தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும் தினமும் நிகழும் மிருகத்தன நிகழ்வுகளின் படங்களைக் காணும் போது, நாம் இருபத்தோறாம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என நினைக்கத் தோன்றுகிறது. குழந்தைகளும் முதியவர்களும் அப்பாவிகளும் இரக்கமற்ற வகையில் குரூரமாக கொல்லப் படுகிறார்கள்.
கடைத் தெருக்கள், மருந்துக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிக் கட்டிடங்கள், தனியார் குடியிருப்புகள், பள்ளிவாயில்கள், கலாச்சார மையங்கள், சாலைகள், வியாபாரத் தலங்கள், போன்ற மக்கள் கூடுமிடங்கள் குறி வைத்து தகர்க்கப் படுவதை உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
எப்போதும் போல் அரபு நாடுகள் மவுனியாகி விட்டன. இந்த முடியாட்சி நாடுகள் அடுத்த முஸ்லீம் நாட்டில் நடக்கும் இனப்படுகொலையை, மனித உரிமை என்றால் என்னவென்றே உணராமல் வேடிக்கை பார்க்கின்றன.
மனித உரிமைக் காப்பதையே முழுநேரத் தொழிலாக(?)க் கொண்ட ஐரோப்பிய நாடுகள், நடக்கும் நிகழ்வுகளிலிருந்து தம் கண்களை திருப்பிக் கொண்டு ஏதுமே நடக்காதது போல் செயல்படுகின்றனர்.
நாளை அமெரிக்காவை பொறுப்பேற்க போகும் பாரக் ஒபாமாவும் மவுனம். சுதந்திரம், மனித உரிமை முதலியவற்றின் முதல் எதிரியான தற்போதைய அதிபர் போல இவரும் அதே அமெரிக்க பாராம்பர்யத்தை பின்பற்றுபவர்தானோ? வெள்ளை மாளிகையில் வெள்ளைத் தோலுக்குப் பதிலாக கருத்த தோலுள்ளவர் ஆனால் உள்ளங்கள் கருத்தவைதான். மாறப் போவதில்லை.
காஸாவில் இத்துணை அப்பாவிகளின் மரணத்துக்கும் காரணமாகிப்போன ஹமாஸ் போராளிகள் நிலத்தடி சுரங்கங்களில். இந்த மரணங்களில் ஹமாஸூக்கும் பொறுப்பிருப்பதை அவர்கள் உணர்கிறார்களா? அவர்களின் செயல்களுக்குரிய விலையை இந்த அப்பாவிகள் தருகின்றனரே. இது உண்மையான அவமானமில்லையா?
இஸ்ரேலுக்கு தனதான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அக்காரணங்கள் அப்பாவிகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது. தன்னுடைய நிலப்பரப்பை, உரிமையைக் காத்துக் கொள்ள நாடுகளுக்கிடையில் போர் மூளலாம். அவை இரு நாட்டு இராணுவ கேந்திரங்களை, படைகளை, தளவாடங்களை மட்டுமே அழிப்பதாக இருக்க வேண்டுமேயொழிய, மக்களின் அன்றாட புழங்குமிடங்களை குறி வைத்து தகர்ப்பதாக இருக்கக் கூடாது. குழந்தைகளை, முதியவர்களை, அப்பாவிகளை குறி வைத்துத் தாக்கும் இஸ்ரேலியத்தனம் மன்னிக்க முடியாதது.
இதுபோன்ற இரக்கமற்ற தாக்குதலை இஸ்ரேலின் வெளியில் வாழும் ஒரு நல்ல மனதுடைய யூதரால் கூட ஏற்றுக் கொள்ள இயலாது.
காஸாவில் இத்தனை நடக்கின்ற போதும் மத்திய கிழக்கலுள்ள அண்டை முஸ்லீம் நாடுகளான சிரியா, சவுதி அரேபியா, ஜோர்டான், எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் முதலிய அனைத்தும் ஊமைகளாய். துருக்கியின் தய்யிப் எர்டோகன், லிபிய அதிபர் முஅம்மர் அல் கடாபி, ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் போன்றவர்கள் மட்டும் தங்களின் பலத்த எதிர்ப்பை உலக அரங்கில் பதிவு செய்தது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.
சில நாடுகளில் மக்களின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட போதிலும், மேற்கத்திய நாடுகள் சுதந்திரம் மற்றும் மனித உரிமைக் கோட்பாடுகளில் தங்களின் இரட்டை வேடத்தை எப்போதும் போல் அப்பட்டமாக்கியுள்ளன.
