Sunday, 10 December 2006

வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக)

1983-85 சென்னை கல்லூரி வாழ்க்கை. பட்ட மேற்படிப்பு பகுதியிலுள்ள மாணவர்களைப் பார்த்தால் பட்டப்படிப்பு மாணவர்கள் மரியாதையுடன் (உண்மையாகவே) ஒதுங்கி வழிவிட்டு விடுவது பழக்கம். இப்போதெல்லாம் எப்படியோ?
'ஹாஸ்டல் லவுன்ச்'ல் இருக்கிற தொலைக்காட்சிப் பெட்டியில் மாணவர்கள் எல்லோரும் உட்கார்ந்து பார்ப்போம். நாங்கள் வந்தால் உட்கார இடம் கிடைக்கும். கொடுப்பார்கள்.

அந்தக் காலத்தில் ஹார்லிக்ஸ்க்கு ஒரு பெரிய விளம்பரம் வரும்.
1. மாறிவரும் காலங்களுக்கேற்ப மாறி வரும் ஹார்லிக்ஸ். டின்னிலிருந்து தொடங்கி அதுவரை வந்த விதவிதமான கண்ணாடி ஹார்லிக்ஸ் பாட்டில்களைக் காட்டுவார்கள்.
2. ஒரு சரித்திர நாடக நடிகர் முழு ஒப்பனையுடன் 'பளபளா உலகமெங்கும் சுற்றுவேன். பலத்துக்கு ஹார்லிக்ஸ் பருகுவேன்' என்பார்
3. ஒரு விளையாட்டு ஆசிரியர் வந்து 'அதுல பால் இருக்கு, கோதுமை இருக்கு, மால்ட் இருக்கு' என்று ஒவ்வொன்றாக சொல்லி அதனால் உடம்புக்கு நல்லதென்பார்

ஹார்லிக்ஸ்ல் இருந்து ஏதாவது வருமானமா? முழு விளம்பரத்தையும் சொல்றாரே என்று யாராவது யோசித்தால்..... மன்னிக்க! முழு விளம்பரமும் தெரிந்தால்தான் பின்னால் வரும் குறும்பு சுவைக்கும். சுவைக்கலாம்.

4. 'இந்த காலத்தில எதையுமே நம்ப முடியலே. ஆனால் நான் ஹார்லிக்ஸ நம்பறேன்' என்று ஒரு வக்கீல் சொல்வார்.
5. ஒரு வயதான பாட்டி 'எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் ஹார்லிக்ஸ்தான் சாப்டறேன். எங்க அம்மா கூட இதான் சாப்ட்டா' என்பார்.
6. 'தினமும் காலையிலும் மாலையிலும் ஹார்லிக்ஸ் சாப்டறேன். அப்கோர்ஸ் பிரிஸ்கிரைப் கூட பண்றேன்' என்று ஒரு டாக்டர் சொல்வார்.
7. கடைசியில் ஒரு சுட்டிப்பையன் (பாலிலே) ' கலக்க வேணாம். அப்படியே' (மாவாகவே சாப்பிடுவேன்) என்று சொல்வார்.

ஞாபக மறதி. சிலது வரிசை மாறியிருக்கும். விட்டுப் போயிருக்கும்.

இது போன்ற விளம்பரங்களைப் பார்த்து கல்லூரி நண்பர்கள் பயங்கரமாக கிண்டல் அடிப்பார்கள். அதிகமாக சிரிக்க வைக்கிற மாதிரி கிண்டல் செய்பவர்களுக்கு நண்பர்கள் கூடுதல். அது மாதிரி ஒரு நண்பர் என் மீது மிக மரியாதையும் அன்பும் வைத்திருந்தார்.

ஒரு தடவை அந்நண்பரது தோழிகள் ஒரு விழாவுக்காக அவரை அழைக்க அவரோ என்னையும் அழைக்க வைத்தார். மாணவிகள் நடத்தும் நிகழ்ச்சி. கூட நண்பர் இருக்கும் தைரியத்தில் நானும் கிளம்பினேன்.

மாணவிகள் மாணவர்களையே திணற வைக்கும் நிகழ்ச்சி நடத்தி அசத்தினார்கள். நானும் ஏதோ ப்ளேடு போட்டேன். நமது நண்பரும் பீலா விட்டார். அடுத்தது விளம்பரதாரர் நிகழ்ச்சி..

