பதிவர்களுக்கும் வலைமேய்ந்து பின்னூட்டபிடுபவர்களுக்கும்
என் தனிப்பட்ட அழைப்பு.
(வருவதற்கான வழிக்கு வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது)

படத்தில் அம்புக்குறியிட்ட இடம் விருந்துக்கு சிறப்பாக இருக்கும்.
(ஏனெனில் முழுத்தீவுமே நம் வசமிருப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொல்லை என்ற பேச்சே இருக்காது.)

கீழே உள்ளதுதான் என்னுடைய சிறிய கூரை வேயப்பட்ட வீடு

விருந்தினர் அறையின் பலகணி.
நல்ல கடல் காற்றோட்டம்.
பார்வைக்கும் விருந்து
உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.

கீழேயுள்ள படம் விருந்தினர் அறை

மாலை நேரத்திற்கான பழமும் பழரசமும் தயார்

தொலைக்காட்சிப் பெட்டியில் தகராறென்றால் கவலையில்லை
TV satelite control சிஸ்டம், bath tub பின்னால்தான் உள்ளது.

இதுதான் படுக்கை. வசதி குறைவென்று நினைத்தால்...
தீவின் பல இடங்களில் 'net'டும் இருக்கிறது

விருந்து முடிந்த பின் massage செய்யவும் ஓய்வு எடுக்கவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

வெளிச்சம் கொஞ்சம் சரி பண்ணியாகி விட்டது. இருந்தாலும் refine செய்ய வேண்டியதிருக்கிறது.

வீட்டிற்கு வருவதற்கான பாதை

அழைப்பு நீண்டதாகத் தெரிகிறது.
எனவே மிகுதியைத் அடுத்த தொடரில் தொடர்ந்து பார்த்து விட்டு
அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.
அடுத்த பதிவும் வந்து விட்டதே! அதையும் பார்த்து விட்டு வரலாமே?
17 comments:
இடம், போட்டோ அருமை.. சூப்பர்..
வருகைக்கு நன்றி சிவபாலன்.
இது மாலத்தீவுகளில் உள்ள ரங்கலி தீவில் அமைந்துள்ள " Hilton Resort" என்று நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி பரணி.
நீங்கள் சொல்லும் இடமாக இருக்கலாம்.
யாராவது சரியாகத் தெரிந்தவர்கள்தான் சொல்லனும்.
ஏனெனில் எனக்குத் தெரியாது.
இதெல்லாம் இணைத்ததோடு விமனப் பயணச் சீட்டும் கூடவே அனுப்பியதும் உடனே கிளம்பி வரத் தயார்!!
சைவ உணவு வகைகள் இருக்கும்தானே!
மற்றதெல்லாம் ஓக்கே!!
கண்ணைக் கவரும் படங்கள்!
மன்னாரையும் கூட்டி வரலாமா?
அவன் பதிவுக்கும் வந்து பார்க்கச் சொன்னான்!
:))
நாங்கூட ரம்ஜான் நிறைவு நாளில் எல்லாருக்கும் பிரியாணி போடப்போறிங்களொன்னு நப்பாசையோட வந்தேன்.
நல்ல காமெடி பண்ணிடிங்க!
அருமையான மின்னஞ்சல் படங்களை இரு பதிவாக தொகுத்துள்ளீர்கள்.
//அதற்குத்தான் எல்லா வசதிகளோடும் உள்ள ஒரு லக்ஸரி பஸ் வாடகைக்கு எடுத்துள்ளேன்.//
அத கொஞ்சம் காலை 12 மணிவாக்கில் ரங்கநாதன் தெருவிற்க்கு அனுப்பிவைத்தால் ஏறிகொள்வேன் :).
எஸ்கே ஐயா வரவுக்கு நன்றி. மன்னார் இல்லாமலா?
அவர்தானே நமக்கு உறவு ஏற்படுத்தித் தந்தார்.
மன்னாருடைய கடைசி பதிவில் post a comment என்ற விஷயத்தையேக்
காணோமோ. கொஞ்சம் பாருங்கையா!
வாங்க தம்பி வாங்க! உங்களுக்கில்லாத பிரியாணியா?
வருகைக்கு நன்றி சிவமுருகன். கனவுதானே! தெருவுக்கென்ன.
வீட்டு முற்றத்திலேயே கூட 12 சக்கர பஸ் நிறுத்தலாம்
பார்த்துப் பரவசம் கொண்டேன் மிஸ்டர் சுல்தான்
வரமுடியுமா என்ன?
ஏக்கம்தான் மிஞ்சியது!
வருகைக்கு நன்றி வாத்யாரய்யா!
கனவு காண காசா செலவு?
அப்புறம் உங்க ஐடியா தான் தலைப்பானதையா? நன்றி.
அடுத்த தொடரையும் பார்த்தீர்களா?
ஐயோ அண்ணை கடற்கோள் [சுனாமி] வருதுங்கோ... உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கோ!
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
வருகைக்கு நன்றி கேபிடல்ஸ்.
கனவு காணும் போது கடற்கோள் ஞாபகத்துக்கு வரவில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்?.
அதை நினைத்தாலே அடிவயிற்றில் அமிலம் சிலீர் எனச் சுரக்கிறது.
வருகைக்கு நன்றி கேபிடல்ஸ்.
கனவு காணும் போது கடற்கோள் ஞாபகத்துக்கு வரவில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்?.
அதை நினைத்தாலே அடிவயிற்றில் அமிலம் சிலீர் எனச் சுரக்கிறது.
நானும் ஒசியில் துபாய் பார்க்கலாமுன்னு வந்தா ஏமாத்திப் போட்டீங்களே , ஐயா
:))))))))
வேந்தன் வருக! வருக!
இது துபாயாக இருக்காதென்று நினைக்கிறேன்.
Post a Comment