Sunday, 28 January 2007

சும்மா கோர்ட்டுக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்-அய்ன் என்றொரு இடமுண்டு.

இங்கே ஒரு பெண் கோர்ட்டுக்கு போனார். “என் கணவர் என்னை வெளியே செல்ல விட மறுக்கிறார். அவர் எனக்காக கொடுத்துள்ள வீடு நாற்றமடிக்கிறது. அதனால் நீங்கள் தலையிட்டு அவருக்கு அறிவுரை சொல்லவும்.” என்று விண்ணப்பித்தார்.
“வீடு நாற்றமடிப்பதால் நீங்கள் விரும்பிய இடத்தில் தங்கலாம்” என்று கோர்ட் தீர்ப்பு சொன்னது.

கணவர் மேல் கோர்ட்டில் “என் மனைவி வெளியே செல்லும் முன்னர் என்னிடம் கேட்பதில்லை அதனால் நீங்கள் தலையிட்டு அவருக்கு அறிவுரை சொல்லவும்” என்று மேல் முறையீடு செய்தார்.

“வீடு நாற்றமடிப்பதால் அது அப்பெண்ணுடைய உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் கேடானது. எனவே அவர் விரும்பிய இடத்தில் இருந்து கொள்ளலாம்” என்று மேல் நீதி மன்றமும் தீர்ப்பளித்துள்ளது..

நாற்றமடிக்கும் வீட்டை சுத்தப்படுத்தினால் பிரச்னை முடிந்தது. அதைப்பற்றி தீர்ப்பில் எதுவும் காணோம்.

இனி “என் மனைவி உணவில் சரியான அளவில் உப்பு சேர்க்கவில்லை” என்று கணவணும்
“என் கணவர் சரியாக விரும்பி உண்பதில்லை” என்று மனைவியும்
எது எதற்குத்தான் நீதி மன்றம் போவதென்பதில்லையா?

(பி.கு.: புது பிளாக்கருக்கு மாறிய பின் என்னென்னவோ நடக்குது.
புரோபைலில் போட்டோ காணவில்லை.
அதனால் தமிழ்மணத்தில பதிய முடிகிறதா என்று அறியத்தான் -
இது இன்றைய கலீஜ் டைம்ஸ் செய்தி)

Post Comment

6 comments:

கோவி.கண்ணன் said...

சுல்தான் ஐயா,
அலுவலக புகைப்படத்தில் படு ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள்.

//புரோபைலில் போட்டோ காணவில்லை.
அதனால் தமிழ்மணத்தில பதிய முடிகிறதா என்று அறியத்தான் //

எல்லாம் சரியாக வந்திருக்கு.

அப்பறம் பதிவைப் பற்றிய கருத்து

நம்ம ஊரு பழமொழி ஞாபகம் வருது,
'ஆகதவங்க கைப்பட்டா குத்தம், கால் பட்டால் குத்தம்'
:))

மாசிலா said...

அலுவலுக நேரத்துல வலைப்பூவோ?
வேட்டு வந்துனே இருக்குதுங்க!
:-)

புது ப்லாக்கர் நல்லா இருக்கார்.

தொடர்க.

Unknown said...

வருகைக்கு நன்றி ஜிகே. பதிவு கருவிப்பட்டைக்காக பலமுறை முயற்சித்தேன், தெரிகிறதா என்று சொல்லுங்களேன்.

//ஆகாதவங்க கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தம்//-
ஒருவனுக்கு ஒன்றுக்கு மேல் மனைவியர் இருப்பதையோ, பெண்கள் விவாகரத்து, பெண்கள் மறுமணம் போன்று நாம் பெரிதாக நினைப்பதெல்லாம் இந்த ஊரில் ஒரு விஷயமேயில்லை. ஆதலால் வெறும் நேரம்போக்கோ அல்லது ஏதாவது வேறு வகையான ஈகோ பிரச்னையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

Unknown said...

வருகைக்கு நன்றி திரு.மாசிலா.

என் தொழிலில், என் வேலையை, எப்போதென்றாலும் நான் தான் செய்தாக வேண்டும். அதனால், பணியில் தொய்வு ஏற்படாதவரை, அலுவலகத்தில் (கணிணியில்) நான் என்ன செய்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை.

ப்ளாக்கர் நல்லாத்தான் இருக்கு. ஆனால் தேன்கூடு logo, பதிவுப்பட்டை எல்லாம் சரியாக இன்னும் தெரியவில்லை.

லொடுக்கு said...

புதிய ப்ளாக்கர் அழகாக இருக்கிறது. ஆனால், கருவிப்பட்டைதான் தெரியவில்லை. புதிய புகைப்படமும் அருமை.

Unknown said...

வருகைக்கு நன்றி லொடுக்கு. பதிவு கருவிப்பட்டைக்கு மேலும் முயற்சி செய்து பார்க்கிறேன். ஏதாவது வேறு வழி தெரிந்தால் சொல்லுங்கள்.

பக்கத்தில் தங்கியிருக்கிறோம். சரி. எப்போது சந்திக்கலாம்?.