Saturday, 18 August 2007

உண்ணும்போதும் நீங்கள் TV பார்ப்பவரா?

இன்று காலையில் ஷார்ஜாவிலிருந்து அடித்து பிடித்து (ஜபல் அலிக்கு) அலுவலகம் வந்து சேர்ந்தேன். நண்பரின் மனைவி மதிய உணவைப் பொட்டலமாக கட்டித் தந்திருந்தது.

அலுவலகம் போய்ச் சேர்நத பின்னர், ஷார்ஜாவிலிருந்து வியாபார அழைப்பு. போக வேண்டியதுதான் நமது பிழைப்பு. வேறென்ன? திரும்ப ஷார்ஜா (உணவுப் பொதியுடன்தான்). வியாபாரம் அரை மணி நேரத்திலேயே முடிந்து விட்டது. பக்கத்தில்தான் வீடு. வீட்டில்போய் நிம்மதியாய் பொதியைப் பிரித்து உண்ணலாமேயென்று வீடு போனேன்.

பொதியைப் பிரித்து இரண்டு கவளம் உண்டிருப்பேன். தொலைக்காட்சி பார்ப்போமே என்று 'சன்' போட்டால் 'சிறைச்சாலை' படம் ஒடுகிறது. 'நாயகன்' படத்தில் கமலைக் கொல்வாரே அந்த மனிதர் 'கஞ்சியிலே பல்லி' எடுத்து பல்லியை கையில் வச்சுகிட்டு கத்துகிறார். அதற்கு அம்ரிஷ்பூரி (வில்லன்) 'காய்கறியெல்லாம் காட்டில இருந்து வருது. அதுல பல்லியென்ன யானை கூட வருமெ'ன்று சொல்லி அவரை உண்ண கட்டாயப்படுத்துகிறார்.

‘இதென்னடா வம்பா போயிடுச்சே!’ என்று சாப்பாட்டை ஒதுக்கி வச்சுட்டு, 'ஜெயா' பார்த்தால் 'அந்தமான் காதலியில் சிவாஜி’, 'பணம்தான் இநத உலகத்தின் எஜமானன். பணம் என்னவென்னாலும் செய்யும்' என்று ஒவர் ஆக்ட் குடுக்கிறார்.

தொலைக்காட்சியை மூடி விட்டு, பல்லி விஷயத்தை மறக்க கொஞ்சம் உலாத்தி விட்டு, உணவுத்தட்டை எடுத்து இரண்டு கவளம் உண்டிருப்பேன். திரும்பவும் 'சன்' அதே 'சிறைச்சாலை'தான்.

முதலில் பல்லி தின்னச் செய்த அதே நடிகரை, கையும் காலையும் நான்கு பேர் பிடித்துக் கொள்ள, அதே அம்ரிஷ் பூரி 'நீ வெஜிடேரியனா! அதனால உனக்கு வெஜிடேரியன் உபயோகப்படுத்துற டாய்லெட்டிலிருந்து எடுத்து வந்த மலம்' என்று கூறி அவர் வாயில் மலத்தை ஊட்டச் செய்கிறார். மலமுண்ட அவர் அதன்பின் சிறையின் சுவர்களின் மேலேறி ஓடி தற்கொலை செய்து கொள்கிறார்.

அதற்கப்புறம் நான் எங்கே சாப்பிடுவது? தூக்கிக் குப்பையில் கொட்டிவிட்டு அலுவலகம் நோக்கிய பயணம்!

என்ன அது?
'சாப்பிடும்போது ஒழுங்காக சாப்பாட்டுத் தட்டை பார்த்து சாப்பிட்டா என்ன? தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே...'
'உன்னைப் பார்த்து பிள்ளைகளும் அப்படியே செய்கிறார்கள்'
என்று என் அம்மாவும் சில நேரங்களில் என் தங்கமணியும் திட்டுவது காதில் ஏன் ஒலிக்கிறது?.

Post Comment

9 comments:

கோவி.கண்ணன் said...

ம் இதுபோன்ற சங்கடங்கள் சாப்பிடும் போது திரைப்படத்தினால் மட்டும் வருவதில்லை. விளம்பரம் போடும் போது லைசால் விளம்பரம் அதில் ஒரு டாய்லட் தூய்மைப்படுத்துவதை செயல் முறையுடன் காட்டுவார்கள்.

