Wednesday 21 October 2009

டிரைவ் இன் ATMல் பணமெடுக்க வழிகாட்டுதல்கள்

நமது நிறுவனத்துக்கு ISO Certification வேண்டுமென்றால் இந்த ISOகாரர்கள் ஒன்றும் தெரியாமல் வந்து நம்மிடமே வழி முறைகளைக் கேட்டறிந்து கொள்வார்கள். பின்னர் என்னவோ இவர்களே கண்டு பிடித்ததுக் கொண்டது போல் வெட்கமில்லாமல் நம்மிடமே அளந்து கட்டுவார்கள்.

ஆனால் இங்கே ஒரு வங்கியில் புதிதாக வண்டியில் இருந்தபடியே பணமெடுக்க வசதியாக ஒரு ATMஐ நிறுவினார்கள். சில ஆட்களை நியமித்து மக்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என பல மாதங்களாக கணித்து கீழ்க்காணும் பயன்படுத்தும் வழிகாட்டுதல் முறைகளை உருவாக்கி விளம்பரத்தட்டி அமைத்துள்ளார்கள்.


வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு:
பல மாதங்கள் கவனமாக பரிசீலனை செய்த பின், நமது வங்கியில் புதிதாக நிறுவப் பட்டுள்ள, வண்டியில் இருந்தபடியே ATMல் பணமெடுக்க ஆண்கள், பெண்களுக்கான இந்த வழிகாட்டுதல் முறைகள் உருவாக்கப் பட்டுள்ளது. தங்கள் பாலினத்துக்கு தக்கவாறு சரியானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளவும்.

ஆண்களுக்கு:


1. உங்கள் வாகனத்தை பணமெடுக்கும் இயந்திரத்தின் முன் நிறுத்தவும்
2. உங்கள் வாகனத்தின் பக்க கண்ணாடியை கீழிறக்கவும்
3. உங்கள் பண அட்டையை அதற்குரிய இடத்தில் திணித்து உங்கள் இரகசிய எண்களை அழுத்தவும்
4. உங்களுக்குத் தேவையான பணத்தைக் குறிப்பிட்டு பின் எடுத்துக் கொள்ளவும்
5. உங்கள் பண அட்டையையும் பணமெடுத்த ரசீதையும் எடுத்துக் கொள்ளவும்
6. உங்கள் வாகன கண்ணாடியை மேலேற்றவும்
7. வாகனத்தை ஓட்டிச் செல்லவும்

பெண்களுக்கு:


1. உங்கள் வாகனத்தை பணமெடுக்கும் இயந்திரத்தின் முன் நிறுத்தவும்
2. உங்கள் வாகனம் இயந்திரத்திலிருந்து சரியான தூரத்தில் இருக்குமாறு உங்கள் வாகனத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி சரி செய்யவும்
3. வாகனத்தின் Parking Breakஐ போட்டு விட்டு வாகனத்தின் பக்க கண்ணாடியை கீழிறக்கவும்
4. உங்கள் கைப்பையைத் தேடி எடுத்து, அதிலுள்ள சாதனங்களை பக்க இருக்கையில் ஒவ்வொன்றாக வைத்தவாறு, உங்கள் பண அட்டையை சரியாகத் தேடி எடுக்கவும்.
5. உங்கள் கைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பவர்களிடம், பிறகு பேசுவதாகக் கூறி, கைப்பேசியை நிறுத்தவும்
6. உங்கள் பண அட்டையை இயந்திரத்தில் அதற்குரிய இடத்தில் திணிக்க முயற்சிக்கவும்
7. உங்கள் வாகனத்துக்கும் இயந்திரத்துக்குமான தூரம் அதிகம் இருப்பதால், சுலபமாக உங்கள் பண அட்டையை அதற்குரிய இடத்தில் திணிக்க வசதியாக, வாகனத்தின் பக்க கதவுகளைத் திறந்து கொள்ளவும்.
8. உங்கள் பண அட்டையைத் திணிக்கவும்
9. உங்கள் பண அட்டையை திருப்பி இட்டிருப்பீர்கள். எனவே பண அட்டையை வெளியில் எடுத்து இப்போது சரியான முறையில் திணிக்கவும்
10. உங்கள் கைப்பையின் பின்புற ரகசிய பையிலுள்ள, தங்கள் ரகசிய எண் குறிக்கப்பட்ட நோட்டுப் புத்தகத்தை எடுக்க மீண்டும் கைப்பையைத் துழாவவும்
11. உங்கள் இரகசிய எண்களை அழுத்தவும
12. அந்த எண்களை நீக்கி விட்டு, இப்போது சரியான எண்களை அழுத்தவும்
13. உங்களுக்குத் தேவையான பணத்தைக் குறிப்பிடவும்
14. வாகனத்திலுள்ள (Rear View Mirror) பின்னால் பார்க்கும் கண்ணாடியில் தங்கள் முகப் பூச்சு, உதட்டுச் சாயம், தனித்து விழும் முடிக் கற்றைகள் முதலியவற்றை சரி செய்யவும்
15. உங்கள் பணத்தையும் அதற்கான ரசீதையும் எடுத்துக் கொள்ளவும்
16. உங்கள் கைப்பையை தலை கீழாக பக்க இருக்கையில் கவிழ்த்து, தங்களின் பணப்பையைத் தேடி எடுத்து, பணத்தை வைக்கவும்
17. உங்கள் செக் புத்தகத்தின் பின்னாலுள்ள கட்டங்களில் இப்போது எடுத்த பணத்தையும் இருப்பையும் குறித்து விட்டு பணமெடுத்த ரசீதையும் அதில் மடக்கி வைக்கவும்
18. மீண்டும் தங்கள் முகப் பூச்சு, உதட்டுச் சாயம், தனித்து விழும் முடிக் கற்றைகள் முதலியவை சரியாக இருக்கிறதா என சோதித்துக் கொள்ளவும்
19. உங்கள் வாகனத்தை இரண்டு அல்லது மூன்று அடிகள் முன்னால் நகர்த்தவும்
20. இப்போது வாகனத்தை பின்னால் கொண்டு வந்து பணமெடுக்கும் இயந்திரத்தின் முன் மீண்டும் நிறுத்தவும்
21. உங்கள் பண அட்டையை எடுத்துக் கொள்ளவும்
22. உங்கள் கைப்பையை தலை கீழாக பக்க இருக்கையில் கவிழ்த்து, அட்டைகள் வைக்கும் பையை எடுத்து, அதில் பண அட்டையை சரியான இடத்தில் செருகவும்.
23. உங்கள் பின்னால் பொறுமையிழந்து நிற்கும் ஆண் காரோட்டியை படுகேவலமாக ஒரு பார்வை பார்க்கவும்
24. ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் வாகனத்தை, மீண்டும் ஸ்டார்ட் செய்து, கிளம்பிப் போகவும்
25. உங்கள் கைப்பேசியில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவரை திரும்ப அழைக்கவும்
26. உங்கள் வாகனத்தை குறைந்தது மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர்கள் ஓட்டிச் செல்லவும்
27. உங்கள் வாகனத்தின் Parking Breakஐ எடுத்து விடவும்.

