்களின் கற்பனை, ஏற்கனவே இருந்த வாழ்க்கை முறையிலிருந்து சிறிது சொகுசான வாழ்க்கை முறைக்கு அவர்களை மாற்றுகிறது. அதற்காக கூடுதல் பணம் தேவையாகிறது. அவர் மேலும் அதிர்கிறார். பழைய கடன் பாரம் முழுவதையும் இரவும் பகலுமாய் இவரே சுமக்கிறார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

அதற்குள் வந்து சிறிது நாளாகி விடுகிறது. நண்பர்கள் அதிகமாகின்றனர். குழுவாக இருக்கும் போதும், செல்லுமிடத்தும் புகை மற்றும் குடியைத் துவங்குகிறார். முதலில் மன ஆறுதலுக்கென்று இருந்தது, படிப்படியாக விடுமுறை என்றால் அதில்லாமலா என்ற நிலைக்கு தள்ளப் படுகிறார். இதிலே நண்பர்களின் முன் வீராப்புக்காக அல்லது முகஸ்துதிக்காக கூடுதல் செலவழிக்கிறார். சம்பள பற்றாக்குறை. மீண்டும் மன உளைச்சல்.

கார்டு தந்து கடனாளியாக்குகின்ற கிரெடிட் கலாச்சாரம் அவர் அறிந்தும் அறியாமலும் அவரை மேலும் கடனில் தள்ளுகிறது. வெளியேற முடியாமல் தத்தளிக்கிறார்.

இதல்லாமல் சிலருக்கு ஊரில் குடும்பத்தினரில் ஏற்படுகிற சிற்சில குழப்பங்களும் அவர் மனதை வாட்டிப் பிழிகிறது.

இவற்றிலிருந்து தப்பிக்க வழியறியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். சாதாரணமாக இவைதான் இங்கு நடப்பதாக சொல்கிறார்கள். அவைதான் தற்கொலைகளாய் முடிகின்றதாக சொல்கிறார்கள். உண்மையா?

அதனால் இங்கு வர நினைப்பவர்கள் முதலில் நன்றாகவும் சரியாகவும் திட்டமிடுங்கள். வந்த பின் கவனமாய் இருங்கள். உங்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவற்றை குறிப்பாய் தவிர்த்து விடுங்கள். உணர்ச்சி வசப்படாமல் சிந்தியுங்கள். வாழ நினைத்தால் புவியில் நல்ல வழிகளா இல்லை. உங்களை நீங்களே சீர்திருத்தம் செய்து சிறப்பான வாழ்வை நோக்கி பயணமாகுங்கள்.

அது சரி. படித்தவர்கள் அதிகமுள்ளதாய் சொல்லப் படுகிற மலையாளிகளில் இது போன்ற தற்கொலைகள் அதிகமுள்ளதே. படிப்பு மனிதனை அதிகக் கோழைகளாக்குமோ!

Post Comment

'ஓய்வு எடுத்துக் கொள்ளுதல்' தவறானது


மக்கள் தொலைக்காட்சி நடத்தும் தமிழ்ப் பண்ணையில் பங்கு பெறும் பெரும் தமிழறிஞர் மா.நன்னன் அவர்களின் தமிழ்ப்பற்று சொல்லில் அடங்காது. நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. துபையிலேயே இரவு பன்னிரண்டு மணி அளவில் தெரிவதை நாட்டில் விடியற்காலை நேரத்தில் யாராவது விழித்திருந்து பார்ப்பார்களா என நான் எண்ணி வியப்பதுண்டு.

அக்காலத்தில் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றொரு புலவர் இருந்ததாகவும், சாத்தனார் என்ற பெயருள்ள அவர், மற்றவர்கள் தவறாக ஆளும் தமிழைக் கண்டு மனம் வெதும்பி தம் எழுத்தாணியால் தம் தலையிலேயே குத்திக் கொண்டதால் தலை சீழாகி சீத்தலைச்சாத்தனாராய் ஆனார் என்றும் சொல்வர். அதை உண்மைதான் என நம்பச் செய்பவர்தான் இந்தத் தமிழறிஞர். தமிழ் எழுத்துக்களை அல்லது எழுதுவோர்களை நெறிப்படுத்த அவர் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.

பேச்சு வழக்கில் எழுதுவது சரியில்லை என்கிறார் அவர். பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் மாறும். எனவே பேச்சு வழக்கை எழுத்து வழக்குக்கு கொண்டு வராதீர்கள். வழுக்களை தமிழாக நிலைப் படுத்தாதீர்கள். சட்ட மீறலையே சட்டமாக்காதீர்கள் என்கிறார். இன்னும் கணிணித் தமிழருகில் வரவில்லை. வந்தால் நம் மொக்கைகளையெல்லாம் படித்த பின் நம்மை நேரில் பார்த்தால் கொன்றே போடுவார். குறிப்பாக சாத்தான் குளத்தாரே மாட்டிக் கொள்ளாதீரய்யா.

தமிழில் பிறமொழிச் சொல்லாடல்களையும் இயன்றவரை தவிர்க்கச் சொல்கிறார். நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று எழுதுகிற, சொல்கிற, சொல்லித் தருகிற அனைவரையுமே தமிழைக் கெடுத்த குற்றவாளிகளாக்குகிறார். நம்ம அய்யனார், இப்போது சென்ஷி ஆகியோர் பார்த்துக் கொள்ளுங்கள்.

எல்லோரும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என ஆர்வமூட்ட யார் யாரோ எழுதியதை அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அதிலுள்ள தவறுகளை மட்டும் விமரிசிக்கின்றார்.

ஒருவர் ''வீனஸின் பூமத்திய ரேகைக்கு அருகில்'' என்று எழுதியுள்ளதை படித்து அவருக்கு கோபம் பீரிடுகிறது. அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன்தான் படித்தவன். அவனுக்கு தமிழை விட வடமொழி விருப்பு அதிகம். அதனால் அறிவியலை தமிழ்ப்படுத்த அவற்றை வடமொழியிலேயே ஆக்கினான். அதனால்தான் பிராணவாயு, பூமத்திய ரேகை என வந்தது. பூமத்திய ரேகை பூமிக்கு நடுவில் இடப்பட்டுள்ள கற்பனைக் கோடு. அது வீனஸில் எப்படி ஐயா வரும். வீனஸ் மத்திய ரேகையாக அல்லவா வர வேண்டும். புடிப்பவனுக்கு குழப்பம் ஏற்படாதா? இப்போது நில நடுக்கோடு என்று பழகியிருந்தால், வீனஸின் நில நடுக்கோடு என்று எழுதினால் குழப்பமில்லையே என்கிற மாதிரி சொன்னார். எனக்குப் பிடித்தது. புரிந்தது. உங்களுக்கு?

தலைப்புக்கு வருவோம்.
ஓய்வு எடுத்துக் கொள்ளுதல் என்று எழுதுவதே தவறானது என்கிறார். இது ஆங்கிலத்தில் சிந்தித்து எழுதுபவரின் பழக்கம். நீங்களெல்லாம் வெள்ளைக்காரன் நாட்டுக்குப் போய் கண்களை பூனைக் கண்களாக்கிக் கொண்டு ஏதாவது செய்து தொலையுங்கள். தமிழைக் கெடுக்காதீர்கள் என்கிறார். ஓய்வு என்ன கீழே கிடக்கிறதா பொறுக்கி எடுத்துக் கொள்ள? Take Rest என உள்ளதை அப்படியே தமிழ்ப் படுத்தியதால் வந்த வினைதான் இது. ஓய்வு கொள்ளுங்கள் அல்லது ஓய்வாக இருங்கள் என்று சொல்லலாம். காத்தாட இருக்கலாமே. அமைதியாக சாயுங்களேன் என நாட்டுப் புறத்தில்தான் இன்னும் நல்ல தமிழ் வாழ்கிறது. போய்ப் பாருங்கள் என்கிறார்.

நல்ல தமிழறிய நீங்களும் இயன்றால் பாருங்கள். அவர் வார்த்தையிலேயே சொல்வதானால் தமிழ்ப்பண்ணையில் பண்ணையாராகுங்கள்.

