Thursday, 8 January 2009

லேட்டாயிடுச்சு போலீஸ் அங்கிள்! பள்ளி முக்கியமல்லவா!


இந்த வாரம் நடந்ததுதான். சூடான தகவல்.

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் ஒரு கார், சாலை நடுவிலுள்ள பிரிப்பான்(Divider)களையும் பக்கங்களிலுள்ள தடுப்பு(Barrier)களையும் மோதி விட்டு பின்னர் சுதாரித்தவாறு முன்னேறுகிறது. ஆனால் வேறெந்த காரையோ மக்களையோ இடிக்கவில்லை. அது வீட்டிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர்கள் பயணித்திருக்கிறது.

காவலர்கள் பார்த்து விட்டனர். இவ்வளவு காலையில் எவன்யா தண்ணி போட்டுட்டு காரோட்டறவன்?. நேத்து அடிச்சதின் ஹேங் ஓவரா இருக்கலாம். வண்டியை மடக்கி, நிறுத்த சைகை செய்ததும், சொன்ன மாதிரி நின்று விட்டது. டிரைவரை பார்த்த காவலர்களுக்கு அதிர்ச்சி. ஆச்சர்யம்.

வண்டியோட்டி ஆறு வயது சிறுவன். வேறு யாரும் காரில் இல்லை.

என்ன தம்பி? என்ன இது?

காலையில் ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன் போலீஸ் அங்கிள். எப்படியாவது பள்ளிக்கு நேரத்துல போய்ச் சேரனும். என்ன செய்யலாம்னு பார்த்தேன். வீட்டில் அம்மாவோ அப்பாவோ இல்லை. ஆனால் அப்பாவோட கார் நின்றது. காரின் சாவியும் வீட்டில்தான் இருந்தது. எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

நான் இரண்டு வயதிலிருந்து காரோட்டுகிறேன். நல்ல எக்ஸ்பீரியன்ஸ், எக்ஸ்பர்ட். யாரு மேலேயும் இடித்து விட மாட்டேன். ஆனால் என்ன? தரையில் ஓட்டியதில்லை.
கம்ப்யூட்டரில்தான்.

இப்போதுதான் சாலையில் முதன் முதலாக.

பையன் மேல் வழக்கு பதிய முடியாது. புண்ணியமில்லை. காவல்துறை பொடியனின் பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது.

Post Comment

5 comments:

நாமக்கல் சிபி said...

:)

இக்பா said...

This is giving us a message about an American parents.

Unknown said...

Thanks Namakkal Sabi

நன்றி இக்பா
//This is giving us a message about an American parents.//
இல்லை. இது எல்லா பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளைப் பற்றி கூடுதல் அறிந்து கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இடப்பட்ட பதிவு.

படகு said...

\\நான் இரண்டு வயதிலிருந்து காரோட்டுகிறேன். நல்ல எக்ஸ்பீரியன்ஸ், எக்ஸ்பர்ட். யாரு மேலேயும் இடித்து விட மாட்டேன். ஆனால் என்ன? தரையில் ஓட்டியதில்லை.
கம்ப்யூட்டரில்தான்\\
இதை இதைத்தான் எதிர் பார்த்தேன்.
ரொம்........ப சூப்ப.............ர். ங்ண்ணா
:))))))))))))))))))

Unknown said...

//ரொம்........ப சூப்ப.............ர். ங்ண்ணா//
அப்டீங்களாண்ணா? ரொம்........ப கிண்டல் லாம் இல்லதானே!
தாராளமாக சிரிக்கிறீர்கள். நோயே வராது.