எந்த ஒரு செயலையும் எவ்வித முன்முடிவுகளின்றி திறந்த மனதோடு அணுகும்போது அதிலுள்ள சாதக பாதக அம்சங்கள் இரண்டும் தெளிவாகும். இல்லையென்றால் நம் முன்முடிவுகளுக்கேற்பவே அச்செயல்கள் மாறித் தோற்றமளிக்கும்.
.
.
.
.
.
.
.
.
.
இந்தப் பெண் ஆடம்பர உடையணிந்து காட்சியளிக்கிறாள். அவளுக்கு என்ன வயதிருக்கும்?.
எடுப்பான மூக்கும் அமைதியான தோற்றமும் உள்ள இனிமையான பெண். சுமார் 25 வயதிருக்கலாம் என்பீர்கள்.
நீங்கள் கூறியது தவறு என்கிறேன் நான்.
சந்தேகமிருந்தால் உங்கள் நண்பரை அல்லது மனைவியை அழைத்து கீழுள்ள மூன்றாவது படத்தை சில வினாடிகள் உற்று நோக்கச் செய்யுங்கள்.
.
.
.
.
.
.
பின்னர் இரண்டாவது படத்தைப் பார்த்து அந்தப் படத்திலுள்ள பெண்ணுக்கு என்ன வயதிருக்கும் என்று கேட்டுப் பாருங்கள்.
.
.
.
எப்படி?
முதலில் நீங்கள் ஒன்றாவது படத்தை பார்த்திருந்தால் இரண்டாவது படம் குமரியாகத் தெரியும்.
முதலில் மூன்றாவது படத்தை பார்த்து விட்டு இரண்டாவது படத்தைப் பார்த்தால் வயதான பெண்ணாகத் தெரியும்.
வ.வா.சங்க இரண்டாமாண்டு போட்டியில் சேர்த்தாச்சு.
8 comments:
சுல்தான் ஐயா,
எல்லாம் ஒரே படம் தான். சிலருக்கு மனைவியை பகலில் பார்க்கும் போது கடைசி படம் போலவும், இரவில் பார்பதற்கு முதல் படம் போலவும் இருக்கும். இரவு என்று ஒன்று இருப்பதால் எவ்வளவு நன்மை இருக்கு !
:)
அண்ணா!
மிகச் சுவாரசியமான ஓவியம். உற்றுப்பார்த்தால் வித்தியாசம் சிலசமயம் தெரிவது உண்மை.
எனக்கு ஒரு நண்பர் ஒரு ஓவியம் காட்டினார். அதை நாம் பார்த்தால் 9 நிர்வாணப் பெண் தெரிவார்கள்.
ஆனால் 10 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு அது 9 டொல்பீனாகத் தெரியும்.
இது பழக்கம் சார்ந்தது.
என் அஞ்சலில் சேமித்து இருந்தால் தருவேன்.
சுல்தான் சார்...நீங்களும் படமா!! ;))
வாழ்த்துக்கள் ;)
/எந்த ஒரு செயலையும் எவ்வித முன்முடிவுகளின்றி திறந்த மனதோடு அணுகும்போது அதிலுள்ள சாதக பாதக அம்சங்கள் இரண்டும் தெளிவாகும். இல்லையென்றால் நம் முன்முடிவுகளுக்கேற்பவே அச்செயல்கள் மாறித் தோற்றமளிக்கும்./
உண்மை தான்
சார் நீங்க வாவா சங்கத்தில கொடுத்திருக்கும் லிங்க் சரியா வேலை செய்யல.. அதுனால மறுபடி லிங்க் கொடுங்க சார்
என்றும் அன்புடன்
இளையகவி
//சிலருக்கு மனைவியை பகலில் பார்க்கும் போது கடைசி படம் போலவும், இரவில் பார்பதற்கு முதல் படம் போலவும் இருக்கும். இரவு என்று ஒன்று இருப்பதால் எவ்வளவு நன்மை இருக்கு!//
தலைப்புக்கே முறைக்கிறார்கள்.
நீங்கள் என்னான்னா?
GK, நீங்க தைரியமான ஆள் சார் - முதுகு பத்திரம்.:))
//இது பழக்கம் சார்ந்தது.
என் அஞ்சலில் சேமித்து இருந்தால் தருவேன்.//
நன்றி யோகன்.
இது மாதிரி நிறையப் படங்கள் இருக்கிறது. ஒருவர் மோதிரத்திலே மனிதத்தலை போல இருந்தது. உற்றுப் பார்த்தால் உள்ளே என்னென்னவோ தெரிகிறது.
இயன்றால் உங்களிடமுள்ள அந்தப் படத்தை அனுப்பித் தாருங்கள்.
//நீங்களும் படமா!! ;))வாழ்த்துக்கள் ;)//
வாழ்த்துகளுக்கு நன்றி கோபிநாத்.
//உண்மை தான்//
நன்றி திகழ்மிளிர்.
//நீங்க வாவா சங்கத்தில கொடுத்திருக்கும் லிங்க் சரியா வேலை செய்யல..//
நன்றி இளையகவி. மீண்டும் லிங்க் கொடுத்திருக்கிறேன்
Post a Comment