Monday, 22 December 2008

காவிகள் பகையுணர்வின் வரலாறு

ஹிந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள் இந்நாடு முழுதும் பற்பல இடங்களில் 'சரஸ்வதி சிசு மந்திர்' என்று பெயரிலும் 'வித்ய பாரதி பள்ளி' என்ற பெயரிலும் பள்ளிகள் நடத்தி வருகிறார்கள் என்பதை முதலில் நான் அறிந்திருக்கவில்லை. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள் பணிபுரிவதுடன் இலட்சக்கணக்கில் மாணவர்களும் பயின்று வருகின்றனர். அவர்கள் தங்கள் பாடபுத்தகங்களை அச்சிட்டுக் கொள்ள சொந்தமாக வெளியீட்டு நிறுவனமும் வைத்துள்ளனர்.

நமது நாட்டில் எவ்வளவு அதிகம் முடியுமோ அத்துனை பள்ளிகளும் பாடப் புத்தகங்களும் தேவையென்பதால் இப்பள்ளிகளைப் பற்றி அறிந்த போது நான் மகிழ்ந்தேன். ஆனால் அவர்கள் இந்தப் பள்ளிகளில் என்ன நடத்துகிறார்கள் என அறிந்த போது கடுமையான ஏமாற்றமடைந்தேன். நம்ப வைக்கப்படுகின்ற வெறும் வரலாற்றுக் கட்டுக்கதைகள். அந்தக் கட்டுக் கதைகளின் மூலம் நம் பழங்காலத்தைப் பற்றி அதிக மன உறுதியும், அதே சமயம் நம் நாட்டில் நம்மைப்போல் வரலாறு இல்லாத, ஆனால் இந்தியராகப் பிறந்த, முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிரான அவநம்பிக்கையையும் பகையுணர்வையும் வளர்த்தெடுப்பதையுமே செய்கின்றார்கள்.

முதன் முதலாக, அவர்கள் கல்வித் திட்டத்தில், பாரத வரலாறு ஆரிய வருகையுடன்தான் தொடங்கியதாக நம்ப வைக்கப்படுகிறது. நமது நாட்டின் தென்பகுதியில் ஆரியர்கள் முதன் முதலாக குடியேறும் முன்னரே இந்நாட்டின் பூர்விகக் குடிகளான திராவிடர்கள் வாழ்ந்திருந்த வரலாறு மறைக்கப்டுகிறது.

யூத, ஜிப்சி இனத்தவரை கொட்டில்களில் அடைத்து, நச்சுக் காற்றை செலுத்திக் கொன்று, செமிட்டிக் இனத்தவரின் ஆரிய ஜெர்மனியை உருவாக்கிய அடால்ப் ஹிட்லர்தான் அவர்களது முன்மாதிரி. ஆனால் தற்போதைய ஜெர்மானியர்களே ஹிட்லரை பேய் அவதாரம் (Devil-incarnate) என எண்ணுவதோடு அவனை நினைந்து வெட்கித் தலை குனிகின்றார்கள். ஆர் எஸ் எஸ், சிவசேனைத் தலைவர்களுக்கோ அவன் புகழுக்குரிய உதாரண புருஷன். இணையத்தில் உலவும் சிலவற்றுக்கு யூதர்களும் முன்மாதிரிகள் அவர்களைக் கொன்ற ஹிட்லரும் முன்மாதிரி. என்ன கொடுமை!.

அவர்களது பாடத் திட்டத்தின்படி பவுத்தமும் அதை விரிவு படுத்தி அஹிம்சையை போதித்த பேரரசர் அசோகனும் கொடூரமான நாசக்காரர்களாம். இவர்களால்தான் நம் இயல்பான போர்க்குணம் களவு போய் நாம் கோழைகளானோமாம். இதனால்தான் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் கொண்டு வந்த முஸ்லீம் படைகளை நாம் எதிர்க்க முடியாமல் போனோமாம் (மனநோய் பீடித்ததைப்போல் உளரும் கயவர்கள்). ஆர் எஸ் எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவர் கூற்றின்படி அசோகனும் பவுத்தமும் சீறி வரும் நச்சுப் பாம்புகளாம்.

