Tuesday 31 July 2007

ஈராக்கில் அமெரிக்காவின் சாதனை

பெட்ரோல் வளங்கொழிக்கின்ற அந்த நாட்டில் சதாமின் பெயரைச் சொல்லி உள்ளே நுழைந்து, அந்நாட்டின் வளங்களை இன்னும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறது அமெரிக்கா.

இன்றைய ஈராக்கின் நிலை
4 மில்லியன் ஈராக்கியர் - 15 சதவிகித மக்கள் - அவர்களுக்குத் தேவையான உணவை தினம் வாங்கக்கூட வழியில்லா நிலையில்
70 சதவிகித மக்கள் சரியான குடிநீர் வசதி கூட இல்லாத நிலையில்
28 சதவிகித குழந்தைகள் சரியான உணவின்றி (malnourished)நோஞ்சான்களாக
92 சதவிகித ஈராக்கிய குழந்தைகள் கல்வியைக்கூட பெற முடியாத நிலையில்
2 மில்லியன் மக்கள் (குழந்தைகளும் பெண்களும்) - தன் சொந்த நாட்டிற்குள்ளேயே வீடிழந்து வாழ்விழந்து
2 மில்லியன் ஈராக்கியர் - சிரியாவிலும் ஜோர்டானிலும் அகதிகளாய்

இதை சரி செய்ய வழி தெரியாத நிலையில் அமெரிக்காவும், ஈராக்கிய தற்போதைய அரசும்.

ஆக்கிரமிப்புக்கு முன் 2000ல் அங்கு ஒரு trade fairல் நான் கலந்து கொள்ள சென்றிருந்த போது,சதாமைப் பிடிக்காத அந்நாட்டின் என் நண்பர் சொன்னது
'கோதுமை மாவும் சர்க்கரையும் வீட்டுக்கு வீடு அரசினர் தந்து விடுகிறார்கள்
இந்த பெட்ரோல் மட்டும் இந்நாட்டில் இல்லாமலிருந்தால் நன்றாயிருந்திருக்கும். எங்கள் நாட்டின் யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகள் மூலம் இந்தியாவைப் போல் நாங்களும் முன்னேற முயற்சித்து இருப்போம்.'


ஜெர்மனியில் நடக்கின்ற ‘மணற்சிற்ப’ போட்டியில் Urlich Baentsch என்ற ஜெர்மானியர் ஆக்டோபுஷ் என்ற தலைப்பில் செய்திருக்கின்ற சிற்பம். அதன் கொடுக்கு ஒன்றில் தானியக்கதிரும், மற்றவற்றில் எண்ணெய், ஒருசிலுவை. டிரேட் செண்டர், ஒரு துப்பாக்கி போன்றவற்றை வைத்திருப்பது போன்றும் வடிவமைத்துள்ளார்.


அமெரிக்கா ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு உணவாவது ஒழுங்காய் கிடைத்துக் கொண்டிருக்கும்.

வாழ்க அமெரிக்கா.

Post Comment

7 comments:

லொடுக்கு said...

ஆக்டோபுஷ் மணற்சிற்பம் அருமை.

இராக்கின் நிலமை படுமோசம். சுயநல உலகில் எந்த நாடும் அதை கண்டுகொள்வது போல தெரியவில்லை. :(((

கோவி.கண்ணன் said...

சதாம் கொன்ற இராக்கியர்களை விட அமெரிக்க படைகளால் கொள்ளப்பட்ட ஈராக்கியர் எண்ணிக்கை பலமடங்காகிவிட்டதாம்.

அமைதியில் சுடுகாடு ஆக்கும் வேலையைத்தான் அமெரிக்க செய்கிறது

Unknown said...

நன்றி லொடுக்கு. இந்த மணற்சிற்பம் சொல்வது - 'உலகில் நிறைய மக்கள் புஷ்ஷின் கொள்கை, மனித நேயத்துக்கு எதிரானதென்பதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கவும் தயாராகி விட்டார்கள்' என்பதைத்தான். இதுவே ஒருவகையில் முன்னேற்றம்தான்.

நன்றி ஜிகே. தனது சுயநலத்துக்காக எந்த நாட்டையும் - அது எத்தனை வளமுள்ளதாக இருப்பினும் - கொள்ளையடித்து சுடுகாடாக்க முனைகின்ற நாடுதான் அமெரிக்கா. இந்தியாவின் அணு ஒப்பந்தம் கூட இந்த வகையில் மிக மிக ஆராயப்பட வேண்டிய ஒன்றுதான்.

Naufal MQ said...

//இந்தியாவின் அணு ஒப்பந்தம் கூட இந்த வகையில் மிக மிக ஆராயப்பட வேண்டிய ஒன்றுதான்//

நீங்க வேற விபரம் தெரியாத ஆளா இருக்கிய :). அது இந்தியாவுக்கு நன்மைதான்னு சிலர் சொல்றத படிக்கலயா? :))))

Unknown said...

நன்றி பாஸ்ட் பவுலர். அதைப் படிச்சதாலத்தான் பயம் கொஞ்சம் கூடுது. இதை அரசியலாக்காமல் நாட்டுக்கு நல்லதான்னு மட்டும் பார்க்கணுமே - பார்ப்பார்களா?

பாரதிநேசன் said...

அமெரிக்கா படையெடுப்பு நடத்திய ஆரம்ப நாட்களில் வந்த ஒரு பத்திரிகைச் செய்தியும் படமும் என் ஞாபகத்தில் இருக்கிறது. ஈராக்கின் பழம்பெரும் சரித்திர சின்னங்கள் இருந்த அதன் மியூசியத்தை தரைமட்டமாக்கி அதில் இருந்த அரும்பொருட்களையெல்லம் சூறையாடிவிட்டு சென்றபின் அதன் பொறுப்பாளர் கண்ணீருடன் சிதைவுகளுக்கு நடுவே அமர்ந்திருக்கும் காட்சி. இது மானிட நாகரீகமா?

Unknown said...

நன்றி பாரதி நேசன். அந்த சரித்திர சின்னங்கள் நிறைந்த மெசபடோமிய மியூஸியத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் - அங்கு வைக்கப்பட்டிருந்த பழங்காலச் சின்னங்களும் நூல்களும் அரும்பெரும் பொக்கிஷங்கள். மனித நாகரீகத்தின் வளர்ச்சியை உலகுக்கு எடுத்துச் சொன்னவை. சாட்சிகளாக நின்றவை. திரும்பப் பெற முடியாதவை.

ஒரு நாட்டில் படையெடுத்தால் முதன்முதலில் அந்நாட்டின் அறிவுசார் விடயங்களை நிர்மூலமாக்குவது அமெரிக்க பண்பாடு எனும் அசிங்கம்.

உடைத்து நாசமாக்கப்பட்ட அவை, வார்த்தைகளில் வடிக்க இயலாத, இனி எப்போதும் மீளாத பெரும் இழப்புக்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.