குறிப்பு: ஒரு தமிழ்ப்பண்ணை விழாவிலே (ஒரு நாள் நிகழ்ச்சியில்) கூலவாணிபம் என்பது அப்புலவரின் தொழிலென்றும் சீத்தலை என்பது ஊராக இருக்கலாமென்றும் சாத்தனார் என்பது பெயரென்றும் மா. நன்னன் அவர்களே கூறியுள்ளார்.

Post Comment

Tuesday, 22 July 2008

மக்களாட்சிக்கே பெருத்த அவமானமான நாள் இன்று

இன்று என்றுமில்லா அளவில் மக்களாட்சிக்கே பெருத்த அவமானமான நாள்

மத்திய பிரதேசத்தைச் சோர்ந்த இரண்டு எம்.பி. மற்றும் இராஜஸ்தானைச் சார்நத ஒரு எம்.பி ஆக மூன்று பா.ஜ.க. எம்.பிகளுக்கு ஓட்டு நடைபெறும் நேரத்தில் அவைக்கு வரக்கூடாது என்பதற்காக ஒரு கோடி ரூபாய் முன் பணமாகத் தரப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் குதிரை பேரம் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் வெறுமனே எதையும் பேசக்கூடாது என்று சொன்னதாகவும் தெரிகிறது. எனவே இன்று சபை நடவடிக்கையின் போதே சபாநாயகரிடம் முன் அனுமதி பெற்று அப்பணம் 3 கோடி முழுவதையும் பாராளுமன்ற சபையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்து கொட்டியதாகவும், அதை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெற்று, பாராளுமன்ற அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

விரல்கள் சமாஜ்வாதியின் எம்.பி.க்களை நோக்கி நீள்வதாக தெரிகிறது.

சபாநாயகர் சபையை ஒத்தி வைத்து, பிரதமரின் பதிலளிப்புக்குப் பின் நேரடியான ஓட்டளிக்க அழைக்கப் போவதாகவும் செய்திகள் சொல்கின்றன.

இது பா.ஜ.க.வினரின் நாடகமாகவும் இருக்கலாமென டில்லி வட்டார ஊகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் கடுமையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் பட வேண்டியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Post Comment

Tuesday, 8 July 2008

நேர்மையான மனைவி (நகைச்சுவை)


ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.

அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.

அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.

அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.

அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.

Post Comment

Thursday, 3 July 2008

வெகு சிறப்பாக வாழவே நான்

1. தினமும் 10 முதல் 30 நிமிடம் வரை நடந்து பழகுங்கள். நடக்கும்போது சிரியுங்கள். மன அழுத்தம் குறைய இது மிகச்சிறந்த வழி.
2. தினமும் ஒரு பத்து நிமிடம் அமைதியாய் அமருங்கள். தேவையென்றால் அதற்காக ஒரு பூட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
3. தினம் முறைப்படி இறைவனைத் தொழுங்கள். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள்.
4. சிறிது நேரம் ஒதுக்கி 70 வயதுக்கு மேற்பட்டோர்களிடமும் 6 வயதுக்கு குறைந்தவர்களிடமும் தினமும் பழகுங்கள்.
5. மரத்திலும் செடிகளிலும் வளருவதை அதிகம் உணவில் சேருங்கள். ஆனால் அவற்றிலிருந்து தயாரிக்கப் படுபவற்றை குறைத்து உண்ணுங்கள்.
6. அதிகமாய் நீரருந்துங்கள். Green டீ குடியுங்கள்.
7. ஒரு நாளில் குறைந்தது மூன்று பேரை சிரிக்க வையுங்கள்.
8. உங்கள் வீடும், காரும், மேசையும் அழுக்குகளை விட்டும் தினமும் தூய்மையாகட்டும். உங்கள் வாழ்வில் புதுமையும் சக்தியும் நிரம்பட்டும்.
9. கிசுகிசு, பழையன பேசுதல், எதிர்மறை சிந்தனை, உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்கள் போன்றவற்றை பேசுவதற்காக உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக உங்கள் சக்தியை நிகழ்கால நேரான விடயங்களில் செலவிடுங்கள்.
10. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம் என்பதை உணருங்கள். நாம் இங்கே கற்றுக் கொள்ள வந்தோம். பிரச்னைகளும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதிதான். அல்ஜீப்ரா வகுப்பு போல பிரச்னைகள் வரும் போகும் ஆனால் நாம் படித்தவைகள் நம் வாழ்வு முழுதும் தங்கும்.
11. உங்கள் காலை உணவில் ஒரு அரசனாகவும், மதிய உணவில் ஒரு வழிப் போக்கனாகவும், இரவு உணவில் ஒரு பிச்சைக்காரனாகவும் உண்ணுங்கள்.
12. வாழ்க்கை சில வேளைகளில் நியாயாமற்றதாக தோன்றலாம் ஆனால் அப்போதும் வாழ்க்கை அழகானது.
13. வாழ்க்கை மிகச் சிறியது அதில் மற்றவர்களை வெறுக்க ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்.
14. உங்களை நீங்களே மிக முக்கியமானவராக கருதிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களும் நம்மை அவ்வாறு கருத மாட்டார்கள்.
15. ஒவ்வொரு விவாதத்திலும் நீங்களே வெல்ல வேண்டுமென நினைக்காதீர்கள். உங்கள் வாதம் ஏற்கப்படாமலிருக்கலாம் என்பதை ஏற்கப் பழகுங்கள்.
16. உங்களின் இறந்த காலத்தை அமைதிப் படுத்துங்கள் அப்போதுதான் அது உங்கள் நிகழ்காலத்தை கெடுக்காது.
17. உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களுடைய வாழ்க்கைப் பயணம் எவ்வாறானது என்பதை நீங்கள் உணர முடியாது.
18. பெண்களே!. அந்த நறுமணத்தை இப்போதே புகைய விடுங்கள். அந்த நல்ல விலையுயர்ந்த துகிலை இன்றே உடுத்துங்கள். சிறந்த நாட்களின் வருகையை எதிர்நோக்கி தாமதிக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் சிறந்த நாள்தான்.
19. உங்களது மகிழ்ச்சிக்கு உங்களைத் தவிர வேறு யாரும் பொறுப்பல்ல.
20. உங்களது ஒவ்வொரு பெருந்துன்பத்தையும் இதைச் சொல்லி கட்டம் கட்டுங்கள்.
'இன்னும் ஐந்து வருடத்துக்குப்பின் இது நமக்கு துன்பமாகத் தோன்றுமா?'
21. எல்லோரையும் எல்லாவற்றுக்காகவும் மன்னித்து விடுங்கள்.
22. உங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலையடையத் தேவையில்லை.
23. காலம் எல்லாவற்றையும் ஆற்றுப் படுத்தும். எனவே காலத்துக்கும் சிறிது கால அவகாசம் தாருங்கள்.
24. நிலைமை எவ்வளவுதான் நல்லதாகவோ கெட்டதாகவோ இருந்தாலும் அதுவும் மாறக்கூடியதே.
25. நீங்கள் நோய்வாய்ப்பட்டால் உங்கள் வேலை வந்து உங்களை கவனித்துக் கொள்ளாது. உங்கள் நண்பர்கள் வந்து கவனிப்பார்கள். அவர்களோடு தொடர்பில் இருங்கள்.
26. பயனற்றதாகவும், அழகற்றதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் உள்ளவற்றிலிருந்து ஒதுங்குங்கள்.
27. பொறாமை கொள்வது நேரத்தை வீணடிப்பதாகும். நமக்கு அனைத்தையும் கடவுள் அளித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
28. உங்கள் வாழ்வின் சிறந்தவை இனிதான் நிகழவிருக்கிறது.
29. நீங்கள் எப்படி இருந்தாலும் எழுங்கள். நன்றாக உடுத்துங்கள். சிறப்பாகத் தோன்றுங்கள்.
30. நல்லவற்றை மட்டுமே செய்யுங்கள்.
31. அடிக்கடி உங்கள் குடும்பத்தினரிடம் பேசுங்கள்.
32. ஒவ்வொரு நாளும் உறங்கும் முன் கீழுள்ள வாசகத்தை பூர்த்தி செய்யுங்கள்
இன்று நான் ____________ நன்றி செலுத்துகிறேன்.
இன்று நான் _______________ நன்றாய் முடித்தேன்.
33. நீங்கள் மன அழுத்தம் கொள்வதை விட்டும் சிறப்பானவராக வடிவமைக்கப் பட்டிருக்கின்றீர்கள்.
34. பயணத்தை சுவையுங்கள். எல்லாமே வேகமாக பறப்பதற்கு இது ஒன்றும் டிஸ்னி வேர்ல்ட் இல்லை. கடந்து செல்லுங்கள். வாழ்க்கை என்பது ஒரே பயணம்தான் அதை முழுவதும் சுவையுங்கள். அதை அழகாக அனுபவியுங்கள்.
வாழுங்கள். அன்பு செலுத்துங்கள். வாழ்க்கை என்பதே ஒரு வெகுமதி.
போனதையும் வருவதையும் எண்ணி நிகழ்காலத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
அதனால்தான் நிகழ்காலமே PRESENT என ஆங்கிலப் படுத்தப் படுகிறது.
வாழ்வை நேசித்து அனுபவியுங்கள்.

