Tuesday, 21 July 2009

போட்டிக்கு போட்டோ

இந்த தடவை இந்தியா வந்த போது குடும்பத்தோடு டெல்லி, ஆக்ரா, இராஜஸ்தான், சண்டிகார் (பஞ்சாப்), குளு மனாலி (ஹிமாச்சல் பிரதேசம்) போன்ற இடங்களுக்கு சென்று வந்தோம். என் மகளை கேமராவை கையாள விட்டு விட்டேன். கையில் கொண்டு போன செல்பேசியிலேயே நானும் கொஞ்சம் சுட்டுத் தள்ளினேன். பிள்ளைகளை, அம்மாவை, தங்கமணியை, தமக்கையை, அந்த இடங்களை என ஒன்றாகவும் தனித்தனியாகவும் சுமார் இருநூற்றைம்பது படங்கள். இதிலுள்ள எல்லா படங்களும் செல்பேசியில் எடுக்கப்பட்டதுதான். மெக்கா படம் மட்டும் இப்போது எடுத்தது அல்ல.

பின்னால் அந்த பயண அனுபவம் ஏழுத வேண்டும். இப்போதைக்கு இதிலிருந்து ஒன்றை PIT போட்டிக்கு அனுப்பி உள்ளேன். இருக்கின்ற படங்களில் எது 'தேவலாம் என்கிற நிலையில் இருக்கிறது' என்று நீங்கள் சொன்னால் என் அறிவை கொஞ்சம் பழுது பார்க்க உதவும்.

1.குதுப்மினார்


2.இராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூர் மியூஸியம்


3.அக்பர் அரண்மணை, இராஜஸ்தான்


4.டில்லி செங்கோட்டை


5.மெக்கா மஸ்ஜித் (ஹரம் ஷரீப்)


6.டெல்லி ஜூம்மா மஸ்ஜித்


நான் எடுத்த இந்தப் படங்களில் ஏதாவது Pit போட்டிக்கு அனுப்பும் அளவுக்கு நன்றாக இருக்கிறதா? படங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்க.
(படங்களை பெரிதாய் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்)

Post Comment

Tuesday, 14 July 2009

நானும் மலையாளப்படமும்

பக்கத்து அறையில் படுத்திருந்த அம்மா திடீரென்று எழுந்து வந்து, "மலயாளப்படம் பாக்குறானாம் மலயாளப்படம். பச்சை பச்சையா பேசுறாங்க. போய்ப் படுறா" ன்னு சொல்லிட்டு தொ.கா பெட்டியை மூடி விட்டு, குழல் விளக்கை மூடி, இரவு விளக்கைப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள்.








தந்தையின் மறைவுக்குப்பின் அப்பாவின் அந்தக் காலத்து சிங்கை நண்பர் கேரளாவிலிருந்து எப்போதாவது வருடத்துக்கொரு முறை வீட்டுக்கு வருவார். அவர் உடல் நலமில்லாதிருப்பதாக அறிந்து திருவனந்தபுரம் சென்று பார்த்து வரக் கிளம்பினோம்.

பயணத்தின் போது எனக்கு மலையாளத்தில் பேசத் தெரியும் என்பதாக சொல்லி ஓரிரு வார்த்தைகள் என் அம்மாவிடம் சொன்னேன்.
"தேவலாமே! நல்லா பேசுறியே!" அம்மா புகழ்ந்தார்கள்.
அம்மா சிங்கையில் வாழ்ந்ததால் "ஆச்சி! குட்டி கரையிணு!" என்ற மலையாளப் பேச்சு (மட்டும்) நன்றாகத் தெரியும்.
தங்கமணி உடனே, "உங்களுக்கும் மலையாளம் தெரியாது. எனக்கும் தெரியாது. இவர் ஏதோ சொல்றத வச்சு நாமளே முடிவு பண்ணிட்டா எப்படிம்மா! யாராவது மலையாளம் தெரிஞ்சவங்க சொல்லணும்" என்று காலை வார
"சே, இல்லப்பா! துபைல கத்துக்கிட்டதுப்பா!" என்று நான் சொன்னாலும்
"சரி! சரி!. அங்க போய் நீங்க மலயாளத்துலேயே பேசுங்களேன்" என்று தங்கமணி காலை வாரி விடுவதிலே குறியாய்.

