Wednesday, 31 December 2008

கொடுங்கோலர்களின் தகவலுக்கு மறுப்பு

காஸாவில் தற்போது யூதர்களால் நடத்தப்படும் இனப்படுகொலையை "ஹமாஸ்க்கு எதிரான போர்" என வர்ணிப்பதோடு, இந்தப் படுகொலைகள் 'பாலஸ்தீனர்களால் இஸரேலில் ஏவப்பட்ட ராக்கெட்களுக்கான பதிலடி' என்றும் யூதர்களும் அவர்களின் கைக்கூலிகளும் சொல்லி வருகின்றனர்.

இது மிகப்பெரிய பொய்.

காஸாவில் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரமாய் உள்ள போக்குவரத்து பாதையில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள தடைகளை நீக்கிவிட்டால் 'நாங்கள் துப்பாக்கி, எறிகணைத் தாக்குதல்களை முற்றாக நிறுத்தி விடுவோம்' என ஹமாஸ் பலமுறை திரும்ப திரும்ப அறிவித்தும், இஸ்ரேல் தடைகளை அகற்ற மறுக்கிறது. உயிர் வாழ தடை ஏற்படுத்தப் பட்டு, மனைவி, மக்கள், நண்பர்கள் உணவுக்காக தவிக்கும்போது வழியற்றவன் என்ன செய்ய முடியும்?

இஸ்ரேல் காஸாவில் தனது ஆக்கிரமிப்பை முடித்துக் கொண்டு விட்டதாக வெறுப்பூட்டும் வாய் விளம்பரங்களை திரும்பத் திரும்ப உலகத்தாரிடம் சொல்கிறது. அது உண்மைதான் எனில், காஸாவின் வான் வெளியும், காஸாவின் நீர் பரப்பும், கடற்கரைகளும், காஸாவின் எல்லைகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஏன்? காஸாவின் வாழ்க்கை முறை முழுமையும் இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்ன நியாயம்?

சோற்றுக்கு வழி தேடி ஒவ்வொரு வேளையும் திண்டாடித் திரியும் மக்களைக் கொண்ட காஸாவின் உட்புறங்களில் தயாரிக்கப்படும் இவ்வகை எறிகணைகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இயலாத வெறும் சப்தம் எழுப்பும் புஸ்வானங்கள்தான் என்பதை உலகமே அறிந்துதான் இருக்கிறது. இந்நிலையில் காஸாவில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு, இஸ்ரேல் இரு வழிகளைத்தான் திறந்துள்ளது. ஒன்று உணவுக்கு வழியின்றி அழிதல் மற்றொன்று இஸ்ரேலிய போர் ஆயுதங்களால் அழிதல். இந்த எறிகணைகள், இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள போக்குவரத்து தடைகளை நீக்க உலகத்தை நோக்கி எழுப்பப்படும் நீதியை வேண்டிய ஒலி மட்டுமே.

ஆறு மாத காலமாக இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலிருந்த போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் இஸ்ரேல் 49 பாலஸ்தீனியர்களை கொன்றொழித்தது. ஹமாஸினால் இஸ்ரேலில் எவருமே கொல்லப்படவில்லை. இதற்கு இஸ்ரேல் எங்ஙனம் பதில் சொல்லும்? யார் பழி தீர்க்கப்பட வேண்டியவர்கள்?.

(டிசம்பர் 29ம் நாள் பெல்ஹோஸா என்ற ஐந்து பேர் கொண்ட பாலஸ்தீனக் குடும்பத்தின் மூன்று குழந்தைகள் யூதக் கொடுங்கோலர்களின் குண்டுகளுக்குப்
பலியாகி, புதைக்கத் தயாராக வடக்கு காஸாவில் அமைந்துள்ள கமால் எட்வன் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள காட்சி)


இது ஹமாஸிற்கு எதிரான போர் என்பது பெரும் பொய்யே தவிர வேறில்லை. இது நாஜிகளைப் போல, ஓர் இனத்தை பூண்டோடு நிர்மூலமாக்கும் எண்ணத்தோடு திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலைப் போர். நாஜிகளால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட யூத குலம், தாமே நாஜிகளாக மாறிப்போனதுதான் அவலம்.

ஹிட்லரின் எண்ணம் கொண்ட, டெல்அவிவ் நரகத்து போர்க் கிரிமினல்கள் சொல்வது போல் இது ஹமாஸிற்கு எதிரான போராக மட்டும் இருந்தால் கடைத் தெருக்களும், மருந்துக் கூடங்களும், கல்லூரிக் கட்டிடங்களும், தனியார் குடியிருப்புகளும், பள்ளிவாயில்களும், கலாச்சார மையங்களும், சாலைகள், வியாபாரத் தளங்கள் போன்றவைகளும் குறி வைத்துத் தகர்க்கப்படுவதின் காரணமென்ன?

இன்று ஒரு நேர்மையான யூத ரப்பி கூட "இஸ்ரேல் காஸாவில் நடத்தும் தற்போதைய போர் ஒரு இன அழிப்புக் கொடூரம்" என்றே சொல்கிறார்.

Post Comment

6 comments:

படகு said...

neocon என்பது பற்றி கேட்டு இருக்கின்றீர்களா?
யூதத் தலைவர்கள் எல்லோரும் அதிலுள்ளவர்களே.

சுல்தான் said...

அகராதியிலேயே neocon இல்லையே? தேடிப்பார்க்கிறேன். அல்லது தெரிந்தவர்கள் யாராவது பின்னூட்டப் பெட்டிக்குள் வருகிறார்களா என்று பார்ப்போம்.

Mahesh said...

இஸ்ரேலுக்கு பாலஸ்தீனம் மீது போர் தொடுக்க காரணமே வேண்டியதில்லை. அவன் தும்மினான்... இவன் இருமினான்... இந்த காரணங்களே போதும். உலகப் போலீஸ் என்று கோமாளித்தனம் செய்யும் அமெரிக்கா தற்காலிக குருடாகி விடும். ஜெனீவா போர் ஒப்பந்தங்கள், நியதிகள் எல்லாம் காற்றில் பறக்க நடக்கும் இந்தப் போரை மனித நேயம் என்ற ஒரே ஒரு காரணத்துக்காகவாவது நிறுத்த வேண்டும்.

அதற்கான மனநிலையை அல்லா உண்டாக்குவாராக !!

ஜீவன் said...

முடிவில் என்ன இருக்கும் . வெறும் நிலபரப்பும் அதில் ரத்தம் படிந்த கரைகளும் தானா ...

சுல்தான் உங்கள் எழுத்துகள் தெளிவாகவும் ,உணர்ச்சிகளுடனும் உள்ளது. வணக்கம்

சுல்தான் said...

//உலகப் போலீஸ் என்று கோமாளித்தனம் செய்யும் அமெரிக்கா தற்காலிக குருடாகி விடும்//
நன்றி மகேஷ்.
ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர தூதருக்கு, இது விஷயமாக, சமீபத்தில் ஒபாமா எழுதிய கடிதத்தை படிக்க நேர்ந்தது. எவர் வந்தாலும் அமெரிக்காவின் போக்கில் பெரிய மாறுதல்கள் ஏதும் உடன் வந்த விடப் போவதில்லை.

சுல்தான் said...

//முடிவில் என்ன இருக்கும் . வெறும் நிலபரப்பும் அதில் ரத்தம் படிந்த கரைகளும் தானா ... //

நன்றி ஜீவன்.

இரத்தக் கரைகள் சுத்தப் படுத்தப்பட்டு யூதர்களுக்கான புதுக் குடியிருப்புகள் உருவாகி இருக்கலாம்.