Thursday, 26 March 2009

துபாயில் ஆலங்கட்டி மழை அனுபவம்

நான் துபை வருவதற்கு முன் ஒரு முறை துபையில் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்ததாக என் தம்பி சொல்வார். அவர் அப்போது ஒரு அரபி வீட்டில் வேலைக்கு இருந்தார். வீடுகளெல்லாம் இப்போது போல் இல்லை. மழையில் வீடெல்லாம் ஈரம். "இங்கெல்லாம் மழையே வராது. இந்தியர்களும் பாகிகளும் வந்து, உங்கள் நாட்டு மழையை இங்கே கொண்டு வந்து விட்டீர்கள்" என்றார்களாம். "ஆமாமாம். எங்கள் ஊரில் கூட மழையே இல்லை" என தபால் வந்திருக்கிறது என்றாராம்.

ஒரு ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரு சிறிய அறையில் கட்டி வைத்திருந்தார்களாம். அந்த அறையில் மழை வெள்ளம் கூடுதலாக இருந்ததால் ஆட்டை வேறு இடத்தில் கட்டச் சொல்லி இருக்கிறார்கள். மேலே ஒரு துணியை போர்த்திக் கொண்டு முதலில் குட்டிகளை கொண்டு வந்து விட்டு விட்டு, ஆட்டை இழுத்துக் கொண்டு வெளியில் வரவும், அவர் பின்னாலேயே அந்த அறை அப்படியே நொறுங்கி உட்கார்ந்ததாம். அரபியின் முகம் வெளிறிப் போய் பயந்து கத்தவும், திரும்பிப் பார்த்தவுடன்தான் தெரிநததாம். இரண்டு நாளைக்கு இரண்டு பேருமே காய்ச்சல் வந்து எழவில்லையாம்.

சரி நேற்றைய கதையை பார்ப்போம்.

மழை வருவதற்கு முன் வானம் மேக மூட்டமாய் இருக்குமாமே. அதற்கு இப்படியா?


மேகம் திரண்டு......
அடேங்கப்பா! என்னய்யா அது?


என்னது இங்க கூடவா?
யாரோ காரின் மேல் கல்லெடுத்து போடற மாதிரி இருக்கிறதே
அடே! ஆலங்கட்டி டோய்!..!!


ஹய்யா! ரோடு பூரா சிறு சிறு பனிக்கட்டி
என்ன அழகு? காரை நிறுத்த முடியலியே
என்னப்பா இவ்வளவு ஜாலி?. வானத்துக்கும் பூமிக்குமா தாவுறே!.
கொஞ்சம் அடக்கு.


ஹய்! கண்ணாடியையே உடைச்சிடுச்சே!
செம ஸ்பீடுதான்!

ஏய்... என்னா? அடங்க மாட்டியா?


ஐயைய்யோ. இரண்டு இடத்துலே கண்ணாடி புட்டுகிச்சு.
போய்யா. நீங்களும் ஆலங்கட்டியும்

இன்ஸ்யூரண்ஸ்ல காரை எத்தனை நாள் நிப்பாட்டுவானோ?
பொழப்பு போச்சு. சே!

(படங்கள் உதவி: மொஹையதீன் அப்துல் காதர்)

Post Comment

13 comments:

வடுவூர் குமார் said...

வித்தியாசமான படங்கள்,திரு அப்துல் காதருக்கு நன்றி.

படகு said...

ஹய்யா! ரோடு பூரா சிறு சிறு பனிக்கட்டி
என்ன அழகு? காரை நிறுத்த முடியலியே
இந்த காட்சிகள் காண கண் கோடி வேண்டும் எல்லா படங்களும் சூப்ப.............ர்

கீழை ராஸா said...

நல்ல படங்கள்...

மின்னுது மின்னல் said...

நல்ல படங்கள் சார்


இங்க (அல் அய்னில்)டேமெஜ் அதிகம் :(

சுல்தான் said...

//வித்தியாசமான படங்கள்//
நன்றி வடுவூர் குமார்.

//எல்லா படங்களும் சூப்ப.............ர்//
நன்றி படகு

//நல்ல படங்கள்...//
நன்றி கீழை ராஸா

//நல்ல படங்கள் சார்//
நன்றி மின்னுது மின்னல்
மேகம் இருக்கும் படங்களை பெரிது பண்ணி பாருங்க. மனதை அள்ளும்.

கோவி.கண்ணன் said...

:)

படங்களும் விவரிப்பும் நன்றாக இருக்கிறது. எனக்கு ஆலங்கட்டியில் நினையனும் (அதாவது அடிவாங்கனும்) என்கிற ஆசை உண்டு, இதுவரைக்கும் அப்படி வாய்ப்புக் கிடைக்கல

வல்லிசிம்ஹன் said...