Post Comment

Monday, 30 June 2008

நண்பர்களே! தயவு செய்து ஹலோ சொல்லுங்கள்.

என்ன மக்களே. நலம்தானா?

திடீரென்று இந்தியா போக வாய்ப்பும் விடுமுறையும் கிடைத்தது. போய் விட்டு வந்தேன். அப்படியே நடக்கும் வீட்டு வேலைகளை கொஞ்சம் மேற்பார்வை பார்க்கவும் ஏதுவானது. துபை வந்து ஒரு வாரம்தான் ஆகிறது.

Nokia N73 கையில் வைத்திருந்தேன். வீட்டுக்கென்று ஒரு சைனா மொபைல் வாங்கிப் போயிருந்தேன். 'அதெல்லாம் எங்களுக்கு சரியாகப் புரியல' என்று சொல்லி N73யை வைத்துக் கொண்டு சைனாவை என்னிடம் கொடுத்தனுப்பி விட்டது புத்திசாலி தங்கமணி. அதிலிருந்த தொலைபேசி எண்களை மாற்றிக் கொண்டேன். எல்லா எண்களையும் மாற்றவில்லை என்பது உபயோகிக்கும் போதுதான் தெரிகிறது. மகளுக்கு பேசி 'எல்லா எண்களையும் கொடு' என்றால் 'நீங்கதான் மாற்றிக் கொண்டீர்களே என்று அப்போதே அழித்து விட்டேன்' என்கிறாள் புத்திசாலி மகள். சாத்தான்குளத்தார் தவிர மற்ற எந்த நண்பரின் எண்ணும் என்னிடமில்லை.

அதனால் நண்பர்களே. தயவு செய்து நீங்களாக ஹலோ சொல்லுங்கள். ப்ளீஸ்.

1. ஊரில் முக்கியமான செய்தி என்னவென்றால் மின்சாரத் தட்டுப்பாடு. காலையில் மின்சாரம் போனால் சில சமயம் இரவு பதினொன்றுக்கெல்லாம் திரும்பி விடும். வியர்வைக் குளியல் நடத்த நல்ல ஏற்பாடு.

2. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காற்றாட ஆற்றில் நடக்கும்போது
''சீ! இங்கதான் உட்கார்ந்து படிப்பீங்களா?.
ஆனா அமைதியா இருக்கும்.
பாம்பு எல்லாம் வராதா?'' என்று கேட்டது வாண்டு.

அந்த மரமும், மட்டைகளும், படிக்கட்டும், வாய்க்கால் சுவரும், நாணலும், ஆற்று மணல்களும்,

''அட. என்ன தம்பீ! எத்தனை வருடமாச்சு!.
சின்ன பிள்ளையாக இருக்கும்போது தினமும் படிக்க வருவாயே! படித்த இடமென்று ஞாபகம் இருக்கிறதா?.
வா! வந்து உட்கார்!!''
என்று அழைப்பது போல் இருந்தது.

கண்களில் கண்ணீர் வந்து விட்டால், பிள்ளைகள் ஏதும் கேட்குமே! என்று முயன்று அடக்கிக் கொண்டேன்.

3. அப்படியே பக்கத்து கிராமத்துக்கும் காலார அழைத்துப் போனேன்.
பெரிய பெரிய டயரை இப்படி வெட்டிப்போட்டு (side)சைடுல கட்டி வைத்து இருக்கே. அது என்ன என்று கேட்டார் பையன்.
அது பன்றிகளுக்கான 'கொடலை' அதாவது 'உணவிடும் ஏற்பாட்டுக்கு' என்று சொன்னேன்.
'சே' என்றது பெண்.
''இதுக்கு எதுக்கம்மா 'சே'. அவர்கள் அதை அன்பாய் வளர்க்கிறார்கள்'' என்றேன்.
''ஓ அதளால்தான் அது அவ்வளவு அழுக்கா இருந்தாலும் அதற்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சட்டியில பால் கொடுக்கிறாங்களா'' என்றது அடுத்த பெண்.
''சே. அது பால் இல்லம்மா. கழனித்தண்ணி'' என்றேன்.
''அப்படீன்னா'' என்றதற்கு விளக்கம் சொன்னேன்.
“அதுக்கு எதுக்கு 'சே' என்கிறீர்கள்” என்கிறாள். சரியான வாய்.

4. உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு தங்கமணி போயிருந்த போது வந்தவர்களுக்கெல்லாம் இரண்டு புத்தகம் கொடுத்தார்களாம். “நம்மூரில் கூட இப்படி நடக்கிறதே?” என ஆச்சரியப்பட்டுக் கொண்டே தங்கமணி கையிலிருந்த புத்தகத்தை வாங்கினேன். ‘நான் படித்து சொல்றேன்’ என்று வரிசையாக பொருளடக்கம் படித்துச் சொன்னாள் சின்ன பெண். 9 வயது.
“ஏம்மா! ‘வட்டி’ என்று படித்தாயே அப்படின்னா என்னம்மா?” என்று கேட்டேன்.
“Interest - எனக்கு தெரியும் டாடி” என்றாள்.
“ஆங்கிலத்தில் எப்படிச் சொல்றதுன்னா கேட்டேன்?” என்றேன்.
“கொடுத்த பொருளை அல்லது பணத்தை அதே அளவில் திரும்பப் பெற்றால் அது கடன் - அனுமதியுள்ளது.
கொடுத்ததை விட கூடுதலாக கேட்டுப் பெற்றால் அதுதான் வட்டி – அனுமதியில்லை” என்று அழகாய் விவரித்தாள்.
அட என்ன அழகா சொல்லுது - உண்மையிலேயே புத்திசாலி குழந்தைதான்.

5. ஊருக்கு போகு முன் கம்பெனி புதிய கார் கொடுத்திருந்தது. ஒரு மாதம் ஓட்டி விட்டு சர்வீஸ் செய்து வைக்கச் சொல்லி விட்டு ஊருக்குப் போயிருந்தேன்.

என்னுடைய காரை சர்வீசுக்கு விடாமல், நான் விடுமுறையில் இருந்த ஒரு மாதமாக ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று தெரிந்து, அலுவலகத்தில் நான் கோபப்பட்டதால், அவசரமாக சர்வீஸ் செண்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தார்கள். சர்வீஸ் செண்டரிலிருந்து உடனே விடச் சொல்லி மதியம் அழைப்பு வந்தது.

நேராக NISSAN சர்வீஸ் செண்டர் போய் 'அழைப்பு வந்தது. வண்டியை சர்வீசுக்கு விட வேண்டும்' என்று சொல்லி Registration Card கொடுத்தேன். அங்கிருந்த மலையாளி ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தான்.
"என்ன ஆனது. என் வார்த்தைகள் விளங்கவில்லையா" என்று கேட்டேன்.
"நான் இந்த இடத்திற்கு புதுசு. எனக்கு உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் எண், என் சிஸ்டத்திலிருந்து கிடைக்க மாட்டேங்கிறது” என்றான்
“புதிதென்றால், தெரிந்த ஆளிடம் கொடு” என்றேன்.
அவன் பக்கத்துசீட்டு நண்பரிடம் கொடுத்தான். அவனே அவரிடம் விளக்கினான்.
“காரில் இலேசாக சிராய்ப்புகள் இருக்கிறது. பெயிண்ட்டும் செய்து விடுங்கள்” என்றேன்.
அவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு “உங்களை அழைத்தது ஆணா பெண்ணா” என்றார்.
“ஆண்தான். இந்த எண்ணிலிருந்து” என்று எண்ணையும் சொன்னேன்.
அவர் கார்டை ரிஸப்சனுக்கு அனுப்பி பார்க்கச் சொன்னார். அங்கிருந்தும் திரும்பி அவரிடமே வந்தது.
“தயவு செய்து கார்டை என்னிடம் கொடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி கார்டை வாங்கினேன்.
'இல்லை சார். கொஞ்சம் பொருங்க!. இப்ப பார்த்திடலாம்' என்றார்.
நான் வேகமாக வெளியில வந்திட்டேன்.

