வெளி நாட்டில் படித்து வந்த, வட இந்திய ஆளான அந்த அலுவலக மேலாளர், அர்னோல்ட் ஸ்வஸ்நேகர் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவ்வழியே போன குட்டப்பன் "நம்ம ஆர்னியா? என்னுடைய நண்பர்தான்" என்று சொல்லவும், மேலாளர் சிரித்து விட்டு, "கேரளாவில் ஏதோ ஒரு மலை கிராமத்தானுக்கு அர்னோல்டு நண்பரா!" என்று கேட்டார். "நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். நான் எதுவும் செய்வதற்கில்லை" என்று குட்டப்பன்.
"அப்படியானால் அடுத்த வாரம் நான் அமெரிக்கா போகிறேன். நீயும் கூட வருகிறாய். அர்னோல்டு வீட்டுக்கு போய் என்ன என்று பார்த்திடுவோம்" என்றார் மேலாளர். குட்டப்பன் புன்னகையோடு ஒப்புக் கொண்டார்.
ஒரு வாரத்துக்குப்பின் இருவரும் அமெரிக்கா சென்றடைந்தனர். முதன் முதலில் நியூயார்க் சென்று அர்னோல்டை சந்திப்பதாக ஏற்பாடு. குட்டப்பனை பார்த்த அர்னோல்டு ஓடோடி வந்து குட்டப்பனைக் கட்டிப்பிடித்து "லாங் டைம் நோ ஸீ. வேர் வெர் யு மேன்" என்று கேட்கிறார். பின்னர் குட்டப்பனோடு அர்னோல்டு ஒரு காபி சாப்பிடுகிறார். மேலாளர் அதிர்ச்சியுடன், "சரி சரி நாம் போய் ஜார்ஜ் புஷ்ஷை பார்த்து விட்டு வருவோம். உனக்கு அவரைத் தெரியுமா என்ன என்று பார்த்து விடுவோம்" என்று சொல்ல, நமது குட்டப்பனும் புன்னகையோடு ஒப்புக் கொண்டார்.
ஜார்ஷ் புஷ் வீட்டுக்குப் போனால், அவரும் அர்னோல்டு போலவே வந்து, கட்டிப்பிடித்து, "வேர் வெர் யூ மை ப்ரண்ட் பார் லாங் டைம்" என்று சொல்கிறார். மேலாளரை வெளியில் உட்கார வைத்து விட்டு, குட்டப்பனோடு ஜார்ஷ் புஷ் தேநீர் அருந்துகிறார். வெளியில் வந்த குட்டப்பனிடம் மேலாளர், "நான் வாடிகன் போய் போப் இடம் அருளாசி வாங்க விரும்புகிறேன். நீயும் வா" என்றார்.
குட்டப்பனும் அவர் மேலாளரும் போல, வாடிகனில் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்த மக்கள் அருளாசிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது மேலாளர், "உனக்கு போப்பைத் தெரியுமா" என்று கேட்க "தெரியாமல் என்ன" என்கிறார் குட்டப்பன். மேலாளர் "எனக்கு நம்பிக்கையில்லை" என்று சொல்லவும், "கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லி கூட்டத்தில் புகுந்து விடுகிறார் குட்டப்பன்.
புதினைந்து நிமிடத்துக்குப் பின் குட்டப்பனின் கையைப் பிடித்தவாறு பலகணியில் போப் தோன்றுகிறார். கீழே குட்டப்பனின் மேலாளர் மயங்கி சாய்கிறார்.
குட்டப்பன் கீழே வந்தால், மேலாளர், செவிலியர்கள் மற்றும் முதலுதவியாளர்கள் புடை சூழ ஸட்ரெச்சரில்.
குட்டப்பன் மேலாளரிடம், "என்ன ஆச்சு சார்?"
மேலாளர்: அர்னோல்டு.... நான் நம்பிட்டேன். ஜார்ஜ் புஷ்... கூட... நான் நம்பிட்டேன். போப்... அதையும் நம்பிட்டேன். ஆனால் போப் உன் கையைப் பிடித்துக் கொண்டு பலகணியில் நிற்கும்போது கும்பல் "யார்ப்பா நம்ம குட்டப்பன் கையைப் பிடிச்சிகிட்டு நிற்கிறது" என்று பேசும்போது, தாங்காம மயங்கிட்டேன்பா.
