Saturday, 24 March 2007

எதற்கு கவலை!

85களில் துபை வந்த புதிதில் எனது நெருங்கிய நண்பரின் சகோதரர் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அவர் வீட்டுச் சுவரில் ஒட்டியிருந்த ஒரு ஆங்கிலக் கவிதையொன்று என் கருத்தைக் கவர்ந்தது. மனதில் சோகம் கூடும்போதெல்லாம் அந்தக் கவிதை நினைவுக்கு வந்து, வாழ்வின் நிதர்சனத்தை உணர வைத்து, என் சோகத்தைக் குறைத்தது.

யாருக்காவது பயன்படலாமென்று (நினைவில் உள்ளவரை) அதன் கருத்து தமிழில் இங்கே:

மனிதன் கவலைப்பட இரண்டு விடயங்கள்தான்
அவன் உடல் நலமுள்ளவனா? நோயாளியா?
நீ உடல் நலமுள்ளவனெனில் கவலையடைய ஏதுமில்லை

நோயாளியென்றாலும், கவலைப்பட இரண்டு விடயங்கள்தான்
அவன் நலமடைந்து விடுவானா? இறந்து விடுவானா?
நீ நலமடைந்திடுவாயெனில் கவலையடைய ஏதுமில்லை

இறந்து விடுவாயென்றாலும், கவலைப்பட இரண்டு விடயங்கள்தான்
அவன் சுவனம் சேர்வானா? நரகத்தில் வீழ்வானா?
நீ சுவனம்தான் சேருவாயெனில் கவலையடைய ஏதுமில்லை

நரகம் சேர்பவனெனில் உனக்கு கவலையடைய நேரமேது சகோதரா!
ஓடு. உனது தோழர்களைச் சந்தித்து விடைபெறு!
உனது எதிரிகளை சந்தி!, கை குலுக்கு!,
உன் தவறுகளுக்காக வருத்தம் தெரிவி!,
மன்னிப்பைக் கேட்டுப் பெறு!
நரகத்திலிருந்து விடுதலை பெற முடிந்தவரை முயற்சி செய்!.

Post Comment

4 comments:

லொடுக்கு said...

பொருள் நிறைந்த கவிதை. நன்றி!

podakkudian said...

நல்ல சிந்தனையாக உள்ளது.
//உன் தவறுகளுக்காக வருத்தம் தெரிவி!,மன்னிப்பைக் கேட்டுப் பெறு!//

அருமை நண்பரே

Anonymous said...

nice one.. thanks

Unknown said...

நன்றி லொடுக்கு, பொதக்குடியான், அனானி நண்பர்களே.