Wednesday, 5 November 2008

ஒரு நேர்முகத் தேர்வும், நண்பரும்

(சிறிது மஞ்சள். பிடிக்காதவர்கள் விலகவும்.)
ஒரு பெரிய பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.
வந்தவரிடம் அதிகாரி : இந்தியா எப்போது விடுதலையடைந்தது?
பதில்: வெகு நீண்ட நாட்களாக அதற்கான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் 1947ல் தான் பலன் கிடைத்தது.

அதிகாரி: அந்த விடுதலை யாரால் கிடைத்தது?
பதில்: அதற்காக பல பேர் இரவு பகல் பாராது உழைத்திருக்கின்றனர். அதில் யாராவது ஒருவர் பெயரைச் சொல்வது மற்றவர்களை அவமதிப்பதாக ஆகும்.

அதிகாரி : இந்தியா இன்னும் சிறந்த முறையில் முன்னேறாததற்கு நாட்டில் உலவும் இலஞ்ச இலாவண்யங்களே காரணம் எனற கருத்து சரியானதா?
பதில்: இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகளுக்குப் பிறகே சரியாகச் சொல்ல இயலும்.

அதிகாரி: உங்கள் பதில்கள் நிறைவளிக்கின்றன. நாங்கள் பின்னர் உங்களுக்கு விவரம் தெரிவிப்போம். எனினும் இதே கேள்வியையே மற்றவர்களிடம் நாங்கள் கேட்க நினைப்பதால் இந்தக் கேள்விகளை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம்.

தேர்வுக்கு வந்திருந்த மற்றவர்கள், வெளியில் வந்தவரிடம் கேட்டபோது ‘சுலபமான கேள்விகள்தான். எல்லோரும் பதில் சொல்ல முடியும்’ என்று சொல்லி நழுவி விட்டார்.

நம் நண்பர் அவரை வெளியில் சென்று பிடித்து கேள்விகளைப் பற்றி கேட்டபோது ‘நான் அவர்களிடம் கேள்விகளை யாருக்கும் சொல்ல மாட்டேன் என் வாக்குக் கொடுத்திருக்கிறேன்’ என்று சொன்னார்.

'அதனாலென்ன. நீங்கள் சொன்ன பதில்களை மட்டும் சொல்லுங்கள்' என நம் நண்பர் நச்சரிக்கவும் வேறு வழியில்லாமல் தான் சொன்ன பதில்களை மட்டும் சொல்லி விட்டுப் போனார்.

நம் நண்பரின் முறை வந்தது.
நண்பரிடம் அதிகாரி: ஒரு பெரிய பணிக்கு அனுப்பியுள்ள உங்கள் விபரங்களை தெளிவற்ற கையெழுத்துகளால் எழுதி இருக்கின்றீர்களே. நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
நண்பர்: வெகு நீண்ட நாட்களாக அதற்கான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் 1947ல் தான் பலன் கிடைத்தது.

அதிகாரி: என்ன உளறுகிறீர்கள். இதிலே வேறு வருடம் குறிக்கப் பட்டிருக்கிறதே. உங்கள் தந்தையார் பெயரென்ன?
நண்பர்: அதற்காக பல பேர் இரவு பகல் பாராது உழைத்திருக்கின்றனர். அதில் யாராவது ஒருவர் பெயரைச் சொல்வது மற்றவர்களை அவமதிப்பதாக ஆகும்.

அதிகாரி: உங்களுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா?
நண்பர்: இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகளுக்குப் பிறகே சரியாகச் சொல்ல இயலும்.

Post Comment

10 comments:

கோவி.கண்ணன் said...

எதோ ஒரு படத்தில் நடிகர் கருணாவின் காமடி சீனில் வரும் இவைகள் !

நீங்கள் எங்கே பிடிச்சிங்க ?

சுல்தான் said...

//நீங்கள் எங்கே பிடிச்சிங்க?//
இணையத்திலே மேயும்போது ஆங்கிலத்தில் படித்ததை தமிழில். அவரும் அங்கேதான் பிடித்திருப்பாரோ

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

நல்லாயிருந்துச்சி..

ஹி ஹி....

வால்பையன் said...

கருணாவின் நடிப்பில் கூட இவ்வளவு காமெடி இல்லை கோவிஜி
இது நல்லா இருக்கு

நாமக்கல் சிபி said...

:))

சென்ஷி said...

:))

ஏற்கனவே மாறுபட்ட முறையில் படித்திருக்கின்றேன். எனினும் புதுப்பித்தமைக்கு நன்றி :)

மின்னுது மின்னல் said...

:)

nalla kameti :)

கடைசி பக்கம் said...

dear sultan,

looks very old and said as sardarji.

But hilarious
:-))

இளைய பல்லவன் said...

நல்லயிருக்கு சுல்தான் :-))))

tamilraja said...

நீங்கள் எங்கே பிடிச்சிங்க?//
இணையத்திலே மேயும்போது ஆங்கிலத்தில் படித்ததை தமிழில். அவரும் அங்கேதான் பிடித்திருப்பாரோ//
/
/
/ உண்மையில் என் இனிய நண்பர் அசோக் பணியாற்றிய ,தில்ராஜி தயாரித்த,எனது நண்பர் வி,வி.வினாயக் அவர்கள் இயக்கிய
"தில்" என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்றது முதலில்.

அதன் பின் அந்த படத்தை தமிழில் குத்து என்று சிம்புவை வைத்து தமிழில் இயக்கிய பொது தெலுங்கு படத்தில் இடம் பெற்ற காட்சியை அப்படியே வைத்தார்கள் அவ்வளவுதான் .

சுல்தான் நீங்கள் எழுதியதுபோல் இல்லாமல் கொஞ்சம் அதிகமாக அது இருக்கும்.

இது நன்றாக இருக்கிறது நிறைய பதியுங்கள்!