இதனால் கிடைக்கும் பாடம்:
மலையாளியை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்
முக்கிய அறிவிப்பு:
இதைப் படித்தவுடன் போய் விடாதீர்கள். இதை காப்பி எடுத்து
10 மலையாளிகளுக்கு அனுப்பினால் - தேங்காய் எண்ணெய் கிடைக்கும்
20 மலையாளிகளுக்கு அனுப்பினால் - நேந்திரம்பழ சிப்ஸ் கிடைக்கும்
40 மலையாளிகளுக்கு அனுப்பினால் - புட்டும் கடலையும் கிடைக்கும்
100 மலையாளிகளுக்கு அனுப்பினால் - லுங்கி தொழிற்சாலைக்கு பின்னாலுள்ள நெல் வயலுக்கு அடுத்து உள்ள நிலம் இலவசமாம். கூடவே ஒரு மாதத்துக்குரிய தேங்காய் எண்ணெயும் நேந்திரம்பழ சிப்ஸ்ம் தரப்படுமாம்.
(நன்றி: ஷர்மி ரவி)
31 comments:
சுல்தான் ஐயா,
சீர்யஸ் ஆக படித்தேன்.
//
முக்கிய அறிவிப்பு:
இதைப் படித்தவுடன் போய் விடாதீர்கள். இதை காப்பி எடுத்து
10 மலையாளிகளுக்கு அனுப்பினால்
//
கடைசியில் காமடியாக ஆகிவிட்டதே.
:))))
அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.
முல்லைப் பெரியாறு அணையையும் சேலம் கோட்டத்தையும் தொந்தரவு பண்ணாம இருக்கச் சொல்லுங்க,,,போதும் ;)
கதை நன்றாக வந்த்திருக்கிறது. ஆனால் தாங்அல் மலயாளிகலை புகழ்கிறீர்களா அல்லது கிண்டலடிக்கிரீர்களா. புரியவில்லை.
கோவி
Nice One .. very funny...
:)
சுல்தான் பாய் ஒரு நச் பதிவு! என்ன பாடு படுத்துறானுவ:-))
இவ்விடுகையை தமிழ்மண சுடுபதிவில் வரச்செய்பவர்களுக்கு மம்முட்டி இலவசம்.
//"யார்ப்பா நம்ம குட்டப்பன் கையைப் பிடிச்சிகிட்டு நிற்கிறது"//
ஹ..ஹ..ஹ
உண்மையில் சிரிப்பை அடக்க முடியலேங்க.
நன்னாயிட்டு ண்டு சாரே.
ஓபிஸ் முழுசும் ஒரே சிரி.
குட்டப்பன் சிரி.
Good one.
Ravi
//கும்பல் "யார்ப்பா நம்ம குட்டப்பன் கையைப் பிடிச்சிகிட்டு நிற்கிறது" என்று பேசும்போது, தாங்காம மயங்கிட்டேன்பா//
அண்ணா!
விழுந்து சிரிக்கும்படி இருந்தது.
என்ன ஆச்சு சுல்தான் சார் :))
ஊருக்கு வெளியே நல்ல உழைப்பாளிகள்.
நானும் சீரியஸாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். ஜார்ஜ் புஷ் வந்தவுடன் தெரிந்துபோய்விட்டது. இதுவும்ஒரு மலையாளி நிலாவில் 'சாயா' கடை போட்ட கதைதான் என்று. இப்படியான "எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்" எல்லா மொழிகளிலும் எல்லா இடங்களிலும் உண்டு. குறிப்பாய் வளைகுடாவில் வாழும் தமிழ் பெருமக்கள் இதபோன்ற கதைகளால் பெருமகிழ்ச்சி அடைவார்கள். காரணம்.. அவங்க தமிழர்கள் படுத்துரபாடு இருக்கே சொல்லி மாளாது. தமிழர்கள் தெரிந்ததைக்கூட தெரியாது என்பார்கள் தெரியாததைக்கூட தெரிந்தது என்பார்கள் மலையாளிகள். அத்தனை மிகைநம்பிக்கை அவர்களைப்பற்றி.