சே!. இதற்கு முன் வைத்திருந்ததுதான் NISSAN கார். இப்போதுள்ள புதிய கார் TOYOTA அல்லவா?.
நல்ல வேளை. அவர்கள் கார்டை சரியாகப் பார்த்து சொல்வதற்குள் வெளியேறி விட்டேன் - உண்மையிலேயே வயதாகி விட்டதோ!

Post Comment

Wednesday, 7 May 2008

சாப்பிட வாங்க? + விளம்பரம்

சும்மா சிரிக்க மட்டும்Post Comment

Monday, 5 May 2008

துபை வாழ்வும் அன்றாட செலவுகளும்

அறிவிப்பு:
[ஏதோ கோல்மால் நடந்திருக்கு. கிறிஸ்துநேசன் மாதிரி அவதூறு ஆட்களை சில சமயங்களில் படிப்பதோடு சரி. அதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்க நினைப்பவன். எதிர் வினை ஆற்றினாலும் மற்ற மதங்களை குறை சொல்வதை விடுத்து என் மார்க்கத்திலுள்ள நன்மைகளைச் சொல்வதையே விரும்புபவன். இரண்டு இடுகையையும் நேற்று படித்தேன்.ஆனால் எப்படி என் பதிவில் வந்ததென அறியவில்லை. அறிந்த உடனே கிறித்துவ நம்பிக்கை பற்றி என் பதிவில் வந்த தவறான இடுகையை அழித்து விட்டேன். நாய் கடித்தால் நாயைத் திரும்பவும் கடிப்பது நல்ல மனிதப் பண்பாகாது என்று நம்புபவன் நான். - நலம் விரும்பிகளும் நண்பர்களும் பொறுத்தருள்க - என் பதிவில் வந்த தவறான இடுகைக்கு வருந்துகிறேன்..என் பாஸ்வேர்ட் மாற்றி விட்டேன்.]குசும்பன் குசும்பில்லாமல் எழுதிய UAE வருமுன் கவனிக்க வேண்டியவைக்கு பிற்சேர்க்கையாக இதை சேர்க்கலாம். அல்லது தற்போதைய நிலைக்கு ஒரு அப்டேட் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அஹ்லன் மின் துபை!... துபைக்கு வருக! வருக!!
நிறைய இந்தியர்கள் தங்கள் கனவு நனவாக துபை போகும் அடுத்த விமான நம்பிக்கையில்....
இங்கு வந்த பின் வாழ்க்கை அதிர்ச்சியாக மாற வாய்ப்பிருக்கிறது என்பதை அறிவிக்கவே இவ்விடுகை.

பொதுவாக நம் இளைஞர்கள் குறைந்த கால அளவுக்குள் நிறைய பொருள் தேடி விட விரும்புகின்றனர். பெயர் பெற்ற அல்லது அதல்லாத எந்த ஒரு நாட்டிலிருந்து வேலைக்கு அழைப்பு வந்தாலும் அதன் நன்மை தீமை பற்றி யோசிக்காமலேயே இந்தியாவை விட்டும் வெளியேறத் துணிகின்றனர். UAE வர விரும்புபவர்களே!. நீங்கள் கொஞ்சம் நிதானித்து, வருவதற்காக முடிவெடுக்கும் முன்னரே, இங்கே குறிப்பிடப்படுவனவற்றை சீர் தூக்கிப் பாரப்பது நல்லது.

முதன் முதலாக - உங்கள் துபை சம்பளத்தை உடனே 11ஆல் பெருக்கி இந்தியப் பணமாக கணக்கிடும் தவறை முதலில் நிறுத்துங்கள். பணமாற்றம் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.மொத்த வருமானத்திலிருந்தல்ல.

நீங்கள் திருமணமானவராயிருந்தால் அமீரகத்தில் குறிப்பாக துபையில் உங்கள் குடும்பம் தங்க எவ்வளவு செலவாகும் எனப் பாருங்கள்.

துபை நகரத்தில் எங்காவது ஒரு அறை, சிறு கூடம் (சிறு ஹால்), சமையலறை உள்ள ஒரு சாதாரண 1BHK வீட்டுக்கு வாடகை குறைந்தது 5000 திர்ஹம் ஒரு மாதத்துக்கு (ஒரு வருடத்துக்கல்ல) அவசியம். இந்த வாடகை வருடத்துக்கு குறைந்தது 15 முதல் 25 சதவீதம் வரை உயரும். உங்கள் சம்பள உயர்வு இதில் பாதி சதவீதம் கூட உயராதென்பதை அறியவும்.

நீங்கள் கொஞ்சம் விபரமான ஆளென்ற நினைப்பில் துபைக்கு வெளியில் (சார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன் ஆகிய அமீரகங்களில்) தங்கினால் மாதம் 500 முதல் 750 திர்ஹம் வரை சேமிக்க முடியும். ஆனால் அதற்காக அலுவலகம் சென்று வர பயணத்துக்காக நீங்கள் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரங்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும். சார்ஜாவிலிருந்து துபை வரை - பொதக்குடியானைப் பாருங்கள் (இலட்சக்கணக்கில் குடியேற்றங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகிரிப்பதால் வாகன நெரிசல் இன்னும் கூடுமே ஒழிய குறையாது). அதாவது வேலை நேரமாகிய 10 மணி நேரமானது 14 முதல் 15 மணி நேரமாகும். துபையில் குடும்பமிருந்தால் குதுர்கலம் என்ற நினைப்பிருக்கும்.

உங்கள் கம்பெனி ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் இல்லாததாக இருந்தால் (நிறைய கம்பெனிகள் இது போல் இருக்கிறது) சாதாரண மெடிக்கல் செக்கப்புக்கு 100 திர்ஹம் அழ வேண்டும். உடல் நலக்கேடு வராமலிருந்தால் நல்லது. வந்து விட்டால் அதற்காக மாதாமாதம் ஒரு பெருந்தொகையை இழக்க நீங்கள் தயாராக வேண்டி வரும்.

இந்தியாவின் வடநாட்டில் உள்ளது போன்ற வெப்பத்தை அறியாதவராக, பழக்கப்படாதவராக இருந்தால்.... அறிந்து கொள்ளுங்கள். கோடை நாட்களில் மதிய வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும் - கோடையில் இங்கு இது சாதாரணம். சொல்லாமல் விடக்கூடாத முக்கியம் (Humidity)ஈரப்பதம் 95 சதவீதம்!.

குழந்தையில்லாதவராக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர். 2 அல்லது 3 பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்காக வருடத்துக்கு 12000 திர்ஹம் செலவுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

இங்கு பெட்ரோல் விலை குறைவு அதனால் கார் வாடகையும் குறைவாக வரும் என நினைத்திருப்பீர்கள். விமான தளத்தில் இருந்து உங்கள் ஹோட்டலுக்கு செல்ல ஒரு வாடகை வண்டி எடுத்து அதில் அமர்ந்து உங்களை நீங்கள் சரிப்படுத்திக் கொள்வதற்குள் வாடகை முள் 75 முதல் 100 திர்ஹத்தைத் தொட்டு விடும்.

உலகத்தின் விலையுயர்நத கார்கள் எல்லாம் இங்கு கிடைக்கும். ஆனால் அதை பார்க்கிங் செய்ய தினம் ஒரு இடத்தை பிடிப்பதற்குள் கார் வாங்கும் எண்ணமே பறந்து விடும். கார் பார்க்கிங் செய்ய ஒரு மணி நேரம் சுற்றிச்சுற்றி வந்தால் இடம் கிடைக்கலாம் ஆனால் ஒரு மணி நேரத்துக்கு 2 திர்ஹம் இரண்டு மணி நேரத்துக்கு 5 திர்ஹம் கொடுத்து டிக்கட் எடுக்கவும். காரில் டிக்கட் வைக்காமல் விடுபட்டு விட்டால் தண்டம் அழ வேண்டும். 100 திர்ஹம் என்று எழுதி 110 திர்ஹம் வாங்குவார்கள். அத்துடன் முக்கிய வீதிகளுக்கு சுங்கத்தீர்வை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்பெறும்.

