Saturday 11 August 2007

அறிவுக்கூர்மையில் அமெரிக்கா

அவர்களுக்கு இருக்கின்ற வாய்ப்புகளுக்கும்
அவர்களின் புத்திக் கூர்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு
நம்மையெல்லாம் விஞ்சி, நம்மையே வாய் பிளக்க வைக்கிறார்கள்.

Post Comment

16 comments:

Thekkikattan|தெகா said...

கொடுமையோ கொடுமை சுல்தான் :-)) ஒருத்தர் சொல்றார் this guy is from Texas, so whatever he says it got to be true :-)))

கணகுப் பாடத்திலும், பூகோளத்திலும் மக்கள் ஒரு பெரிய ஜீரோ என்பது யாவரும் அறிந்ததே. அப்படியே இங்குள்ள மீடியாக்களும் பார்த்துக் கொள்கிறது.

நிறைய பேருக்கு அமெரிக்காவைத் தாண்டியும் நாடுகளும், மக்களும் இருக்கிறார்கள் என்பதே தெரியாது :-)). இது வேதனையான விசயம்தான்.

Anonymous said...

:)))))))))

ராஜ நடராஜன் said...

எந்த அளவுகோல் கொள்வது எனத் தெரியவில்லை.முன்பு நான் மனசால போட்ட வினாடிகள் கணக்குக்கு ஒரு அமெரிக்க பொட்டிக் கடைக்காரர் கால்குலேட்டரை உபயோகித்தார்.இப்ப எனக்கும் கால்குலேட்டரே கணக்கு வாத்தியார்.

வெத்து வேட்டு said...

they are only showing people who bluffed...they didn't show the ones who marked right...you think every single person in your village (or even in your family) would answer all general knowledge questions correctly??

think..

Anonymous said...

இப்படி விவரமில்லாதவரை கொண்ட அமெரிககா பல புத்திசாலிகளைக் கொண்ட (?) நம் நாடு உட்பட பல நாடுகளை மிஞ்சுவது எப்படி? அதற்கு காரணம், இங்கு எல்லாரும் பொறுப்புடன் வேலை செய்வதுதான்.தெரு கூட்டுபவர் முதல் ஒயிட் காலர் ஜாப் செய்பவர் வரை தங்கள் வேலையை மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்வதுதான்.அமெரிக்கர்களின் அறிவு அகலமானது அல்ல,ஆனால் ஆழமானது.அவர்களின் உலகம் மிக சிறியது. நம்மைப் போல் பஞ்சம் பிழைக்க அவர்கள் எங்கும் ஓட வேண்டாத காரணத்தால் அவர்கள் மற்ற எந்த நாட்டைப் ப்ற்றியும் கவலைபடுவதில்லை.பெரும்பாலான அமெரிக்கரின் வாழ்க்கை 200 மைல்களுக்குள் முடிந்துவிடுகிறது.

TBCD said...

ஹய்யோ..ஹய்யோ..!!
அவங்களூக்குத் தெரியும்மா..உலகம் அவங்களப் பார்த்து சிரிப்பா சிரிக்குதுன்னு....

Unknown said...

வருகைக்கு நன்றி தெகா.
ஒரு நாட்டிலிருந்து வருவதால் மட்டும் பெரிய பெருமை கொள்ளமுடியாது. எல்லா நாடுகளிலும் அறிவாளிகளும் அறிவுக்சூன்யங்களும் இருக்கவே செய்கிறார்கள.

நன்றி அனானி1. என்ன சிரிக்கிறீர்கள்!

இவ்வளவு வசதி வாய்ப்புகளிருந்தும் அங்கே இப்படியும் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

நம் பிள்ளைகள் நம்மைவிட ஐ க்யூ கூடுதலாக இருப்பதற்கு அவர்கள் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ள நம்மை விட கூடுதலாக வாய்ப்பைப் பெற்றிருப்பதுதான் காரணம் என நான் நினைத்திருந்தேன். அந்த எண்ணத்தையே இது மாற்றிப் போட்டு விட்டது.

