இந்த நாடு அமெரிக்கா போல், கனடா போல், U.K.போல் அல்ல. இங்கே எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் நாம் இந்நாட்டின் குடிமகனாக முடியாது. இந்நாட்டு குடிமகன்கள் அனுபவிக்கின்ற எல்லாவற்றையும் பெறவும் முடியாது.
இங்கேயிருப்பவர்களில் முக்கால்வாசி இந்தியரும் பாகிஸ்தானியரும் பெங்காளிகளும் தங்கள் குடும்பத்தை தத்தமது நாடுகளில் விட்டு விட்டு இங்கே தனியாய் தவிப்பவர்கள்தாம். தொலைபேசிக் குடித்தனம்தான்.
நான் உள்பட எனக்குத் தெரிந்த பலரும் ஊரில் ஒரு தரமான அல்லது குடும்பத்தை கவுரவமாக கொண்டு செல்லத்தக்க ஒரு சுமாரான வேலை கிடைத்தால் கூடப் போதும், ஓடி விடலாம் என நினைப்பவர்கள்தாம். அந்த அனானி என்னவென்றால் இந்தியாவை வல்லரசாக்க...... எங்கள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறார்.
இனி சாம்பிளுக்கு துபை சாலை பற்றி 'துபைக்கு வருக! வருக!' என்ற தலைப்பில் எனது நண்பர் திரு மற்றும் திருமதி இரவிக்குமார் அவர்கள் அனுப்பிய மயிலை இங்கே பறக்க விடுகிறேன்.
1. உங்களிடம் துபையின் சில வாரத்துக்கு முந்திய சாலை வரைபடம் வைத்திருந்தால், உடனே தூக்கி எறிந்து விட்டு புதிய ஒன்றை வாங்கவும்.
2. நீங்கள் ராசிதியா போன்ற இடங்களில் தங்கியிருந்து உங்களிடம் நேற்றைய வரைபடம் இருந்தால் அது வழக்கத்திலில்லாத வரைபடமாகும். இன்றைய வரைபடம் தேவை.
3. வேறெங்காவது படித்த சாலை விதிகளை மறந்து விடுங்கள். துபைக்கென தனியான விதிகளுண்டு அதாவது ' வண்டியை நிறுத்தி, (நிற்காமல் தொடர்ந்து செல்லவேண்டுமென) பிரார்த்தி'.
4. அந்த சந்திப்பை கடப்பதற்கு உங்களுக்கு முன்னுரிமையுள்ள இடம்தானே! அதையெல்லாம் மற, பொறு.
5. அதி வேகத்தில் ஆபத்தான முறையில் துரத்தும் கார்கள் என்றெல்லாம் துபையில் எதுவுமில்லை. எல்லோருமே அப்படித்தான் பயங்கரமாக பயணிப்பர்.
6. புதிய கார் வாங்க நினைத்தால் முதலில் அது மணிக்கு 80கிமீ முதல் 160கிமீ வேகம் சாதாரணமாகப் போகுமா என்று ஊர்ஜிதம் செய்யுங்கள். எமிரேட்ஸ் சாலை உபயோகிப்பாளராக இருந்தால் இது மிகவும் முக்கியம்.
7. எல்லா திசைகளும் ஷேக் ஜாயித் சாலையிலிருந்து தொடங்கும். அந்த சாலைக்கோ தொடக்கமுமில்லை முடிவுமில்லை. இனி வரும் காலங்களில் இந்த சாலையைக் கடக்க ஒரு நாளைக்கு குறைந்தது 4 திர்ஹம் முதல் அதிக பட்சமாக 29 திர்ஹம் சாலை வரி கட்ட வேண்டுமாம்.
8. சாலையின் நெருக்கம் மிகுந்த நேரம் காலை 5.00 மணிக்குத் தொடங்கும். பின்னர் மாலை 1.00 முதல் 10.00 மணி வரை. சில நாட்களில் இந்நேரங்கள் கூடலாம்.
9. புதன் கிழமைகளின் சாலை நெருக்கம் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து தொடங்கும்.
10. நீங்கள் மஞ்சள் விளக்கைப் பார்த்து வண்டியின் வேகத்தை குறைத்தீர்களானால் பின்னாலுள்ள வண்டியால் மோதப்பட்டு காவலரிடமிருந்து சீட்டு பெற ஏதுவாகி விடும்.
11. நீங்கள் சிக்னலில் முதல் ஆளாக நின்று, பச்சை விளக்கு எரியத் தொடங்கியவுடன், பின்னாலுள்ள வண்டிகள் என்னதான் கத்தினாலும் பொருட்படுத்தாமல், ஒன்றிலிருந்து ஐந்து வரை பொறுமையாக எண்ணி விட்டு வண்டியை எடுங்கள். இல்லாவிட்டால் எதிர்த்த சாரியில் சிவப்பு விளக்கை கடந்து வரும் வண்டியோடு மோத நேரிடும்.
