Wednesday, 12 March 2008

குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி

அமெரிக்காவில் செக்ஸ் கல்வி இருப்பதைப் போல் நம் நாட்டில் கொண்டு வந்தால்தான் குழந்தைகள் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும். அதனால் செக்ஸ் குற்றங்கள் குறையும். ஒருவர் தொடும்போதே அந்த தொடுதலிலுள்ள வேற்றுமையை அறிய முடியும் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இன்றைய பிபிசி உலகச் செய்திகளில் சொன்ன செய்தியைப் பாருங்கள்.

அமெரிக்காவில் 14 முதல் 19 வயது வரையுள்ள சிறுமிகளில் நான்கில் ஒருவருக்கு செக்ஸ் தொடர்பால் வரும் நோய் (STD – Sexually transmitted disease) உள்ளதாம். அதிலும் குறிப்பாக இதே வயதுள்ள ஆப்ரிக்க அமெரிக்க பெண் குழந்தைகளில் 40 சதவிகிதமானவர்களுக்கு இவ்வாறான நோய் உள்ளதாகவும் சொன்னார்கள்.

நம்மைப் போலவே, “இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக” நியூயார்க் நகர மோண்டோஃப்யோர் மெடிக்கல் செண்டரின் (Adolescent Medicine Specialist) அடோலசென்ஸ் மெடிசின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்.எலிஸபெத் அல்டர்மேன் கூறுகிறார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு மையம் (US Centres for Disease Control & Prevention) சிகாகோ நகரில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி 838 பேரில் 26 சதவிகிதமெனில் அமெரிக்க முழுவதும் சுமார் முப்பது இலட்சம் சிறுமிகளுக்கு இங்ஙனம் நோய் உள்ளதாக தெரியப்படுத்துகிறார்கள்.

“நாட்டில் செக்ஸ் கல்வியின் மோசமான நிலைமையை இது பிரதிபலிப்பதாக” சொல்லும் செக்ஸ் கல்வி நிபுணர் நோரா கெல்பெரின் (sex education expert Nora Gelperin) “இந்த எண்ணிக்கைகள் மிகவும் ஆபத்தான நிலைமையை அறிவிப்பதாக”வும் சொல்கிறார்.

இதைவிட மேலாக,
அமெரிக்க ப்ளாண்ட் பேரண்ட்ஹூட் பெடரேஷன் (Planned Parenthood Federation) தலைவர் சிசிலி ரிச்சர்ட்ஸ் வருடத்துக்கு ஒன்றரை பில்லியன் டாலர்கள் “தவறான உறவுத்தடுப்பு தேசியக் கொள்கை”யெனும் பேரில் செலவிட்டும், நாம் தோல்வியையே சந்தித்திருக்கிறோம். அதற்கான விலையை இச்சிறுமிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இந்த அறிக்கை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் கூடுதலாக அறிய http://news.yahoo.com/s/ap/20080311/ap_on_he_me/teen_stds
போய் பார்க்கலாம்.

இன்னின்ன வழிகளைக் கையாண்ட பின், தவறான முறையில் உறவு கொண்டாலும் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொடுத்து தவறான உறவுகளை ஊக்குவிக்கவே செக்ஸ் கல்வி வாய்ப்பாக ஆகும்.

"குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி புகட்டும் அமெரிக்காவில் என்ன வாழ்ந்து விட்டது. அதை இங்கேயும் கொண்டு வந்து புரட்சி செய்ய" என்று யோசிக்க வேண்டிய நேரமிது. விழிக்க வேண்டியவர்கள் விழிக்க வேண்டுமே.

குழந்தைகளுடன் தவறான முறையில் நடப்பவர்களுக்கு கடுமையான தண்டணை கொடுப்பதன் மூலமே இத்தகைய குற்றங்களை களைய முடியும். வீணாக குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியைப் புகுத்தி அவர்களை பிஞ்சிலேயே பழுக்க வைக்காதிருப்பதே நலமாக இருக்கும்.

Post Comment

5 comments:

Unknown said...
This comment has been removed by the author.
பாபு said...

//குழந்தைகளுடன் தவறான முறையில் நடப்பவர்களுக்கு கடுமையான தண்டணை கொடுப்பதன் மூலமே இத்தகைய குற்றங்களை களைய முடியும். வீணாக குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியைப் புகுத்தி அவர்களை பிஞ்சிலேயே பழுக்க வைக்காதிருப்பதே நலமாக இருக்கும்.//

இன்னொன்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்: சிறுவயதிலிருந்தே நல்லொழுக்கத்தைக் கற்று கொடுப்பதன் மூலமும் அவலங்களைத் தடுக்கலாம்.

Unknown said...

//இன்னொன்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்: சிறுவயதிலிருந்தே நல்லொழுக்கத்தைக் கற்று கொடுப்பதன் மூலமும் அவலங்களைத் தடுக்கலாம்.//
வருகைக்கு நன்றி பாபு. மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.
சிறுவயதிலிருந்தே நல்லொழுக்கத்தைக் கற்று கொடுப்பதன் மூலமும் அவலங்களைத் தடுக்கலாம்.
மீண்டும் நன்றி.

லொடுக்கு said...

யார்கிட்ட சொல்லுறீங்க பாய்? கேட்கவேண்டியவங்க எல்லாம் காதை பொத்தி ரொம்ப நேரமாச்சு. :)

Unknown said...

//யார்கிட்ட சொல்லுறீங்க பாய்? கேட்க வேண்டியவங்க எல்லாம் காதை பொத்தி ரொம்ப நேரமாச்சு.//
அவர்கள் காதைத் திறப்பவைதான் இது போன்ற தகவல்கள். அவர்களாய் திறக்க மறுத்தால் இது போன்ற தகவல்களை அறிந்தவர்களால் அவை வலுக்கட்டயமாக திறக்கப்படலாம். நன்றி லொடுக்கு