Thursday 6 November 2008

ஒரு நேர்முகத் தேர்வும், நண்பரும் (2)

(ஏற்கனவே போட்ட பதிவு ஏதோ சினிமாவில் வந்தது என ஜிகே சொன்னதால் கொசுவர்த்தி சுழல விட்டு இன்னொரு பதிவு)
சென்னை. முது நிலை பட்டப்படிப்பில் தனிம வேதியியல் ஆய்வுக்கூடத் தேர்வு.(M.Sc Chemistry Inorganic Practical Exam - இதைத்தான் அப்படித் தமிழாக்கி ஒப்பபேத்தி இருக்கிறேன்) ஒரே நிறத்திலுள்ள மூன்று தாது உப்புக்களைக் ஒன்றாகக் கலந்து கொடுத்து விடுவார்கள். அது என்ன என்ன என்று படிப்படியான ஆய்வு முறைகளின் மூலம் கண்டு பிடிக்க வேண்டும்.

என்னத்தை கலந்தார்களோ சரியான முடிவகள் வராமல் எல்லோரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். எனக்கு முன்னால் ஒரு ஈரானிய மாணவன் அலி. குள்ளமானவன். பிப்பெட்டோ, பியூரெட்டோ (தமிழில் தெரியவில்லை) எடுக்கக் குனிந்தவன், நிமிர்நதால்.... அவன் ஆய்வு செய்து கொண்டிருந்த குடுவை கீழே விழுந்து உடைந்து, கொடுத்திருந்த(sample) தாது உப்புகளோடு கரைந்து போனது.
திரும்பக் கேட்டாலும் பெரிய இழுவைக்குப்பின் தருவார்கள். கெஞ்சிக் கொஞ்சி பணிவோடு நிற்க வேண்டும்.

மீதமிருந்த ஒரு மணி நேரத்தில் கால்மணி நேரத்துக்கு மேல் வாய்மொழி(viva voce)த் தேர்வு நடக்கும். மீதி நேத்தில் குட்டிக்கரணம் போட்டாலும் பெரிதாக சாதிக்க முடியாது. கடுப்பாகி, இதுவரை செய்த ஆய்வுகளில் எடுத்து வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு முடிவைத் தயார் செய்து கொண்டிருந்தான்.

அப்போது 'வைவா'க்கு அவனுக்கு அழைப்பு. சுல்தான் என்ன செய்ய? என்பது போலப் பார்த்தான். ஆதரவாக ஒரு சிரிப்பு 'ஜமாய் ராஜா' ன்னு கை காண்பித்தேன். வைவா அறைக்குப் பக்கத்தில்தான் நான் நின்று கொண்டிருக்கிறேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு குழப்பத்தில் தவறான பதில்களையே சொல்ல.

சரி கடைசிக் கேள்வி: மின்மினிப்பூச்சிகள் எவ்வாறு மின்னுகின்றன.
அலி: இறைவன் படைக்கும் போதே அதன் புட்டத்தில் சீரியல் லைட் வைத்து படைத்து விட்டதால்.... போங்கப்பா..

அந்தப் பேராசிரியை அடுத்து வந்த என்னை.... சொல்லனுமா?
ஏனய்யா அலீ. ஆங்கிலத்தில்தானே பதில் சொல்லி வந்தாய். கடைசிக் கேள்விக்கு மட்டும் இவ்வளவு சிரமப்பட்டு தெரியாத தமிழில் ஏனய்யா சொல்ல வேண்டும். அவ்வ்வ்வ்வ்வ்:(((((

(டிஸ்கி: இயற்கையில் அதன் பின்புறம் படிந்துள்ள பாஸ்பரஸ் எனும் தனிமத்தின் ஒளிரும் தன்மையால் - The fluorescent effect of Natural Phosphorous available on its back என்பது சரியான பதில் என நினைக்கிறேன்.)

Post Comment

5 comments:

Unknown said...

என்ன ஆயிற்று? என் பதிவை தமிழ்மணம் திரட்டவோ, இடுகையை புதுப்பிக்கவோ ஒத்துழைக்க மறுக்கிறதே.

Silver Prince said...

வணக்கம் சுல்தான் avl...

//பட்டப்படிப்பில் தனிம வேதியியல் ஆய்வுக்கூடத்//

கனிம வேதியியல்....

//பிப்பெட்டோ, பியூரெட்டோ (தமிழில் தெரியவில்லை//
இன்றும் இதற்கு சரியான தமிழ் வார்த்தை கிடையாது. நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

Unknown said...

வருகைக்கு நன்றி நாமக்கல் ஜாவா.
முதலில் கனிம என்றுதான் எழுதினேன். அப்புறம்தான் சந்தேகம் வந்து தனிம வேதியியல் என்று மாற்றினேன்.
தொடர்பு அறுந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகிறது. எல்லோரும் டோண்டு ஐயா மாதிரி எல்லாவற்றையும் நினைவில் நிறுத்த முடியுமா என்ன?
பிப்பெட்டுக்கும் பியூரெட்டுக்கும் தமிழில் பெயர் வைத்திருப்பார்கள். தேடினால் கிடைக்கும். சோம்பேறித்தனம்தான். யாராவது உதவி செய்கிறார்களா பார்ப்போம்.

Tech Shankar said...

செம்ம.. கடிங்க சாமியோவ்?

Unknown said...

//செம்ம.. கடிங்க சாமியோவ்?//
மறுமொழிக்கு நன்றி விஜய் பாலாஜி

என்னாங்கண்ணே, இப்பிடி சொல்லிட்டீங்க! விரக்தியில் அவன் சொன்ன அந்த ஒரு வாசகம் ஒரு வருட படிப்புக்கும் முயற்சிக்கும் தோல்வி என்ற பரிசைக் காரணமில்லாமல் எனக்குத் தரவிருந்தது. மயிரிழையில் தப்பினேன்.