12. எல்லா முக்கியச் சாலைகளிலும் கட்டுமானப் பணிகள் எப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருப்பது இங்கே வாடிக்கை - வேடிக்கை. (உங்களின் வசதிக் குறைவுக்கு வருந்துகிறோம்! தொடர்ந்து...).
13. சில முக்கிய மில்லாத இடங்களில் 'ஓ நாம் இப்போது ஷார்ஜாவில் இருக்கிறோம்' என்ற வாசகம் கேட்கலாம்.
14. பெரிய பெரிய விளையாட்டு பையன்களுக்கு காரின் ஹார்ன் சத்தம்தான் விளையாட்டுச் சாதனம்.
15. யாராவது Land Cruiser, Tuned Patrol, Mercedes முதலிய பெரிய கார்களில் கண்ணாடியை வண்ணப் பேப்பரில் மறைத்துக் கொண்டு வந்தால் அவர்கள் போவதற்குத்தான் முதலிடம். அதுதான் இறுதி.
16. நீங்கள் ஏதாவது Corolla, Sunny அல்லது இது போன்ற சிறிய ஜப்பானிய கார்களில் வந்தால் வலது பக்க கடைசி வரிசையில் நின்று கொண்டேயிருங்கள். எதுவும் பேசாதே!.
17. சில சாலைகளில் நீங்கள் சிக்னலை தாண்டியபின் பார்த்தால் சாலையின் பெயரே மர்மமான முறையில் மாறியிருக்கும்..
18. திசையை கேட்டறிய வேண்டுமா? உருது தெரியுமா?
19. துபையில் குறுக்கே எங்கேயாவது ஒரு முறை போய் வர குறைந்தது 4 மணி நேரம் ஆகும். ஷேக் ஜாயித் சாலையில் மணிக்கு 140கிமீ வேகத்தில் போக முடியுமென்றாலும்.
20. மனதுக்கு அமைதி தரும் செய்தி - இந்நாட்டு அரபிகள் எப்படி ஓட்டுவது என்பதை பாகிஸ்தானியரிடம் கற்றார்களாம்.
21. பதினெட்டு (18) சக்கர வாகனங்கள் இந்நாட்டின் ஒரு முக்கிய அதிவேக வாகனமாகும். ஹத்தா to ஒமான் சாலையில் - வண்டி நிறைய பாரத்துடன் - மணிக்கு 120கிமீ வேகத்துக்கு மேல் இரத்தம் உறையும் பயங்கரமாய் பறக்கும்.
22. எமிரேட்ஸ் சாலையின் மணிக்கு 160கிமீ வேகத்தில் போவதெல்லாம் 'ஜூஜூபி;'. அதை விட குறைவான வேகத்தில் செல்வதெல்லாம் 'பப்பா'ஸ். வேகமாகச் செல்லும் வண்டி கேமராவை பார்த்ததும் திடீரென்று பூனையாய் 'பம்'மும் ஜாக்கிரதை.
23. துபை ஆட்டோட்ராம் (Dubai Autodrome) எமிரேட்ஸ் சாலையின் புதிய எக்ஸ்டென்ஷன் (extension).
வேலை தேடி துபைக்கு வருக வருக.
யாம் பெற்ற துன்பம் நீங்களும் அடைய விரும்பினால்.......
17 comments:
துபை அரசு என்னை நேஷனல் பெயிண்ட்ஸில் இருக்கும் உங்களை சந்தித்து வர அனுப்பி உள்ளது. கவனம். :)
லொடுக்கு என்ன ஆட்டோவா?
துபையில் ஆளில்லாமல் அதற்கும் நேஷனல் பெயிண்ட் ஆளான உங்களைப் பிடித்திருக்கிறார்கள்???
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:
manners - (இதற்கு தகுந்த தமிழ்ச் சொல் என்ன?) இதை எதிர்பார்ப்பது (பெரும்பாலான இந்தியர்களிடம் உட்பட) எதிர்பார்ப்பது காட்டுமிராண்டித்தனம்.
புதுசா என்னத்தை சேர்ப்பது கொட்டாங்கச்சி?
இத்தனை பேர் வரிசையில் நிற்கும் போது யாராவது ஒருவருக்கு அவசரம் ஏற்படுவதும் அனுமதி பெற்று உள்ளே நுழைவதும் நடப்பதுதான். ஆனால் சரியான வரிசைக்கு வராத வண்டிகள் பட்டாளமாக!
mannerஆ என்னா விலைங்க?
\\இத்தனை பேர் வரிசையில் நிற்கும் போது யாராவது ஒருவருக்கு அவசரம் ஏற்படுவதும் அனுமதி பெற்று உள்ளே நுழைவதும் நடப்பதுதான். ஆனால் சரியான வரிசைக்கு வராத வண்டிகள் பட்டாளமாக!\\
நாம் எல்லோரும் இந்நாட்டின் "Mannar", என்று சொல்லலாமா?.
:))))
வேலை தேடிச் செல்பவரைப் பற்றி எனக்குத் தெரியாது!