கடைசியாக (இப்போதைக்கு)
ஊரில் உள்ள உங்கள் சொந்தங்களுக்கு தொலைபேச மூன்று மடங்கு பணம் செலவாகும். அமீரகத்திலிருந்து இந்தியாவுக்குப் பேச ஒரு நிமிடத்துக்கு சுமார் 30 இந்திய ரூபாய்கள் தேவை. ஆனால் இந்தியாவிலிருந்து அமீரகத்துக்குப் பேச 8 ரூபாய்கள்தான். இது துபையில் உங்களுக்கு என்னென்ன காத்திருக்கிறது என்பதற்கு சிறு விளக்கமாக இருக்கும். Skype உபயோகிக்கலாம் என நினைக்காதீர்கள். அது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி உபயோகிப்பது சட்ட விரோதமானது. ஆர்குட் கூட இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

புதிது புதிதாக உருவாக்கப்படும் ஷாப்பிங் மால்கள், மாறிக் கொண்டே வரும் வானுயர கட்டிடங்கள், துபையை பற்றி ஆங்காங்கே கேட்கும் வார்த்தைகள், விளம்பரங்கள், ஒவ்வொரு வியாழன் இரவிலும் படையெடுக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள், அழகழகான கார்கள், அணிவகுக்கும் காபிக்கடைகள், புர்ஜ் துபை, புர்ஜ் அல் அரப், துபை மரீனா போன்றவை உங்களை வசீகரித்திருக்கிறதென்றால்....... கொஞ்சம் யோசியுங்கள். (உங்களின் வாழ்க்கையை இங்கே துபையில் தொலைத்து விட்டு நீங்கள் ஊருக்குப் போகும்போது என்ன கொண்டு போகப் போகிறீர்கள் என்பதை யோசியுங்கள்.) நீங்கள் எத்தனை வருடங்கள் இந்த நாட்டில் இருந்தாலும் நீங்கள் வெளிநாட்டான்தான், அமீரக பாஸ்போர்ட் கிடைக்காது. ஒரு வீடு கூட இங்கு சொந்தமாக இருக்காது.

நம்புங்கள் - என் இல்லமே எனது மகிழ்ச்சி.

இதுதான் வளைகுடா
. லோக்கல் தொலைபேசி இணைப்பு இலவசம்
. பெட்ரோலை விட தண்ணீருக்கு விலை அதிகம். கழிவு நீருக்காகவும் காசு தர வேண்டும்.
. ஒவ்வொரு கட்டிடமும் மூன்று மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்.
. தகுதியில்லாதவர்கள் தகுதி படைத்தவரை விடவும் அதிகம் சம்பாதிப்பார்கள்.
. உண்மையை விடவும் படம் காட்டுவதற்கே மதிப்பு.
. அடிமட்டத் தொழிலாளர்களுக்கு நமது நாட்டில் கிடைப்பதை விட குறைந்த ஊதியமே கிடைக்கிறது.
. நிர்வாகம் எந்த ஒரு காரணமுமின்றி தன்னிடம் வேலை பார்ப்பவரை வெளியேற்றலாம்.
. பணத்தை விட வாஸ்தா (எனப்படும் பரிந்துரை) அதிக பலம் வாய்ந்தது.
. அலுவலர்களை விடவும் துடைப்பவர்களுக்கு அதிக பரிந்துரைக்கும் பலமுண்டு
. கட்டிட முதலாளியை விட கூடுதல் உரிமையுடையவர் வாட்ச்மேன்.
. முதலாளியிடம் மேலதிகாரியை விடவும் அதிக செல்வாக்குள்ளவர்கள் ஆபீஸ் பாயும் டிரைவரும்தான்.
. வளைகுடாவில் ஒரு மணி நேரத்துக்கள் மழை, புழுதிப்புயல், கடும் வெப்பம், கடுங்குளிர், வியர்ப்பு (உருக்கம்) போன்ற காலநிலை மாற்றங்கள் அதி வேகமாக மாறும்.
. வளைகுடா பாலைவனத்தில்தான் இருக்கிறது இருப்பினும் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று தாவரங்கள் காட்சி தரும்.
. வளைகுடாவில் சம்பாதிக்கத் தெரியாதவன் உலகில் எங்கு போனாலும் சம்பாதிக்க முடியாது.
. வளைகுடாவில் நேரம் பறக்கும். ஒரு வெள்ளிக்கிழமை போய் அடுத்த வெள்ளி வந்ததே தெரியாது.
. இங்குள்ள ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் ஊரில் ஒரு வீடு கட்டுவதும் திருமணம் செய்வதும்தான் முக்கிய கனவு.
. நீங்கள் ஊரில் கூட இருக்கும்போது இருந்ததை விட 100 மடங்கு கூடுதலாக உங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மீது அன்பு செலுத்துவீர்கள்.
. பணியில் இருப்பதை விடவும் வீட்டில் இருப்பதுதான் அதிக வலியைத் தரும்.
. இந்தியர்கள் உண்மையிலுள்ளதை விடவும் கூடுதல் பக்தியுள்ளவர்களாயும், கடவுள் பயமுள்ளவராகவும் இருப்பதாக காட்டிக் கொள்வர்
. சல்மான் கான் அல்லது ஷாரூக் கான் படங்கள் திரையிடப்பட்டால் திரையரங்குகள் அரபியர்கள் கூட்டத்தால் நிரம்பும்.
. அரபிப் பெண்கள் ஹிந்திப்பாட்டு பாடுவர் ஆனால் பாடலின் பொருள் தெரியாது.
. டான்ஸ் பார்களும் 'பப்' களும் பெங்களுருவை விட அதிகம்
. ஒவ்வொரு ஐந்து மீட்டருக்கு ஒரு பெண்கள் சலூன் உண்டு
. உணவும் மளிகையும் உங்கள் வாகனத்தில் கொண்டு வந்து தரப்படும்
. 10 மீட்டருக்கு ஒரு ஸ்டார்பக்ஸ்
. ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்குள் ஒரு ஷாப்பிங் மால் உண்டு
. விபச்சாரிகளும் உண்டு ஆனால் பிச்சைக்காரர்களை விடவும் மட்டமாக
. நெடுஞ்சாலைகளில் மெதுவாக அல்லது வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கென்று வரிசை வித்தியாமிருக்கும்.
. ஓட்டுநர் உரிமம் பெறுவது கார் வாங்குவதை விட மிகக் கடினமானது
. பூச்சிகளை விடவும் நொருங்கிய கார்கள் கூடுதலாக காணக் கிடைக்கும்
. வரிசையில் வரவேண்டுமென்பது பெண்களுக்கு விதி கிடையாது.

Post Comment

Saturday, 26 April 2008

நடந்ததும் நினைத்ததும் ஓ! உஃப்!!

சரி செய்ய முடியாத செயல்களில் நான்கு
1. சொல்லி விட்ட சொற்கள்
2. எறிந்த கல்லால் ஏற்பட்ட அலை
3. தவற விட்ட வசந்தம்
4. இழந்து விட்ட நேரம்

ஒரு ஹைடெக் இளம்பெண் விமானத்தில் பயணிப்பதற்காக ஒரு பெரிய விமான நிலையத்தின் பயணிகள் அறையில் தங்க நேர்ந்தது.


பல மணி நேர தாமதம் ஏற்படலாமென அறிந்த அவள், நேரப்போக்குக்காக ஒரு புத்தகத்தையும் ஒரு பிஸ்கட் பேக்கையும் வாங்கிக் கொண்டு, அமைதியாக படிப்பதற்காக மிக முக்கியமானவர்கள் தங்கும் நிலைய பயண அறையில் ஒரு கைநாற்காலியில் அமர்ந்தாள்.


அவள் இருந்த இருக்கையின் அருகே பிஸ்கட் பாக்கெட் வைக்கப்பட்டிருந்த கைநாற்காலிக்கு அடுத்ததில் ஒருவர் அமர்ந்து தான் கையுடன் கொண்டு வந்திருந்த பத்திரிக்கையை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.