அவர்களது பாடப்புத்தகத்திலிருந்து சில உதாரணங்கள்:
1.முஸ்லீம்கள் மெக்காவில் அமைக்கப் பட்டிருக்கிற கருப்புக் கல்லாகிய சிவலிங்கத்தைத் தரிசனம் செய்ய பெரும் விருப்பம் கொண்டவர்கள். அட பைத்தியங்களே!.
2.டெல்லியில் கட்டப்பட்டுள்ள குதுப்மினார், பேரரசர் சமுத்திர குப்தரால் கட்டப்பட்ட விஷ்ணு ஸ்தம்பா ஆகும். - அதன்மேல் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டு அழகு படுத்தப் பட்டுள்ளதைப் பற்றி ஏதும் சொல்ல மாட்டார்கள்.
3.பாபரி மஸ்ஜித் எப்போதும் ஒரு பள்ளிவாயிலாகவே இருந்ததில்லை ஏனெனில் அங்கு எப்போதுமே தொழுகை நடைபெற்றதில்லை என்று வலியுறுத்துவார்கள். - இடிப்பதற்கு முன்னுள்ள அதன் நிழற்படத்தைப் பார்த்தாலே அதன் மூன்று கும்பாவும் மெக்கா நோக்கியுள்ள அதன் சுவர்களும் அது பள்ளிவாயில்தான் எனத் தெளிவு படுத்தும்.

இணையத்தில் பிதற்றித் திரியும் இத்தயைவர்களைக் கண்டு இனி அனுதாபம் கொள்ள முயற்சியுங்கள். அவர்கள் எங்கு கல்வி பயின்றனர் என்று அறிந்து கொள்ளுங்கள். சிறு வயதிலிருந்தே இவ்வாறு மூளைச்சலவை செய்யப் பட்டவர்களால் என்ன செய்ய இயலும். பாவம்.

ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்ஸனன் நவம்பர் 2001ல் வெளியிட்ட கருத்தில் சிறந்த வரலாற்றாய்வாளர்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிரான ஐரோப்பிய இந்தியர்கள் என்றார். பழங்காலத்து இந்தியாவில் அணு சக்தியைப் பற்றிய அறிவிருந்தது என்பதாகவும் பரத்வாஜ முனிவரும் இராஜ போஜ் முனிவரும் ஆகாய விமானம் செய்வதைப் பற்றி விளக்கி இருப்பதோடு எத்தகைய விமானங்கள் எவ்வளவு உயரத்தில் பறக்கும் என்பது பற்றியெல்லாம் விளக்கி இருக்கின்றார்களாம். இவ்வாறு புனையப்பட்ட கட்டுக்கதைகள் யாவும் வாஜ்பாயியின் பாஜக ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியின் உத்தரவின்படி வரலாறாக பதிவிக்கப்பட்டது. இந்த ஜோஷிதான் பல்கலை கழகங்களில் ஜோஸியத்தை தனிப்பாடப் பிரிவாக புகுத்தியவர். ஆனால் இவர் ஜாதகப்படி வெற்றிதான் என வலியுறுத்தப்பட்ட தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் பாடங்களின்படி இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியின் பங்கு குறைவாக்கப்பட்டு வீர்சாவர்க்கரின் பங்கு உயர்த்திக் காட்டப்படுகிறது. மகாத்மா காந்தி கொலை வழக்கில் technical அடிப்படைகளில் இவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும் பின்னால் நீதிபதி கபூர் கமிஷனால் இவர்தான் கொலைக்கு முக்கிய தூண்டுகோலாக இருந்தவர் எனக் தெளிவுபடுத்தப் பட்டிருந்தார். பாஜக ஆட்சியின்போது இவர் சிலைதான் நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டது.