ஆனால், இத்தனையையும் மீறி அருமையான தமிழ் விருந்தோம்பல் வேண்டுமென்றால், தவறாமல் துபை செல்லுங்காள்!
அற்புதமான சுல்தான் என்னும் மனிதரின் உபசரிப்பைப் பெற்று இன்புறுங்கள்!
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையமெல்லாம்!
:))
எனக்கு பிடிச்ச எண் இருபது!!
:-))
இந்நாட்டின் manner என்றெல்லாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வரிசையில்தானே வருகிறோம் ஸயீத்!. நீங்கள் எப்படி?
வருகைக்கு நன்றி எஸ்கே.
தங்களைப் போன்றவர்களை வரவேற்பதற்கும் உபசரிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாதி உறக்கமும் பாதி விழிப்பிலும் குறைந்த நேரமே இருந்த உங்களைச் சரியாக உபசரிக்க வாய்ப்பே குறைவு. இந்த மிகச்சிறிய உபசரிப்பையும் பெரிதாகச் சொல்லி தாங்கள் உயர்ந்தவர் என்பதை உறுதியாய் உணர வைக்கிறீர்கள்.
\\அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வரிசையில்தானே வருகிறோம் ஸயீத்!. நீங்கள் எப்படி?\\
ஐயய்யோ அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க. தினசரி இங்கு ஆமை ஊர்வளம்தான்.
வருகைக்கு நன்றி வடுவூர் குமார். நீங்கள் பாக். நண்பர்களால் பாதிக்கப்பட்டவரா?
//வேலை தேடி துபைக்கு வருக வருக.
யாம் பெற்ற துன்பம் நீங்களும் அடைய விரும்பினால்.......//
மிக சரியாக சொன்னிர்கள்.வந்து பார்ட்த்தால்தானே தெரியும் அக்கரை பச்சையா இல்லையா என்று.
Manners???
ஒரு சூப்பர்மார்க்கெட்டின் கேஷியராகவோ ஹெல்பராகவோ ஒரு இந்தியரோ துணைக்கண்டத்தைச் சேர்ந்தவ்ரோ இருந்தால் அவர் உங்களுக்குத் தரும் மரியாதையையும், வெள்ளைத் தோல் கொண்ட மேற்கத்தியருக்குத் தரும் மரியாதையையும் கவனித்துப் பாருங்கள்.
எனது நண்பர் ஒருவர் சொல்லுவார்" குலாமி ஹமாரா கூன் மே ஹை" என்று. அது சரிதானோ என்றூம் சிலசமயம் நினைப்பதுண்டு.
//நேஷனல் பெயிண்ட் ஆளான உங்களைப் பிடித்திருக்கிறார்கள்??? //
பிடிக்கவில்லை. விரட்டினார்கள் துபைக்காரர்கள். ஓடினேன் விலை குறைவை தேடி. ஓடினேன் ஓடினேன் மலிவான வீடு தேடி. ஓடினேன் துபை எல்லை வரை ஓடினேன் இல்லாததை தேடி. ஓடினேன் ஓடினேன் துபை எல்லை கடந்து ஷார்ஜா வரை (நே.பெ) ஓடினேன். பார்த்தால் இப்போது சாலை நெருக்கடியில் அகப்பட்டேன். இன்னும் அஜ்மான் வரை ஓடலாம் என்றிருக்கிறேன்.
வருக பொதக்குடியான்.
வருக பெயரா முக்கியம். கூன் மே (இருந்தால்) இருக்கிற குலாமியை துடைப்போம். நீங்களும் நானும் துவக்குவோம். வெள்ளைத் தோலுக்குத் தரும் மரியாதையையே (அது சிறந்நததென்றால்) எல்லோருக்கும் தருவோம்.
வாங்க லொடுக்கு. நான் உங்களை துபைக்கு ஏஜெண்ட் என்று தப்பாக நினைத்து விட்டேன். துபை துரத்தி நம்மை சந்திக்க சொன்னதாக சொன்னீர்களா? இறைவன் கணிவான் விரைவில் சந்திப்போம். அஜ்மானுக்கு அடுத்ததாக உம்மல் குவைன், ராஸல் கைமாவும் ப்ளானில் உள்ளதா!!
//வாங்க லொடுக்கு. நான் உங்களை துபைக்கு ஏஜெண்ட் என்று தப்பாக நினைத்து விட்டேன். துபை துரத்தி நம்மை சந்திக்க சொன்னதாக சொன்னீர்களா? இறைவன் கணிவான் விரைவில் சந்திப்போம். அஜ்மானுக்கு அடுத்ததாக உம்மல் குவைன், ராஸல் கைமாவும் ப்ளானில் உள்ளதா!! //
இன்ஷா அல்லாஹ்! விரைவில்.
எது விரைவில்? உம்மல் குவைனும் ராஸல்கைமாவுமா! நாம் சந்திக்கவிருப்பதா!
ஆஹா, என்னை விரட்டுவதில் எத்தனை அவசரம். நான் சொன்னது நாம் சந்திக்கவிருப்பதை. :)
Post a Comment