அவள் பிஸ்கட் பாக்கைப் பிரித்து ஒன்றை எடுத்தவுடன் அடுத்து அமர்ந்திருந்தவனும் அதிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டான். பயங்கரமாக கோபம் வந்தாலும் ஒன்றும் பேசாமலே இருந்தாள். ஆனால் அவள் மனதில் 'எவ்வளவு கொழுப்பு இவனுக்கு!. இதே வேறு நேரமாயிருந்தால், இவனுடைய இந்தத் திமிருக்கு அவன் மூஞ்சியிலே ஒரு குத்து விட்டிருப்பேன்' என நினைத்தாள்.

அவள் ஒவ்வொரு முறை பிஸ்கட் எடுத்த போதும் அவனும் ஒன்றை எடுத்து சாப்பிட்டான். அது அவளை பயங்கரமாக எரிச்சலடைய வைத்தாலும் அந்த அசிங்கம் எல்லோருக்கும் தெரிய வேண்டாமே என சகித்துக் கொண்டாள்.

இப்போது ஒரு பிஸ்கட்தான் மீதம் இருந்தது. 'இந்த வீணாய்ப் போனவன் இப்போது என்ன செய்ய முடியும்?' என நினைத்தாள். அவனோ அந்த பிஸ்கட்டை எடுத்து, இரண்டாய் உடைத்து, அவன் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, அவளிடம் ஒரு பகுதியைக் கொடுத்தான்.

சே! என்ன கொடுமை இது. அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. விசுக்கென்று அவ்விடத்திலிருந்து எழுந்து, அவள் புத்தகம் மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு, விமானமேறும் பயணிகளின் வரிசையில் நின்று கொண்டாள்.


விமானத்தினுள் சென்று தனது இருக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தான் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி வைக்க கைப்பையை திறந்தால் ஆச்சர்யம். உளளே அவளுடைய பிஸ்கட் பாக்கெட். திறக்கப் படாமல் - அப்படியே. தன் கைப்பையில் தான் வைத்த பிஸ்கெட். அவள் தன்னையே நொந்து தன் தவறுக்காக அவமானமாய் உணர்ந்தாள்.


அந்த மனிதன் எந்தக் கோபமும் கசப்புமின்றி அவனுடைய பிஸ்கெட்டை இவளுடன் பகிர்ந்து உண்டிருக்கிறான். ஆனால் இவளோ இவளுடையதை அவன் பகிர்ந்து கொண்டதாக நினைத்து கோபம் மற்றும் வெறுப்பின் உச்சத்திலிருந்தாள்.

அவன் எந்த விமானத்தில் எங்கு செல்பவனோ?. அவனிடம் நடந்ததை விளக்கவோ மன்னிப்புக் கோரவோ கூட இயலாத நிலை.

அவசர குணம் வேண்டாமே.

----------------------------------------------------------------------

கோவையில் ஒரு வயதான மனிதர் தன் நிலத்தை கொத்தி காய்கனிச் செடிகளாவது வைக்கலாமே என்று தம் தோட்டத்திற்குச் சென்றார். நிலம் இறுகிக் கடினமாக இருந்ததில் அவரால் தோண்ட இயலவில்லை. அவருடன் எப்போதும் இப்பணியில் கூட வரும் ஒரே மகன் நிஜாம் இப்போது ஜெயிலில். தெருவில் போய்க் கொண்டிருந்த போது எவ்வித காரணமுமின்றி போலீஸ் பிடித்த தீவிரவாதி(?) அவன்.

அவர் தன் மகனுக்கு தன் நிலைமை குறித்து தபால் எழுதினார்.


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு மகன் நிஜாமுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
இவ்வருடம் நம் தோட்டத்தில் எதுவும் பயிரிட முடியாதென்று கவலையுடன் உள்ளேன். தோட்டத்தில் தோண்டி, பண்படுத்தி, செடிகள் நட இயலாத அளவுக்கு மூப்படைந்து விட்டேன். நீ என்னுடன் இருந்திருந்தால், நீயே அவ்வேலைகளைச் செய்து கொடுத்திருப்பாய். எனக்கு இந்தக் கவலை ஏற்பட்டிருக்காது. இறைவன் நலமருள
பிரார்த்தனையுடன் உன் தந்தை.

சின்னாட்கள் கழித்து மகனிடமிருந்து தந்தைக்கு கடிதம் வந்திருந்தது.


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு வாப்பாவுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
தற்போது தோட்டத்தை எங்கும் தோண்டி விடாதீர்கள். அங்குதான் பிணங்களை புதைத்து வைத்துள்ளேன்.
நன்மைக்கான பிரார்த்தனைகளுடன்
உங்கள் அன்பு மகன் நிஜாம்

அடுத்த நாள் விடியற்காலை 4மணி. உளவுத்துறை வட்டாரங்களுடன் பெரிய போலீஸ் படை அந்தத் தோட்டமெங்கும் தோண்டித் தோண்டிப் பார்த்தும் ஒரு பிணத்தையும் கண்டெடுக்க முடியாமல், முதியவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தோட்டத்தை விட்டு அகன்றது. அதே நாள் மகனிடமிருந்து முதியவருக்கு இன்னொரு கடிதம் கிடைத்தது.


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு வாப்பாவுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
இப்போது தோட்டத்தில் உங்கள் விருப்பம் போல் பயிரிட்டுக் கொள்ளுங்கள்.
என் இந்த நிலைமையில் என்னால் இவ்வளவுதான் உதவ முடிந்தது.
நன்மைக்கான பிரார்த்தனைகளுடன்
உங்கள் அன்பு மகன் நிஜாம்

தழுவல்: நன்றி-ஷர்மி இரவி

Post Comment

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு யோசனை

(குசும்பனுக்கும் மின்னுதுமின்னலுக்கும் அய்யனாருக்கும்)

ஒரு தம்பதியினரது 25 வருட வாழ்க்கையில் ஒரு முறை கூட இருவருக்கிடையில் சண்டையே வந்ததில்லை. அந்த ஊரிலேயே எல்லோராலும் பேசப்படுகிற ஆதர்ஸ தம்பதியினராய் இருந்தனர்.

அவர்களின் திருமண நாள் விழாவின் போது, உள்ளுர் பத்திரிக்கையாளர், "உங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் ரகசியமென்ன?" என்று கணவரிடம் கேட்டார்

அந்தக் கணவர் அவர்களது தேனிலவு நாளில் நடந்த நிகழ்ச்சியொன்றை அவருக்காக நினைவு கூர்ந்தார்

"நாங்கள் இருவரும் தேனிலவுக்காக சிம்லா போயிருந்தோம். அங்கிருக்கின்ற எந்த விளையாட்டை முதலில் தேர்ந்தெடுப்பது எனக் குழம்பி, கடைசியில் குதிரையேற்றத்திலிருந்து தொடங்குவது என்று முடிவெடுத்தோம்.

நான் ஒரு குதிரையிலும் என் மனைவி ஒரு குதிரையிலும் ஏறிக்கொண்டோம். எனக்கு கிடைத்தது நல்ல குதிரை. எந்த பிரச்னையும் தராமல் நல்லபடியாய் சென்றது.

ஆனால் என் மனைவிக்கு கிடைத்த குதிரை கொஞ்சம் சண்டித்தனம் செய்தது. ஒரு முறை திடீரென்று குதிரை குதித்ததில் என் மனைவி கீழே விழுந்து விட்டாள். என் மனைவியோ கொஞ்சம் கூட வருத்தப்படாமல், அதன் முதுகில் தட்டிக் கொடுத்து, 'முதல் தடவை. பரவாயில்லை' என்று குதிரையிடம் சொல்லி விட்டு திரும்ப ஏறி அமர்ந்து கொண்டாள்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் குதிரை குதித்து, என் மனைவியை கீழே தள்ளி விட்டது. என் மனைவியோ கொஞ்சம் கூட சினமில்லாமல், திரும்ப குதிரையிடம் வந்து 'இது உனக்கு இரண்டாம் தடவை' என்று சொல்லி விட்டு திரும்பவும் குதிரையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

சிறிது தூரம் சென்று மூன்றாவது தடவையாக குதிரை குதித்து, என் மனைவி கீழே விழுந்ததும், அமைதியாக தன் கைப்பையைத் திறந்து தன் துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றே விட்டாள்.