நான் ஒரு பக்கச் சார்பாக பேசுவதாக உஙகளுக்குத தோன்றினால் JNU பல்ககைழகத்தின் முக்கிய மூன்று வரலாற்று பேராசிரியர்கள் ஆதித்யா முகர்ஜி, ம்ருதுலா முகர்ஜி, சுச்சிதா மஹாஜன் (Aditya Mukherjee, Mridula Mukherjee and Sucheta Mahajan) ஆகியவர்கள் தொகுத்த ஆர் எஸ் எஸ் பள்ளி பாடப்புத்தகமும் மகாத்மா காந்தியின் கொலையும் [booklet — RSS School Texts and the Murder of Mahatma Gandhi (Sage)] என்ற வெறும் 80 பக்கங்களுள்ள சிற்றேட்டை பார்வையிடுங்கள். அதில் அவர்கள் எடுத்தாண்ட ஒவ்வொரு மேற்கோளின் நம்பகத்தன்மையையும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தி உள்ளனர்.

பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் இத்தகையை நஞ்சை விதைத்து, மற்றவர்களுக்கெதிராக பகைவெறியை ஊட்டி வளர்ப்பது நாட்டு நலனுக்கு உகந்ததா?

ஒற்றுமையுள்ள இந்தியா என்ற நம் இன்பக் கனவுகளுக்கு எதிராக வன்முறையையும் உள்நாட்டுப் போரையும் நம் சந்ததிகளின் மூளையில் திணிக்க அனுமதிக்கலாமா? யோசியுங்கள்.

ஏறக்குறைய இந்தியாவில் நடைபெறும் எல்லா தீவிரவாத நடவடிக்கைகளிலும் இத்தகைய மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் பங்கு பற்றி சிந்திக்க வேண்டாமா?

இத்தகைய எண்ண ஓட்டம் கொண்டவர்களையும், அதிலேயே தீவிரமானவர்களையும்தான் பாஜக ஆட்சியின் போது எல்லா முக்கிய நிர்வாக பொறுப்புகளிலும பதவிகளிலும் உள் நுழைத்து வைத்தார்கள். இவர்களிடமிருந்து நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியுமா? இதற்கான நல்லதொரு தீர்வைத் தேடி ஆக்கபூர்வமான வழியில் பயணிக்க வேண்டிய நேரமிது. குறைந்தது அவ்வழியில் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லது நாட்டிற்கு நல்லதை விழைபவர்களுக்கான அவசியம்.

(அமிர்தசரஸ் KJS அலுவாலியா என்பவரின் ஆக்கத்தைத் தழுவி எழுதியுள்ளேன்

Post Comment

7 comments:

சுல்தான் said...

ஆ.ஞானசேகரன் said...

புதிய செய்திகள் நன்றி நண்பரே

சனி, டிசம்பர் 13, 2008 11:58:00
மோகன் கந்தசாமி said...

தனியார் பள்ளிகளில் பாடப் புத்தக உள்ளடக்கத்தை பள்ளியே நிர்ணயிக்க உரிமை உள்ளதா?

சனி, டிசம்பர் 13, 2008 1:26:00 PM
சுல்தான் said...

//புதிய செய்திகள் நன்றி நண்பரே//
வருகைக்கு நன்றி ஞானசேகரன்.

//தனியார் பள்ளிகளில் பாடப் புத்தக உள்ளடக்கத்தை பள்ளியே நிர்ணயிக்க உரிமை உள்ளதா?//
நன்றி மோகன் கந்தசாமி. தெரிந்தவர்கள் யாராவது சொல்கிறார்களா பார்ப்போம்.

அபு ஜுலைஹா said...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
உங்கள் கருத்துகளை
www.talkvision.blogspot.com

"கருத்து களத்தில்" பதியளாம் ! தங்களுடைய இணைப்பில் இணைத்துக்கொள்ளாமே!

sundar said...

தங்களின் ஆதங்கம் புரிகிறது, வேதனையும் அளிக்கிறது. அவர்களும் அவர்களின் முன்னோர்களால் மூளை சலவை செய்யபட்டிருகிரர்கள் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். நமது நாட்டின் இந்த அவல நிலையை நினைத்து தினம் அழுது கொண்டிருக்கிறேன்.

