இந்த வருடம் ஆரம்பத்திலிருந்து தமிழ் வலைப்பூக்கள் அறிமுகம் ஆனது. யாரோ நண்பர் ஈ-மெயிலில் அறிமுகப்படுத்தியிருந்தார். யார் என்று நினைவில் இல்லை. அதன்பின் வலைப்பூக்களை பார்வையிடுவது தினப்படி வழக்கமானது. ஊர் (தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இலப்பைக்குடிக்காடு) போயிருந்த ஒரு மாதத்தைத் தவிர.
எழுதிப் பழக்கமில்லை. பிடித்த மற்றும் பிடிக்காத பதிவுகளுக்கு பின்னூட்டம் மட்டும் இட்டுக் கொண்டிருக்கிறேன். இனி நானும் பதியலாம் என்றிருக்கிறேன். எனக்குப் பிடித்ததும், பிடிக்காததும், படித்ததும், படிக்க விரும்புவதும் இன்னும் என்னவெல்லாமோ.
இயன்றால் சீரியஸான(!!!!) பதிவுகளும் போடுவேன். ஆனால் பதிவு போடுவதைப் பற்றி தெளிவான விபரம் இல்லை. இவ்வுலகில் மற்றவர்களால் செய்ய முடிந்த ஒன்றை முயன்றால் நம்மால் முடியாது போகுமா என்ன? இல்லையென்றால் சீனியர் பதிவர்களை துணைக்கழைப்பதுதான்.
8 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்!
வாங்க! வாங்க!! உங்கள் வரவு நல்வரவாகுக!!!
எழுத்து நடை நன்றாகவே உள்ளது. கலக்க வாழ்த்துக்கள். காத்த்ருக்கிறேன் உங்கள் பதிவுகளுக்காக!!
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்
தங்கள் வரவுக்கும், அன்பான வரவேற்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி லொடுக்கு.
வருகவென வரவேற்று வாழ்த்துகிறேன், நண்பரே!
கலக்குங்க!
தங்களைப் போன்ற சீனியர்களின் வருகைக்கும், வரவேற்புக்கும், வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி எஸ்கே.
வாங்க வாங்க.
//இனி நானும் பதியலாம் என்றிருக்கிறேன்//
அப்போ நீங்களும் மாட்டிகிட்டீங்க :). இது தான் ஆரம்பம் ன்னு வேற சொல்லிட்டீங்க. ஆரம்பிங்க எல்லாம் வெற்றியாய் இருக்கும்.
தங்கள் அன்பான வரவேற்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி சிவமுருகன்.
வருக, நண்பரே, வருக.
பயனுள்ள பல பதிவுகளை தருக.
அன்புடன்
"குடந்தை" இஸ்மாயில் கனி,
ஜித்தா, சவுதி அரேபியா
வருகைக்கு நன்றி நண்பரே. இன்ஷாஅல்லாஹ் பயனுள்ள பதிவையும் எழுத முயற்சிப்போம்.
Post a Comment