வந்த இடத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் நான் விழி பிதுங்கி, 'என்ன காரியம் செய்து விட்டாய்! ஒரு வாயில்லா ஜீவனை இப்படிக் கொன்று விட்டாயே! உனக்கென்ன பைத்தியமா?' என்று கோபமாகக் கத்தினேன்.

என் மனைவியோ கொஞ்சம் கூட கவலைப்படாமல், 'முதல் தடவைதானே. பரவாயில்லை' என்று அமைதியாக என்னிடம் கூறினாள்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் எங்கள் வாழ்வில் சிறு வாய்த்தகராறு கூட வந்ததில்லை."

(தலைப்பில் 'திருமதி' என்ற வார்த்தை மூன்று பேர் பெயருக்கும் முன்னால் சேர்க்க மறந்து விட்டது. அதனால் அந்தப் பெயர்களுக்கு முன்னால் 'திருமதி' என்ற வார்த்தையை சேர்த்து படிக்கக் கோருகிறேன்)

Post Comment

Thursday, 24 April 2008

நம் மூளையோடு போட்டி

இது சோதனை ஒன்றுமில்லை. ஆனால்
அது அப்படித்தான்.
விபரங்கள் தரப்பட்டுள்ளது.


கீழே முக்கோணத்தில் எழுதப்பட்டதை சப்தமிட்டுப் படியுங்கள்


நீங்கள் "A BIRD IN THE BUSH" என்றுதானே படித்தீர்கள்?.
என்றால் 'THE' என்ற வார்த்தை இருமுறை வந்துள்ளதை நீங்கள் சரியாகப் பார்க்கவில்லையென்று பொருள்.
திரும்பப் பாருங்களேன்.

அடுத்து வார்த்தை விளையாட்டு

கீழே என்ன எழுதியிருக்கிறது?

கருத்த எழுத்துக்களில் GOOD என்று எழுதியிருப்பதுடன் கருத்த எழுத்துகளினுள் EVIL என்ற வார்த்தை வெள்ளை எழுத்துகளில் உள்ளது.
அதாவது நன்மையினுள் தீமை ஒளிந்திருக்கிறது
அல்லது
நன்மை மறையுமிடத்து தீமை வரும்.
சரிதானே.


முதலில் சரியாகத் தெரிந்திருக்காது. வெள்ளை எழுத்துக்களில் 'OPTICAL' என்றுள்ளது. பின்னாலுள்ள ஊதா நிறப்படத்தில் 'ILLUSION' என்று எழுதப்பட்டிருக்கிறது.
இப்போது பாருங்கள். அதனால்தான் இந்த வண்ண ஓவியத்திற்கு 'Optical Illusion' என்பது பெயர்.

கீழே நீங்கள் பார்ப்பது என்ன?


இதில் ஒரு சிறிய தந்திர வேலை உள்ளது.
'Teach' என்ற வார்த்தை 'Learn' என்று பிரதிபலிக்கிறது

கடைசியாக
கீழே உள்ளதில் என்ன பார்க்கின்றீர்கள்'


பழுப்பு நிறத்திலுள்ள 'Me' தெரிகிறதா
அல்லது
'என்னில் உங்களை'ப் பார்க்க முடிகிறதுதானே. 'Me in You'

அடுத்து கண் சோதனை
இதில் எத்தனை 'F' உள்ளது எனக் கூட்டுங்கள்

FINISHED FILES ARE THE RE
SULT OF YEARS OF SCIENTI
FIC STUDY COMBINED WITH
THE EXPERIENCE OF YEARS...

(கீழே வாருங்கள்)

எத்தனை?
தவறு. மொத்தம் 6 உள்ளன. - அட.. உண்மையில்தாங்க
திரும்ப படித்து கூட்டிப் பாருங்கள்

என்ன புரியவில்லையா?
நம் மூளை 'OF' என்ற வார்த்தையிலுள்ள 'F'ஐ கூட்டுவதில்லை.


இன்னும் மூளைக்கு வேலை
கேம்பரிட்ஜ் பல்கலை கழகத்திலிருந்து....
Olny srmat poelpe can raed tihs.
I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The
phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde
Uinervtisy, it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny
iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be
a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn
mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Amzanig huh?
yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! if you can raed tihs put yuor comemnt dwon !!

என்ன பார்க்கிறீர்கள்.
மூளை முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் கொண்டே படித்து விடும்.

நன்றி: ஷர்மி ரவி

Post Comment

Tuesday, 22 April 2008

இரண்டுமே அவள்தான்

எந்த ஒரு செயலையும் எவ்வித முன்முடிவுகளின்றி திறந்த மனதோடு அணுகும்போது அதிலுள்ள சாதக பாதக அம்சங்கள் இரண்டும் தெளிவாகும். இல்லையென்றால் நம் முன்முடிவுகளுக்கேற்பவே அச்செயல்கள் மாறித் தோற்றமளிக்கும்.

இப்போது கீழுள்ள முதல் படத்தை சில வினாடிகள் உற்றுப் பாருங்கள்.


.
.
.
.
.
.
.
.
.

பார்த்து விட்டீர்களா. இப்போது கீழேயுள்ள இரண்டாவது படத்தைப் பாருங்கள்.


இந்தப் பெண் ஆடம்பர உடையணிந்து காட்சியளிக்கிறாள். அவளுக்கு என்ன வயதிருக்கும்?.

எடுப்பான மூக்கும் அமைதியான தோற்றமும் உள்ள இனிமையான பெண். சுமார் 25 வயதிருக்கலாம் என்பீர்கள்.

நீங்கள் கூறியது தவறு என்கிறேன் நான்.


சந்தேகமிருந்தால் உங்கள் நண்பரை அல்லது மனைவியை அழைத்து கீழுள்ள மூன்றாவது படத்தை சில வினாடிகள் உற்று நோக்கச் செய்யுங்கள்.
.
.
.
.
.
.பின்னர் இரண்டாவது படத்தைப் பார்த்து அந்தப் படத்திலுள்ள பெண்ணுக்கு என்ன வயதிருக்கும் என்று கேட்டுப் பாருங்கள்.
.
.
.
எப்படி?

முதலில் நீங்கள் ஒன்றாவது படத்தை பார்த்திருந்தால் இரண்டாவது படம் குமரியாகத் தெரியும்.

முதலில் மூன்றாவது படத்தை பார்த்து விட்டு இரண்டாவது படத்தைப் பார்த்தால் வயதான பெண்ணாகத் தெரியும்.

வ.வா.சங்க இரண்டாமாண்டு போட்டியில் சேர்த்தாச்சு.

Post Comment

Wednesday, 19 March 2008

பெண்ணாக மாற எனக்கொரு வரம் கொடுதான் தினமும் ஆலுவலகம் சென்று பணி செய்வதும், தன் மனைவி தினமும் வீட்டிலேயே இருப்பதையும் பார்த்த ஒரு கணவனுக்கு மிகவும் எரிச்சலாயிருந்தது.

தனக்கு நேர்வதை அவள் பார்க்க வெண்டுமென்பதற்காக
'கடவுளே! நான் தினமும் வேலைக்குச் சென்று எட்டு மணி நேரங்கள் படாத பாடுபடுகிறேன். என் மனைவியோ எப்போதும் வீட்டிலேயே இருக்கிறாள். எனக்கு நேர்வதை அவள் அறிய வேண்டுமாகையால், ஒரே ஒரு நாளைக்கு மட்டும் அவள் நானாகவும், நான் அவளாகவும் மாற வேண்டும்' எனப் பிரார்த்தித்தார்.
கடவுளும் தன் மாறாத கருணையால் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார்.

அடுத்த நாள் காலை அவர் ஒரு பெண்ணாக விழித்து எழுந்தார்.

எழுந்தவுடன் தன்னுடைய துணைக்காக காலை உணவு தயார் செய்தார். குழந்தைகளை எழுப்பினார். அவர்களுடைய பள்ளிச்சீருடைகளை சரி செய்தார். பிள்ளைகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு விட்டு, மதிய உணவை பொதிந்து கொடுத்தார். அவர்களை தன் வண்டியில் அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தார்.