ஆனால் என்றாவது ஒரு நாள் அனைத்து இந்தியனும் - இந்துக்களும் , முஸ்லீம் மக்களும், கிருத்துவர்களும் எங்கள் உறவுகள் என்று கூறுவதை கேட்போம். நம்பிக்கை இழக்காதிர்கள்.

பள்ளிகளின் தவறான அணுகுமுறைக்கும், உங்கள் மனது வேதனை அடைந்ததிற்கும் - மன்னிப்பு கோருகிறேன் ( இந்தியர்களின் சார்பாக )

ஒற்றுமையான சமுதாயம் படைப்போம்

- சுந்தர்

உதயம் said...

இஸ்லாமிய மதரஸாக்கள் தான் தீவிரவாதத்தின் வேர் என்று ஒரு பொய்யான புனைவை கட்டமைத்து வரும் இந்துத்துவ பயங்கரவாதிகள் அதற்கான ஆதாரத்தை இன்றளவும் தர முடியவில்லை. ஆனால் இவர்களின் பயங்கரவாத பயிற்சிக்கூடமே இவர்களால் நடத்தப்படும் பாடசலைகள் தான். இது எவ்வகையான தீங்குகளை எதிர்வரும் காலங்களில் நிகழ்த்தும் என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாம் இருந்து வருவது எதிர்கால இந்திய சமூகத்தின் நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிப்பதாகவே அமையும்.

சுல்தான் said...

//ஒற்றுமையான சமுதாயம் படைப்போம்.//
//இந்துக்களும் , முஸ்லீம் மக்களும், கிருத்துவர்களும் எங்கள் உறவுகள் என்று கூறுவதை கேட்போம்//
உங்கள் எண்ண்ங்கள் இனியவை சுந்தர். வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

//இவர்களின் பயங்கரவாத பயிற்சிக்கூடமே இவர்களால் நடத்தப்படும் பாடசலைகள் தான். இது எவ்வகையான தீங்குகளை எதிர்வரும் காலங்களில் நிகழ்த்தும் என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாம் இருந்து வருவது எதிர்கால இந்திய சமூகத்தின் நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிப்பதாகவே அமையும்.//
இது பற்றிய விழிப்புணர்வை இன்னும் விரிவாக மக்கள் மத்தியில் எடுத்துச் செ/சொல்லுதல் அவசியமானது என்பதை எல்லோரும் உணர வேண்டும். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி உதயம்.

Anonymous said...

பாரதீய ஜனதா ஆட்சி மத்தியில் இருந்தபோதும் சரி, சில மாநிலங்களில் ஆட்சியில் இருந்தபோதும் சரி, சாதனைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இருந்ததில்லை. அவர்கள் செய்தது எல்லாம் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டை எப்படி காவி மயமாக்குவது என்ற சிந்தனையில்தான் இருந்தது.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவிருந்த முரளி மனோகர் ஜோஷி, கல்வித் துறையை பச்சையாகக் காவி மயமாக்கிடக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்.

பல்கலைக்கழகங்களில் சோதிடத்தைக் கட்டாயப்படுத்தினார் - வேதக் கணிதம் என்ற அறிவியலுக்கு முரணானவற்றை மாணவர்கள் மூளையில் திணிக்க முயற்சி செய்தார்.

வரலாற்றுக் குழுவில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகத் தட்டிப் பார்த்துத் தேர்வு செய்து நியமனம் செய்தார். தவறான வரலாறுகளை அரசு செலவில் எழுதிடத் தூண்டினார்.

திராவிட நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகம் என்பது ஆரிய நாகரிகமே என்று சாதிக்க கணினியைப் பயன்படுத்தி எருதினைக் குதிரையாக்கிக் காட்டும் மோசடி வேலைகளில் ஈடுபட்டார்.

