Tuesday, 5 February 2008

ஒரு கணவன், மனைவி டயரிக் குறிப்பு. நாள்: 17 மார்ச் 2007மனைவியின் டயரி

இன்றிரவு அவர் ஒரு மாதிரியாக நடந்து கொண்டதாக எனக்குப் படுகிறது. ஒரு உணவு விடுதியில் நாங்கள் சந்தித்து தேநீர் அருந்துவதாக ஏற்பாடு.

இன்று முழுதும் எனது தோழிகளுடன் கடைத்தெருக்களில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். அதனால் நான் சிறிது தாமதமாக வந்தது, அவருக்கு வருத்தத்தைத் தந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அவர் எதுவுமே சொல்லவில்லை. எங்களுக்குள் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. நான் சிறிது நேரம் வெளியில் போய் வந்தால் பேசி அமைதிப் படுத்தி விடலாமென்று வெளியில் போக அழைத்தேன். ஒப்புக்கொண்டார் ஆனால் எதுவம் பேசாமல் ஏதோ சிந்தனையில் இருப்பது போல்தான் இருந்தார்.

'ஏன்? என்ன ஆனது?' என்றும் கேட்டுப் பார்த்தேன். 'ஒன்றுமில்லை' என்று சொல்லி விட்டார்.

'இவ்வளவு வருத்தமாக இருப்பதற்கு நான்தான் காரணமா?' என்றும் கேட்டுப் பார்த்து விட்டேன். 'அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒன்றும் கவலைப்படாதே' என்று சொல்லி விட்டார்.

திரும்ப வரும் போது 'ஐ லவ் யூ' என்று சொன்னேன். அவர் சும்மா புன்னகைத்து விட்டு வண்டி ஓட்டுவதிலேயே கவனமாயிருந்தார். அவர் நடந்து கொண்ட விதத்தை எப்படி சொல்வதென்றே விளங்கவில்லை. அவர் 'ஐ லவ் யூ டூ' என்று ஏன் சொல்லாமல் இருந்தார்?

நாங்கள் வீட்டுக்குத் திரும்பிய போது, அவருக்கு என்னிடம் எந்தத் தேவையும் இல்லாதது போலவும், அவர் என்னை விட்டு நீங்கி விட்டதாகவும் உணர்ந்தேன். அவர் சும்மா அமர்ந்து, எதிலும் மனது இலயிக்காதவராக, ஏதா யோசித்தவராக தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கடைசியாக நான் படுக்கைக்குப் போனேன். பத்து நிமிடம் கழிந்த பின் அவரும் படுக்கைக்கு வந்தார். எனக்கு ஒன்றும் நிலை கொள்ளவில்லை. இந்த இறுக்கமான சூழ்நிலையைப் போக்க ஏதாவது செய்ய வேண்டுமென முடிவெடுத்தேன். ஆனால் அதற்குள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். நான் அழுதழுது கன்னம் வீங்கி எப்போது தூங்கிப் போனேன் என்றே தெரியவில்லை.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் என்னை விட்டு விட்டு வேறு யாரையோ மனதில் கொண்டு விட்டார் என்றே நினைக்கிறேன்.

எனக்கு வாழ்க்கையே வெறுக்கிறது.

கணவனது டயரி

இன்றைய கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா பங்களாதேஸிடம் தோற்றது. இந்திய கிரிக்கெட்டுக்கே பெருத்த அவமானம்.

நன்றி:ரவிஷர்மி

Post Comment

11 comments:

வீ. எம் said...

Super ! Super !! Super!!!

கோகிலவாணி கார்த்திகேயன் said...

சிரிக்கணுமா, அழுகணுமா ன்னு தெரியலை! Cricket படுத்தும் பாடு!

பாச மலர் said...

"நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்"

இந்த வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தன...

அருமையாக இருந்தது...

கோவி.கண்ணன் said...

:)

எல்லா ஆண்களுமே இப்படித்தானா ?
:))))

பெண்கள் ஒண்ணும் இல்லாத விசயத்தை உட்கார்ந்து யோசிச்சே பிரச்சனை ஆக்கிக்குவாங்க போல.
:))))

VSK said...