இரண்டு மூன்று பெண்கள் ஒரு ஜட்டியை குச்சியில் ஏந்தியவாறு
'காலங்கள் மாறினாலும் மாறாத ஒரே ஜட்டி' என்று கோரஸாக. கூத்தாடி விட்டுச் சென்றனர்.
2. அடுத்த பெண் நாடக ஒப்பனையுடன் கையில் குச்சிஇ ஜட்டியுடன் 'பளபளா உலகமெங்கும் சுற்றுவேன். ஆனால் இந்த ஒரே ஜட்டியைத்தான் பயன்படுத்துவேன்.' என்றார்
3. அடுத்த பெண் 'இதில லேஸ் கிழிஞ்சிருக்கு. இதில நூல் இருக்கு. எம்ராய்டரி இருக்கு. கலரே தெரியலே' ஏன்று ஒவ்வொன்றாக வர்ணித்த அழகைப் பார்த்து பெண்கள் விசில் சத்தம் வானைப் பிளந்தது.

எனக்கோ விட்டா போதும் ஓடிடலாம் என்று இருக்கிறது. நிமிர்நது பார்க்கவும் நாணம். அந்த கிழிந்த உள்ளாடையை தூக்கிப் போட்டு விட்டு வராமல் கொடி போல மாற்றி மாற்றி எடுத்து வருகிறார்களே!.

4. 'எனக்கு எந்த புது ஜட்டியிலும் நம்பிக்கையில்லை. ஆனால் இந்த ஜட்டியை நான் நம்பறேன்.' ஒரு வக்கீல் பெண்
5. அடுத்து வயதானவளாக வேடம் அணிந்த பெண் 'எனக்கு நினைவு தெரிந்த நாள்லேருந்து நான் இந்த ஜட்டியைத்தான் உபயோகிக்கிறேன். எங்கம்மா கூட இதைத்தான் யூஸ் பண்ணா' என்று அலம்பியது. சிரிப்பும் கைதட்டலும் அரங்கம் அதிருகிறது
6. அடுத்து வந்த டாக்டர் வேடப் பெண்மணி 'தினமும் காலையிலும் மாலையிலும் யூஸ் பண்றேன். அப்கோர்ஸ் யாராவது கேட்டால் பிரிஸ்கிரைப் கூட பண்ணுவேன்' எனறது.
7. கடைசியாக வந்த குமரி, (குழந்தை குரலில்) 'துவைக்க வேணாம். அப்படியே!' என்று சொல்லி விட்டு உள்ளே ஓடியது.

நடிகை சுகாசினி பெண்களைப் பற்றிய டிவி சீரியல் செய்ய தன் கணவர் மணிரத்னத்திடம் கருத்து கேட்ட போது. 'பெண்கள் சுதந்திரம் கொஞ்சம் கோடு தாண்டினால் அதிகப் பிரசங்கித்தனமாக இருக்கும்' என்று அறிவுரை சொன்னாராம். எனக்கு அந்த ஞாபகம் இப்போது வருகிறது.

அட மாணவர்கள்தான் 'லந்து' பண்ணுவார்கள். மாணவிகள் எல்லாம் 'இந்த பூனையும் பால் குடிக்குமா?' மாதிரி போகிறார்கள் என்று பார்த்தால் 'இந்த பூனைகள் சுடச்சுட பால் குடிப்பவை' என்று அவர்கள் கலாய்த்த போதுதான் தெரிந்தது.

நல்ல வேளை என் பகுதி முன்னமே முடிந்திருந்தது. இல்லாவிட்டால் எல்லாப் பெண்களின் முன்னிலையிலும் அம்பேல் ஆகி அசடு வழிந்திருப்பேன்.

அந்த நண்பரோடு பக்கத்து ஹோட்டலில் டீ சாப்பிட கூட அதற்கப்புறம் போனதில்லை. ஹாஸ்டலில் பேசிக் கொள்வதோடு சரி.

அப்போது ஆரம்பித்ததுதான். இப்போது குடும்ப நிகழ்ச்சிகளில் கூட கூட்டமாக பெண்களைக் கண்டால் எனக்கு அலர்ஜி கண்டு ஜுரம் வந்து விடும்.

(ப்ளேடு போடுதல், பீலா விடுதல், அலம்புதல், லந்து பண்ணுதல், கலாய்த்தல், அம்பேல் போன்ற கல்லூரிக் கால அருஞ்சொற்பொருட்கள் தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்)

Post Comment

13 comments:

அரை பிளேடு said...

83லயே காலம் கெட்டு போச்சா..
நாம இன்னாமோ புச்சா கெட்டு போச்சின்னு இல்ல நனச்சிக்னுகுறோம்..

இதுதான்பா பெண் சுதந்திரம்... இது அப்பவே கட்சிட்சி போல.. இன்னும் கூட கடிக்கல.. கடிக்கலன்றவங்கள இன்னா சொல்றது...

இந்த மாறி பெண் சுதந்திரத்த நான் திறந்த மனசோட வரவேற்கிறேன்..

சொன்னா மாறி இது குறும்பு கடியாது.. அதயும் தாண்டி எங்கியோ பூட்சி...

கோவி.கண்ணன் [GK] said...

