Monday, 12 October 2009

மன அழுத்தமும் தீர்வும்

சமீபத்தில்தான் இதைப் படிக்க நேர்ந்தது. இவ்வளவு எளிய தீர்வா! எப்படி சாத்தியம்?

கீழே ஒரு படம் இருக்கிறது. இப்போது பார்க்காதீர்கள். மீதமுள்ளதையும் படித்து விட்டுப் பார்த்தால்தான் சரியாகப் புரியும். புகழ் பெற்ற மாரி மருத்துவமனையில் மனஅழுத்தத்தை அளக்க இந்தப் படம்தான் பயன்படுகிறதாம்.

ஒத்த தோற்றமுடைய இரண்டு டால்பின்கள் தண்ணீரில் தாவிக் குதிப்பது போல படத்தில் காட்டப் பட்டுள்ளது. கவனமாக பரிசீலிக்கப்பட்ட அறிவியல் ஆய்வுகளின் படி ஒத்த தோற்றமுடைய இந்த டால்பின்கள் மன அழுத்தம் உள்ளவர்களின் அழுத்த அளவுக்கேற்ப மாறித் தோன்றுமாம். எவ்வளவு மாறித் தெரிகிறதோ அதற்குத் தகுந்தாற் போல் மன அழுத்தம் கூடுதலாக இருக்கிறதாம்.

இப்போது மடத்தைப் (சே!.. படத்தைப்) பாருங்கள். கூடுதல் வித்தியாசம் தெரிந்தால் உடனே விடுப்பு எடுத்து ஊர் போய் நன்றாக ஓய்வெடுத்து விட்டு வாருங்கள். மாற்றம் அவசியம்.



நான் பார்த்த போது இரண்டில் ஒரு டால்பின், மாடு போலத் தெரிந்தது. அதனால் பெருநாளோடு சேர்தது ஒரு பத்து நாள் விடுமுறை எடுத்து ஊர் போய் விட்டு வந்தேன்.

வந்து திரும்பவும் பார்த்தால் இப்போது பசு மாதிரி தெரிகிறது. அதனால் அடுத்த பெருநாளிலும் சுமார் பத்து நாள் விடுப்புக்கு இப்போதே சொல்லி விட்டேன்.

அடுத்தடுத்து ஊர் போய் வருகின்றவர்களுக்கு இரண்டும் ஒத்த தோற்றமுடைய டால்பின்களாகத்தான் தெரியும். அவ்வாறு தெரிந்தால் அடுத்துள்ள நல்ல கண் மருத்துவரை உடனே பார்க்கவும்.

Post Comment

10 comments:

கோபிநாத் said...

தல

பேசமால் ஊர்லையே இருந்துடுங்க ;))

கோபிநாத் said...

ஆகா!!!

காமெடி கீமெடி பண்ணலியே ;)

Unknown said...

//தல
பேசமால் ஊர்லையே இருந்துடுங்க ;))//

கொடுமை இன்னான்னா, ஊர்லயே இருந்துட்டா சம்பளம் தர மாட்டங்களாம் கோபி.

//ஆகா!!!
காமெடி கீமெடி பண்ணலியே ;)//
:D

Unknown said...

அது ஒரு கனாக் காலம் said... :-)

வருகைக்கு நன்றி சுந்தர ராமன் சார். :D

சென்ஷி said...

ஆஹா... நீங்களுமா!!!! :)

அன்புடன் அருணா said...

ம்ம்...எனக்கு ஒரு டால்ஃபினும் ஒரு சிங்கமும் தெரிகிறது!!!!:)

பழமைபேசி said...

ஐயா, நான் டிசம்பர்ல ஊருக்குப் போறேன்...இஃகி!

//நலமாய் இருக்கின்றீர்களா?//

எதோ உங்க புண்ணியத்துல!

Unknown said...

//ஆஹா... நீங்களுமா!!!! :)//
நாமேதான் :)
நட்சத்திர வாழ்த்துகள் சென்ஷி.

//ம்ம்...எனக்கு ஒரு டால்ஃபினும் ஒரு சிங்கமும் தெரிகிறது!!!!:)//
இப்படி ஒரு பிரச்னை வருமென்று எதிர் பார்க்கவில்லை அருணா.:))
உங்களுக்கு இரண்டு வகையான தீர்வு இருக்கிறது.~x(
1. நல்ல கண் மருத்துவரைப் பார்த்த விட்டு ஊருக்கு போய் வாருங்கள். அல்லது
2. ஊருக்கு போய் நல்ல கண் மருத்துவரைப் பார்த்து விட்டு வாருங்கள்.=))

Unknown said...

//ஐயா, நான் டிசம்பர்ல ஊருக்குப் போறேன்...இஃகி!//
உங்களுக்கும் பசுவாகத்தானே தெரிகிறது? b-(

//எதோ உங்க புண்ணியத்துல!//
இறைவனின் அளப்பெரும் கருணை நம் அனைவர் மீதும் உண்டு

Yousufa said...

அண்ணே,

எனக்கு ரெண்டும் டால்ஃபினாத்தான் தெரியுது; ஆனா டால்ஃபின்லாம் தண்ணியிலதானே இருக்கும், ஏன் ரோட்டில துள்ளுது?