துபாயில் இப்ப அடிக்கடி மழை வரத்துக்கே நாம் தான் காரணமா.:)

வெகு நேர்த்தியான படங்கள். இன்னிக்குப் பெய்திருந்தா எல்லாரும் வீட்டுக்குள்ள இருந்தே ரசித்திருப்பாங்க. இந்த மழைக்குத் தெரியலியே;)))

தருமி said...

//கண்ணாடியையே உடைச்சிடுச்சே//

அம்மாடியோவ் ...!

சென்ஷி said...

:-))

நான் டெல்லியில் இருந்தபோது முதன்முதலாய் ஆலங்கட்டி மழையை பார்த்திருக்கிறேன். ஆனால் இங்குபோலல்லாது மிகச்சில நிமிடங்களே இருந்தது.

ஆலங்கட்டி மழை இல்லாது ஷார்ஜா பிழைத்துக்கொண்டது. அல்லது நான் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். :-(

சுல்தான் said...

//படங்களும் விவரிப்பும் நன்றாக இருக்கிறது. எனக்கு ஆலங்கட்டியில் நினையனும் (அதாவது அடிவாங்கனும்) என்கிற ஆசை உண்டு, இதுவரைக்கும் அப்படி வாய்ப்புக் கிடைக்கல//
ஒரு நல்ல அனுபவம் ஜிகே. மனது அந்த நேரங்களில், கவலைகளை மறந்து, இனந்தெரியாத மகிழ்ச்சியில் குதூகலிப்பதும் உண்மை. மக்களின் மனதை மகிழ்ச்சிப் படுத்த இறைவன் அளித்துள்ள வரம் சிலருக்கு சாபமாகவும் முடிகிறது பாவம்.

//துபாயில் இப்ப அடிக்கடி மழை வரத்துக்கே நாம் தான் காரணமா.:)//
வாங்கம்மா. நல்லவர்கள் நான்கு பேருக்கு நல்லதைச் சொல்லித் தரவும் நடைமுறைப் படுத்தவும் ஊரில் இல்லாததால், தேர்தல் என்ற பேரில் என்னென்ன அழிச்சாட்டியம் பாருங்களேன். அதுதான் நம்மூரில் காலாகாலத்தில் மழை பெய்யாமல் இருக்குதோ என்னவோ? :))
//வெகு நேர்த்தியான படங்கள். இன்னிக்குப் பெய்திருந்தா எல்லாரும் வீட்டுக்குள்ள இருந்தே ரசித்திருப்பாங்க. இந்த மழைக்குத் தெரியலியே;)))//
ஆமாம்மா. நன்றியம்மா. விடுமுறை நாட்களில் வந்தால் கூடுதலாக நன்றாக இருந்திருக்குமோ! அடுத்த மழையை விடுமுறை நாட்களில் விடச் சொல்லி பெட்டிஷன் போட்டு வைப்போமா. :))

//அம்மாடியோவ் ...!//
நன்றி தருமி அய்யா. 120கிமீ வேகத்தில், காற்றின் வேகத்தில் கண்ணாடி புட்டுக் கொண்டு உள்ளே வருவதற்குள் சரி செய்யணும்.

//ஆலங்கட்டி மழை இல்லாது ஷார்ஜா பிழைத்துக்கொண்டது. அல்லது நான் எதிர்பார்த்து ஏமாந்து போனேன். :(//
சென்ஷி! நேஷனல் பெயிண்ட் பக்கத்தில் கூட எமிரேட்ஸ் ரோட்டில் ஓரிரு நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது

அபி அப்பா said...

சூப்பர் படங்கள் சுல்தான் பாய்! அதைவிட உங்க சந்தோஷ பதிவும் அருமை. பாருங்க இந்த ஆலங்கட்டி மழை என்னையே கவுஞ்சரா ஆக்கிடுச்சு:-))

மின்னுது மின்னல் said...

என்னப்பா இவ்வளவு ஜாலி?. வானத்துக்கும் பூமிக்குமா தாவுறே!.
கொஞ்சம் அடக்கு.
//


இந்த வரிகள் புடிச்சிருக்கு சார் !!!


அதுவும் ஜாலியா குதிக்கட்டுமே..!

அடங்க சொல்லுரிங்கலே..:)

சுல்தான் said...

//சூப்பர் படங்கள் சுல்தான் பாய்! அதைவிட உங்க சந்தோஷ பதிவும் அருமை. பாருங்க இந்த ஆலங்கட்டி மழை என்னையே கவுஞ்சரா ஆக்கிடுச்சு:-))//
நன்றி அபிஅப்பா
கவிதாயினி அப்பா
கவிஞரானா தப்பா?
ஆனா அப்பப்பா!

//அதுவும் ஜாலியா குதிக்கட்டுமே..!
அடங்க சொல்லுரிங்கலே..:)//
நிரம்ப சந்தோஷத்தில் இருப்பதால் "கொஞ்சம் அடங்கு" என எனக்கு அசரீரி சொல்வது போல் அமைத்தேன் மின்னுது மின்னல். குழப்பிட்டேனோ?