Unknown said...

வருகைக்கு நன்றி நட்டு. சரியாச் சொன்னீர்கள். 9x10க்கே அக்கவுண்ட் சீஃப் கால்குலேட்டரைத் தேடி எடுத்து போடும்போது எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. நானும் கால்குலேட்டர் தேடுபவன்தான் ஆனால் இதுக்கெல்லாமா? டூ மச்.

நன்றி சோம்பேறி. (நான் சரியாகத்தான் உங்கள் பெயரை உச்சரிக்கிறேனா? என்ன இப்படி!!)
I agree with your point.

நன்றி அனானி2.
//அமெரிக்கர்களின் அறிவு அகலமானது அல்ல, ஆனால் ஆழமானது//
இதெல்லாம் சும்மா பண்டல். எல்லா நாட்டிலும் உள்ளது போல அங்கேயும் அறிவாளிகளும் அறிவுக்சூன்யங்களும் கலந்தே இருக்கின்றார்கள்.
//நம்மைப் போல் பஞ்சம் பிழைக்க அவர்கள் எங்கும் ஓட வேண்டாத காரணத்தால் அவர்கள் மற்ற எந்த நாட்டைப் ப்ற்றியும் கவலைபடுவதில்லை.//
அதை மாற்றி இப்படியும் சொல்லலாம். வயிற்றுக்கு உணவு சரியாக கிடைப்பதால் அவர்களில் சிலருக்கு மூளையைப்பற்றி யோசிக்கத் தோன்றவில்லை.

நன்றி tbcd-2
உலகம் இதற்கா சிரிக்கிறது?
வேறு விஷயங்களுக்கு என்றல்லவா நான் நினைத்திருந்தேன்.

பாரதிநேசன் said...

சோம்பேறி போன்றவர்கள் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் அமெரிக்கர்களின் மெத்தனத்தையும் அதிமேதாவித்தனத்தையும் இது காட்டுகிறது. இலங்கையில் ஒரு சாதாரண விவசாயிக்கு இவர்களைவிட அதிகமாகவே தெரியும்

Unknown said...

பாரதி சேநன். என் தளத்தில் தங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன்.

Darren said...

//இப்படி விவரமில்லாதவரை கொண்ட அமெரிககா பல புத்திசாலிகளைக் கொண்ட (?) நம் நாடு உட்பட பல நாடுகளை மிஞ்சுவது எப்படி? அதற்கு காரணம், இங்கு எல்லாரும் பொறுப்புடன் வேலை செய்வதுதான்.தெரு கூட்டுபவர் முதல் ஒயிட் காலர் ஜாப் செய்பவர் வரை தங்கள் வேலையை மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்வதுதான்.அமெரிக்கர்களின் அறிவு அகலமானது அல்ல,ஆனால் ஆழமானது.அவர்களின் உலகம் மிக சிறியது. நம்மைப் போல் பஞ்சம் பிழைக்க அவர்கள் எங்கும் ஓட வேண்டாத காரணத்தால் அவர்கள் மற்ற எந்த நாட்டைப் ப்ற்றியும் கவலைபடுவதில்லை///

நச்.

Unknown said...

வருகைக்கு நன்றி தரன். இந்த 'நச்' க்கு ஒரு பதிலும் இருந்ததே. உங்களுக்காக மீண்டும்.

