Thursday, 11 September 2008

ஒரு வரிச் சிரிப்பு

(மயிலில் வந்தது)

1. சரி வர கண்ணயர்ந்து வருதல் மூலம் முதுமையைத் தடுக்க முடியுமாம். குறிப்பாக நீங்கள் வண்டி ஓட்டும் தருணங்களில்

2. உங்களுக்கு ஒரு குழந்தை என்றால் நீங்கள் பெற்றவர். ஒன்றுக்கு மேலென்றால் நீங்கள் நடுவர்.

3. திருமணம் என்ற உயரிய பந்தத்தில் ஒருவர் எப்போதும் சரியானவர். மற்றவர் கணவர்.

4. நாம் நமது வருமான வரியை புன்னகையாய் செலுத்த வேண்டும் என்பதை நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் பணம் கேட்கிறார்களே.

5. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான மாதம், நீங்கள் புதிதாக அக்குழந்தைக்குச் சீருடை வாங்கித் தந்த பின் வரும் அடுத்த மாதம்தான்.

6. நீங்களே உங்களைப் பற்றித் தாழ்வாக எண்ணாதீர்கள். திறமையில்லாமல் நிறைய பேர் இருக்கின்றார்கள்.

7. நீங்கள் யாரோடு வாழ விரும்புகிறீர்களோ அவரை விட, யாரில்லாமல் உங்களால் வாழ முடியாதோ அவரையே மணமுடியுங்கள். ஆனால் நீங்கள் இவற்றில் எதைச் செய்தாலும் பின்னாளில் வருத்தப் படத்தான் போகின்றீர்கள்.

8. உங்களால் அன்பை வாங்க முடியாது. ஆனால் அதற்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும்.

9. கெட்ட அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப் படுவதற்குக் காரணமான சிறந்த குடிமக்கள் ஒட்டளிக்காதவர்கள்தான்

10. சோம்பல் என்பது வேறொன்றுமில்லை. நீங்கள் களைப்படையும் முன்னே எடுக்கும் ஓய்வுதான்.

11. திருமணம் என்பது ஒரு வகை தருதலும் பெறுதலும்தான் அதனால் நீங்கள் அவளுக்காக அன்புடன் கொடுங்கள். இல்லையென்றாலும் அவள் எடுத்துக் கொள்ளத்தான் போகிறாள்.

12. என் மனைவியும் நானும் எப்போதும் சமாதானம் செய்து கொள்வோம். 'நான்தான் தவறு செய்தேன்' என்பேன் அவள் ஒப்புக் கொள்வாள்.

13. யார் தங்களுக்குள் சிரித்துக் கொள்ளவில்லையோ அவர்கள், அவ்வேலையை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்கள்.

14. பெண்களுக்கு முதலிடம். அழகான பெண்களுக்கு அதைவிட.

15. உண்மையான திருமணததிற்கு பல முறை காதல் செய்ய வேண்டும். ஆனால் காதல் செய்யப்படுபவர் எப்போதும் அந்த ஒரே நபர்தான்

16. அச்செயலை இப்போது செய்வதை விட, எப்போதோ செய்ததைப் பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு வயதாகி விட்டது.

17. திருமாணமானவன் எத்தனை முறை தன் வேலையை மாற்றிக் கொண்டே இருந்தாலும், அவனுக்கு கடைசிவரை ஒரே மேலாளர்தான்

18. எத்தனை முறை டயரியை மாற்றும் போதும் எவருடைய முகவரி மீண்டும் எழுதப்படுகிறதோ அவர்கள்தான் உண்மையான நண்பர்கள்.

19. சேமித்தல் என்பது மிகவும் சிறந்தது. குறிப்பாக உங்கள் பெற்றோர் அதை உங்களுக்காக செய்திருந்தால்.

20. அறிவாளிகள் பேசுகிறார்கள் ஏனெனில் அவர்களிடம் சொல்ல செய்தி இருக்கிறது. முட்டாள்களும் பேசுகிறார்கள் ஏனெனில் அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டி இருக்கிறது.

21. நமது மொழியைத் தாய்மொழி என்கிறோம். ஏனெனில் தந்தை அரிதாகவே பேசுகிறார்.

22. ஆண்: நீடித்த வாழ்வுக்கு என்ன வழி?
டாக்டர்: திருமணம் செய்து கொள்
ஆண்: அதன் மூலம் நீண்ட வாழ்வு கிடைக்குமா?
டாக்டர்: இல்லை. இது போன்ற எண்ணங்கள் வருவதைத் தடுக்கலாம்.

