படித்துப் படித்து நீங்கள் சலிப்படைந்து விடுகிறீர்களா?
இவர்களுக்கு படிப்பது சலிப்பைத் தரவில்லை!
உங்களுக்கு பச்சைக் கீரைகளும் காய்கறிகளும் பிடிப்பதில்லை...?
இவர்களுக்கோ வேறு வழியில்லை!
நீங்கள் எப்போதும் உணவுக் கட்டுப்பாட்டை கையாள்கிறீர்கள்...?
அவர்கள் உண்ண விரும்புகிறார்கள்....
உங்கள் பெற்றோரின் மிகக் கூடுதலான கவனிப்பு உங்களை வருத்துகிறது.....?
அவர்களுக்கோ... பெற்றோர்களே இல்லை!
ஒரே மாதிரியான விளையாட்டு உங்களுக்குப் போரடிக்கிறது....?
அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை!!!
வீட்டில் 'அடிடாஸ்' வாங்கி தருகிறார்கள்... உங்களுக்கு 'நைக்'தான் பிடிக்கிறது...?
அவர்களுடைய 'பிராண்டு' இது மட்டும்தான்...!!!
உங்களைப் படுக்கைக்கு போகச் சொல்லி தொல்லை படுத்துகிறார்களா...?
அவர்கள் எழும்பவே விரும்பவில்லை
குறை சொல்வதை தவிருங்கள்.....
ஒரு வேளை, எல்லாம் தெரிந்திருந்த பின்னும்,
உங்கள் கவலை போகவில்லையென்றால்
உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பாருங்கள்....
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்
இந்த குறைந்த ஆயுளில்
உங்களை இத்துணை வசதியுடன்
வாழ வைத்ததற்காய்
• மிகுந்த பணிவோடு சொல்லுங்கள்
• என் இறைவனே! என்னில் இத்துனை கருணை பொழிந்ததற்காகவும், என் உடல் நலம்,
என் குடும்பம், என் குழந்தைகள், என் வேலை, என் நண்பர்கள் மற்றும் அனைத்து
அருள் வளங்களுக்காகவும் உனக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
• உன்னை மறந்தவர்களும், உன்னை அறியாதவர்களும் உன்னையும், நீ செய்துள்ள
அளப்பறிய கருணையையும், உன் அன்பையும் அறிவுறுத்த எனக்கும்
ஒரு வாய்ப்பைக் கொடு.
குறைவாகக் கேட்பதையும்
கூடுதலாக நன்றி செலுத்துவதையும்
எப்போதும் உங்கள் நினைவிலிருத்துங்கள்.
8 comments:
என் இறைவனே!
என்னில் இத்துனை கருணை பொழிந்ததற்காகவும், உடல் நலம், குடும்பம், வேலை, நண்பர்கள் மற்றும் அனைத்து
அருள் வளங்களுக்காகவும் உனக்கு நான் நன்றி செலுத்துகிறேன்
முன்பே E-mailலில் பார்த்ததுதான் என்றாலும் உங்கள் மொழி பெயர்ப்புக்கும் நினைவுபடுத்தியதிற்கும் நன்றி
எல்லாப்புகழும் இறைவனுக்கே. ஈகைத்திருநாளில் பொருத்தமான பதிவு.
தங்களுக்கு என் மனமார்ந்த பெருநாள் வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி அபுசுஹைல். ஈத் முபாரக்.
நன்றி வேந்தன். இது என் நண்பர் ரவி ஷர்மி அனுப்பித்தந்த மெயில்தான். எல்லோருக்கும் சொல்லத் தகுந்ததென்று நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி பூங்குழலி. 'நம்மில் எளியாரைக் கண்டு நமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க' என்று நாம் படித்ததுதான். மறந்து விட்டிருக்கிறோம்.
our people in west must look it.
வருகைக்கு நன்றி காண்டீபன்.
Why only west Anony? What about us and around us?
இறைவா! உன் கருணைக்கு நன்றி!
நண்பரே! இப்பதிவுக்கு நன்றி!
வருகைக்கு நன்றி எஸ்கே.
Post a Comment