Monday 1 December 2008

49-O தெரியுமா? இந்தியாவில் மறைக்கப் படுகிறதா?

நமது இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் 1969ம் ஆண்டு சட்டத்தின் 49-O பிரிவின் படி, ஒருவர் வாக்குச் சாவடிக்கு சென்று, தங்களுடைய அடையாளத்தை உறுதிப் படுத்திய பின்னர், “தான் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை” என்பதை அங்குள்ள அதிகாரியிடம் தெரிவித்து விட்டு, விரல் அடையாள மை பெற்றுக் கொண்டு வரலாம்.

ஆம். இந்த விடயத்தைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் மக்களுக்கு எடுத்துச் செ/சொல்லுங்கள். இந்த வாய்ப்பை பற்றி அரசியல் வியாதிகள் மூடி மறைப்பதாகவே தெரிகிறது.

'யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்று தெரிவிப்பதால் என்ன பயன்?
ஒரு தொகுதியில் ஒருவர் 500வாக்குகளில் வெற்றி பெறுகிறார் எனக் கொள்வோம். அதே தொகுதியில் இந்த 49-O வாக்குகள் 500 விழுந்திருந்தால் அத்தொகுதியின் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப் பட வேண்டுமாம். அது மட்டுமில்லாமல் அப்போது தேர்தலில் நின்றவர்களின் மறுபடியும் அதே தேர்தலில் நிற்க முடியாது. ஏனெனில் மக்கள் அவர்களுக்கு எதிராக தங்கள் விருப்பமின்மையை அறிவித்து விட்டனர்.

இதன் மூலம் கட்சிகளுக்கு பயம் வரும். அதனால் கட்சிகள் பொறுப்பான நல்லவர்களை தேர்நதெடுக்கும். இதன் மூலம் நாம் சாக்கடை அரசியலை மாற்றி நல்ல அரசியலை நாட்டுக்குத் தர முடியும். இது போன்ற ஒரு நல்ல வாய்ப்பு நம் அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதை தேர்தல் கமிஷன் கூட மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லையே.

இதன் மூலம் அழுகிய அரசியல் கட்சிகளை அப்புறப் படுத்த முடியும். ஓட்டளிக்காமல் இருப்பதுவும் ஓட்டளிப்பதை விட நல்ல நன்மையை நாட்டுக்குச் செய்திடும். எனவே உங்கள வாய்ப்பை நழுவ விடாதீர்கள். 49-Oவைப் பயன்படுத்துங்கள்.

49-Oவைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் சொல்லுங்கள். இதன் சாதக பாதகங்களையும் மேலும் அலசுங்கள்.

நமது ஓட்டளிக்கும் உரிமையின் மூலம் சிறந்த இந்தியாவை உருவாக்குவோம்.

Post Comment

5 comments:

gnani said...

சென்ற பொதுத்தேர்தலின்போது இதற்காக ஓ போடு என்ற இயக்கத்தை நடத்தினோம்.மேலும் விவரங்கள் www.gnani.net தளத்தில் உள்ளன. நீங்கள் எடுத்துப் போட்டிருக்கும் பகுதிகள் கூட அதிலிருந்து பலரும் எடுத்து விநியோகிப்பவைதான். நன்றி மேலும் பரப்புங்கள்.அன்புடன் ஞாநி

Unknown said...

வருகைக்கு நன்றி திரு. ஞாநி. இது சம்பந்தமான தங்கள் பக்கங்களை பார்த்தேன். ஓ போடு என்ற இயக்கமே நடத்தி உள்ளீர்கள். பாராட்டுக்குரிய அம்சம்.
//ஒரு தொகுதியில் ஒருவர் 500வாக்குகளில் வெற்றி பெறுகிறார் எனக் கொள்வோம். அதே தொகுதியில் இந்த 49-O வாக்குகள் 500 விழுந்திருந்தால் அத்தொகுதியின் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப் பட வேண்டுமாம். அது மட்டுமில்லாமல் அப்போது தேர்தலில் நின்றவர்களின் மறுபடியும் அதே தேர்தலில் நிற்க முடியாது. ஏனெனில் மக்கள் அவர்களுக்கு எதிராக தங்கள் விருப்பமின்மையை அறிவித்து விட்டனர்.//
இயன்றால் மேற்கூறப் பட்டவற்றின் உண்மையையும் தெளிவு படுத்துங்கள்.

யாழ் Yazh said...

ஒரு தமிழ் திரைபடத்தில் கூட சொல்லபட்டது(தமிழன் என்று நினைக்கின்றேன்)
தேர்தல் நேரங்களில் 49ஓ வை தொலைகாட்சிகளில் தேர்தல் கமிசன் விளம்பரபடுத்தவேண்டும்.

Anonymous said...

shall we file a case(public interest litigation ) against indian election commission for hiding this to the voting mass till now.
beena
isbeena@rediff.com

Unknown said...

//தேர்தல் நேரங்களில் 49ஓ வை தொலைகாட்சிகளில் தேர்தல் கமிசன் விளம்பரபடுத்தவேண்டும்.//
வருகைக்கு நன்றி யாழ். இது பரவலாக அறிமுகப் படுத்தப்படுவதால் அரசியல்வாதிகளுக்கு கேடு என்பதால்தான் அவ்வாறு செய்வதில்லை என நினைக்கின்றேன்.

//shall we file a case(public interest litigation ) against indian election commission for hiding this to the voting mass till now. beena//
First, we have to have proper study on the matter through right ppl and then we have to go for PIL. Thanks Beena