Tuesday, 4 March 2008

உறவுகள்

எனக்கு நான்
மட்டுமே உறவு.
உனக்கும் நீ
மட்டுமே உறவு.

நாமெல்லாம் அன்பாய்
ஒன்றுகூடும் போது,
நாமனைவருமே
உறவுகள்தான்.
அந்நேரத்தில் உலகமே
நமது உறவுகள்.

தேவையுள்ள உறவுகளுக்கு
இயன்றவரை
எதிர்பார்ப்புகள்
ஏதுமின்றி உதவுவோம்.

எதிர்க்கும் உறவுகளிடமும்
நியாயமாய் நடந்து
நீதி புலர்த்துவொம்.

அன்பில்லாத உறவுகளிடம்
அன்பை கொடுப்போம்.
நம்மில் அன்பு கொண்டோரிடம்
பரிவோடும் கனிவோடும்
அன்பு செலுத்துவோம்.

இக்கணமே நிகழ்த்துவோம்
ஏனெனில்

நம்மில் புயலும் பகையும்
தோன்றும்போது
யாரும் யாருக்கும்
சொந்தமில்லை

உலகமே நமது
பகைவரால்
நிறைந்து விடும்.

மனதில் வெறுமை
பரவும் அந்நேரம்

எனக்கே நான்
உறவில்லை
உனக்கு நீயும்
உறவில்லை.

Post Comment

9 comments:

சென்ஷி said...

கலக்கலான கவிதை வரிகள்...

உண்மையிலேயே உறவுகள் உலகம்தான் என்பதை சொல்லியவிதம் அருமையாக உள்ளது.

தொடர வாழ்த்துக்கள் :))

Unknown said...

நன்றி சென்ஷி.
இது கவுஜ இல்ல - கவுஜ மாதிரி.

பாச மலர் / Paasa Malar said...

எதார்த்தம் இபோதெல்லாம் இப்படித்தான் இருக்கிறது.

Unknown said...

நன்றி பாசமலர்.
மன்னிக்கவும். நீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை.

பாச மலர் / Paasa Malar said...

நம்மில் புயலும் பகையும்
தோன்றும்போது
யாரும் யாருக்கும்
சொந்தமில்லை

//உலகமே நமது
பகைவரால்
நிறைந்து விடும்.

மனதில் வெறுமை
பரவும் அந்நேரம்

எனக்கே நான்
உறவில்லை
உனக்கு நீயும்
உறவில்லை//

இதைக் காட்டி..

எதார்த்தம் இப்போதெல்லாம் இப்படித்தான் இருக்கிறது..

இப்படி நான் சொல்லியிருக்க வேண்டும்..எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பதில்லை..உறவுகள் மட்டும் நீங்கள் கூறுவது போல் மாறிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..

Unknown said...

மீண்டும் வந்து விளக்கியதற்கு நன்றி பாசமலர்.

//எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பதில்லை..உறவுகள் மட்டும் நீங்கள் கூறுவது போல் மாறிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..//
மிகவும் நன்றாக இருக்கும்.

Anonymous said...

இது கவுஜ இல்ல - கவுஜ மாதிரி.


இது கவிதையோ இல்லே கவிஜவோ, ஆனால் அருமையான கருத்தாழமிக்க வரிகள்.

வாழ்த்துக்கள் சுல்தான்.

- கரிகாலன்

Unknown said...

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கரிகாலன்

லொடுக்கு said...

நிறை எழுதியிருக்கீங்க, நாந்தான் இந்த பக்கம் வராததால படிக்கல. நல்ல கவிதை.