காலங்காலமாக நம்பப்பட்ட ஏழு மருத்துவ நம்பிக்கைகளைப் பற்றி ஆய்ந்த இரண்டு அமெரிக்கர்கள் தங்களின் ஆய்வு முடிவுகளை அமெரிக்கன் ஜேர்னல் ஆப் ஸைக்காலஜி (American Jouranl of Psychology)ல் வெளியிட்டனர். அது நேற்று கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னலில் (British Medical Journal) வந்துள்ளது.
1. நாளொன்றுக்கு குறைந்தது எட்டு குவளையாவது நீரருந்துதல் வேண்டும்.இது பற்றி பலவாறு நாம் கேட்டிருந்தாலும் அதை நிரூபிக்கும் எந்த அறிவியல் சான்றுகளும் இதுவரை இல்லை.
2. மங்கலான வெளிச்சத்தில் படிப்பது பார்வைக் கோளாறை ஏற்படுத்தும்.இத்துறை சார்ந்த அறிஞர்களில் பெரும்பாலோர் அவ்வாறு படிப்பது நிரந்தர பார்வைக் குறைவை ஏற்படுத்தும் என்பதை மறுக்கின்றனர். மாறாக சாதாரணமாக பார்க்க முடிவதை கூட கண்கணை சுருக்கி பார்த்தல், அடிக்கடி கண் சிமிட்டுதல் மற்றும் கூர்ந்து நோக்க இயலாமை போன்ற குறைபாடுகளைத் தரலாம் என்கின்றனர்.
3. முடிகளை மழித்தால் அடர்த்தியாகவும் வேகமாகவும் திரும்ப வளரும்.ஆய்வு முடிவுகளின்படி, முடிகள் அடர்த்தியாகவும் வேகமாகவும் வளருவதற்கு, மழித்தலினால் எந்த நன்மையுமில்லை. மாறாக மிருதுவான மழிக்காத முடிகளை மழித்த பின்னான முடியின் அடிக்கட்டைகளுடன் பார்கக்கும்போது அடர்த்தியானது போல தோற்றமளிக்கும்.
4. வான்கோழி உண்பது மயக்க உணர்வைத் (Drowsy) தரும்.வான்கோழியிலுள்ள ட்ரிப்டோபான் (tryptophan) எனும் அமினோ அமிலம் தூக்கம் மற்றும் மனோநிலையை கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. எனினும் அதிலுள்ள இந்த அமிலத்தின் அளவு சாதாரண கோழி மற்றும் அரைத்த மாட்டிறைச்சியில் உள்ள அதே அளவுதான். பெருநாட்களில் நாம் உண்ணும் மற்றும் பருகும் அதிகப்படியான உணவுதான் இந்த மயக்க உணர்வுக்கு காரணமாக இருக்கலாம்.
5. நம் முளையின் 10 சதவிகிதத்தை மட்டுமே நாம் உபயோகிக்கிறோம்.இந்த நம்பிக்கை 1907ம் ஆண்டுகளிலேயே துவங்கி விட்டது. எனினும் இமேஜிங்(Imaging) முறையில் நோக்கும் போது, மூளையின் எந்தப் பகுதியும் உறக்கத்திலோ முழுதும் செயலற்றோ இல்லை.
6. இறந்த பிறகும் முடிகளும் நகங்களும் வளர்கின்றன.இந்த நம்பிக்கை சில பேய்க்கதைகள் மூலம் பரவியிருக்கலாம். இறந்த உடலின் தோல்கள் காய்ந்து சுருங்கி விடுவதால் அதிலுள்ள நகங்களும் முடிகளும் நீண்டதாகத் தோற்றமளிக்கின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
7. மருத்துவமனைகளில் கைப்பேசிகள் உபயோகிப்பது ஆபத்தானது.இது குறித்த பலவாறாக வலியுறுத்தப் பட்டிருப்பினும், கைப்பேசிகள், மருத்துவ சாதனங்களை பாதிப்பதென்பது வெகுக்குறைவே.
இந்த ஆய்வுகள் ஆரோன் கரோல் (Aaron Carroll, an assisitant professor of paediatrics at the Regenstrief Institute, Indianapolis) மற்றும் ரேச்சல் ரீமேன் (Rachel Vreeman, fellow in children’s health services reasearch at Indiana University School of Medicine) என்ற இரு ஆய்வாளர்களால் செய்யப்பட்டது.
Post Comment