இன்றைய நடப்பை அப்படியே பிரதிபலிக்கும் பதிவு!

மிகவும் ரசித்தேன்!.

சுல்தான் said...

//Super ! Super !! Super!!!//
நன்றி! நன்றி!! நன்றி!!! வீ.எம்.

//சிரிக்கணுமா, அழுகணுமா ன்னு தெரியலை! Cricket படுத்தும் பாடு!//
வருகைக்கு நன்றி கோகிலவாணி கார்த்திகேயன்.
ஒமானுக்கு மாதம் ஒரு முறை வருகிறேன். உங்களுடைய பதிவிலுள்ளதைப் போன்ற கடற்கரை எல்லாம் பார்த்ததில்லை. Tour Operators கூட அழைத்துப் போவதில்லையே. ஏன்?

//அருமையாக இருந்தது...//
நன்றி பாச மலர்.

//"நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்"
இந்த வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தன...//
ஒவ்வொரு குடும்பத்தின் அச்சாணியும் பெண்ணல்லவா. நல்ல குடும்பப் பெண்களின் உலகம் கணவனையும் குடும்பத்தாரையும் சுற்றியே சுழல்கிறது. அனால்தான் மோப்பக் குழையும் அனிச்சமாய் இருந்து, கணவன் முகந்திரிந்து நோக்கக் குழைகிறார்கள்.

சுல்தான் said...

//எல்லா ஆண்களுமே இப்படித்தானா ?//
மனதில் வருத்தமிருந்தாலும் அதை மனைவியிடம் காட்டிக் கொள்ளக்கூடாது என்றிருப்பார்களல்லவா.

//பெண்கள் ஒண்ணும் இல்லாத விசயத்தை உட்கார்ந்து யோசிச்சே பிரச்சனை ஆக்கிக்குவாங்க போல.
:))))//
குளித்து விட்டு உள்ளாடையை துவைத்து போட்டு விட்டு வந்தால் கூட 'இன்னைக்கு என்ன ஆச்சு! ஐயாவுக்கு ஏதோ கோபம் போலிருக்கு?' என்று கேட்கிறார்களே. 'அட அப்படியெல்லாம் இல்லீங்க' என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார்களே.

//இன்றைய நடப்பை அப்படியே பிரதிபலிக்கும் பதிவு!
மிகவும் ரசித்தேன்!.//
நன்றி டாக்டர்.

கோகிலவாணி கார்த்திகேயன் said...

"""ஒமானுக்கு மாதம் ஒரு முறை வருகிறேன். உங்களுடைய பதிவிலுள்ளதைப் போன்ற கடற்கரை எல்லாம் பார்த்ததில்லை. Tour Operators கூட அழைத்துப் போவதில்லையே. ஏன்? """"

இது ஒமனில் உள்ளது அல்ல. ஏதோ ஒரு சைட்டில் இருந்து தான் சுட்டேன். ஆனால் ஒமனில் 'Qantab' என்ற இடம் மிக அருமையாக இருக்கும். "தீபாவளி" படத்தில் கூட வருமே!

சுல்தான் said...

//ஒமனில் 'Qantab' என்ற இடம் மிக அருமையாக இருக்கும். 'தீபாவளி' படத்தில் கூட வருமே!//
நன்றி. அடுத்த முறை போகும்போது Qantab போக வேண்டும்.
மஸ்கட் தமிழ்சங்க பொங்கல் விழா கொண்டாட்டம் கடற்கரையில் நடந்ததுதானே? அது Qantabதானே.

கீழை ராஸா said...

எப்படி ஐயா இது,உக்காந்து யோசிப்பீங்களோ...?
அனுபவசாலின்னு நிருபிச்சிருக்கீங்க சுல்த்தான் பாய்...ரொம்ப நல்லாயிருக்கு...

Thamizhmaangani said...

இது எங்கோ படிச்ச மாதிரி இருக்கு சார். எனக்கு இமெயிலில், ஆங்கிலத்தில் வந்ததாய் ஞாபகம்:)