//கடைசியில் காமடியாக ஆகிவிட்டதே.:))))//
நன்றி ஜிகே. சில நேரங்களில் superiority complex காரணமாக அவர்கள் செய்யும் காமெடிக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமேயில்லை.
//முல்லைப் பெரியாறு அணையையும் சேலம் கோட்டத்தையும் தொந்தரவு பண்ணாம இருக்கச் சொல்லுங்க...போதும்?//
நன்றி சிந்தாநதி. போன தடவை ராஜகோபால் என்ற பிஜேபிகாரர் மத்தியில் ரயில்வே அமைச்சராக இருந்து எத்தனையோ சிறப்பு ஏற்பாடுகளை கேரளத்துக்காக மட்டும் செய்தார். அதையெல்லாம் மறந்து விட்டு "அமைச்சர் வேலு இருப்பதால் மத்திய ரயில்வே தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல" என்று பேசுகிறார்கள்.
//தாங்அல் மலயாளிகலை புகழ்கிறீர்களா அல்லது கிண்டலடிக்கிரீர்களா. புரியவில்லை//
வருகைக்கு நன்றி அனானி கோவி. :))))))))))
//Nice One .. very funny...//
Thanks Nakkiran
//என்ன பாடு படுத்துறானுவ:-))//
உங்களையுமா அபி அப்பா! திறமைதான் காரணம்.:))))))
வருகைக்கு நன்றி theevu.
//ஹ..ஹ..ஹ
உண்மையில் சிரிப்பை அடக்க முடியலேங்க.//
வாருங்கள் முஸ்லிம்.
ரமதான் கரீம் முபாரக்!
//நன்னாயிட்டு ண்டு சாரே.
ஓபிஸ் முழுசும் ஒரே சிரி.
குட்டப்பன் சிரி.//
ஆதியத்த வரவுக்கு நன்னி ஜோதிராமலிங்கம் சாரே.
Thanks Mr. Ravi
//அண்ணா! விழுந்து சிரிக்கும்படி இருந்தது.//
நன்றி யோகன் பாரிஸ்
//என்ன ஆச்சு சுல்தான் சார் :))//
ஒன்னமே ஆவ மாட்டேங்குது கோபி!. அதான்.
//ஊருக்கு வெளியே நல்ல உழைப்பாளிகள்.//
//ஊருக்கு வெளியே நல்ல உழைப்பாளிகள்.//
சரியாகச் சொன்னீர்கள் வடுவூர் குமார்.
பலர் சிறந்த உழைப்பாளிகள். எந்த வேலையென்றாலும் செய்யத் தயங்காதவர்கள்.
சிலர் உழைக்காவிட்டாலும் அத்திசையில் முயற்சி செய்கிறார்கள்.
அவர்களுக்கே உள்ள சிறப்பான குணம் - மற்ற யார் தாழ்ந்தாலும்/தாழ்த்தினாலும் பரவாயில்லை தான் அல்லது தன் இனம் மட்டும் முன்னேற வேண்டும்.
அருமை..போப்பண்டவரைக் காட்டி குட்டப்பனோடு நிற்கிறது யார் என்று கேட்டதுதான் உச்சம். வாசித்து மனம் விட்டுச்சிரித்தேன். நன்றாயிருந்தது.
//தமிழர்கள் தெரிந்ததைக்கூட தெரியாது என்பார்கள் தெரியாததைக்கூட தெரிந்தது என்பார்கள் மலையாளிகள். அத்தனை மிகைநம்பிக்கை அவர்களைப்பற்றி.//
வளைகுடாவில் இருந்திருக்கிறீர்களா ஜமாலன். சரியாகவே சொல்லியுள்ளீர்கள் நன்றி.
தமிழர்களிடம் கூச்ச சுபாவம், தப்பாயிடுமோ என்ற பயம். அதனால் தெரிந்ததைக்கூட தெரியாதென்று சொல்லி டுகிறார்கள்.