திரும்ப வரும் போது, மகன் "அம்மா! எனக்கு சக்கரை கொடுமா!" என்று அம்மம்மாவிடம் கேட்க,
"இப்ப என்னாத்துக்கு சக்கரை. இங்க யாரு சக்கரை எடுத்து வந்தா" என்று சொல்ல
"இல்லம்மா! மலையாளத்து சக்கரை கொடுமா!" எனக் கேட்க
தங்கமணியோ, "உதைதான் வாங்கப்போறே. இப்ப என்ன சக்கரை! போடா!" என்று சத்தம் போட
"பாருங்க டாடி. மலையாளத்துல சக்கரைன்னா தண்ணி தானே?"
"டேய். அது வெள்ளம்டா"
"சே. ஆமால்ல""
சிரித்து சிரித்து ரயில் பெட்டிக்கே காது வலி வந்திருக்கும்.


தங்கமணி இடம் நான், "அது சரி. போகும் போது என்னைக் காலை வாரினயே. அவுங்களே சொன்னாங்க! கேட்ட இல்ல!"
"என்ன சொன்னாங்க!.... ஓரளவு பேசுறதா சொன்னாங்க.... நல்லா பேசறீங்கன்னா சொன்னாங்க!"
"ஒப்புக்க மாட்டியே...." வாலைச் சுருட்டி வச்சாச்சு.


வீட்டுக்கு வந்த சில நாளில், ஏதோ ஒரு மலையாள சேனலில் நல்ல மலையாள குடும்பப் படம் ஒன்று இரவில் போட்டார்கள். பிள்ளைகள், அம்மா, மனைவி எல்லோரும் மொழி புரியாததால் தூங்கப் போய் விட்டார்கள். தூக்கம் வந்தாலும், மலையாளம் தெரியும் என்று மனைவியிடம் காண்பிக்க, நான் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கணவன் மனைவிக்கிடையில் பிரிவினை வந்து குழந்தையை மனைவியிடமிருந்து கணவன் பறிக்கிற மாதிரியான காட்சி.
"எண்ட குஞ்ஞே!........ என்ட குஞ்ஞ ஞான் விடுத்தில்ல!" - என்று மனைவி அலற,
"ஞான் இல்லிங்கும்போள் எண்ட குஞ்சு மாத்ரம் நினக்கெதுக்கடி?. என்ட குஞ்ஞ எனிக்கு தராம் பட்டில்லா" - என்று கணவன் பிடுங்கிப் போக,
"ஐயோ! எண்ட குஞ்ஞே!" என்று கத்திக் கொண்டே மனைவி மூர்ச்சையாகிறாள்.

அப்போது நடந்ததுதான், இந்த இடுகையின் முதல் பாரா. படியுங்கள்.





"சே!. அம்மா ஏதாவது தப்பா நினச்சிரப் போறாங்கப்பா!" "மலையாளத்துல இதுக்கு
'என்னோட குழந்தை. என்னோட குழந்தையை நான் விட மாட்டேன்' என்று பெண் சொல்ல
'நானே இல்லை என்றாகி விட்டபோது என் குழந்தை மட்டும் உனக்கு எதற்கு. என் குழந்தையை நான் தருவதாக இல்லை' என்று கணவன் பிடுங்கிப் போக
'ஐயோ! என்னுடைய குழந்தை!' என்று கத்திக் கொண்டே பெண் மயங்கி விடுகிறாள்
இதுதான்பா அர்த்தம். அம்மா கிட்ட போய்....., நான்.... என்ன சொல்ல" என்று தங்கமணியிடம் எடுத்துச் சொல்ல
"சும்மா இருங்க. நான் அம்மா கிட்ட பக்குவமா சொல்லிக்கறேன். தப்பா நினைக்காத அளவுக்கு நான் பாத்துக்கிறேன். சரியா?" என்று தங்கமணி சொன்னதும்தான் மனது ஓரளவு திருப்தியானது.

இது பழைய கதை அண்ணாச்சிமாரே.

Post Comment