//அமெரிக்கர்களின் அறிவு அகலமானது அல்ல, ஆனால் ஆழமானது//
இதெல்லாம் சும்மா பண்டல். எல்லா நாட்டிலும் உள்ளது போல அங்கேயும் அறிவாளிகளும் அறிவுக்சூன்யங்களும் கலந்தே இருக்கின்றார்கள்.
//நம்மைப் போல் பஞ்சம் பிழைக்க அவர்கள் எங்கும் ஓட வேண்டாத காரணத்தால் அவர்கள் மற்ற எந்த நாட்டைப் ப்ற்றியும் கவலைபடுவதில்லை.//
அதை மாற்றி இப்படியும் சொல்லலாம். வயிற்றுக்கு உணவு சரியாக கிடைப்பதால் அவர்களில் சிலருக்கு மூளையைப்பற்றி யோசிக்கத் தோன்றவில்லை.

'நச்சக்'

Anonymous said...

//அறிவாளிகளும் அறிவுக்சூன்யங்களும் கலந்தே இருக்கின்றார்கள்//

நான் அமெரிக்காவில் இருப்பவர் அனைவரும் அதிமேதாவிகள் எனச சொல்லவில்லையே! மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப் படாமல் தங்களின் வேலையை நன்றாக செய்கிறார்கள் எனத்தான் சொன்னேன்.

//அவர்களில் சிலருக்கு மூளையைப்பற்றி யோசிக்கத் தோன்றவில்லை//


பொதுஅறிவுதான் புத்திசாலித்தனத்தின் அளவுகோல் என்றால் நம்ம ஊர் வேலைவெட்டியின்றி டீகடையில் நாள் முழுவதும் உட்கார்ந்து பேப்பர் படித்துவிட்டு 'அமெரிக்க
ஏகாதிபத்தியம் ஓழிக' என வீண் சவடால் விடுபவன் கூட புத்திசாலி லிஸ்டில் சேர்ந்து விடுவான்.



அறிவியலில் நோபல் பரிசு வாங்கியோரின் லிஸ்ட் எடுத்துப்பாருங்கள் எந்த நாட்டில் அதிக புத்திசாலிகள் உள்ளார்கள் என விளங்கும்

podakkudian said...

ஆச்சர்யாமாகவும் வியப்பாகவும் உள்ளது சுல்தான்.நல்ல விடயம்

Unknown said...

//நான் அமெரிக்காவில் இருப்பவர் அனைவரும் அதிமேதாவிகள் எனச சொல்லவில்லையே!//
நன்றி அனானி. அதையேதான் நானும் சொன்னேன். இதிலே நாம் ஒத்துப்போகிறோம் என்று கொள்வோம்.

//பொதுஅறிவுதான் புத்திசாலித்தனத்தின் அளவுகோல் என்றால்....//
பொது அறிவும் புத்திசாலித்தனத்தை அளக்கும் அளவுகோலில் ஒன்று என்பதை நீங்களும் ஏற்பீர்கள்தானே.

//அறிவியலில் நோபல் பரிசு வாங்கியோரின் லிஸ்ட் எடுத்துப்பாருங்கள் எந்த நாட்டில் அதிக புத்திசாலிகள் உள்ளார்கள் என விளங்கும்//
நான் எந்த நாட்டோடும் ஒப்பீடு செய்யவில்லை. எல்லா நாடுகளும் போல்தான் அமெரிக்கா என்று சொன்னேன். மேலே நண்பர் சோம்பேறியின் கருத்தோடு நான் ஒத்துப் போவதை எழுதியுள்ளேன்.

'அறிவியலில் நோபல் பரிசுதான் புத்திசாலிகளுக்கு அளவுகோல்' என்று வைத்து, 'இதுவரை இந்தியாவில் இரண்டு பேர்தான் புத்திசாலிகள்!, மற்றவர்கள் அறிவீனர்கள்!!' என்று நான் சொன்னால், நீங்களும் ஒத்துப் போக மாட்டீர்கள் என நம்புகிறேன்.

Unknown said...

//ஆச்சர்யாமாகவும் வியப்பாகவும் உள்ளது சுல்தான்.நல்ல விடயம்//
வருகைக்கு நன்றி பொதக்குடியான். எனக்கும் அப்படித்தான்.
நல்ல விடயமா! :)))))