மலையாளிகளுக்கு தெரியாததே இல்லை. வேலைக்கு சேருமிடத்தில், தெரியாத விடயத்தையும் 'தெரியாது' என்று சொல்வதேயில்லை. உள்ளே போய் விட்டால் போதும். பிறகு, எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை.
நேற்று சாப்பிடப் போன இடத்திலே ரொட்டி(நான்) செய்து தந்தது மலையாளி. மோசமாக இருந்தது. அதற்கு ஒரு பாகிஸ்தானி சொல்றான். "வேலைக்குச் சேர்க்கும் போது, 'நான்' சுடத் தெரியுமா என்று கேட்டிருப்பார்கள். எல்லா மலையாளிகளும் போல தலையை பல முறை ஆட்டி விட்டு உள்ளே வந்திருப்பான்".
//வாசித்து மனம் விட்டுச்சிரித்தேன். நன்றாயிருந்தது.//
நன்றி பாரதிநேசன்
அய்யோடா...யாராக்கும் ஈ சேட்டன்.நம்மட சுல்தான் பாய் யானு?வல்லிய பதிவு கண்டோ.ஞான் வளர ரச்சிச்சு வாசிச்சேனாக்கும்.பின்னே ஈ மாதிரி பதிவு அடிக்கடி வரனும் கேட்டியோ சேட்டா
செம்ம கலக்கல் காமெடி...
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த நகைச்சுவையை படித்து ரசித்தேன்.
நன்றி
ஷார்ஜாவிலிருந்து
சென்ஷி
//வல்லிய பதிவு கண்டோ.ஞான் வளர ரச்சிச்சு வாசிச்சேனாக்கும்//
நன்னி டீச்சரே. நிங்களப் பொல வல்லிய வல்லிய ஆள்காரொக்க பரையும்போள் சந்தோஷமாயி.
//பின்னே ஈ மாதிரி பதிவு அடிக்கடி வரனும் கேட்டியோ சேட்டா//
பின்னேயும் ட்ரை செய்யாம் பெங்களே.
//வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த நகைச்சுவையை படித்து ரசித்தேன்//
நன்றி சென்ஷி.
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க.:-) பாக்கிற ஆள் எல்லார் கிட்டயும் சொல்லீட்டிருக்கேன்.
வருக வருக. தங்களின் முதல் வருகைக்கு நன்றி காசி.
Nice One ...
Just for fun
//Nice One ... Just for fun//
தாமதமாக வந்தாலும் முதன் முதலாக என் பதிவுப்பக்கம் வந்திருக்கிறீர்கள். நன்றி மஞ்சு.
சும்மா விளையாட்டுக்குத்தான் - நன்றாக இருக்கிறதென்று சொல்கிறீர்களா! :))
வளைகுடா நாடுகளில் அரபி தெரியுதோ இல்லயோ, மலையாளம் தெரிந்தால் பிழைத்துக் கொள்ளாம்
நான் 1000 பேருக்கு கூட அனுப்புகிறேன், எனக்கு எனக்கு எனக்கு..
போங்க சுல்தான் பாய் வெட்கமா இருக்கு!!!
(100% நிஜம் )
வருகைக்கு நன்றி இல்யாஸ்.
//போங்க சுல்தான் பாய் வெட்கமா இருக்கு!!!//
குசும்பா. ஐயா! இதெல்லாம் டூ மச். சீக்கிரம் ஊருக்கு போங்க.
கல்யாணப் பேச்சு எங்கே நிக்குது?.
மலையாளிகளின் சுலபமாக பழகும் குணமும் எல்லாரையும் எந்த வகையிலாவது அறிமுகம் செய்து வைத்து கொள்ளும் இயல்பும் அவர்களுக்கு நிறைய நண்பர்களை தருகின்றன என்பது நிஜம்... இக்கதை சிரிக்க செய்தாலும், தமிழர்களின் "தள்ளி" நிற்க்கும் இயல்பை பற்றி சிந்திக்கவும் வைக்கிறது..
Post a Comment