பொது மக்களும், குழந்தைகளும் முதியவர்களும் காஸாவில் கொல்லப்படுவதை இன்று வேடிக்கை பார்க்கும் எந்த நாட்டுத் தலைவருக்கும் சுதந்திரம், மனித உரிமை என்ற பேச்செடுக்க இனி எந்த தகுதியோ அதிகாரமோ இல்லவே இல்லை.
15 comments:
நிச்சயமாகவே பரிதாபமான விஷயம். கேள்வியெழுப்ப மறுக்கும்; இரு வேடமிடும் அனைத்து நாடுகளும், நாட்டுத்தலைவர்களும் கடும் கண்டனத்திற்குள்ளாக வேண்டியவர்கள்.
யூதர்களின் (இஸ்ரேலியர்கள்) கோரத்தாண்டவத்தை பார்க்கும்போது இட்லர் இவர்களை கொத்துக்கொத்தாக கொன்றது நியாயமானதுதானோ என்று எண்ணத்தோண்றுகிறது.
ஒருபக்கம் இசுரேல் பாலஸ்தீனர்கள் மீது நடத்தும் தாக்குதல், மறுபக்கம் நமக்கு அருகில் சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுக்கும் இன அழிப்பு நடவடிக்கை இவை இரண்டையும் கண்டிக்கவும் தடுக்கவும் அரசியல் ஆண்மையற்ற அரசுகளே உலகை ஆள்கின்றன.
அடுத்துவன் அணியாயமாக கொல்லப்படுவதை தடுக்க முடியாதவனை யார் தாக்கினாலும் கேட்பதற்கு நாதியிருக்காது.
மனம் பதைபதைத்து வருந்துகிறது...
ஆனால் உண்மை என்னவென்றால்...
நாம் அனைவரும் இது பற்றி பேச எழுத மட்டுமே செய்வோம்
இது 21ஆம் நூற்றாண்டு...
இதற்கு தீர்வு காண் நம்மால் முடியாது...
நான் சொல்வதற்காக நீங்கள் மனசோர்வடைய வேண்டாம்
இத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம் நாம் அனைவரும் தான்... நமக்குள் இருக்கும் இரக்கமற்ற குணம் தான்.
எ.கா : யோசித்து பாருங்கள் நாம் எத்தனை பேர் நம் சகோதரர்களோ, நம் பெற்றோர்களோ, நம் பக்கத்து வீட்டிலோ சிறு சண்டை வரும் போது அதை தீர்த்து வைப்பவராக் இருந்திருக்கிறோம்?
இருவர் மட்டுமே இருந்தாலும் நாம் ஒருவரை கொலை செய்துவிட்டு வாழும் அளவுக்கு போய்விட்டோம் என்பதற்கான முன்மாதிரிகள் இந்த நிகழ்வுகள். தனி ஒரு மனிதன் திருந்தும் வரை நாம் இதையே நாளும் பார்த்து கொண்டு அல்லது அனுபவித்து கொண்டு அல்லது செய்து கொண்டு வாழ்வோம். அது 21 ஆக இருந்தாலும் சர் 101 வது நூற்றாண்டாக இருந்தாலும் சரி...
உங்கள் மனதை புண்படுத்த அல்ல... தனி மனிதனின் சுய ஒழுக்கத்தின் அவசியத்தை சொல்லவே விரும்புகிறேன்...
http://etheytho.blogspot.com/2009/01/blog-post_08.html
//இஸ்ரேலுக்கு தனதான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அக்காரணங்கள் அப்பாவிகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது.//
சரியான பார்வை.மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் குரலை ஒலிக்கச் செய்யாமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு.முதலாவதாக பாலஸ்தீனம் வளைகுடா நாடுகளின் பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொண்டு வளைகுடாப் போரில் சதாமை ஆதரித்தது.இரண்டாவது பேச்சுரிமை,சுதந்திர உணர்வு மழுங்கடிக்கப்பட்ட வளைகுடாக்களின் நிர்வாகம் எதிர்ப்புக் குரலுக்கு இடமளிப்பதில்லை.
மற்ற நாடுகளை விட அரபு நாடுகள் ...புடுக்கி கொண்டு இருக்கிறது..:(
"நிச்சயம்" ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்..!!
யாரோ ஒரு அநாநி இங்கு வந்து கழிந்து விட்டுப் போக முயற்சிக்கிறது.
அநாநி. உன் குடும்பத்தைப் பற்றி ஏதாவது சொல்ல நினைத்தால், அதை உன் பதிவில் எழுதி ஏதாவது மஞ்சள் பக்கத்தில் பிரசுரி. வேண்டுமென்பவர்கள் வந்து படிப்பார்கள். இங்கு வந்து கேனத்தனமாக அவிழ்க்காதே.
