
கூட்டுப்புழுவில் ஒரு நாள், ஒரு சிறிய துவாரம் தென்படத் துவங்கியது. அந்தச் சிறிய சந்திலிருந்து அந்த வண்ணத்துப் பூச்சி வெளிவரப் போராடிக் கொண்டிருப்பதை ஒரு மனிதன் மிக நீண்ட நேரமாய் கவனித்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று சலனங்கள் மறைந்து போனது. அது தன்னால் இயன்றவரை போராடியும், அதனால் முடியாமல் போய், நிறுத்தி விட்டதாக அவனுக்குத் தோன்றியது.
அவன் அந்த பூச்சிக்கு உதவ நினைத்து, ஒரு கத்தரியை எடுத்து அதன் துவாரத்தை சற்று பெரிதாக்கினான். இப்போது இந்த வண்ணத்துப் பூச்சி சுலபமாக வெளியில் வந்தது. ஆனால் அதன் உடம்பு சிறுத்து, உலர்நது போய், இறக்கைகள் வளர்ச்சியற்று வீணாகி இருந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் அதன் இறக்கைகள் வளர்ந்து விரிந்து அந்த வண்ணத்துப்பூச்சியின் உடலைத் தாங்கும் வண்ணம் செம்மையாவதைப் பார்ப்பதற்காக அந்த மனிதன் அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
எதுவும் நடக்கவில்லை. உண்மையில் அந்த வண்ணத்துப்பூச்சி தன் எஞ்சிய வாழ்நாளை பறக்க முடியா இறக்கைகளுடன், உலர்நத உடம்புடன், ஊர்ந்தே வாழ நேரிட்டது.
அந்த பூச்சி, அந்த கடினமான சிறிய துவாரத்திலிருந்து, முறைப்படி, சிறிது சிறிதாக போராடி வருவதே, இயற்கையான வழியில், அதன் உடம்பிலும், இறக்கையிலும் தேவையான பலத்தை பெற்றுத் தந்து, அது கூட்டிலிருந்து சுதந்திரமாய் வெளியேறி பறக்க உதவும் என்பதை அம்மனிதன் தன் இரக்க குணத்தினாலும் நேசத்தினாலும் அறிந்திருக்கவில்லை.
சில நேரங்களில் போராட்டங்கள் வாழ்வுக்கு மிகவும் அவசியமானது. எந்தத் தடைகளுமில்லாமல் வாழ்நாளை நாம் பழகியிருந்தால், அதுவே பின்னாளில் நம்மை முடக்கி விடும். தடை தாண்டத் தெரியாமல் தடுமாற்ற மேற்பட்டு, வாழ்வில் பறக்க வியலாது.
நான் பலத்தை வேண்டினேன்.
நான் பலம் பெற உதவியாக, சிரமங்கள் தரப்பட்டது.
நான் அறிவை வேண்டினேன்.
எனக்குச் சோதனைகள் தரப்பட்டு, தீர்க்க அறிவுறுத்தப்பட்டது.
நான் செழிப்பை வேண்டினேன்.
எனக்கு மூளையும், உடல் வலிவும் தரப்பட்டு, உழைக்க ஏவப்பட்டது.
நான் துணிவை வேண்டினேன்.
எனக்குத் தடைகள் தரப்பட்டு, தாண்டச் சொன்னது.
நான் அன்பை வேண்டினேன்.
வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைக் காட்டி, அவர்களுக்கு உதவச் சொன்னது.
நான் உதவி வேண்டினேன்.
எனக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது.
நான் கேட்ட எதுவுமே எனக்கு கொடுக்கப்படவில்லை - ஆனால்
எனக்குத் தேவையான அனைத்தையும் நான் பெற்றுக் கொண்டேன்.
வாழ்க்கையை பயமின்றி வாழுங்கள். எல்லா தடைகளையும் துணிவோடு எதிர் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் அதைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
9 comments:
சுல்தான் ஐயா,
ரொம்ப நாள் சென்று இப்போதுதான் சிறகடிக்கிறீர்கள்.
:)))))))
நன்றி ஜிகே. குடும்பம் மொத்தமும் விடுமுறையை கழிக்க வந்திருந்தது. கூடவே குடும்பத்தோடு உம்ரா(மக்கா) பயணம். ஆணி பிடுங்குமிடத்து சிக்கல்கள். இரண்டு மூன்று மாதமாய் நேரமே இல்லை. இனி பதிவேன்.
சுல்தான் அண்ணா,,,
இயற்கையாய் பழுப்பதை செயற்கையாய் பழுக்கவைக்க முயலாதே என்பதன் பொருளில் சிறப்பாகத் தந்திருக்கிறீர்கள். நல்ல செய்தி
தன்னம்பிக்கை கூடுகிறது இதை வாசித்தவுடன்.
//கூடவே குடும்பத்தோடு உம்ரா(மக்கா) பயணம். //
மாஷா அல்லாஹ்.
//இனி பதிவேன். //
வாசிக்க ஆவலுடன்.
இதனை நான் ரொம்ப காலத்திற்கு முன்பு ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். மறுபடியும் தமிழில் படிக்க நன்றாக இருக்கிறது.
சிந்திக்க தூண்டும் நல்ல கருத்துக்கள்.
நன்றி வாசகன், லொடுக்கு.
சரியாகச் சொன்னீர்கள் ஜெஸீலா. என் நண்பர்கள் ஷர்மிளா/இரவிக்குமார் எப்போதோ அனுப்பித் தந்தது. நன்றி போட மறந்திருந்தேன்.
நன்றி ஷர்மிளா/இரவிக்குமார், ஜெஸீலா.
வருகைக்கு நன்றி வளர்பிறை
சொல்ற அளவுக்கு ஏதும் சாதித்தவனில்லை. எழுதவும் சோம்பேறி. அழைப்புக்கு நன்றி ஞானியார்.
Post a Comment