23. திருமணத்தின் போது தம்பதியர் கைகளை இணைத்துக் கொள்வது என்? குத்துச் சண்டை வீரர்கள் சண்டைக்கு முன் கை கொடுத்துக் கொள்வதை நீங்கள் பார்த்ததில்லையா?

24. மனைவி: அன்பே! இன்று நமது திருமண நாள். நாம் என்ன செய்யலாம்?
கணவன்: எழுந்து இரண்டு நிமிடம் மவுனமாக நிற்போம்.

25. காதல் திருமணம் சிறந்ததா? பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணம் சிறந்ததா? எனப்பேசுவது மிகவும் வேடிக்கை. தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப் படுவது சிறந்ததா?

26. குறையேதுமற்ற ஒரு குழந்தைதான் உலகில் இருக்கிறது. அது ஒவ்வொரு தாயுடனும் இருக்கிறது

27. குறையேதுமற்ற ஒரு மனைவிதான் உலகில் உண்டு. ஒவ்வொருவருடைய அடுத்த வீட்டுக்காரர் மனைவிதான் அவள்.

Post Comment

12 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஹா.. ஹா... ஹா.... :))

கலக்கிட்டீங்க தல...

எல்லாமே அருமை...

கல்யானமாகி ரொம்பவே அனுபவிக்கிரீங்களோ? :))

www.nallasudar.blogspot.com

குமரன் (Kumaran) said...

பல 'ஒரு வரி'கள் சிரிப்பாக இருக்கின்றன. சில சிந்தனையைத் தூண்டும் தத்துவங்களாக இருக்கின்றன. நன்றி சுல்தான் ஐயா. :-)

Anonymous said...

:)

:))))
minnal

Sathia said...

வெடிச்சிரிப்பை வரவழைச்சது இதுதான்.
\\நமது மொழியைத் தாய்மொழி என்கிறோம். ஏனெனில் தந்தை அரிதாகவே பேசுகிறார்.\\

King Viswa said...

Dear Sulthan,

Nice Post you posted over here.

Wanted to know about the cornucopia of Tamil Comics World?

Kindly visit the new Kid in the Comics Blog Field. www.tamilcomicsulagam.blogspot.com

This is a Palce where you will find Comics Scans, Celebrity Postings, News On Comics, Comics Reviews, Availablity of Comics on Many Places, Interview with Some of the People involved in Making Comics (National / International), Star Bloggers, Comics Experts, Hardcore Comic Fans, etc.

Keep involved with www.tamilcomicsulagam.blogspot.com.

its your place to become what you always wanted to be = Youthfulness.

Thanks & Regards,

King Viswa.

சென்ஷி said...

வாவ்.. அத்தனையும் கலக்கல்..

பாதிக்கு மேல சொந்த அனுபவம் பேசுகிறது போல :)

அத்தனையும் கலக்கல். இருந்தாலும் இரண்டு பாகமாய் போட்டிருக்கலாமோன்னு தோண வைக்குது அவ்ளோ பெருசா இருக்குது :)

சென்ஷி said...

//Sathia said...
வெடிச்சிரிப்பை வரவழைச்சது இதுதான்.
\\நமது மொழியைத் தாய்மொழி என்கிறோம். ஏனெனில் தந்தை அரிதாகவே பேசுகிறார்.\\
//

ரிப்பீட்டே :))

சுல்தான் said...

வருகைக்கு நன்றி சுடர்மணி.
//கல்யானமாகி ரொம்பவே அனுபவிக்கிரீங்களோ?//
நீங்க 'ரொம்ப நல்லவரு'ங்கோ!
ஏடா கூடமா கேள்வி கேட்டு மாட்டி வைத்திட முயற்சியா?

வருகைக்கு நன்றி குமரன், அனானி மின்னல், Sathia, King Viswa.
வருகைக்கு நன்றி சென்ஷி.
//இரண்டு பாகமாய் போட்டிருக்கலாமோன்னு தோண வைக்குது//
ஓவராக இருப்பதால் திகட்டுகிறது என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் போல தெரிகிறது.

ரிப்பீட்டுக்காக ரிப்பீட்டு நன்றி சென்ஷி.

Anonymous said...

நல்லா சிரிச்சேங்க.

குறிப்பா மனைவிகள் பற்றி.

சிவமுருகன் said...

சூப்பர் கலக்கிட்டீங்க.

சுல்தான் said...

//நல்லா சிரிச்சேங்க.//
நன்றி வடகரை வேலன்.

//சூப்பர் கலக்கிட்டீங்க//
நன்றி சிவமுருகன்.

மங்களூர் சிவா said...

கலக்கல்
:)