ஆர்.எஸ்.எஸ். கல்வியாளர் ஒருவரைக் கொண்டு பாடத் திட்டம் ஒன்றை வகுத்து, அதனைச் செயல்படுத்தத் திட்டமிட்டனர்; சரஸ்வதி வந்தனா என்ற ஒன்றை கடவுள் வாழ்த்தாகப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த முயன்று தோற்றனர்.

எந்த அளவுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக விருந்த முரளிமனோகர் ஜோஷி ஆரிய பார்ப்பன வெறி பிடித்தவராக இருந்தார் என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதும்.

திராவிடப் பல்கலைக்கழகத்தின் தோற்றுநரான பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் திராவிடக் கலைக்களஞ்சியத்தை (என்சைக்ளோபீடியா) நேரில் அளித்தபோது அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி என்ன சொன்னார் தெரியுமா?

இந்தத் திராவிட என்ற சொல்லை நீக்கலாமே என்றாராம். அதற்குப் பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் தேசிய கீதத்தில் உள்ள திராவிட என்ற சொல்லை நீக்கிவிட்டால், நானும் நீக்கி விடுகிறேன் என்று அறிவார்ந்த பதிலை நேருக்கு நேர் அளித்து மூக்கை வெட்டினார்.

அதேபோல இராணுவத்துறை உள்பட பல துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குப் பதவிகள், பணிகள் தங்கும் தடையின்றி அளிக்கப்பட்டன. அதன் விளைவுதான் மும்பை - மாலேகாவ் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் ஆகும். முன்னாள் இராணுவத்தினரும், இந்நாள் இராணுவ அதிகாரியும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்குப் பயிற்சி கொடுத்த தகவலும், அவர்கள் அளித்த திட்டத்தின்படிதான் அந்தக் குண்டு வெடிப்பு நடந்தது என்கிற பூனைக்குட்டியும் வெளியில் வந்து விட்டதே!

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி குஜராத்தில் நரேந்திர மோடி நரவேட்டை ஆடிய கொடுமையையும் நினைத்துப் பார்க்கவேண்டும். உச்சநீதிமன்றமே நீரோ மன்னன் என்று அவருக்குப் பட்டம் சூட்டிய பின்னர் வேறு எதையும் கூறத் தேவையில்லையே!

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் கருதும் இந்துத் துவாவைத் திணித்தது ஒருபுறம் இருந்தால், நாட்டு நலனில், மக்கள் வளர்ச்சியில் அவர்கள் சாதித்தது என்ன என்பதும் குறிப்பிடத்தக்க வகையில் ஏதும் கிடையாது.

அவர்களது நிர்வாகத்தின் இலட்சணத்துக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு இதோ:

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றது. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த வசுந்தராராஜே முதலமைச்சராக இருந்தார். அவர் பயணம் செய்வதற்காக ரூ.20 கோடி செலவில் இத்தாலியிலிருந்து ஹெலிகாப்டர் ஒன்று வாங்கப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அந்த ஹெலிகாப்டரை ஓட்டும் அனுபவம் உள்ளவர்கள் இந்தியாவில் கிடையாது. இதுதான் பா.ஜ.க. ஆட்சி நிருவாகத்தின் உச்சக்கட்டம்.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், முதலமைச்சர் வசுந்தராராஜே தான் பயணம் செய்ய வாடகைக்கு வேறு ஹெலிகாப்டரைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

மக்கள் பணம் என்றால் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா முதலமைச்சருக்கு அவ்வளவு அலட்சியம் என்பதல்லாமல் வேறு என்ன?

மத்திய தணிக்கைத்துறை இதனை அம்பலப்படுத்திவிட்டது. இது பனிப்பாறையின் ஒரு முனைதான்.

தோண்டத்தோண்ட பாறைகளே வெளிவந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.


-------------------- நன்றி: "விடுதலை" 21-1-2009

சுல்தான் said...

விடுதலைக்கும் அவர்களின் ஆக்கத்தை இங்கே மறுமொழியாக எடுத்து இட்ட அனானிக்கும் மிக்க நன்றி.