திரும்ப வீட்டுக்கு வந்து, உலர் சலவை செய்ய வேண்டிய துணிகளை சலவைக்காரனிடம் கொடுத்து வந்தார். திரும்பும் வழியில் வங்கியில் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்திவிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றார். திரும்ப வீட்டுக்கு வந்து வாங்கிய மளிகைகளை அதனதன் சாடிகளில் கொட்டி சரியாக அடுக்கி வைத்தார்.

வாங்கிய பொருட்களும் கொடுத்த பணமும், வங்கியில் செலுத்தப்பட்ட தொகை, வங்கி நிலுவை, கையிருப்பு எல்லாம் சரி பார்த்து கணக்குகளை குறித்து வைத்தார்.

பின்னர் வீட்டில் வளரும் பூனை செய்து வைத்திருந்த கழிவுகளை அகற்றி, துடைத்து சுத்தம் செய்து வைத்து விட்டு, வீட்டு நாயை குளிப்பாட்டினார்.

அப்போதே மணி மதியம் ஒன்று ஆகி விட்டிருந்தது. உடனே அவசரம் அவசரமாக படுக்கைகளை புரட்டி, சுத்தம் செய்து, ஒழுங்கு படுத்தி விட்டு, துணிகளை துவைத்து காயப் போட்டார். பெருக்க வேண்டிய இடங்களை பெருக்கி, துடைக்க வேண்டியவைகளை துடைத்து, வேக்குவம் செய்ய வேண்டியவற்றை செய்து, சமையறை தரையை மோப் செய்து விட்டார்.

பிள்ளைகளின் பள்ளிக்கூடம் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு, வீடு வரும் வரை அவர்களிடம் விவாதம் செய்து கொண்டு வந்தார். வீட்டில் பிள்ளைகளுக்கு பாலும் பிஸ்கட்டுகளும் கொடுத்து, சீருடையிலிருந்து சாதாரண உடைகளுக்கு மாற்றி, அவர்கள் தங்கள் வீட்டுப் பாடங்களை சிரமமின்றிச் செய்ய வசதி ஏற்படுத்தி வைத்தார்.

பின்னர் பிள்ளைகளுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே காய்ந்த துணிகளை இஸ்திரி செய்தார். அதற்குள் மணி நான்கரை ஆகி விட்டிருந்தது. உடனே உருளைக் கிழங்குகளை தோல் சீவி வைத்து, சலாடுக்கு வேண்டிய காய் கறிகளை நீர் விட்டு அலம்பி, கறித் துண்டுகளை நறுக்கி வைத்து விட்டு, இரவு உணவுக்காக புதிய பீன்ஸை உடைத்து நாரெடுத்து வைத்தார்.

இரவு உணவு தயாரித்து வைத்து, உண்டு முடித்த பின், பாத்திரங்களை கழுவி அடுக்கி விட்டு, சமையலறையை சுத்தம் செய்து விட்டு, இஸ்திரி செய்த துணிகளை அதனதன் இடத்தில் வைத்து விட்டு, பிள்ளைகளுக்கு மேல் கழுவி விட்டு அவர்களை படுக்கையில் உறங்கச் செய்தார். மணி இரவு ஒன்பதைத் தாண்டிய நிலையில் ஒரே அலுப்பாகவும்
உடம்பு அசதியாகவும் இருந்தது.

அன்றாட வேலைகள் முடிந்தும் முடியாத நிலையில் படுக்கைக்குச் சென்று, தன் துணைக்கு மன அமைதி ஏற்படும் வரையில், பள்ளியறைச்சுகம் அளித்துப் பெற்றார்.

அடுத்த நாள் காலை எழுந்து முதல் வேலையாக,
'என் இறைவனே! நான் என்ன மாதிரி நினைத்திருந்தேன்!. என் மனைவி வீட்டில் இருப்பதற்காக இப்படி பொறாமைப் பட்டு விட்டேனே!. தயவு செய்து எங்களை பழைய நிலைமையிலாக்கு!' எனப் பிரார்த்தித்தார்.

கடவுள் தன் அபரிமிதமான அறிவால் கூறினார்.
"மகனே!, நீ சரியான பாடம் படித்து விட்டாய். நான் பழைய மாதிரி உங்களை மாற்ற வேண்டும்தான். ஆனால் அதற்கு நீ இன்னும் ஒன்பது மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். நேற்றிரவு நீ கர்ப்பமடைந்து விட்டாய்."

நன்றி:இரவி சர்மி

Post Comment

Wednesday, 12 March 2008

குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி

அமெரிக்காவில் செக்ஸ் கல்வி இருப்பதைப் போல் நம் நாட்டில் கொண்டு வந்தால்தான் குழந்தைகள் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும். அதனால் செக்ஸ் குற்றங்கள் குறையும். ஒருவர் தொடும்போதே அந்த தொடுதலிலுள்ள வேற்றுமையை அறிய முடியும் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இன்றைய பிபிசி உலகச் செய்திகளில் சொன்ன செய்தியைப் பாருங்கள்.

அமெரிக்காவில் 14 முதல் 19 வயது வரையுள்ள சிறுமிகளில் நான்கில் ஒருவருக்கு செக்ஸ் தொடர்பால் வரும் நோய் (STD – Sexually transmitted disease) உள்ளதாம். அதிலும் குறிப்பாக இதே வயதுள்ள ஆப்ரிக்க அமெரிக்க பெண் குழந்தைகளில் 40 சதவிகிதமானவர்களுக்கு இவ்வாறான நோய் உள்ளதாகவும் சொன்னார்கள்.

நம்மைப் போலவே, “இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக” நியூயார்க் நகர மோண்டோஃப்யோர் மெடிக்கல் செண்டரின் (Adolescent Medicine Specialist) அடோலசென்ஸ் மெடிசின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்.எலிஸபெத் அல்டர்மேன் கூறுகிறார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு மையம் (US Centres for Disease Control & Prevention) சிகாகோ நகரில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி 838 பேரில் 26 சதவிகிதமெனில் அமெரிக்க முழுவதும் சுமார் முப்பது இலட்சம் சிறுமிகளுக்கு இங்ஙனம் நோய் உள்ளதாக தெரியப்படுத்துகிறார்கள்.

“நாட்டில் செக்ஸ் கல்வியின் மோசமான நிலைமையை இது பிரதிபலிப்பதாக” சொல்லும் செக்ஸ் கல்வி நிபுணர் நோரா கெல்பெரின் (sex education expert Nora Gelperin) “இந்த எண்ணிக்கைகள் மிகவும் ஆபத்தான நிலைமையை அறிவிப்பதாக”வும் சொல்கிறார்.

இதைவிட மேலாக,
அமெரிக்க ப்ளாண்ட் பேரண்ட்ஹூட் பெடரேஷன் (Planned Parenthood Federation) தலைவர் சிசிலி ரிச்சர்ட்ஸ் வருடத்துக்கு ஒன்றரை பில்லியன் டாலர்கள் “தவறான உறவுத்தடுப்பு தேசியக் கொள்கை”யெனும் பேரில் செலவிட்டும், நாம் தோல்வியையே சந்தித்திருக்கிறோம். அதற்கான விலையை இச்சிறுமிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இந்த அறிக்கை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் கூடுதலாக அறிய http://news.yahoo.com/s/ap/20080311/ap_on_he_me/teen_stds
போய் பார்க்கலாம்.

இன்னின்ன வழிகளைக் கையாண்ட பின், தவறான முறையில் உறவு கொண்டாலும் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொடுத்து தவறான உறவுகளை ஊக்குவிக்கவே செக்ஸ் கல்வி வாய்ப்பாக ஆகும்.

"குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி புகட்டும் அமெரிக்காவில் என்ன வாழ்ந்து விட்டது. அதை இங்கேயும் கொண்டு வந்து புரட்சி செய்ய" என்று யோசிக்க வேண்டிய நேரமிது. விழிக்க வேண்டியவர்கள் விழிக்க வேண்டுமே.

குழந்தைகளுடன் தவறான முறையில் நடப்பவர்களுக்கு கடுமையான தண்டணை கொடுப்பதன் மூலமே இத்தகைய குற்றங்களை களைய முடியும். வீணாக குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியைப் புகுத்தி அவர்களை பிஞ்சிலேயே பழுக்க வைக்காதிருப்பதே நலமாக இருக்கும்.

Post Comment