“கால் மணி நேரம் முன் என்னிடம் நன்றாக பேசி விட்டுத்தான் போனார். அதற்குள்ளாக விபத்து என்று சொல்கிறார்கள்”,
“இரவு வீட்டுக்குப் போகுமுன் என்னிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். விடிந்ததும. இறந்து விட்டதாக செய்தி வருகிறது”
என்றெல்லாம் எத்தனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். நமக்கும் அது போல் நேரலாம் என்பதாக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.
இப்போது வெகு சாதாரணமாக கைப்பேசி பழக்கத்தில் வந்து விட்டது. வெளியில் நடமாடும் எல்லோரது கைகளிலும் சாதாரணமாக கைப்பேசி உபயோகத்தை காணமுடிகிறது.
விபத்து நடந்து விட்டால், விபத்தில் பாதிக்கப்பட்டவரது கைப்பேசியில் கடைசியில் தொடர்பு கொண்ட எண்ணை (Last Dialed Number) அழைப்பது காவல் துறையினரிடம் சாதாரண பழக்கத்தில் உள்ளது. ஆனால் அது எப்போதும் உபயோகமாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடிவதில்லை. உறவினர்களுக்குத் தகவல் சொல்லவும், பாதிக்கப்பட்டவரது இரத்த குரூப், ஒவ்வாமை தகவல்கள், நோய்கள் பற்றிய விபரம் அறிவதிலும் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டு மரணத்திலும் முடிவதுண்டு.
எனவே நமது கைப்பேசியில் அவரவர்கள் ‘ICE - In Case of Emergency’ என்று ஒரு பெயரை வைத்து, அதில் ஒன்று, இரண்டு என்று நம்மைப் பற்றிய விபரம் அறிந்தவர்கள், முக்கிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோரது எண்ணை குறிப்பிட்டு வைக்க வேண்டியது அவசியம்.
அது அவசர நேரத்தில் எல்லோருக்கும் மிக உதவியாக இருக்கும்.
தெரிந்திருந்தும் செய்யாமல் விட்டிருந்தால் உடனே ICE போடுங்கள்.
தேவையேற்படாமல் இருக்க பிரார்த்திப்போம்.
தேவையேற்பட்டால்….
பின்னர் வருத்தப்பட்டாலும் உபயோகமில்லாது போகும்.
5 comments:
3 போட்டு வச்சிருக்கேன்ல...
//"உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்."//
நல்ல யோசனை.
சிம்கார்டு மெமரியில் ICE போட்டு வைத்துக் கொள்வது நல்லது, விபத்து போன்ற காரணங்களில் போன் செயல் இழந்தாலும் சிம்கார்டை வெறொரு போனில் போட்டு நம்பரை எடுக்கலாம்
சுல்தான் சார் நல்ல யோசனை.இது உங்க ஐடியாவா படித்ததா?
ரைட்டு செய்துவிட வேண்டியது தான், கோவி சார் சொன்னதையும் நோட் செஞ்சுக்கனும் போல இருக்கு.
//3 போட்டு வச்சிருக்கேன்ல...//
நானும் போட்டு வைத்து விட்டுத்தான் பதிவெழுதினேன் தருமி ஐயா..
//நல்ல யோசனை.
நன்றி ஜிகே.
//சிம்கார்டு மெமரியில் ICE போட்டு வைத்துக் கொள்வது நல்லது, விபத்து போன்ற காரணங்களில் போன் செயல் இழந்தாலும் சிம்கார்டை வெறொரு போனில் போட்டு நம்பரை எடுக்கலாம்//
இது சிறந்த யோசனை GK. என் கைப்பேசியில் சரி பார்த்து விட்டேன்.
//இது உங்க ஐடியாவா படித்ததா?//
கேட்டது டீச்சர்.
Post a Comment