Sunday 26 April 2009

மனிதர்களில் புதிய காய்ச்சல்! அபாயம்!!


Swine Flu (Influenza) எனப்படும் இந்த பன்றிக் காய்ச்சல் பன்றிகளுக்கு ஏற்படும் ஒருவகை சுவாசக்குழல் நோயாகும். இவை சாதாரணமாக மனிதர்களை தாக்குவதில்லை. எனினும் சில மனிதர்களை இது தாக்கியுள்ளதாகவும் இது ஒரு மனிதரிலிருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் கொண்டதெனவும் மருத்துவ பதிவுகளில் குறிக்கப் பட்டுள்ளது. டிசம்பர் 2005 முதல் பிப்ரவரி 2009 வரை 12 பேர் அமெரிக்காவின் பத்து மாநிலங்களிலிருந்து இந்நோயால் பாதிக்கப் பட்டிருந்தனர். மார்ச் 2009ல் இந்த வகை பன்றிக் காய்ச்சல்(H1N1) நோய் கலிபோர்னியா, டெக்ஸாஸ், மெக்சிகோ முதலிய மாநிலத்திலிருந்தும் உள்ள நோயாளிகளிலிருந்து மனிதரிலும் பரவும் என ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது.

சிக்கன் குனியா போல இப்போது பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. மெக்சிகோவில் மட்டும் இதன் பாதிப்பால் சுமார் 80பேர் வரை இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முழு அமெரிக்காவுக்கும் பரவி வருவதாகவும் சுமார் 18பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் இறந்து விட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.



இது மனிதர்களுக்கிடையே மேலும் பரவாமல் தடுக்க மெக்சிகோவின் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படடுள்ளன. அவசர நிமித்தம் வெளியில் செல்பவர்களும் (mask)முகமூடி அணிந்தே செல்கின்றனர்.

சிக்கன் குனியா நோய் பொதுவாக குழந்தைகளில் அதிகம் பரவாமல் வயதானவர்களையே கடுமையாக தாக்குவதாக இருந்தது. இதற்கு நேர்மாறாக இந்த (swine flu) பன்றிக் காய்ச்சல் நோய் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விட்டதெனவும் வெள்ளை மாளிகை நிகழ்வுகளை உற்று நோக்கி வருவதாகவும் தேவையான முனனெச்சரிக்ககை ஏற்பாடுகள் தொடங்கி விட்டதெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நண்பர்களே! பார்த்து இருந்து கொள்ளுங்கள்.

Post Comment

3 comments:

எட்வின் said...

இது குறித்த பதிவை இடலாமென நினைத்துக் கொண்டிருந்தேன்.வேறு எவரேனும் பதிவிட்டிருக்கிறார்களா என தேடிய போது மாட்டியது உங்கள் பதிவு.

சற்றே வில்லங்கமான வியாதியாகத் தான் தெரிகிறது.பகிர்வுக்கு நன்றி

Unknown said...

//சற்றே வில்லங்கமான வியாதியாகத் தான் தெரிகிறது.//
நான் உங்களுக்கு முன்னமே எழுதி விட்டதைப் பற்றிச் சொல்கிறீர்களா? swine flu பற்றிச் சொல்கிறீர்களா? :))

எட்வின் said...

நிச்சயமாக swine flu வை த்தான் ...
ஹி ஹி ஹி ....