இவை அத்தனையும் நகைச்சுவையான உண்மைகள் என்பதை பரிசோதித்து அறியலாம். ஆனால் நீங்கள் கண்காணிக்கும் போது யாரும் ATM கொள்ளையர்கள் என சந்தேகித்து காவலர்களுக்கு தகவல் தந்து வம்பாகி விடப் போகிறது. கவனம்.

Post Comment

11 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அது

Shabeer said...

அமைச்சிட்டீங்க அம்மினிகளின் அலும்புகளை.

சென்ஷி said...

:-)))))))))))))

Unknown said...

நன்றி டாக்டர் சுரேஷ் (பழனி மருத்துவர் என்றால், வித்தியாசமாக ஒலிக்கிறது :) )

முதல் வருகைக்கு நன்றி ஷபீர். ப்ளாக் தொடங்கி விடுங்களேன்

நன்றி சென்ஷி. என்னதான் ஊடல் வந்து பின் நண்பரானாலும் 'ஊக்கு வித்த' என்னை விட்டு விட்டு ஜூபைருக்கு அவார்ட் தரலாமா?:))

அப்துல் சலாம் said...

நல்ல பதிவு ...உங்கள் தளத்திருக்கு நான் புதியவன் ..
ம் ம்....எல்லா பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து, நெக்ஸ்ட் மீட் பண்ணுகிறேன்

Tamil Home Recipes said...

மிகவும் அருமை

Anonymous said...

/25. உங்கள் கைப்பேசியில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவரை திரும்ப அழைக்கவும்//
miss call pannavum.. :)

cheena (சீனா) said...

அன்பின் சுல்தான்

அருமையான நகைச்சுவை மிகுந்த இடுகை

நல்வாழ்த்துகள்

Unknown said...

//எல்லா பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து, நெக்ஸ்ட் மீட் பண்ணுகிறேன்//
நன்றி அப்துஸ்ஸலாம். படித்து விட்டு வாருங்கள்.

//மிகவும் அருமை//
நன்றி Tamil Home Recipes.

//miss call pannavum.. :)//
நன்றி அனானி.
மிஸ் கால்தான் பண்ணுவாங்களா? :))

//அருமையான நகைச்சுவை மிகுந்த இடுகை.நல்வாழ்த்துகள்//
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சீனா ஐயா.

அன்புடன் மலிக்கா said...

நகைச்சுவை மிக அருமை

அரபுத்தமிழன் said...

:))))
இப்படிச் செய்வார்கள் என்று படித்திருக்கிறேன்.
அப்ப நீங்களும் 'ஆ'ணீயப் பதிவரா :