நான் இதெற்கெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. வெஜிடேரியன் தான் இருந்தாலும் புழுகிடந்தாலும் எடுத்து ஓரமாக போட்டுவிட்டு சாப்பிடும் சகிப்புத்தன்மை உண்டு. அப்போது தெரியாமல் சாப்பிட்டதோ எத்தனையோ என்ற சமாதானமாக நினைத்துக் கொள்வேன்.

:))

மின்னுது மின்னல் said...

'சாப்பிடும்போது ஒழுங்காக சாப்பாட்டுத் தட்டை பார்த்து சாப்பிட்டா என்ன? தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே...'
'உன்னைப் பார்த்து பிள்ளைகளும் அப்படியே செய்கிறார்கள்'
என்று என் அம்மாவும் சில நேரங்களில் என் தங்கமணியும் திட்டுவது காதில் ஏன் ஒலிக்கிறது?.
//

அதெல்லாம் அந்த காதுல வாங்கி இந்த காதுல விட்டுட்டு படம் பாத்து முடிச்சிடுவோம் நாங்க.. :)இங்க கும்மியிலிருந்து படம் பார்ப்பது சாட் எல்லாம் சப்பிடும் போது கூட விட முடியலை.. :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அண்ணா!
நீங்க இவ்வளவுக்கு திரையில் பார்ப்பதைக் கண்டு ஒதுங்குவீர்களா?
நான் தொகா பார்த்துக்கொண்டு தான் சாப்பிடுவேன். இப்படியான காட்சிகளைக் கண்டு கொள்வதில்லை.

SurveySan said...

சாப்பிடும்போது சாப்பாட்டை ருசித்து, ஆர அமர சாப்புடணும்.

டி.வி எல்லாம் பாக்கப்ப்டாது.

அப்டீன்னு எனக்கும் தோணும். ஆனா, டி.வி பாத்துக்கிட்டே, தட்ட கைல புடிச்சு சாப்பட்ர சுகமே சுகம் :)

விஜயன் said...

நமக்கு சாப்பாடே 'கோலங்கள்' தானே

ஜெஸிலா said...

//நண்பரின் மனைவி மதிய உணவைப் பொட்டலமாக கட்டித் தந்திருந்தது.// போனாப்போகுதுன்னு உணவு கட்டி தந்தால் கண்டதை பார்த்து உணவை குப்பைக்கூடையில் கொட்டிட்டு அதற்கு காரணம் தொலைக்காட்சின்னு பலி வேறா? :-)

சுல்தான் said...

//நான் இதெற்கெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. வெஜிடேரியன் தான் இருந்தாலும் புழுகிடந்தாலும் எடுத்து ஓரமாக போட்டுவிட்டு சாப்பிடும் சகிப்புத்தன்மை உண்டு.//
நன்றி ஜிகே. உங்களுக்குப் பரவாயில்லை. நமக்கு சாப்பிடும்போது கசாமுசா என்று அதைப்பற்றி பேசினாலே குமட்டும்.

நன்றி மின்னுது மின்னல்.
//சாப்பிடும் போது கூட விட முடியலை.. //
ஆக என்ன வந்தாலும் தொகாவை விடுவதாக இல்லை என்று சொல்லுங்கள்.

நன்றி யோகன் பாரிஸ்.
//இப்படியான காட்சிகளைக் கண்டு கொள்வதில்லை//
ஒரு மாதிரி யோசனை வராதா?
நான் படத்தோட ரொம்ப ஒன்றி விடுகிறேனோ என்னவோ?

சுல்தான் said...

நன்றி சர்வேசன்.
//டி.வி பாத்துக்கிட்டே, தட்ட கைல புடிச்சு சாப்பட்ர சுகமே சுகம்//
அதெல்லாம் சரிதான். ஆனால் இப்படி கசாமுசா காட்சி வந்தால் என்ன செய்வீர்கள்?

நன்றி விஜயன்.
//நமக்கு சாப்பாடே 'கோலங்கள்' தானே//
ஆக சாப்பாட்டுல ஏதாவது கல் கிடந்தால், சாப்பாட்டை தூக்கிப் போட்டுட்டு கோலங்கள் பார்ப்பீர்கள் என்று சொல்கிறீர்கள்.
யப்பா!.....:)

இல்லைங்க ஜெஸீலா.
எனக்குப் பிடித்தமான உணவு என்றுதான் அன்புடன் தந்தார்கள்.
அதைக் கொட்ட வேண்டிய நிலைமை வந்திட்ட வருத்தம்தான் பதிவே!

சுல்தான் said...

அந்தப் படம் 'சிறைச்சாலை' -'சிறை' இல்லையாம்
- மாத்திட்டேன்