ஒரு சீன இளம்பெண் கடைவீதிக்குப் போயிருந்த போது, ஒரு திருடன் அவள் கைப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் பறந்து விட்டான். அந்த கைப்பையில் சுமார் 630 அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள சீனப்பணமும், அத்துடன் அப்பெண்ணின் செல்போன், ஓட்டுனர் உரிமம் மற்றும் I.D. முதலிய முக்கிய ஆவணங்களும் இருந்தனவாம்.
அந்தப் பெண் தன் தோழியிடம் உள்ள செல்போன் மூலம் தனது எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது மணியடிக்கிறது ஆனால் திருடன் எடுக்கவில்லை. ஆனால் இணைப்பையும் துண்டிக்கவில்லை.
அடுத்ததாக அப்பெண் செய்தது முதலில் ஒரு SMS: – 'உன் நிலைமையை என்னால் உணர முடிகிறது. அதனால் உன்னை என்னால் ஒரு திருடனாக எண்ண மனம் இடந்தரவில்லை. உனக்கு வேறு வழியில்லாததால்தான் இவ்வாறு எடுத்திருக்கிறாய் என நினைக்கிறேன்' என்பதாக அனுப்பினாள்.
அடுத்த SMS: – 'உன்னைப் போன்றவர்கள் நினைத்தால், நல்ல வழிமுறைகளில் சிறந்த சாதனைகள் செய்ய இயலும். முயன்ற ஓரிரு இடங்களில் நீ பெற்ற தோல்விகள் உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்' என்பதாக.
அடுத்து, அதற்கடுத்து, அதற்கடுத்து என தொடர்ந்து வரிசையாக (21) இருபத்தியொரு SMS அனுப்பினாள். அதனூடாக 'அப்பணத்தை அவன் எடுத்துக் கொள்வதால் தனக்கேதும் வருத்தமில்லை. திறமைசாலியான இளைஞர்களில் ஒருவன் தவறான வழியில் சென்றுள்ள மன வேதனைதான்' எனவும், இன்னும் 'பணம் போனாலும் அதிலுள்ள (கை பேசியில் சேமிக்கப்பட்டுள்ள) தொலைபேசி எண்களும், மற்ற முக்கிய ஆவணங்களும் தொலைவதால் அவளுக்கேற்பட விருக்கிற மன அழுத்தத்தையும்' குறிப்பிடத் தவறவில்லை.
அவள் வீட்டுக்கு திரும்பிய போது, ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக, அவளுடைய கைப்பை அழகாக பொதியப்பட்டு, அவள் வீட்டுக் கதவருகில் அவளுக்காக காத்திருந்தது. அதிலிருந்து எதுவும் எடுக்கப்படவில்லை. உள்ளது உள்ளபடியே. ஆனால் கூடவே ' அவள் அனுப்பிய SMSகளால் தன் மனம் திருந்தியதாகவும், தன் செயலுக்கு வருந்துவதாகவும், இனி இது போன்ற செய்கைகளில் ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான வழிகளில் கவனத்தைத் திருப்பி,
சிறந்த மனிதனாக வாழப்போகிறேன்' என்ற குறிப்போடு.
(துபாய் 96.7 FM மலையாள வானொலியில் சொல்லக் கேட்டது. சிறிது மெருகேற்றப்பட்டுள்ளது.)
9 comments:
சுல்தான் ஐயா,
எஸ் எம் எஸ் குறும்பர்களும் அறிய வேண்டிய நல்ல குறும்செய்தி !
நல்ல பதிவு
சென்ஷி
வாங்க, அழகான நன்னெறிக் கதை.
//(துபாய் 69.7 FM மலையாள வானொலியில் சொல்லக் கேட்டது. சிறிது மெருகேற்றப்பட்டுள்ளது.)//
அது 69.7 FM இல்லை. 96.7 FM. :)
முதலில் மிகுந்த நன்றி ஜிகே.
நண்பர் ஜிகே அவர்களின் பேருதவியால் எனது டெம்ப்ளேட் சரி செய்யப்பட்டது. இப்போது வரும் மறுமொழிகள் திரட்டப்பட்டு அது மறுமொழி திரட்டியிலும் தெரிகிறது.
கணிணி மென்பொருள் அறிவு எனக்கு மிகமிகக் குறைவு. எனினும், அதற்காக தங்களுக்கு தொல்லை கொடுத்ததற்காக வருந்துகிறேன் ஜிகே. தமிழ்மணத்திலிருந்து கூட உதவிகள் வரவில்லை. வரிசையில் என் பெயர் வராததால் தாமதமென்று நினைக்கிறேன்.
மீண்டும் நன்றிகள் ஜிகே.
சரியாகச் சொன்னீர்கள். வேலை மெனக்கெட்டு அசிங்க SMS அனுப்பும் சிலராவது இதிலிருந்து பாடம் படிக்கலாம்
வருகைக்கு நன்றி சென்ஷி.
வருகைக்கு நன்றி லொடுக்கு.
கதையில்லை நண்பரே. நிகழ்வு எனச் சொல்லப்பட்டது.
என்னில், எண்ணில் ஏற்பட்ட தவறை திருத்தி விட்டேன். திருத்தியமைக்கு நன்றிகள்.
சரி. எப்போது சந்திக்கலாம் லொடுக்கு. பக்கத்திலே இருந்து கொண்டு பார்க்கக் கூட முடியலையே.
Touching incident.
Also, You have narrated it beautifully.
Thank You Anony.
அன்பினால் வசப்படாத ஒன்றும் இப்பூமியில் இல்லை, திரு. சுல்தான்.
நல்ல பதிவு!
வருகைக்கு நன்றி எஸ்.கே ஐயா.
Post a Comment