Tuesday, 7 August 2007

துபாய் சிரிப்புகள்

1. தமிழக கிராமத்திலிருந்து வயல் வேலைக்காக வந்து, துபையின் கிராமப் புறங்களிலேயே தங்கிவிட்டு, நகருக்கு வந்தவரிடம்
நண்பர்: என்னப்பா வேலையெல்லாம் எப்படி போகுது?
கிராமவாசி: ஒரே ச்சூடுண்ணா!. கெஷ்டந்தான்!
நண்பர்: பேச்சுலாம் புரிஞ்சுகிச்சா?
கிராமவாசி: ஒண்ணும் புரிய மாட்டேங்குது!. என்ன சொல்றான்னே தெரிய மாட்டேங்குது!
ஆனால் நாய் தமிழ்ல கொலைக்குதுன்னா!!
மசூதில வாங்கு தமிழ்ல சொல்றாங்கண்ணா!!
நண்பர்:!?!!

2.புதிதாக அரபி வீட்டில் வேலைக்கு சேர்நது விட்டு, நண்பர்களைப் பார்க்க வந்தவர்
வந்தவர்: டேய்! என்னமோ தெரியல! எங்க அரபி காலைல எந்திரிச்சு என்னை பார்த்தான்னு 'சூ*த பார்! சூ*த பார் அப்டிங்கிறான்.
நான் பேண்ட் பின்னால எங்காயாச்சும் கிழிஞ்சிருக்கான்னு பார்த்தேன்.
ஒன்னும் கிழிஞ்சு இல்ல.
நேத்து காலைல அரபிக்காரி என்னைப் பார்த்தவுடன் அதே மாதிரி சொல்றாடா?
என்னடா செய்யுறது!.
நண்பர்: (சிரித்துக் கொண்டே) போடா லூஸ். அவுங்களுக்கு தமிழ் தெரியுமா? 'சூ தபஅ' என்றால் அரபியில் நல்லா இருக்கியா? உடம்பு எப்டி இருக்குண்ணு அர்த்தம்டா!
வந்தவர்: அசடு வழிகிறார்.

3.ஒரு மலையாளி தமிழ் நண்பரிடம் வழி கேட்கிறார்
மலையாளி: அண்ணாச்சி. மச்சி மார்க்கெட் எவிட இண்டு? (மீன் அங்காடி எங்கே உள்ளது?)
தமிழ் நண்பர்: மச்சி மார்க்கெட்டா? நேரா போயி... மனசிலாயா? சோத்துக்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? அங்க ஒரு ஈரானி கடை இருக்கும்... மனசிலாயா? அங்கேர்ந்து பீச்சாங்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? ஒரு பிரிட்ஜ் வரும்... மனசிலாயா? அந்த பிரிட்ஜ் தாண்டுணா மச்சி மார்க்கெட்தான்..! மனசிலாயா?
மலையாளி: எல்லாம் மனசிலாயி. இந்த மனசிலாயியையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாம்.
(மலையாளத்தில் மனசிலாயா என்பதற்கு தமிழில் புரிகிறதா என்பது பொருள்)

4.குறைந்த சம்பளத்தில் இருப்பவர்கள் உணவகங்களில் உணவருந்த கட்டுப்படியாவதில்லை. மற்றும் மலையாளிகளின் உணவகத்தில் உணவிலுள்ள கூடுதல் காரமும், மஞ்சளும் வேறு பிடிப்பதில்லை. அதனால் தனி மெஸ்தான் ஊரிலுள்ள சாப்பாடு போலவே கிடைக்கும்.
சமைப்பவர்: (எதையோ தேடிக் கொண்டே) சட்டியில சாப்பாடு இருக்கு! அவங்கவங்க தேவையான அளவு வீணாக்கம வச்சுக்கங்கப்பா.
சாப்பிட வந்தவர்கள்: சோறு வச்சுக்குறோம். தொட்டுக்க என்ன இருக்கு?
சமைப்பவர்: கோழி வருத்திருக்கு. ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக்குங்கப்பா!
சாப்பிட வந்தவர்கள்: அண்ணே! சாப்பாட்டுல பீடி ஒரு கட்டு கிடக்கு. ஆளுக்கு எத்தனை எடுத்துக்கனும்
சமைப்பவர்: அட அதத்தாம்பா தேடிக்கிட்டிருக்கேன். சாப்பாடு செய்யும்போது உள்ளே விழுந்திருச்சு போலிருக்கு! (அசடு வழிகிறார்)

5. முதல் நண்பர்: அரபி சையது இருக்கான்ல. அவனை உட்காருன்னு சொன்னா உட்கார மாட்டான். ஏன் தெரியுமா?
2வது நண்பர்: அவனுக்கு பின்னால கட்டி வந்திருச்சோ?
முதல் நண்பர்: அதெல்லாம் இல்ல
3வது நண்பர்: அவனுக்கு வயிறு பெருசா இருக்குல்ல. உட்கார கஷ்டம்!.
முதல் நண்பர்: அதெல்லாம் இல்ல
4வது நண்பர்: அவன் பொண்டாட்டி வந்திருக்கிற பயத்தில இருக்கானோ என்னவோ?
முதல் நண்பர்: அதெல்லாம் இல்ல
எல்லோரும்: அப்புறம் என்னதான்னு சொல்லித்தொலை நாயே!
முதல் நண்பர்: அவனுக்கு தமிழ் தெரியாதுப்பா
எல்லோரும் சேர்ந்து அடிக்க ஓடுகிறார்கள்.

Post Comment

12 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிரிச்சேன்.
மனசிலாயா- மிக ரசித்தேன்.

லொடுக்கு said...

:)))))))

வெங்கட்ராமன் said...

நன்றாக சிரித்தேன். . .
நல்ல சிரிப்புகள். . . .

குசும்பன் said...

:)

மாசிலா said...

கடைசி சிரிப்பு நல்லா இருக்குதுங்க.

நன்றி சுல்தான் ஐயா.

வடுவூர் குமார் said...

ஹ! ஹ! ஹ!
அதெல்லாம் நல்லா இருக்கு.அவுங்க குதபஅ என்று சொன்னால் என்ன பதிலுக்கு சொல்வது என்று சொல்லவில்லையே.
என்றோ ஒரு நாள் அந்த பக்கம் வந்தால் உபயோகமாக இருக்கும் அல்லவா?

கோபிநாத் said...

\\மலையாளி: எல்லாம் மனசிலாயி. இந்த மனசிலாயியையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாம்.\\

:-)) கலக்கல்

சுல்தான் said...

வருகைக்கு நன்றி யோகன், லொடுக்கு, வெங்கட்ராமன், குசும்பன்,
மாசிலா

சுல்தான் said...

வருகைக்கு நன்றி வடுவூர் குமார்.
குதபஅ அல்ல சூ தபஅ (Soo thaba a')
அதற்கு பதிலாக 'ஜெய்ன் அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்வார்கள்.

நன்றி கோபிநாத்.

வடுவூர் குமார் said...

வந்திட்டேன் சுல்தான் பாய் துபாய்க்கு.
பழைய பதிவு ஞாபகம் வந்தது,அதிலேயே பின்னூட்டம் போடுகிறேன்.
என்னுடைய எண்: 050-8539506

Arnold Edwin said...

அருமைங்க... நிஜமாகவே வேற்று மொழி தெரியவில்லை என்றால் திண்டாட்டம் தான். அதிலும் நம்மில் சிலவருக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் (அரைகுறை) கூட தெரிவதில்லை வளைகுடா நாடுகளில். பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.

மின்னுது மின்னல் said...

:)


:)))))