Tuesday 22 July 2008

மக்களாட்சிக்கே பெருத்த அவமானமான நாள் இன்று

இன்று என்றுமில்லா அளவில் மக்களாட்சிக்கே பெருத்த அவமானமான நாள்

மத்திய பிரதேசத்தைச் சோர்ந்த இரண்டு எம்.பி. மற்றும் இராஜஸ்தானைச் சார்நத ஒரு எம்.பி ஆக மூன்று பா.ஜ.க. எம்.பிகளுக்கு ஓட்டு நடைபெறும் நேரத்தில் அவைக்கு வரக்கூடாது என்பதற்காக ஒரு கோடி ரூபாய் முன் பணமாகத் தரப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் குதிரை பேரம் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் வெறுமனே எதையும் பேசக்கூடாது என்று சொன்னதாகவும் தெரிகிறது. எனவே இன்று சபை நடவடிக்கையின் போதே சபாநாயகரிடம் முன் அனுமதி பெற்று அப்பணம் 3 கோடி முழுவதையும் பாராளுமன்ற சபையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்து கொட்டியதாகவும், அதை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெற்று, பாராளுமன்ற அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

விரல்கள் சமாஜ்வாதியின் எம்.பி.க்களை நோக்கி நீள்வதாக தெரிகிறது.

சபாநாயகர் சபையை ஒத்தி வைத்து, பிரதமரின் பதிலளிப்புக்குப் பின் நேரடியான ஓட்டளிக்க அழைக்கப் போவதாகவும் செய்திகள் சொல்கின்றன.

இது பா.ஜ.க.வினரின் நாடகமாகவும் இருக்கலாமென டில்லி வட்டார ஊகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் கடுமையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் பட வேண்டியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Post Comment

6 comments:

Savukkadi said...

பாஜக நாடகமாடுகிறது.

அனுசக்தி ஒப்பந்தத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தி நிறைவேற்றுவோம் என்று கூறும் இவர்கள் இப்பொழுது ஆட்சியை கவிழ்க்க போராடுவது ஏன்? அத்வானிக்கு பிரதமர் நாற்காலியின் மீதான வெறி தலைக்கேறிவிட்டது.

ஒருவேளை ஆட்சி கவிழ்ந்தால் அது காங்கிரஸுக்கு அனுதாப அலையாக மாறிவிடும் , அந்த அனுதாப அலையை மாற்ற வேண்டும் என்பதாலேயே இந்த லஞ்ச புகாரை அத்வானியின் தலைமையில் நிகழ்த்தியிருக்கிறார்கள். உன்மை கன்டறியும் சோதனையை நடத்தி மக்களுக்கு பாஜகவின் வேடத்தை தோலுரிக்க வேண்டும்.

கோவி.கண்ணன் said...

//இது பா.ஜ.க.வினரின் நாடகமாகவும் இருக்கலாமென டில்லி வட்டார ஊகங்கள் தெரிவிக்கின்றன.//

:)

பிஜேபி அப்பழுக்கற்ற கட்சி போல் இந்த நாடகததை நடத்தி இருப்பதாக நினைக்க முடிகிறது. இவர்கள் (பங்காரு லட்சுமணன்) ஏற்கனவே தெகல்கா கேமராவில் கையூட்டுப் பெற்று சிக்கியவர் தானே.

குசும்பன் said...

அட நீங்க வேற சுல்தான் சார்,

இவனுங்க இம்புட்டு பைசாவுக்கு பிரோஜினமானவங்களான்னு எனக்கு சந்தோசமா இருக்கு...

ஒரு பைசாவுக்கு கூட தேறாதவனுங்களுக்கு கோடி கோடியா பணம்...

ஸயீத் said...

//இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் கடுமையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் பட வேண்டியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.//

தண்டனையெல்லாம் சாதரண ஆட்களுக்குத்தான், அரசியல்வாதிகள் தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது பல ஆண்டுகளாகவே எழுதப்படாத சட்டம் என்பது உங்களுக்குத் தெரியாதா?.

இப்படி பித்தலாட்டம் போடும் இவர்களிடம்தான் நாம் நாட்டை ஒப்படைத்திருக்கிறோம் நம்மைக் காப்பாற்றுவார்கள்(?!) என்று.

வெட்கக்கேடு. :(

Unknown said...

நன்றி சவுக்கடி, ஜிகே, குசும்பன், ஸயீத்.
உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பணம் கொடுத்த போது, ஒரு தனியார் தொலைக்காட்சியைக் கொண்டு, இரகசியமாகப் படமெடுக்கப் பட்டு, அது சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இடம் கொடுக்கப் பட்டுள்ளது.

முழு விசாரணைத் தொடங்கப் படும் என்று சபாநாயகர் தரப்பு செய்திகள் சொல்கின்றன.

எந்த புற்றில் என்ன பாம்போ - பொறுத்திருந்து பார்ப்போம்.

Anonymous said...

பார"தீய" ஜனதா கட்சி தாங்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அதைத்தான் காங்கிரஸும் செய்திருக்கும் என்று சொல்லுகிறார்கள்.

பெட்டியில் இருந்து பணத்தை பழி போடுவதற்காக காட்டுவது பாஜகவுக்கு புதிதல்ல்ல.

ஹர்ஷத் மேத்தாவை காப்பாற்ற அத்வானி என்ன செய்தார் என்பதை மறக்காதவர்களுக்கு இது புரியும்.

பாஜகவின் கருத்துக்கு ஒவ்வாதவர்கள் அனைவருமே தேசதுரொகிகள் என்பது அவர்கள் பிரசார உத்தி.