சுல்தான் ஐயா,

நகைச்சுவை நாசுவை(ஹார்லிக்ஸ்) இரண்டுமே இருக்கிறது செய்திகளில். எழுதிய விதமும் அருமை. உங்கள் கல்லூரி கால குறும்புகளை பகிர்ந்தத்ற்கு நன்றி !

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ! நம்ம ஓட்டு நிச்சயம் உண்டு. எஸ்கே ஐயா ஓட்டையும் (கள்ளத்தனமாக) போட்டுவிடுகிறேன்
:))

நிலவு நண்பன் said...

//"வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக)" //


70 வருஷத்துக்கு முந்தியே இந்த சேட்டையெல்லாம் பண்ணியிருக்கீங்களா.. ( தேள்கொட்டிய போட்டிக்காக) :)

சுல்தான் said...

வருகைக்கு நன்றி ஜிகே. ஞாபகத்தில் உள்ள ஒவ்வாமையை எழுதி வைப்போமென்றுதான். எஸ்கே ஐயா, உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கு முன்னே 'கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாய்'.

வருகைக்கு நன்றி அரைபிளேடு. அரைபிளேடுன்ற. ரெண்டு பிளேடு முழுசா கீதே பா.

சுல்தான் said...

நன்றி நிலவு நண்பன். 1983லிருந்து அதற்குள் 70 வருஷமா!. 20தான் 70ஆக தவறி விட்டதா?
//இந்த சேட்டையெல்லாம் பண்ணியிருக்கீங்களா..//
நானெங்கே பண்ணினேன். அத்தனை மகளிர் மத்தியில் தோலுறிந்த மாதிரியல்லவா தவித்தேன்.

SK said...

கள்ள ஓட்டெல்லாம் யாரும் போட வேண்டாம்.

இந்தக் குறும்பெல்லாம் என்னிடம் நடக்காது!!
:))

நானே போடுவேன் இந்தக் குறும்புக்கு!

வாழ்த்துகள், திரு. சுல்தான்.

நானும் பார்த்டிருக்கிறேன் நீங்கள் காட்டிய இக்குறும்பு நிகழ்வை!
ஆனால், ரசித்தேனே தவிர, உங்கள் மாதிரி கூச்சம் வரவில்லை!

மாறாக, ஓஹோ! இவர்கள் ஒன்றும் அஞ்சிஓடவேண்டியவர்கள் இல்லை; இவர்களிடமும் இந்தக் குறும்பு இருக்கிறது என்பதைக் காட்டி, சற்று தைரியமாக இவர்களுக்கு "கடலை போடத்" துணிய வைத்தது என்னை எனச் சொல்லலாம்! :))

மீண்டும் இவற்றை நினைவுபடுத்தியதற்கு நன்றி, திரு. சுல்தான்!

Anonymous said...

அடேங்கப்பா! அப்பவேவா?

இப்பெல்லாம் லேடிஸ் ஹாஸ்டல் ஃபங்சன்லகூட இப்டியெல்லாம் பண்ண மாட்டாங்க. இந்தியா பின்னோக்கி போய்க்கிட்டு இருக்குதோ?!?!

அருமையாக இருந்தது உங்களது கல்லூரி கால குறும்புகளின் அனுபவம்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சுல்தான் said...

எஸ்கே ஐயாவிற்கு சிறப்பான வரவேற்புகள்.
//இவர்களிடமும் இந்தக் குறும்பு இருக்கிறது என்பதைக் காட்டிஇ சற்று தைரியமாக இவர்களுக்கு 'கடலை போடத்' துணிய வைத்தது என்னை எனச் சொல்லலாம்//
எனக்கு இப்படிச் செய்தால் இவர்கள் துணிச்சலைப் பார்த்து நண்பர்கள் கடலை போட கிளம்பி விடுவார்களோன்ற பயம்தான்.
நீங்க என்னான்னா? உங்களுக்கு உருவம் மாதிரியே மனதும் என்றும் பதினாறையா!
என்றும் பதினாறாய் இளமையாய் இருக்க வாழ்த்துகிறேன் ஐயா.

//அடேங்கப்பா! அப்பவேவா?
இப்பெல்லாம் லேடிஸ் ஹாஸ்டல் ஃபங்சன்லகூட இப்டியெல்லாம் பண்ண மாட்டாங்க.//

வருகைக்கு நன்றி ஜி.
அப்படியா? நம்பவே முடியலேயே!.

லொடுக்கு said...

சுல்தான் பாய்!
கலக்கலா எழுதி இருக்கீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

லந்து எல்லாம் நன்றாக இருக்கு.

vinoth gowtham said...

83லயே இப்ப்ப்படியாஆஆஅ...
வெற்றிக்கு வாழ்த்துகள் சார்..

Hisham Mohamed - هشام said...

இப்படியுமா பண்ணுவாங்க..........

RAMASUBRAMANIA SHARMA said...

Excellent Comedy Sir...1983....Hats off for your memory...Supppper...