பின்னால் அந்த பயண அனுபவம் ஏழுத வேண்டும். இப்போதைக்கு இதிலிருந்து ஒன்றை PIT போட்டிக்கு அனுப்பி உள்ளேன். இருக்கின்ற படங்களில் எது 'தேவலாம் என்கிற நிலையில் இருக்கிறது' என்று நீங்கள் சொன்னால் என் அறிவை கொஞ்சம் பழுது பார்க்க உதவும்.
1.குதுப்மினார்
2.இராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூர் மியூஸியம்
3.அக்பர் அரண்மணை, இராஜஸ்தான்
4.டில்லி செங்கோட்டை
5.மெக்கா மஸ்ஜித் (ஹரம் ஷரீப்)
6.டெல்லி ஜூம்மா மஸ்ஜித்
நான் எடுத்த இந்தப் படங்களில் ஏதாவது Pit போட்டிக்கு அனுப்பும் அளவுக்கு நன்றாக இருக்கிறதா? படங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்க.
(படங்களை பெரிதாய் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்)
10 comments:
நன்றிங்க ஐயா!
அனைத்தும் அருமை
அனைத்தும் அருமை
ஆனால்
6.டெல்லி ஜூம்மா மஸ்ஜித்.
மிகவும் தெளிவாக தெரிகிறது.
வெற்றிபெற வாழ்த்துகள்.
Asif Meeran said என்ன இது? இந்த முறை அமீரக வாசிகளெல்லாம் குலு வுக்கு குளுகுளுன்னு போய்யிட்டு வந்திருக்கோம் போல :-)
குத்ப்மினார் படம் நல்ல கம்போஸ் செய்யப்பட்டுள்ளது...
//நன்றிங்க ஐயா!//
நன்றிங்க பழமைபேசி!. அது சரி. எதுக்குங்க நன்றி?
//அனைத்தும் அருமை//
நன்றிங்க திகழ்மிளிர். நான் வருத்தப்படக் கூடாதுன்னு இப்படி சொல்றீங்க. இநதப் படத்துக்கெல்லாம்......
பெரிய மனசுக்காராவுங்க!
//டெல்லி ஜூம்மா மஸ்ஜித்.
மிகவும் தெளிவாக தெரிகிறது.
வெற்றிபெற வாழ்த்துகள்//
நன்றி பிரவின்குமார். நீங்களாவது நிழற்படங்களில் ஒன்றைத் தெரிவு செய்து சொன்னீர்களே.
//என்ன இது? இந்த முறை அமீரக வாசிகளெல்லாம் குலு வுக்கு குளுகுளுன்னு போய்யிட்டு வந்திருக்கோம் போல :)//
அண்ணாச்சி நீங்களும் குளுவுக்கு போயிருந்தீர்களா? அதுதான் உங்கள் பிள்ளைகளின் படத்தின் பின்னால் தாஜ் தெரிந்ததா?. மனாலியின் குளிருக்கு முன்னால் குளுவோட குளிரெல்லாம் ஒன்றுமே இல்லை. பயாஸ் நதியின் குளிர் நீரில் RAFTING போனீர்களா? மிக அருமையான அனுபவம்.
//குத்ப்மினார் படம் நல்ல கம்போஸ் செய்யப்பட்டுள்ளது...//
நன்றி கீழை ராஜா. அதைத்தான் நான் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பி இருக்கின்றேன்.
குதுப்மினாரின் முழு உயரத்தை இத்தனை தெளிவாகவும் அழகாகவும் யாரும் பிடித்ததில்லை. பாராட்டுக்கள்.
http://kgjawarlal.wordpress.com
எனக்கு பிடிச்சது மெக்கா மஸ்ஜித் {ஹரம் ஷரீப்}
எல்லா படங்களும் அருமை.
Post a Comment