ஆண்டவனிடம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இனி இப்படி நடக்க வேண்டாம் என அனைவரும் ஆண்டவனை பிரார்த்தனை செய்யுவோம்
//இரு வேடமிடும் அனைத்து நாடுகளும், நாட்டுத்தலைவர்களும் கடும் கண்டனத்திற்குள்ளாக வேண்டியவர்கள்//
வருகைக்கு நன்றி Arnold Edwin. நம் கண்டணங்கள் அவர்களின் காதிலும் ஒலிக்கட்டும்.
//கண்டிக்கவும் தடுக்கவும் அரசியல் ஆண்மையற்ற அரசுகளே உலகை ஆள்கின்றன.//
சரியாகச் சொன்னீர்கள் கரிகாலன். 'இனவொழிப்பு களைதல்' எழுத்து வடிவில் மட்டுமல்லாது உண்மையான செயல்வடிவம் பெறுதல் அவசியம்.
//மனதை புண்படுத்த அல்ல... தனி மனிதனின் சுய ஒழுக்கத்தின் அவசியத்தை சொல்லவே விரும்புகிறேன்...//
வருகைக்கு நன்றி ராச. மகேந்திரன்.
தனி மனித ஒழுக்கமின்மை என்ற பண்பும், மாற்றார் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்ற தனக்காக மட்டுமான வாழ்வு முறையும் நிச்சயம் மாற்றப்பட வேண்டும். அத்துன்பங்கள் நாளை நமக்கும் நிகழலாம் என்ற எண்ணம் வந்தால் போதும். அன்பு, அறன், உயரிய பண்பாடுகள் போன்ற தனி மனித பண்புகள் பொதுமையாக்கப்படல் வேண்டும்.
அழகப்பன் சுட்டிக்கு நன்றி அநாநி.
//வளைகுடாப் போரில் சதாமை ஆதரித்தது.இரண்டாவது பேச்சுரிமை,சுதந்திர உணர்வு மழுங்கடிக்கப்பட்ட வளைகுடாக்களின் நிர்வாகம் எதிர்ப்புக் குரலுக்கு இடமளிப்பதில்லை.//
கருத்துகளுக்கு நன்றி ராஜ நடராஜன்.
ஈராக்கின் நெருக்கடி நேரங்களிலும் சதாமிடத்திலிருந்து பாலஸ்தீனத்தக்கு கிடைத்த உதவிக்கு கைமாறாக யாஸர் அரபாத் அவரை ஆதரித்திருக்கலாம். இப்போது யாஸிர் அரபாத்தே இல்லையே. இது சரியான காரணமாய் இருக்க முடியாது.
உங்களின் இரண்டாவது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.
"நிச்சயம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.."
வருகைக்கு நன்றி மின்னுது மின்னல்,
//ஆண்டவனிடம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.//
வருகைக்கு நன்றி படகு.
மனசு வலிக்குதுங்க...
குறைந்தபட்ச்சம் அரபு நாடுகளாவது இந்த கொடுமையை தடுக்க முயற்சிக்க வேண்டும்.
எப்போதும் போல் அரபு நாடுகள் மவுனியாகி விட்டன. இந்த முடியாட்சி நாடுகள் அடுத்த முஸ்லீம் நாட்டில் நடக்கும் இனப்படுகொலையை, மனித உரிமை என்றால் என்னவென்றே உணராமல் வேடிக்கை பார்க்கின்றன.///
என்னங்க சுத்தி இருக்கிற நாடுங்க சேர்ந்து குரல் கொடுக்கக்கூடாதா?
ஏத்துக்கவே முடியவில்லை!!!
தேவா...
//மனசு வலிக்குதுங்க...//
உங்களுக்கும் எனக்கும் உலக மக்கள் அனைவருக்கும் வலிக்கிறது மித்ரா குட்டி. ஆனால் தடியெடுத்தவனைத் தட்டிக் கேட்கின்ற நேர்மையும் வலிமையும் உலகத்தில் தலைவராக சொல்லிக் கொள்ளும் எவருக்கும் இல்லையே என்ற உண்மை வலியைக் கூட்டுகிறது. நன்றி.
//ஏத்துக்கவே முடியவில்லை!!! தேவா...//
ஆம் நண்பர் thevanmayam. இவர்களை நினைக்குந்தோறும் எரிச்சலும் வலியும்தான் ஏற்படுகிறது.
ஆனால் இன்று வாடிகனிலிருந்து யூதர்களுக்கு எப்படி சொன்னால் வலிக்குமோ அப்படியான வார்த்தை வலிமையாய் வெளிப்பட்டிருக்கிறது. இறைவனுக்கு நன்றிகள்.
Post a Comment