Wednesday 23 January 2008

நான் செத்துப் பொழச்சவன்டா!

ஜனவரி 2008ல் ஒரு நாள். அங்கோல் எனும் ஸேண்டியகோ மாநிலத்திலுள்ள ஒரு சிலி கிராமம். அங்கே 81 வயதான ஒருவரை காலையில் எழுப்ப முயற்சித்த போது உடம்பு சில்லிட்டு, மூச்சில் காற்றில்லை. உடனே அப்பகுதி வானொலியில் தகவல் சொல்லப்பட்டு, இறுதி யாத்திரை தயாரிப்புக்கான ஆட்கள் வரவழைக்கப்பட்டார்கள். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முயன்றபோது, பூக்களை உதறி விட்டு எழுந்து அமர்ந்து, குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டு, வந்திருந்த உறவினர்களை அசர வைத்தாராம் அந்த மனிதர் - இன்னும் வாழ வயதிருக்கிறது அந்த வாலிபருக்கு.
தண்ணிய போட்டா சந்தோஷம் பொறக்கும்
தள்ளாடி நடந்த உல்லாசம் இருக்கும்
என்னென்ன கவலை எல்லாமே மறக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்

நான் உயர்நிலை படித்துக் கொண்டிருந்த போது எனது நண்பர் அர. மணி வண்ணணின் தாயார் சொல்வார்கள். எனது நண்பர் பிறந்த போது, அவர் வீட்டில் பிரசவம் பார்த்த பெண், குழந்தை இறந்து பிறந்து விட்டதாக அறிவிக்கவும், சிறிது நேரத்தில் மயானம் எடுத்துச் சென்றார்களாம். மயானத்தில் கடைசி நேரத்தில் குழந்தை சிறுநீர் கழித்ததைப் பார்த்துதான் குழந்தை உயிருடன் இருப்பதாக அறிந்து வீட்டுக்கு கொண்டு வந்தார்களாம்.
நான் செத்துப் பொழச்சவண்டா!
எமனைப் பார்த்து சிரிச்சவண்டா!!

எனது தந்தைக்கு அடுத்த உறவினர். உடம்பு சுகமில்லாமல் இருந்து டாக்டர் பரிசோதித்து பின், இறந்ததாக ஊருக்கே அறிவிக்கப்பட்டு, எல்லாம் அழுது புலம்பும் வேளை, சப்தம் தாங்காமல் எழுந்து உட்கார்ந்து விட்டார்.
தெய்வமே! தெய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே!

தெரிந்து உயிர் பிழைத்தவர்கள் இவர்கள். தெரியாமல் எத்தனை பேர் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டார்களோ!.. நினைத்தாலே.... ஐயோ!...

உங்கள் அனுபவத்தில் இதுபோல் ஏதாவது நடந்திருக்கிறதா?

Post Comment

2 comments:

கோவி.கண்ணன் said...

//தெரிந்து உயிர் பிழைத்தவர்கள் இவர்கள். தெரியாமல் எத்தனை பேர் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டார்களோ!.. நினைத்தாலே.... ஐயோ!...

உங்கள் அனுபவத்தில் இதுபோல் ஏதாவது நடந்திருக்கிறதா?//

அரிய தகவல்கள் நன்றி !

உயிரோடு இருப்பவர்களைத்தான் சாகடித்ததாக கேள்விபட்டுள்ளேன்.
:)

Unknown said...

நன்றி ஜி.கே.
//உயிரோடு இருப்பவர்களைத்தான் சாகடித்ததாக கேள்விபட்டுள்ளேன்//
'கும்பல் கும்பல்களாக, வெறி பிடித்தவர்களாக வந்து, குடும்பம் குடும்பமாக' என்பதை உங்கள் வரிக்கு முன்பாக வைத்தால் பொருத்தமாயிருக்கும்.