Monday 11 October 2010

சொந்த செய்திகள் பத்து

இந்த பக்கம் வந்து நீநீநீநீநீநீநீநீநீநீண்ட நாளாகி விட்டது. அதுதான் கொஞ்சம் கலவையாக ஊர் போய் வந்த சேதி

அம்மாவையும் தங்கமணியையும் அழைத்துக் கொண்டு திருச்சியில் மருத்துவமனைக்கு போய் விட்டு, அப்படியே மகளையும் அவள் விடுதியில் பார்த்து விட்டு, மதிய உணவு மத்திய பேருந்து நிலையம் அருகில் ஒரு உணவு விடுதியில்.

தங்கமணி 'ஏங்க! அந்த பையன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. உங்களுக்கு யாருன்னு தெரியுதா?'

ஆமா. பார்த்த மாதிரி இருக்கு. ஆனா யாருன்னு ஞாபகம் வர்ல்ல.
அந்த பையனும் இங்க பாக்கிற மாதிரி இருக்கே. கப் போர்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்த பையனோ, எலக்ட்ரீஷியனோ' என்றேன்

சாப்பிட்டு முடித்தவுடன் அந்த பையனிடம் போய், 'உங்களை பார்த்த மாதிரி இருக்கு. யாருன்னு தெரியலயே' என்றேன்.
'என் பெயர் மகேஷ். ஈரோடுங்க. ஈரோட்டுல பார்த்திருப்பீங்க' - அந்த பையன்.
'நல்லுதுங்க. தெரியல். ஈரோடு போனதில்ல' என்று சொல்லி விட்டு வந்து, தங்கமணியிடம் ஒப்பித்தேன்.

காரில் ஏறினவுடன் தங்கமணி 'அந்த பையன் அசத்தப் போவுது யாரு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில வர்ரவருங்க'.

அப்புறம் திரும்ப அவரிடம் போய் 'சரிங்க. தெரிஞ்சிடுச்சு. தங்ஸ் சொல்லிட்டாங்க' என்றேன். 'அப்டிங்களா' என்று சிரித்தார்.


2. இந்த தடவை ஊருக்கு போய் ஒரு பிரபல பதிவரை சந்திப்பதென இருந்தேன். இங்கிருந்தே பேசி வைத்திருந்தேன். ஊரில் போயும் இரண்டு மூன்று முறைகள் போன் செய்தேன். அவரும் வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி விட்டு வரவில்லை. ஏழு நாள் விடுமுறையில் எனக்கும் அதன் பின் நேரம் கிடைக்கவில்லை. இயன்றால், இறைவன் நாட்டமிருந்தால், அடுத்த முறை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் நண்பரே.


3. பள்ளியில் படிக்கிற காலத்தில், நுண்கலை மற்றும் அறிவுப் போட்டிகளில் நான் பரிசு வாங்கும் போது, என் அண்ணண் 'ஏண்டா எப்ப பார்த்தாலும் செகண்ட் பிரைஸ்தான் வாங்குவாயா?' என்று கேட்பார்.

என் மகள் கல்லூரியில் ஒரு பாடத்தில் பல்கலையின் இரண்டாமிடத்தை பிடித்திருப்பதைச் சொன்னது.பெருமையாய் இருந்தது.

அது சரி! இந்த ஜீன், நாம எப்பவும் இரண்டாமிடம் பிடிச்சதை எல்லாம் கூட, அடுத்த தலைமுறைக்கு கடத்துமோ?!


4. என் மூத்த மகள், தன் தம்பி தங்கைகளையும் அம்மாவையும் ஒரு அனாதை விடுதிக்கு அழைத்து போய், அங்குள்ள விபரம் எல்லாம் எடுத்துச் சொல்லி, அவர்களின் தங்குமிடத்தை எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு, அழைத்து வந்திருக்கின்றார் போல் இருக்கிறது.


அந்த பாதிப்பினால், என் நான்கு பிள்ளைகளும், இந்த நோன்பு பெருநாளுக்கு தங்களுக்கு அன்பளிப்பாக கிடைத்த எல்லா பணத்தையும் சிறிதும் செலவு செய்யாமல் தங்கள் தமக்கையிடம் கொடுத்து அங்கே அனாதை விடுதியில் வசதி குறைவாக வாழும் அந்த குழந்தைகளுக்காக கொடுக்கச் சொல்லி இருக்கின்றார்கள். அது ஒரு நல்ல தொகையாகவும் இருந்தது.

கேட்டபோதே மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. அதனால் எல்லா பிள்ளைகளைகளுக்கும் பெருநாள் செலவுக்கென்று திரும்பவும் சிறிது பணம் கொடுத்தேன்.


5. துபையிலிருந்து ஊர் போகும் போதே திரும்பி வருவதற்கும் சேர்த்து இரு வழிக்கும் 1550திர்ஹத்துக்கு(Rs.19000) விமான பயணச்சீட்டு எடுத்துக கொண்டுதான் போனேன். ஊரில் போய் நான்கு நாட்கள் கூடுதலாக தங்கி விட்டதால், திரும்ப வர பயணச்சீட்டு தனியாக வாங்க வேண்டியதாகி விட்டது. ஒரு வழி பயணத்துக்கு மட்டும் 15000 இந்திய ரூபாய்கள் அழ வேண்டியதாகி விட்டது. இனியாவது பயண திட்டத்தை சரியாக போடணும். மாற்றக் கூடாது.
மீதம் ஐந்தும் வரும்.... .... ....

Post Comment

7 comments:

ஸாதிகா said...

//கேட்டபோதே மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. அதனால் எல்லா பிள்ளைகளைகளுக்கும் பெருநாள் செலவுக்கென்று திரும்பவும் சிறிது பணம் கொடுத்தேன்.
// படிக்கும் பொழுது எங்களுக்கும் நிறைவாக இருந்தது.

நட்புடன் ஜமால் said...

4 நெகிழ்வு மற்றும் ஆரோக்கியம்

Unknown said...

பிள்ளைகளுக்கு சேமிப்பை சொல்லித் தருவது போலவே, நல்ல வழியில் செலவு செய்வதையும் சொல்லித் தந்து ஊக்கப் படுத்தணும்.

நன்றிங்க ஸாதிகா,
நன்றி நட்புடன் ஜமால்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஈரோடு மகேஷின் பதில் :)

பெருநாள் பணம் பயன்பட்ட விதம் அருமை.

பல்கலையில் இரண்டாம் இடத்துக்கு மகளுக்கு வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

மகிழ்ச்சிங்க... பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

வருகைக்கு நன்றி முத்துலெட்சுமியம்மா, பழமைபேசி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இந்த ஜீன், நாம எப்பவும் இரண்டாமிடம் பிடிச்சதை எல்லாம் கூட, அடுத்த தலைமுறைக்கு கடத்துமோ?!//

கடத்திடுச்சே!!!

ஐந்தும் சுவை!
வரப்போகும் ஐந்தும் எப்போ?